பிரம்ம முகூர்த்த நேரமும் ஆடி பிறந்த கதையும் ராமசுப்பு

brama

 

நேரம் என்பது பலவகையாக உள்ளது. காலை நேரம் சுறுசுறுப்பா னது. மதிய நேரம் உணவருந்தும் நேரம். ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் மாலை நேரம். இரவு நேரம் அயர்ந்து உறங்கவேண்டிய நேரம்.

ஆக, இப்படிப்பட்ட நேரங்களில் அதிகாலை 3.00 மணிமுதல் 6.00 மணிவரை இருக்கக்கூடிய நேரம், "பிரம்ம முகூர்த்த நேரம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியன் உதித்து எழுவதற்கு 90 நிமிடங் களுக்குமுன் "பிரம்ம முகூர்த்தம்' எனும் நேரம் ஆரம்பமாகி, சூரியன் எழுந்த 48 நிமிடங்களுக்குள் முடிவடையும். இந்த 48 நிமிடங்களுக்குமுன் முடியும் இந்த நேரமே "பிரம்ம முகூர்த்த நேரமாகும்.' பிரம்ம முகூர்த்தம் என்பது பொதுவாக பிரம்ம தேவனைக் குறிப்பிடுகிறது. பிரம்மனின் சக்திதேவியான "சரஸ்வதி' அதிகாலையில் விழித்து செயல்படும் நேரமும் பிரம்ம முகூர்த்த நேரமாகும். 

முப்பது முக்கோடி தேவர்கள், ரிஷிகள், ஞானிகள், பிரம்மா போன்ற எல்லா சக்திகளும் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் நேரம் "பிரம்

 

நேரம் என்பது பலவகையாக உள்ளது. காலை நேரம் சுறுசுறுப்பா னது. மதிய நேரம் உணவருந்தும் நேரம். ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் மாலை நேரம். இரவு நேரம் அயர்ந்து உறங்கவேண்டிய நேரம்.

ஆக, இப்படிப்பட்ட நேரங்களில் அதிகாலை 3.00 மணிமுதல் 6.00 மணிவரை இருக்கக்கூடிய நேரம், "பிரம்ம முகூர்த்த நேரம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியன் உதித்து எழுவதற்கு 90 நிமிடங் களுக்குமுன் "பிரம்ம முகூர்த்தம்' எனும் நேரம் ஆரம்பமாகி, சூரியன் எழுந்த 48 நிமிடங்களுக்குள் முடிவடையும். இந்த 48 நிமிடங்களுக்குமுன் முடியும் இந்த நேரமே "பிரம்ம முகூர்த்த நேரமாகும்.' பிரம்ம முகூர்த்தம் என்பது பொதுவாக பிரம்ம தேவனைக் குறிப்பிடுகிறது. பிரம்மனின் சக்திதேவியான "சரஸ்வதி' அதிகாலையில் விழித்து செயல்படும் நேரமும் பிரம்ம முகூர்த்த நேரமாகும். 

முப்பது முக்கோடி தேவர்கள், ரிஷிகள், ஞானிகள், பிரம்மா போன்ற எல்லா சக்திகளும் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் நேரம் "பிரம்ம முகூர்த்த நேரம்.' "பிரம்ம முகூர்த்தம்' எனப்படும் இந்த நேரம் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மிகப் புனிதம் நிறைந்த நேரமாகும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் எல்லா சுப காரியங்களும் மிகவும் சிறந்ததாகவும், பெருமைமிக்கதாகவும் கருதப்படுகிறது. 

இந்த நேரத்தில் திருமண சுபமுகூர்த்தம், புதுமனை புகுதல், பிறந்தநாள் கொண்டாடு தல் போன்ற இன்னும் பல சுப நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். இந்த நேரத்திற்கு நாள், நட்சத்திரம், தோஷம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு தெய்வீகமான நேரமாகும்.

நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து அன்றாட வேலைகளைச் செய்தால் நம் மனநிலை ஒருநிலைப்படுகிறது. குறிப்பாக குளித்து, தூய உடை உடுத்தி, நெற்றியில் திலமிட்டு, இறைவனைத் தொழுவது நமக்கு சிறந்த பலனைத் தரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தோல்வி கிடையாது. வெற்றி  நிச்சயமுண்டு. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுபவர்கள் வாழ்வில் தன்னம்பிக்கையும், மனதளவில் தைரியம், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். பெண்கள் குளித்துவிட்டு, நெற்றிப் பொட்டிட்டு, மடிப் புடவையை உடுத்திக்கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துப் பின் விளக்கை ஏற்றவேண்டும். இப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் நினைத்த காரியம் கைகூடும். திருமணம் நடைபெறும். குழந்தை செல்வம் கிடைக்கும். தீராத நோய் தீரும். வீட்டிலுள்ள குழந்தைகள் இந்த நேரத்தில் பாடம் படித்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். படிப்பு நேரம் மேலும் வளரும்.

இந்த நேரத்தில் தியானம் செய்தால், நமக்கு நல்ல இறையருள் கிடைக்கும். தியானம் செய்யும்போது எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடாது. அவை நற்காரியங்களுக்குத் தடையாக இருக்கும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டால் நமக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது. மனச்சோர்வை நீக்குகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் நல்லமுறையில் அந்த நாளைத் தொடங்கினால் அந்த நாள் நமக்கு பதற்றைத்தைக் குறைக்கும். நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். நடப்பவை நல்லதாக நடக்கும். நமக்கு வேண்டியதை அள்ளிக் கொடுக்கக்கூடியது இந்த பிரம்ம முகூர்த்த நேரம். அதிகாலையில் வீசும் அமுதக் காற்று நல்ல மருத்துவ குணமும் தெய்வீக சக்தியும் நிறைந்தது.

பிரம்ம காயத்திரி மந்திரம்
"ஓம் வேதாத்ம ஹாய் வித்மஹே
ஹரண்ய கர்பாய தீமஹி
தன்னோ பிரம்ம பிரசோதயாத்.''

இந்த மந்திரத்தைப் பக்தியோடு பலமுறை சொன்னால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். எல்லாவித யோகமும் தேடிவரும். நமக்கு அமைதியான வாழ்வைக்கொடுத்து நிம்மதியைப் பெற்றுத்தரும். 

புராண காலத்தில் "ஆடி' என்ற பெயரில் ஒரு அரக்கன் இருந்தான். அவன் பல வரங்கள் பெற்று நினைத்த வடிவத்தைப் பெறும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த அரக்கனுக்கு ஒரு ஆசை அவனது மனதில் இருந்தது. தான் மரணம் எய்தும் காலத்தில் சிவபெருமானை அடைய வேண் டுமென்று ஆசைப்பட்டான். அவ னுக்கு இறுதிகாலம் வந்துவிட்டதை உணர்ந்து, அவனது ஆசைப்படி சிவ பெருமானிடம் சென்று அடைந்துவிட வேண்டு மென்று பரமேஸ் வரியின் வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டு சிவ பெருமானை நெருங்கினான். 

பார்வதி தேவியின் வடிவில் வரும் அரக்கனை அடையாளம் கண்டு கொண்ட  பரமேஸ்வரன் அவருடைய நெற்றிக்கண்ணால் பார்த்து அவனை சுட்டெரித்து சாம்பலாக்கினார்.

இதைக்கண்ட பார்வதிதேவி "அந்த அரக்கன், தன் இறப்பிற்குப் பிறகு, ஈஸ்வரனை அடைய நல்ல எண்ணத்தில் என்னுடைய உருவத்தை வடிவெடுத்து வந்திருக்கிறான். வேறு எந்த வடிவத்தில் வந்தாலும் ஈசனை நெருங்கமுடியாது என்பதால் என் உருவத்தை எடுத்துவந்து இருக்கிறான். 

அவனை இப்படி சாம்பலாக்கிவிட்டீர்களே'' என்று வருத்தப்பட்டாள்.

அந்த அரக்கனின்மீது இரக்கம்கொண்ட பார்வதி அவன் நினைவாக அவன் மறைந்த அந்த மாதத்தை அவன் பெயரிலேயே "ஆடி' என்று வைத்து, அந்த மாதத்தில் அம்மனை வழிபட வரம் வழங்கினாள்.

அதனால்தான் "ஆடி' என்ற பெயரும், அந்த மாதத்தில் அம்மன் வழிபாடும் ஏற்பட்டது.

 

om010825
இதையும் படியுங்கள்
Subscribe