ஜோதிடம் என்னும் சமுத்திரத்தில் மானுடப் பிறவியின் ரகசியங்கள் மறைந் துள்ளது.
12 கட்டங்களின்மூலம் வாழ்வியல் சூட்சமத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஜோதிடத்தாய், ஒவ்வொரு கட்டத்திலும் காரகங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறும், கிரகங்களுக்கு ஏற்பவும், தசா புக்தி காலங்களில் நம் கரம் சேர்க்கின்றாள்.
அதன் அடிப்படையில் ஆளுமையில் திளைத்த மனிதனை, அசைக்கும் வல்லமை இந்த 6-ஆம் பாவகத்திற்கே உரியதாகும்.
அப்படி என்ன? என்றால் ருண, ரோன, சத்ரு, ஸ்தானம்.
ஆம்; கடன், நோய், எதிர்ப்புக்கான பாவகம் ஆகும்.
கடன்சென்று வாழ்க்கை மறுக்கின் அதைத் தளர்வார் இடன் சிறிது காணார் மக்கள். குறள் 752இந்த குறளில் வள்ளுவன் கடன்பட்டவரின் உயிரே தளர்கிறது என்கின்றார்.
உடல்நலம் என்பது உறுதி உலகின் பாடல் வரை எல்லாம் பிற குறள் 726இந்தக் குறளில் நோய் அற்ற
ஜோதிடம் என்னும் சமுத்திரத்தில் மானுடப் பிறவியின் ரகசியங்கள் மறைந் துள்ளது.
12 கட்டங்களின்மூலம் வாழ்வியல் சூட்சமத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஜோதிடத்தாய், ஒவ்வொரு கட்டத்திலும் காரகங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறும், கிரகங்களுக்கு ஏற்பவும், தசா புக்தி காலங்களில் நம் கரம் சேர்க்கின்றாள்.
அதன் அடிப்படையில் ஆளுமையில் திளைத்த மனிதனை, அசைக்கும் வல்லமை இந்த 6-ஆம் பாவகத்திற்கே உரியதாகும்.
அப்படி என்ன? என்றால் ருண, ரோன, சத்ரு, ஸ்தானம்.
ஆம்; கடன், நோய், எதிர்ப்புக்கான பாவகம் ஆகும்.
கடன்சென்று வாழ்க்கை மறுக்கின் அதைத் தளர்வார் இடன் சிறிது காணார் மக்கள். குறள் 752இந்த குறளில் வள்ளுவன் கடன்பட்டவரின் உயிரே தளர்கிறது என்கின்றார்.
உடல்நலம் என்பது உறுதி உலகின் பாடல் வரை எல்லாம் பிற குறள் 726இந்தக் குறளில் நோய் அற்ற உடல் நலமே எல்லா செல்வத்திற்கும் அடிப்படையானது என்கின்றார்.
பகைமை என்பது ஒருவருக்கு நால் நாளும் நன்று ஆகா குறள் 848 எதிரிகளால் ஏற்படும் பகைமை தரும் துன்பமானது, எல்லாவற்றையும் விட மேலானது என்று இந்தக் குறளின் மூலம் எடுத்துரைக்கின்றார். ஆக, வாழ்வில் ஏற்படும் அத்தனை இடர்பாடுகளும், வளமற்ற நிலையையும், மனிதனுக்கு வழங்குவது.
6-ஆம் பாவகமே என்பது வாழ்ந்த தெய்வம் வள்ளுவனின் வாக்கு. ஓடி திரிகின்ற உடலில் ஒரு நோய் வந்தபிறகுதான் அற்புதமான உடலின் தன்மை புரிகின்றது, சிறு வலிகூட நம் அன்றாட செயலை பதம் பார்த்துவிடும். சில சமயங்களில் நோய் தீர பார்க்கப்படும் மருத்துவத்தினாலேயே கடன் அமைந்து கலங்கச் செய்கின்றது. எதுவானாலும் மீதி பாவங்களைவிடவும் இந்த ஆறாம் இடம் நமக்கு பய உணர்வை அளிக்கின்றது.
இவ்வளவு வலிகளை அளிக்கக்கூடிய கடனும், நோயும், எதிர்ப்பும், ஒரு மனிதனுக்கு எந்த காலகட்டத்தில் வெகுவாக குறையும் என்கின்ற கணிதத்தை காணலாம்.
சரி; 6-ஆம் பாவகத்திற்கு விரைய பாவகமான 5-ஆம் பாவக அதிபதியின் தசாபுக்தி காலங்களிலோ அல்லது ஐந்தில் அமர்ந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களிலோ, கடன் தீர்க்கப்படும் என்பது ஜோதிட விதி-1
உதாரணம்
1. ரிஷப லக்னம், 5-ஆம் இடம் கன்னி, 5 உரிய கிரகம் புதன், ஐந்தில் அமர்ந்த கிரகம் செவ்வாய், ஆக புதன் தசையில் செவ்வாய் புக்திலோ அல்லது செவ்வாய் தசையில் புதன் புக்தியில் இவர்களுக்கான கடன் வெகுவாக குறையும்.மேலும் ஐந்தில் அமர்ந்த கிரகமான செவ்வாய் ஏழாம் பாவகத்திற்கு உரித்தான கிரகமாகும்.எனவே வாழ்க்கைத் துணையின்மூலம் கடன் அடைப்பதற்கான வழி பிறக்கும்.
2. அடுத்ததாக பாவத் பாவம் அடிப் படையில் 6-ஆம் பாவகத்திற்கு 6-ஆம் பாவகம் என்று கூறக்கூடிய 11-ஆம் பாவக அதிபதியின் தசையிலோ அல்லது பதினோராம் பாவத்தில் அமர்ந்த கிரகத்தின் தசையிலோ கடன், நோய், எதிர்ப்புகள், வெகுவாக குறையும் என்பது விதி-2
உதாரணம்
கடக லக்னம், லக்னத்திற்கு ஆறாம் அதிபதி குரு 6-க்கு 6-ஆன 11-ஆம் பாவகத்தில் அமரும் பொழுது, சந்திர தசாபுக்தி காலங் களிலோ அல்லது குருவின் தசாபுக்தி காலங்களிலோ, கடன் நோய் எதிர்ப்பு குறையும்.
3, 6-ஆம் பாவகத்திற்கு அஷ்டமஸ்தானமான லக்ன பாவத்தின் தசாபுக்தி காலங்களிலும், லக்னத்தில் அமர்ந்த கிரகத்தின் தசாபுக்தி காலங்களிலும், கடன்கள் வெகுவாக தீர்க்கப்படும் விதி-3.
உதாரணம்
விருச்சிக லக்னம், லக்னத்திற்கு 6 ஆமிடம் மேஷம், 6-க்கு அஷ்டம ஸ்தானமாக விளங்குவது மீண்டும் விருச்சிகம், இதில் அமர்ந்த கிரகம் சனி அப்பொழுது செவ்வாய் மற்றும் சனி தசாபுக்தி காலங்களில் இவர்களின் கடன் தீர்க்கப்படும்.
இந்த கணிதத்தின் வாயிலாகதான் ஒரு ஜாதகத்தில் எப்பொழுது கடன் தீரும் சூழல் என்பதை ஒரு ஜோதிடரால் கணிக்க முடியும்.
மேலும் அதீத கடன், நோய், எதிர்ப்பு ஆகியவற்றை அகற்றும் ஒரு தாந்திரீக பரிகாரம் சதுரமான ஒரு கற்பூர கட்டியில் பச்சை நிற எழுதுகோலை கொண்டு கடன் வாங்கியவரின் பெயர் மற்றும் கடனின் தொகை ஆகியவற்றை எழுதி வீட்டின் வெளிப்புறமாக அமைந்த ஒரு இடத்தில் நனையாமல் வைத்துவிட இந்த கற்பூரம் காற்றில் கரைய கரைய கடன் தொல்லை வெகுவிரைவில் கரைவதை கண்கூடாகக் காணமுடியும்.
இதே கற்பூரத்தில் நோயின் தன்மையையும் எழுதலாம்.
எதிரிகளின் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு தெற்கு முகமாக அமர்ந்த அம்மன் ஆலயத்தில், செவ்வாய்க்கிழமைகளில் சனி ஓரையிலும், சனிக்கிழமைகளில் செவ்வாய் ஓரையிலும் ஒரு எலுமிச்சம் பழத்தில் அவர்களின் பெயரை எழுதி சூலத்தில் அழுத்தி விட எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் அகலும்.
செல்: 80563 79988
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us