ங்கு சந்தை என்பது ஊக வணிகம்தான் பங்கு சந்தையின் ஏற்ற- இறக்கங்களே தீர்மானிக்கக்கூடிய காரணிகளாக, நிறுவனத்தின், பட்டய கணக்கோ, லாப- நஷ்டங்களோ மட்டுமல்ல, உலக அரசியல் போர் சூழ்நிலை, நாட்டின் ஸ்திர தன்மை, மருத்துவ முன்னேற்றம், காலநிலை மாற்றம், பெட்ரோல், உலோகங்களின் உபயோகம் அவற்றில் ஏற்படும் விலை மாற்றம் ஆறாம் அறிவின் ஆற்றல் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளடக்கியே பங்கு வர்த்தகம் நடைபெறும் இதிலும் ஊழல்கள் உண்டு. 

Advertisment

பட்டய கணக்கராக, அதில் நிபுணராக இருந்தால்கூட இந்த ஊக வணிகத்தில், நிலையான லாபங்களை மட்டுமே பார்ப்பது, அரிது. பங்கு வர்த்தகத்தில் தின வணிகம் செய்பவர்களுக்கு (உஆஒகவ பதஆஉஒசஏ) அவர்களின், ஜெனன ஜாதக அடிப்படையிலான கோட்சாரக் கணக்கீடு அறிந்திருத்தல் அவசியம். 

Advertisment

அப்பொழுதுதான், நான்கு மணி நேரத்திற்குள், சில பங்குகளின் ஏற்ற- இறக்கங்கள் காண முடியும். இதற்கு அடிப்படை ஜோதிட அறிவு அவசியம்.

இனி, பங்கு சந்தையில் லாப- நஷ்டங்கள் கணக்கிடும் ஜோதிட விதிகளைக் காண்போம்.

Advertisment

* பங்கு சந்தை வர்த்தகத்திற்கு, 2, 5, 6, 8, 9, 11-ஆம் பாவங்கள், மிக குறிப்பாக ஆய்வு செய்யப் படவேண்டும். கிரகங்களில், குறிப்பாக புதன், ராகு, குரு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

* எந்த லக்னமாயினும், சூரியனுக்கு அஷ்டமத்தில் சாயா கிரகம் உள்ளவர்கள், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது.

* ஐந்தாமிடம் திதி சூன்யமடைந்தாலோ அல்லது ஐந்தாம் பாவத்தில் மாந்தி இருந்தாலோ பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* குருவும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகமாக இருப்பவர் களும் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது

* ராகு நின்ற ராசியாதிபதி, பகை, நீசம்பெற்று, மறைவு- ஸ்தானங்களில் இருப்பின் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* ராகுவிற்கு (அ) 12-ல் குரு இருப்பின், பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* லக்னத்திற்கு யோகாதிபதிக்கு, "சஷ்டாஷ்டகமாக' சாயாகிரகம் இருப்பின், பங்கு சந்தையில் ஈடுபடக் கூடாது.

* தனித்த புதன், கேந்திரங்களில் இருப்பவர்கள் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* தனித்த ராகு, 2, 8, 12-ல் இருந்து, தசையை நடத்தும்போது யோகாதிபதி சாரம் பெற்றிருந்தாலும், பங்கு சந்தையைப் பொறுத்தவரை இறுதியில் நஷ்டமே மிஞ்சும்.

* செவ்வாய் நீசம் ஆனவர்களோ (அ) புதன் வக்ரம் பெற்றோ பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* இரண்டாமதிபதியும், அஷ்டமாதிபதியும் இணைந்திருந்தாலோ (அ) பரிவர்த்தனை (அ) சார பரிவர்த்தனை (அ) பார்வை பெற்றோ இத்தகையவர்கள் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* சந்திரனுடன், சாயாகிரகம் கூடியுள்ளவர்கள், பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* சூரியனுடன் சனி கூடி, இரண்டாம் பாவத்தில் உள்ளவர்கள் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* புதன் வீடுகளில், செவ்வாய் இருந்து, சனி பார்ப்பதோ (அ) சனி இருந்து செவ்வாய் பார்வை உள்ளவர்களோ பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது

* மேஷ லக்னமாகி ஆறாம் அதிபதி புதன் லக்னத்தில் இருப்பினும் கூட, இவர்கள் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* பங்கு சந்தை வர்த்தகத்தில், ராகு பேராசையை தூண்டி பச்சோந்திபோலவே செயல்படும்.

* உச்சம்பெற்ற கிரகத்துடன், ராகு இணைந்து, புதனும் ஜாதகத்தில் வலுபெற்று, உள்ள நிலையில் இருப்பின் பங்கு சந்தையினால் லாபம் உண்டு.

* இரண்டாமதிபதி (அ) பாக்கியாதிபதி (அ) இவர்கள் நின்ற நட்சத்திராதிபதி, பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று, மறைவு ஸ்தானங்களில் இருப்பின், பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* சந்திரனுக்கு முன், பின் கிரகங்கள் இல்லாமலிருந்து, சந்திர தசையும் நடைபெறும் காலத்தில் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* புதன் வர்க்கோத்தமம் பெற்றால், பங்குச் சந்தையில் லாபம் காணமுடியும். இதற்கு, ராகு, குரு மற்றும் ஐந்தாமிடமும் ஒத்துழைக்க வேண்டும். புதன் நீசம்பெற்றால் பங்கு சந்தையில் ஈடுபடக்கூடாது.

* பங்கு சந்தை வர்த்தகத்திற்கு அஷ்டமாதிபதியும், புதனும், ராகுவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள். இதில் ராகு பேராசையைத் தூண்டி, நஷ்டத்தை ஏற்படுத்துவார் என்பதால் எச்சரிக்கை தேவை!

* குரு. சந்திரன், சுக்கிரன் மூவரில் இருவர் ஜாதகத்தில் வலு இழந்திருந் தால், பங்குச் சந்தையில் ஈடுபடக்கூடாது.

* சர லக்ன ஜாதகரைத் தவிர்த்து, மற்றவர்களின் ஜாதகத்தில் சந்திரனோ (அ) புதனோ லாப ஸ்தானத்தில் இருப்பின், சார நிலையைப் பொறுத்து, பங்குச் சந்தையில் நீண்டகால முதலீடு நல்ல லாபம் தரும்.

* பங்கு சந்தையில் லாபம் காண ஐந்தாமிடம், அதன் அதிபதி மற்றும் புதன் ஜாதகத்தில் வலு பெற்று இருக்கவேண்டும்.

* குரு வலு இழந்தோ (அ) புதன் வக்ரம் பெற்றோ உள்ளவர்கள் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

* 5 (அ) 11-ஆம் அதிபதிகளில் ஒருவர் நீசம்பெற்றாலும் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

* ஆறுக்குடையவன், பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று, தசையையோ, புக்தியையோ நடத்தும்போது, பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

* பதினொன்றாம் அதிபதி நின்ற நட்சத்திராதிபதி, லக்னத்திற்கு மறைந்தாலோ (அ) பகை, நீசம் பெற்றோலோ, பங்கு வர்த்தகத்தில் நஷ்டமே மிஞ்சும்.

* பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது தசாபுக்தி அவசியம் காணப்பட வேண்டும். இதில், 3, 4, 7, 8, 11, 12-ஆம் அதிபதிகளின் தசை எனில், பங்குச் சந்தை வணிகத்தில் அதிக கவனம் தேவை. 2, 6, 10-ஆம் அதிபதிகள் யோகம் அளிப்பவராக இருப்பின், பங்குச் சந்தையினால் லாபம் உண்டு. 1, 5, 9-ஆம் அதிபதிகளின் தசை எனில், நீண்டகால முதலீடு (அ) பங்கு வர்த்தகர் தொழில் மட்டுமே லாபம் அளிக்கும்.

* கோட்சாரத்தில் மேஷத்தில் சனி பயணிக்கும் காலத்தில் பங்கு வர்த்தகத்தில் மிக கவனம் தேவை. இல்லையேல் நஷ்டமே ஏற்படும்.

* பங்குச் சந்தை முதலீட்டிற்கு கோட்சாரம் மிக அவசியம். ஜனன ஜாதகத்திலுள்ள குருமீது கோட்சார குரு, சுக்கிரன், புதன் பயணிக்கும் காலத்திலும், புதன்மீது கோட்சார குரு, புதன், சுக்கிரன் பயணிக்கும் காலத்திலும் (அ) சுக்கிரன்மீது, கோட்சார புதன், குரு, சுக்கிரன் பயணிக்கும் காலத்திலும், பங்குச்சந்தை பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஆயினும், ஜனன ஜாதகத்தில், குரு, சுக்கிரன், ராகு, புதன் இவர்களின் நிலையும் ஆராயப்படத்தான் வேண்டும்.

* 2030-ஆம் ஆண்டுவரை, அனைத்து நாட்டு பங்கு வர்த்தகத்திலும், பல பிரச்சினைகள் உருவாகும். சில மட்டுமே வெளியுலகிற்கு தெரிய வரும்பல தெரியவே வராது. எனவே, எச்சரிக்கை தேவை.

செல்: 63824 12545.