தியும், அந்தமுமான ஆதித்யனின் தசா புக்தி ஆறு வருடங்கள் என்றாலும், இதுவரையிலும் நம் முன்னோர்கள் செய்துவைத்த நன்மை மற்றும் தீமைகளின் பலனை நம் வாழ்க்கையில் நம் கை சேர்க்கும் காலமாக இது திகழ்கின்றது. 

Advertisment

பூர்வீகத்தில் அமையப்பெற்ற முன்னோர்கள் செய்த தீமைக்கான தண்டனைகளையும், இந்த காலகட்டம் ஜாதகருக்கு வழங்க தயாராக இருக்கும். 

Advertisment

பொதுவாகவே ஆண்மக்காரகன், தந்தைக்காரகன் என்று அனுஷ்டிக்கப்படும் சூரியன் மற்ற கிரகங்களுடன் இணைவது ஜோதிடத்தில் பெரும் கவன ஈர்ப்புக்கு உட்பட்டது. 

காரணம் என்னவென்றால் சூரியனின் அருகாமையானது அஸ்தங்கதோஷத்தை அளித்துவிடும். 

Advertisment

அதாவது சூரியன் நிற்கும் பாகையில் இருந்து 14 பாகைக்குள் இணையும் கிரகங்கள் தனது செயல்பாட்டை அதாவது உயிர் துவத்தை இழந்துவிடும். 

அப்படி அஸ்தங்கமான கிரகங்கள் தனது பணியினையும், செய்யக்கூடிய யோக பாக்கியங்களையும் வழங்குவது கடினம்.

சூரியன்+சந்திரன் 

இந்த இணைவானது மனரீதியான குழப்பம் மற்றும் சந்திரனின் அஸ்தங்கத்தை வலியுறுத்தி வெளிக்கொணரும். இந்த சூழலானது மனரீதியாக எந்த ஒரு முடிவையும் சிறப்பாக எடுக்க முடியாத தன்மையை வழங்குவதோடு, பெண்களாக இருக்கும்பட்சத்தில் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளையும், தாயார்வழியில் நோய் சார்ந்த பயணத்தையும் மேற்கொள்ள வழிவகுக்கும். 

சூரியன்+செவ்வாய் 

இந்த இணைவு உடல் சார்ந்த வெப்பமும், அவற்றால் வரும் நோய்களையும், ரத்தம் சார்ந்த நோய் தொற்றுக்களையும், தாக்கங்களையும் வழங்கும். ஆண்களுக்கு உயிர் அணுவையும், பெண்களுக்கு கருமுட்டையின் வலு இழப்பையும் அளிக்கும். 

சூரியன்+புதன் 

புத ஆதித்ய யோகமாக கருதப்பட்டா லும், அவற்றைவிடவும் கல்வி, சாஸ்திர அறிவு, கணிதம், தோல் நோய், தாயாதிவழி உறவின் விரிசல் போன்றவற்றையும், பத்திர வில்லங்கம், எழுத்து பிழை, பொய் கையெழுத்து போன்றவற்றையும் அளிக்க வல்லது. 

சூரியன்+குரு 

இந்த இணைவானது நம் மூத்த தலைமுறையில் பரிவட்டம் கட்டிக்கொண்ட நபர்கள் இருப்பதையும், தலைமை பண்பில் இருந்தவர்களின் வம்சாவழியில் இந்த ஜாதகம் பிறந்திருக்கக் கூடும் என்கின்ற தகவலையும் உணர்த்தும். மேலும் யாருக்குமே அடங்கிவிடாத வல்லமையை அளிப்பதோடு, குரு அஸ்தங்கப்பட்டு விட்டால் குலதெய்வம், குழந்தை போன்றவற்றால் மனக்கசப்பும், கை தூக்கிவிட ஒரு துணையில்லாத நிலையையும் வழங்கும். 

சூரியன்+சுக்கிரன் 

பெண்களின் ஆளுமையில் இந்த வம்சம் பயணிப்பதோடு உடல்ரீதியாக அடிவயிறு மற்றும் சுவாதிஷ்டான சக்கரம் அமையப்பெற்றுள்ள பகுதிக்கு உள் அமையப்பெற்றுள்ள உள் உறுப்புகளான சினைப்பை, கர்ப்பப்பை, கருக்குழாய், சிறுநீரகம் போன்றவற்றில் சிறு சிறு தொந்தரவுகளை அளிக்கும் தன்மையை வழங்கும். மேலும் இந்த வம்சத்தில் பெண்கள் சற்று கடினமான வாழ்க்கை சூழலில் அமைந்திருப்பார்கள். 

சூரியன்+சனி 

இந்த வம்சத்தில் அதீத வலியுடன் ஒரு உயிரின் இழப்பு நிகழ்ந்திருக்கும். மேலும் பிதுர் தோஷத்திற்கான ஒரு விதியை இது குறிகாட்டுகின்றது. தந்தை மகனுக்கான ஒற்றுமையின்மையை இந்த கிரக இணைவு வழங்கிவிடும். 

சூரியன்+ராகு 

கிரகண தோஷம் என்று இதனை கூறுவர். மேலும் இதுவும் பிதுர் தோஷத் திற்கு ஒரு விதி ஆகும். இந்த சூழல் தந்தையின் வழியில் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆட்பட்ட நபர்கள் இருப்பதையும் குறிகாட்டுகின்றது. மேலும் வெளிநாடு, வெளியூர் பயணங்களில் மூலம் அடையவிருக்கும் லாபங்களை அணுகும் தன்மையில் இடர்பாடுகளை அளிக்கும். 

சூரியன்+கேது 

இது தாய்வழி தோஷங்களை குறிகாட்டும் இணைவாகும். மேலும் எந்த சூழலிலும் ஒரு விரக்தியான பயணத்தை மேற்கொள்ளும் தன்மையை ஜாதகருக்கும் அவரின் தந்தைவழி உறவுகளுக்கும் அளித்துவிடும். 

சூரிய தசையில் சூரியனின் புக்தி 

மூன்று மாதங்களும் 18 நாட்கள் இந்த காலகட்டமானது சூரியனின் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் அமையப்பெற்ற பாவகத்திற்கு ஏற்ற பலனை நிச்சயமாக வழங்குவார். பொதுவாகவே சூரியன் ஆளுமை கிரகம் என்பதனால் எல்லா பொருட்களின்மீதும் உயிர்களின்மீதும் தனது ஆளுமையை நிரூபிக்கொண்டே இருக்கும் தன்மையை ஜாதகருக்கு வழங்கும் .மேலும் அரசு, அரசாங்கம், அரசுவழி வருமானம் ஆகியவற்றில் ஒரு சிறப்பான தன்மையை அளிப்பதோடு உடல் சார்ந்த விஷயத்தில் கண், பல், எலும்பு போன்றவற்றில் சிறு சிறு நோயின் தன்மையை வழங்கி செல்லும்.

சூரிய தசையில் சந்திர புக்தி ஆறு மாத காலங்கள் இந்த காலகட்டமானது தாய் சார்ந்த இனக்கங்களும், பயணங்களும் அமையும். மேலும் குடும்பத்திலுள்ள பெண்களின் நிலை மேம்படும். வரவு வருமானம் போன்றவை உயரும், அதோடு மட்டுமல்லாமல் சுற்றுலா செல்லும் இன்பகர சூழல் அமையும். இந்த காலகட்டமானது மனம் ஒரு நிலையில் இல்லாமல் அனைவரின்மீதும் ஒரு சிடுசிடுப்பை உமிழும். 

சூரிய தசையில் செவ்வாய் புக்தி 

நான்கு மாதங்களும் ஆறு நாட்களும் கொண்ட இந்த காலகட்டத்தில் உடல் வெப்பமடைதல் நிகழும். மனமானது எப்பொழுதுமே ஒரு இறுக்கத்தின் வசம் பயணிக்கும். அடுத்துவரின் குற்றங்கள் மிக எளிதாக நம் கண்களுக்கு படும். இதனால் கடும் கோபம் கோபத்தினால் ஏற்படும் விபரீதங்களையும் சந்திக்கக்கூடிய தன்மையை இந்த காலகட்டம் வழங்கும். சூரியனின் சுபமான இருப்பானது பூமி வழியில் பெருத்த லாபத்தையும், பூமி வாங்கும் தன்மையும் அளிக்கவல்லது. 

சூரியன் தசையில் ராகு புக்தி பத்து மாதம் 24 நாட்கள் கொண்டுள்ள இந்த பயணத்தில் தந்தையுடனான இணக்கமற்ற தன்மையை அளிப்பதோடு, தந்தை தொழில் மற்றும் வருமானம் ஆகியவற்றில் சில இம்சைகளை வழங்கும். அதோடு அரசு அரசியல்வாதிகள் சார்ந்த பிரச்சினைகளின் வசம் நம் பயணம் இருக்கும். எனவே சற்று நிதானமாக செயல்படுவது சிறப்பு. 

சூரிய தசையில் குரு புக்தி 9 மாதம் 18 நாட்கள் 

சூரியன், குரு, சமூகரீதியாக ஒரு நல்ல மரியாதையை பெற்றுக் கொள்ளும் தன்மையை வழங்கும். புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குவதோடு சிறந்த வழிகாட்டியாக தானே அமையும் தன்மையை வழங்கி, குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியலின்மீது அக்கறை உருவாகும். 

சூரிய தசையில் சனி புக்தி 11 மாதங்களும் 12 நாட்களும்

தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படும். 

தொழில் வழியில் சிறப்பானதொரு தன்மையை அடையமுடியும். இந்த காலகட்டத்தில் மூட்டு, பாதம் போன்றவற்றில் சில வலிகளும் நோய்களும் வருவதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு நடு முதுகுத்தண்டு மீதும் சற்று கவனத்துடன் செயல்படுவது சிறப்பினைத் தரும். 

சூரிய தசையில் புதன் புக்தி 10 மாதங்களும் 6 நாட்களும் 

வாங்கிய சொத்துகளை கிரையம் செய்யும் சூழலும் அல்லது பத்திரப் பதிவுகள் சார்ந்த பயணமும், இந்த காலகட்டத்தில் இருக்கும். குழந்தைகளின் கல்வியில் வளர்ச்சி, சாஸ்திரரீதியான வளர்ச்சி போன்றவற்றின் வசம் இந்த புத்தியானது இட்டுச் செல்லும். இவை புதன் அஸ்தங்கம் ஆகும்போது சிறப்பான ஒரு செயலை நமக்கு வழங்க சூரியன் கடமைப்பட்டவர் ஆவார். 

சூரிய தசையில் கேது புக்தி 4 மாதம் 6 நாட்கள் மட்டுமே 

இந்த காலகட்டத்தில் குழப்பத்தின் உச்சத்திற்கு ஒரு மனிதனை இட்டுச் சென்று அதன்மூலம் எடுக்கப்படும் முடிவினால் விபரீதமான விளைவுகளை சந்திக்கும் தன்மையை அளித்து விடும். மேலும் கண்ணுக்கு புலப்படாத கண்ணுக்குத் தெரியாத நோய்களை வழங்குவதில் சூரியன் மற்றும் கேது பெரும் பங்காற்றுகின்றது. எனவே இந்த காலகட்டத்தில் ஏற்படும் சிறு வலியைகூட உதாசீனப்படுத்தாமல் அதற் கான சரியான சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பு. 

சூரிய தசையில் சுக்கிரன் புக்தி முழுவதுமாக ஒரு வருட காலம் 

கடந்து வந்த புக்திகளில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஒத்தடமாகவும், வலி நிவாரணியாகவும், திகழக்கூடிய புக்தியாக இந்த சுக்கிரனின் புத்தி அமையும். இந்த காலகட்டமானது பொன், பொருள் சேர்க்கை எதிர்பாலின இணைவு போன்றவற்றை அளித்து வாழ்க் கையை வளமான பாதையின் வசம் இட்டுச் செல்லும். 

பரிகாரம் 

சூரியன், சனி, ராகு- கேது போன்ற கிரகங்களின் இணைவுகளும் சூரிய தசையில் மேற்கூறிய கிரகங்களின் புக்திகளும் நடக்கும் தருவாயில் திதி மற்றும் தர்ப்பணங்களை திருவள்ளம் சென்று செய்துகொள்வது மிக சிறப்பான பலனை வழங்கும். அதேபோன்று கோதுமை தானம் சிறப்பு. சூரியனின் ஆளுமைக்கு உட்பட்ட தொட்டாச்சிணுங்கி மற்றும் எருக்கன் செடி இலைகளை 24 நிமிடங்கள் வைத்து சுவாசத்தை கவனிப்பதன்மூலம் உடல்ரீதியான அனைத்துவிதமான தன்மைகளும் மாற்றம் அடைவதை கண்கூடாக பார்த்து பலன் அடைந்துள்ளோம். 

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துகொள்வது மாபெரும் வல்லமையை அளிக்க வல்லது. 

செல்: 80563 79988