ந்தக்கால பி. சுசீலா, ஜானகி முதல் இந்தக்கால தீ, சின்மயி மாதிரி தனித்தன்மை வாய்ந்த இனிய குரலில் பாடுகிறார் ஓவியா. 

Advertisment

இளமையான, இனிமையான, தனது குரலில் பல பக்தி பாடல்களை பாடி நம்மை அசத்துகிறார். இந்த வயதில் இத்தனை அபாரமாக அவர் பாடியதைக் கேட்டு சூப்பர். சபாஷ் ஓவியா. ரொம்ப நல்லா பாடறியே. முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டாயா? என்ற கேள்வியோடு துவங்கினோம்.

தந்தை சரவணன், தாய் நந்தினி உடனிருக்க, மகள் ஓவியா மடைதிறந்த வெள்ளம்போல் மலர்ந்த முகத்துடன் பேச ஆரம்பித்தார்.

"நான் பிறந்தவுடன் அழுததே நல்ல பாட்டு பாடியதுபோல் இருந்ததாக அம்மா சொல்வாங்க! அப்பா ஊர் புதுக்கோட்டை. அங்கே இருந்தபோது மூணு வயசிலேயே நான் கேட்கும் எல்லா பாடல்களையும் பாட ஆரம்பித்துவிட்டேன்.

Advertisment

அப்பவே நான் பாடுவதை ஊக்குவித்து நான்கு, ஐந்து வயதிலேயே கிளாசிக்கல் மியூசிக் கற்றுத்தர துவங்கி விட்டார்கள். அதன்பிறகு நாங்கள் சென்னை வந்துவிட "ஆன்லைன்' மூலமாக ஜோதி மேடமிடம் கர்நாடக இசையைப் பாட முறைப்படி கற்றுக்கொண்டேன். தினசரி ஒருமணிநேரம் கற்று தேர்ச்சிபெற்றேன்.

இப்போது சென்னை அயனாவரத்தில் ஐசிஎப்லில் உள்ள மனீஷா மேடத்திடம் நான்கு வருடமாக ஹிந்துஸ்தானி இசை கற்று வருகிறேன்.

கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டும் கற்றதால் என்னால் எந்த மொழி  சினிமா பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடிவிட முடியும்.

Advertisment

voice1

நான் கீ போர்டும் நன்றாக வாசிப்பேன். குறிப்பாக ஹிட்டான பிஜிஎம்களை வாசிப்பதில் ஆர்வம் எனக்கு அதிகமுண்டு.

என் அப்பா- அம்மா ரெண்டு பேருமே நல்லா பாடுவாங்க.. இரண்டு பேர் பரம்பரை யிலும் முன்னோர்கள் சிறந்த பாடகர்களாக இருந்திருக்கிறார்கள்.

எவ்வளவு கஷ்டமான சினிமா பாடல் களையும் நான் சர்வ சாதாரணமாக பாடி விடுவதை கேட்டு எனது பெற்றோர் மட்டு மன்றி, பள்ளியில் உடன்படிப்பவர்கள், உறவினர்கள் என்று பலரும் நான் சிறந்த சினிமா பாடகியாவது உறுதி என்று பாராட்டுவார்கள்.    

எங்கள் குலதெய்வம் தஞ்சாவூர் அருகில் வயல்வெளியிலுள்ள நாச்சிமுத்து அம்மன், நல்ல பாம்பு, ஐய்யனார் அதிசக்தி வாய்ந்த தெய்வ சக்திகளாக திகழ்கிறார்கள். நாங்கள் குடும்பத்தோடு வருடம்தோறும் சென்று வழிபட்டுவருகிறோம்.  குலதெய்வ அருளால்தான் எனக்கு குரல் வளம் கிடைத்ததாக உணர்கிறேன். அனுதினமும் குலதெய்வ வழிபாடு செய்த பிறகு தான் பாடல்களை பாடி பயிற்சி செய்யத் துவங்குவேன்.

எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகும் லட்சியத்துடன் குரல்வளம் மேலும் மேலும் சிறந்து விளங்க தேவையான அனைத்து முயற்சிகளும் செய்துவருகிறேன். அதற்கு என் பெற்றோர் ஆக்கமும், ஊக்கமும் உற்சாகமும் தந்து வருகிறார்கள்.

என் அம்மா நந்தினி தீவிர சபரிமலை ஐயப்பன் பக்தை. பலரும் முதல் குழந்தை பையனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில், தங்களுக்கு முதலில் பெண் குழந்தைதான் வேண்டும் என்று விரதம் இருந்திருக்கிறார்கள் எனது பெற்றோர்கள். 

அவர்கள் செய்த பிரார்த்தனையின் பலனாக நான் பிறந்தேன்.

தொலைக்காட்சிப் போட்டிகளில் பங்கேற்க பலரும் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். விரைவில் அனைவரும் தொலைக்காட்சிப் போட்டியில் நான் முதல் பரிசு வெல்வதை பார்க்கத்தான் போகிறார்கள்.

ஓவியாவின் தன்னம்பிக்கையை அருகில் இருந்து ரசிக்கிறார்கள் பெற்றோர்கள். சென்னை புüயந்தோப்பு பகுதியைச் சார்ந்த சரவணன் தனியார் துறையிலும், அவர் மனைவி நந்தினி ஆசிரியராகவும் பணி செய்கிறார்.

ஓவியாவின் லட்சியம் நிறைவேறி, சிறந்த பின்னணி பாடகியாக ஜொலிக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

ஓவியாவை பாராட்ட, ஊக்குவிக்க 

தொடர்பு கைபேசி எண்: 77088 67839

பேட்டி, படங்கள்: ஆர்.கண்ணன்