அலைகடல் ஆர்ப்பரித்து எழும் ஓசை ஒருபுறம் கேட்க வணிகர்களும் பல்வகை இனத்தோரும் சங்கமித்துச் சொற்களால் வெல்ல நினைக்கும் தளப்பகுதி ஒருபுறம் இருக்க, சுறுசுறுப்புக்குப் பெயர் போன நாகை நகரின் சிறப்புகளைச் சொல்ல நாவினிக்கும்.
நாகவேந்தன் ஒருவன் இறைவனை வழிபட்டு நற்பேறு பெற்றதால் இந்த ஊர் நாகன்பட்டினம் என்று பெயர்பெற்று விளங்கி வந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நற்கவியைத் தந்த நாகை மண்ணின் வியத்தகு வரலாற்றை நாம் அறியாமல் விட்டுவிட முடியுமா என்ன?
இந்திரன் தந்த பரிசு
பன்னிரு சிவாலயங் களைக் கொண்ட நாகை நகர் மூவேந்தர்களால் சிவராஜதானி என்று புகழ்ந்து பேசப் பட்டுவந்த நிலையில் தேவருலக வேந்தன் இந்திரன் பூமிக்கு இறங்கியபோது இவ்வூரி லுள்ள முருகனின் மெய்யழகைக்கண்டு வியப்புற்று வணங்கி தன்னுடைய ஐராவதம் என்ற யானையை முருகனுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான். அதனால் மயில் வாகனனாக எங்கும் வீற்றிருக்கும் தமிழ்வேள் இங்கே யானை வாகனத்தை முன்னிறுத்திக்கொண்டு காட்சிதருகிறான்.
தந்தை சிவபெருமான்தான் திருக்கயிலாத் தில் தனது திருவிளையாடலைக் காட்டி இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். இங்கு அவர் மகன் முருகப் பெருமான் ஒரு வித்தியாசமான திருவிளையாடலை நடத்தியிருக்கிறார்.
ஆலயப் பணியில் ஊமையின் தூய்மைப்பணிநாகை முருகன் சந்நிதியில் தினந்தோறும் நான்குகால பூஜை வேளையில் மணி ஒலிப்பதற்கும் பூஜைக்கான கட்டளை சாமான் களை எடுத்து வைப்பதற்கும், நந்தவனத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், பூக்களைப் பறித்துவந்து ஆலயத்தினுள் தருவதற்கும் "முத்து' என்ற வாய்பேசாத ஒருவனைப்
அலைகடல் ஆர்ப்பரித்து எழும் ஓசை ஒருபுறம் கேட்க வணிகர்களும் பல்வகை இனத்தோரும் சங்கமித்துச் சொற்களால் வெல்ல நினைக்கும் தளப்பகுதி ஒருபுறம் இருக்க, சுறுசுறுப்புக்குப் பெயர் போன நாகை நகரின் சிறப்புகளைச் சொல்ல நாவினிக்கும்.
நாகவேந்தன் ஒருவன் இறைவனை வழிபட்டு நற்பேறு பெற்றதால் இந்த ஊர் நாகன்பட்டினம் என்று பெயர்பெற்று விளங்கி வந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நற்கவியைத் தந்த நாகை மண்ணின் வியத்தகு வரலாற்றை நாம் அறியாமல் விட்டுவிட முடியுமா என்ன?
இந்திரன் தந்த பரிசு
பன்னிரு சிவாலயங் களைக் கொண்ட நாகை நகர் மூவேந்தர்களால் சிவராஜதானி என்று புகழ்ந்து பேசப் பட்டுவந்த நிலையில் தேவருலக வேந்தன் இந்திரன் பூமிக்கு இறங்கியபோது இவ்வூரி லுள்ள முருகனின் மெய்யழகைக்கண்டு வியப்புற்று வணங்கி தன்னுடைய ஐராவதம் என்ற யானையை முருகனுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான். அதனால் மயில் வாகனனாக எங்கும் வீற்றிருக்கும் தமிழ்வேள் இங்கே யானை வாகனத்தை முன்னிறுத்திக்கொண்டு காட்சிதருகிறான்.
தந்தை சிவபெருமான்தான் திருக்கயிலாத் தில் தனது திருவிளையாடலைக் காட்டி இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். இங்கு அவர் மகன் முருகப் பெருமான் ஒரு வித்தியாசமான திருவிளையாடலை நடத்தியிருக்கிறார்.
ஆலயப் பணியில் ஊமையின் தூய்மைப்பணிநாகை முருகன் சந்நிதியில் தினந்தோறும் நான்குகால பூஜை வேளையில் மணி ஒலிப்பதற்கும் பூஜைக்கான கட்டளை சாமான் களை எடுத்து வைப்பதற்கும், நந்தவனத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், பூக்களைப் பறித்துவந்து ஆலயத்தினுள் தருவதற்கும் "முத்து' என்ற வாய்பேசாத ஒருவனைப் பணி அமர்த்தியிருந்தனர் ஆலயத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/maikanda1-2025-11-04-17-25-46.jpg)
தெய்வப் பணிகளை உரிய காலத்தில் செய்துவந்ததால் அவனை அனைத்து பக்தர்களுக்கும் பிடித்துப் போயிற்று. அவனை முத்து, அழகா, அழகு முத்து என்று பல பெயர்களில் அழைத்துச் சில காசுகளைக் கொடுத்துச் செல்வார்கள். எல்லாரிடமும் இன்முகம் காட்டி சொல்லும் ஒரே வார்த்தை "ங்ஙா' மட்டுமே. அவனுக்கு தினமும் இரண்டு பட்டை சாதமும் மாதம் மூன்று ரூபாய் காசும்தான் கிடைத்து வந்தது. தனிநபரான அவனது அன்றாட வாழ்வின் வயிற்றுப் பசிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
தினமும் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு அர்ச்சகர் போடுகிற நான்கு பட்டை சாதத்தில் முத்துவுக்கு ஒரு பட்டை (இக்காலத்தில் ஒரு கப்) எடுத்து அவன் படுத்திருக்கும் மரப்பலகைக்கு அடியில் வைத்துவிட்டுச் செல்வார்.
பசிக்கு இல்லாத அன்னம் என்றைக்குமே ஒரு மரப்பலகை அருகே அமர்ந்திருப்பவன் தோட்டப் பணியால் ஒருநாள் அயர்ந்து உறங்கிவிட்டதால் அவனை எழுப்ப மனமில்லாமல் ஆலய மணியை அவரே அடித்துவிட்டுப் பட்டை சாதத்தை ஒரு துணியில் சுற்றி மரப்பலகைக்கு அடியில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் அர்ச்சகர். இரவு நேரத்தில் அசதி மிகுதியில் உறங்கியவனுக்குப் பசி அதிகமாகிவிட அங்கும் இங்கும் தேடியும் அர்ச்சகர் வைத்துவிட்டுச் சென்ற பட்டை சாதம் கைக்குக் கிடைக்கவில்லை. பசி தாங்கமுடியாததால் அவன் பச்சிளம் குழந்தையைப்போல அழத் தொடங்கிவிட்டான்.
ஒரு ஊமையின் அர்த்தமில்லாத அழுகுரல் இந்த உலகத்தார்க்குக் கேட்கவில்லை. ஆனால் ஆலயத்தின் உள்ளே உறங்காமல் காத்து நிற்கும் அந்த மெய்கண்ட மூர்த்தியாம் முருகனுக்குக் கேட்டது. வலி பொறுக்க முடியாமல் அலறும் சிசுவைப்போல சத்தமிடும் அவன் குரல் தொடர்ந்து கேட்கும்போது, வாஞ்சையுடன் அணைத்துப் பாலூட்டும் தாய்போலக் கையில் பஞ்சாமிர்தக் கிண்ணத்தோடு சிறுவன் வடிவில் வெளியே வந்தான்.
அமுதம் உண்ட அழகன்பசி எடுக்கும் நேரத்தில் ஒரு குழந்தை வருகிறதே! எனக்கே உணவில்லை. இதற்கும் சேர்த்து அன்னமிட என்ன செய்வேன். முருகா! என்ன இது சோதனை என்று நினைத்தவனுக்கு எங்கிருந்து வந்தது இந்தக் குழந்தை. யாராவது கோவிலுக்கு வந்த பக்தை தெரியாமல் உள்ளேயே விட்டுச் சென்றுவிட்டார்களா தெரியவில்லையே என்று எண்ணியபடி மீண்டும் அழத் தொடங்கினான்.
அருகில் வந்து அமர்ந்த பாலகன்; ஏனப்பா அழகு, உனக்கு அர்ச்சகர் அன்னம் தரவில்லையா? ஏன் அழுகிறாய்?
இன்று உனக்கு முருகனின் அபிஷேகப் பஞ்சாமிர்தம் தருகிறேன். வாயைத்திற என்று சொல்லி பஞ்சாமிர்தத்தை ஊட்டினான். அப்போதும் அவன் அழுகையை நிறுத்த வில்லை.
சிறுவனின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் நாக்கைத் திறந்துகாட்டி தான் ஒரு பிறவி ஊனம் என்று அழுதான்.
உடனே சிறுவன் இன்னொரு வாய் பஞ்சாமிர்தத்தை வாயில் ஊட்டினான். நீ வாய்பேசாத ஊமை என்று யார் சொன்னது? முதலில் தந்த அமுதம் உனக்குப் பசி போக்குவதற்காக. இரண்டாவதத் தந்தது இந்தத் தமிழ் மண்ணில் நீ இலக்கியப் பசியைப் போக்கும் வண்ணம் கவி பாடுவதற்காக.
ம்... பேசு... அழகா... பேசு... உன் முத்து முத்தாக வெளிவரும் அந்தக் கவிதை மலர்களைச் சூடிக்கொள்ள தமிழ்த்தாய் காத்திருக்கிறாள்.
நா....ன் ப் பேச முடியுமா? என்று தட்டுத் தடுமாறியபடியே அழகு முத்து பேசத் தொடங்கி னான். அவனாலேயே நம்ப முடியவில்லை. இந்த மாற்றம் எனக்கு திடீரென வந்தது எப்படியென்று அழகன் முருகனிடம் கேட்டபோது, மெய்கண்ட முருகன் புன்னகையோடு காட்சிதந்து, இந்த உலகுக்குக் கவிபாட வந்த புலவன் நீ! ஔவைக்குக் கோவைக் கனி தந்தோம். நக்கீரருக்கு ஆற்றுப்படை பாட அருள் தந்தோம். அன்னைத் தமிழுக்குப் பல கவிகளைப் பரிசளித்து அழகு செய்தோம். அங்ஙனமே உமக்கு இங்கே ஐந்து பழங்களிட்டு, அறுசுவை கூட்டி பஞ்சாமிர்த அமிர்தம் தந்து உமது வாய் திறக்க அருளினோம். என்ற அந்த ஞானக்குழந்தை மெய்கண்ட மூர்த்தியின் அங்கத்தின் மார்பில் ஐக்கியமானது.
முருகப் பெருமானே! என்னே உன் திருவிளையாடல்! அறுபடை வீடுகளில் விளையாடியது போதாதென்று மாங்கனியையும் கயிலையம்பதியில் அண்ணன் ஆனை முகனிடமே விட்டுக் கொடுத்து விட்டுப் பழம் நீ... என நிரூபித்துப் பழனியம்பதி சார்ந்து நீ தங்கும் இடமெல்லாம் தமிழ் பேசும் சான்றோர்க்கு ஒரு திருக்கதையை குறிப்பால் உணர்த்திவிட்டுச் செல்கிறாயே! உன் கட்டளைப்படி எல்லோரும் இன்புற எங்கும் கவிபாடி என் இறுதி மூச்சுவரை இறைபணியாற்றி என் உடலுக்கு இயலாநிலை காணும்போது உன் பாதக் கமலங்களில் வந்துசேருவேன். இது என்னைப் பெற்ற தாய் மற்றும் தமிழ்த்தாய்மீது ஆணை' என்ற அழகு முத்து தனது கவி பணியைத் தொடர புறப்பட்டான்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தெம் மாங்கு, சிலேடைக் கவிகள் பல பாடிப் புகழ்பெற்று அழகு முத்துப் புலவராக நிமிர்ந்து நின்ற அழகு இறுதியில் உடல் நலக் குறைவால் ஓரிடத்தில் சோர்வடைந்து தங்கிவிட்டார்.
மெய்கண்ட மூர்த்தி ஐக்கியம்
ஒருநாள் காலை சீர்காழியிலுள்ள வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது தனக்கு அந்திமக்காலம் நெருங்கியதை உணர்ந்து கொண்டவர், "மெய்கண்டவா என்னை சேர்த்துக்கொள்' என்றபடி தன் ஜீவனைவிட்டு மண்ணுலகிலிருந்து விடைபெற்றார்.
அன்று முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாக விண்மீன் நிலவும் நன்னாள்.
முருகனுக்குத் திருவிழா விமரிசையாக நடந்துகொண்டிருக்க பல பக்தர்களும் முருகனடியார்களும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வழிபட்டு நிற்க, மாலை ஆறு மணி அளவில் அலங்கார தீப ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முருகன் அசரீரியாக "என் பக்தன் வருகிறான் வழிவிடுங்கள், அவனை ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன்.' என்ற போது அழகு முத்துப் புலவரின் ஆவியுரு கருவறைக்குள் புகுந்தது' என்பதாக ஆலய வரலாற்று ஏடு கூறும் செய்தி. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்தன்று ஐக்கியத் திருநாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நிதிக் கடவுள் குபேரன் அருட்பார்வை
திருக்கற்றüயை வலம் வரும்போது இடும்பன் கன்னிமூல கணபதி, காசி விஸ்வநாதன் விசாலாட்சி, ராஜதுர்க்கை, குரு, சனிபகவான், சிவ சூரியன், காலபைரவ மூர்த்தங்களை வணங்கி வருகையில் தென் முகம் நோக்கி தனிச்சன்னதியில் செல்வவளம் தரும் குபேரன் பத்ம பீடத்தில் அருள்பாலிப்பதைக் காணலாம். இவருக்கு வில்வம், பொற்காசுகளால் ஸ்வர்ண அர்ச்சனை செய்து வழிபட்டால் வியாபாரிகளுக்கும், வறுமையில் வாடும் பக்தர்களுக்கும் தனவளம் கூடும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் சோழ மன்னன் ஆட்சிக் காலத்திற்குப்பின் குபேரன் கோவில் நிறுவப்பட்டது நாகையில்தான் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.
வரும் நவம்பர் 3 திங்கட்கிழமை காலை குடமுழுக்குப் பெருஞ்சாந்திப் பெருவிழாவைக் காணவுள்ள இந்த முருகவேலின் சந்நிதிக்குச் சென்றுவருவோர்க்கு வளமும் நலமும் கூடும். ஓம் மெய்கண்ட முருகனுக்கு அரோகரா!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us