Advertisment

ஆகாய கங்கையும் பகீரதனும்!

gangai

காய கங்கையை பூமிக்குக் கொண்டுவர முயன்ற பகீரதன் பிரம்மாவை வேண்டினான். பிரம்மா, "கங்கை வரும் வேகத்தை யாராலும் தாங்கமுடியாது. 

Advertisment

அந்த இமயவரம்பன் சிவனால் மட்டுமே முடியும். ஆதலால் பரமசிவனை நினைத்து தவமிரு'' என்றார். பகீரதனும் தன் கால் கட்டைவிரலைத் தரையில் ஊன்றி, கைகளை உயர்த்தி, உண்ணாமல் உறங்காமல் பலகாலம் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சிய பரமசிவன், தன் தலையில் கங்கையைத் தாங்குவதாக வரமளித்தார். 

Advertisment

கர்வம்மிக்

காய கங்கையை பூமிக்குக் கொண்டுவர முயன்ற பகீரதன் பிரம்மாவை வேண்டினான். பிரம்மா, "கங்கை வரும் வேகத்தை யாராலும் தாங்கமுடியாது. 

Advertisment

அந்த இமயவரம்பன் சிவனால் மட்டுமே முடியும். ஆதலால் பரமசிவனை நினைத்து தவமிரு'' என்றார். பகீரதனும் தன் கால் கட்டைவிரலைத் தரையில் ஊன்றி, கைகளை உயர்த்தி, உண்ணாமல் உறங்காமல் பலகாலம் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சிய பரமசிவன், தன் தலையில் கங்கையைத் தாங்குவதாக வரமளித்தார். 

Advertisment

கர்வம்மிக்க கங்கை, பரமசிவன் தலையில் மிக அழுத்தமாகப் பாயத் தொடங்கினாள். அவளது எண்ணத்தை உணர்ந்த சிவபெருமான், அவள் கர்வத்தை அடக்க, அவளை முழுவதுமாகத் தன் ஜடாமுடிக்குள் தேக்கி, அவள் வெளியே வரமுடியாத அளவுக்குக் கட்டுப்படுத்தினார்.

பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வார்கள். எனவே, பகீரதன் மீண்டும் கடுமையான தவமிருந்து கயிலைநாதனைக் கைகூப்ப, அவரும் மகிழ்ந்து, கங்கையை சப்த பிரவாகங் களாகப் பிரித்து பூமிக்கு அனுப்பினார். அவள் ஹ்லாதினி, பவானி, நளினி எனப் பெயர்பெற்று மூன்று கிளைகளாகப் பிரிந்து கிழக்கு திசையிலும்; ஸீச்க்ஷீஸ், சீதா, சிந்து என்ற கிளைகளாக மேற்கு நோக்கியும் பாய்ந்து சென்றாள். மற்றுமொரு பிரவாகமாக பகீரதனைப் பின்தொடர்ந்தாள். இவ்வாறு, மூன்றாகப் பிரிந்த கங்கா தேவி, "தனபதகா' என பெயர் பெற்றாள்.

இவ்வாறாக கங்கை தேவலோகத்திலிருந்து பாய்ந்து, சிவபெருமானின் சிர ஸ்பரிசம் பெற்று பூமியில் பிரவாகமாகக் கொட்டியதால், கங்கை புனிதநதியாகக் கருதப்படுகிறது. பகீரதனைத் தொடர்ந்த கங்கை அதிவேகத்துடன், பல தாதுக்கள் முதலியவற்றை அடித்துக்கொண்டு சென்றது. வழியில் "ஜான்வீ' என்னும் முனிவர் செய்துவந்த யாகத்தையும் அடித்துச் சென்றபோது, சினம்கொண்ட முனிவர், கங்கை நீர்முழுவதையும் அருந்திவிட்டார். பதற்றமுற்ற பகீரதன் முனிவரின் பாதம் பற்ற, தன் செவிகள் வழியே முழு நீரையும் வெளிவிட்டார். இதனால், கங்கைக்கு, "ஜான்ஹவி' என்ற பெயரும் ஏற்பட்டது.

பின்பு, பகீரதனைத் தொடர்ந்து சமுத்திரத்தை அடைந்து பாதளம் சென்ற கங்கையில், பாதாளத்திலிருந்த தன் முன்னோர்களின் சாம்பலைக் கரைத்து பித்ரு தர்ப்பணங் கள் செய்தான் பகீரதன். அவர்களும் நற்கதி அடைந்தனர்.

பின்பு பிரம்மா பகீரதன்முன் காட்சியளித்து ஆசீர்வதித்தார். "கங்கையை பகீரதன் பூமிக்குக் கொண்டுவந்ததால், கங்கைக்கு பாகீரதி' என்ற பெயர் உண்டாகட்டும்'' என்று கூறி பிரம்மா மறைந்தார்.

இப் புராணத்தை இராமபிரானுக்கு விஸ்வாமித்ர மகரிஷி எடுத்துக்கூறி, இக்கதையைக் கேட்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்றும் கூறிமுடித்தார்.

-எஸ். விஜயா

om010326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe