Advertisment

வேண்டும் வரம் தருவார் பாடலாத்ரி நரசிம்மர்! - முனைவர் இரா.இராஜேஸ்வரன்

rajesharan

சிவபெருமானுக்கு "நெற்றிக்கண்' உண்டு என்பது எல்லாருக்கும் தெரிந்தது. எனவேதான் தமிழ்ச் சங்கப்புலவர் நக்கீரர் சிவபெருமானிடம் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதிடுவார். சிவபெருமானுக்கு "நெற்றிக்கண்' இருப்பதுபோன்று நரசிம்ம சுவாமிக்கு நெற்றிக்கண் உண்டு.

Advertisment

திரிநேத்திரதாரியாக (மூன்றுகண்) விளங்கும் நரசிம்ம சுவாமி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தைத் தருபவர்.  இவருடைய வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்தினும், புருவத்தின் மத்தியில் நெற்றிக்கண்ணில் அக்னியும் உள்ளனர். சிறப்பும், பெருமையும்வாய்ந்த பிரார்த்தனை ஸ்தலம் சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் எனும் திருத்தலத்தில் சிறிய மலைக்குன்றில் குகையில் முக்கண்ணுடைய பாடலாத்ரி (சிகப்பு நிற குன்று) நரசிம்ம சுவாமி திருக்கோவில் எனும்

சிவபெருமானுக்கு "நெற்றிக்கண்' உண்டு என்பது எல்லாருக்கும் தெரிந்தது. எனவேதான் தமிழ்ச் சங்கப்புலவர் நக்கீரர் சிவபெருமானிடம் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதிடுவார். சிவபெருமானுக்கு "நெற்றிக்கண்' இருப்பதுபோன்று நரசிம்ம சுவாமிக்கு நெற்றிக்கண் உண்டு.

Advertisment

திரிநேத்திரதாரியாக (மூன்றுகண்) விளங்கும் நரசிம்ம சுவாமி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தைத் தருபவர்.  இவருடைய வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்தினும், புருவத்தின் மத்தியில் நெற்றிக்கண்ணில் அக்னியும் உள்ளனர். சிறப்பும், பெருமையும்வாய்ந்த பிரார்த்தனை ஸ்தலம் சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் எனும் திருத்தலத்தில் சிறிய மலைக்குன்றில் குகையில் முக்கண்ணுடைய பாடலாத்ரி (சிகப்பு நிற குன்று) நரசிம்ம சுவாமி திருக்கோவில் எனும் பெயரில் அமைந்துள்ளது. தனிச் சிறப்புபெற்ற இந்த நரசிம்ம சுவாமிக்கு தீப ஆராதனையின் போது மட்டுமே பக்தர்களுக்கு நெற்றிக் கண்ணைக் காட்டுவார் கள்.

Advertisment

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) ஒன்றுதான் நரசிம்ம அவதாரம். 

தன்னையே முழுமையாக நம்பியிருந்த பக்தனான பிரகலாதனைக் காக்க தூணியிலிருந்து வெளியே வந்தவர். இறைவன் தூணிலும் இருப்பார். சின்ன துரும்பிலும் இருப்பார் என்கிற சொல்லை மெய்ப்பிக்கவே இந்த அவதாரம். நினைத்த நொடியில் அவதரித்தல், "நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில்'' என வைணப் பெரியவர்கள் சிலாகித்து கூறுவதுண்டு. இந்த அவதாரத்தைப் பற்றி ஆழ்வார்கள் பலவாறு போற்றி பாசுரங் களைப் பாடியுள்ளனர்.

பெரிய திருமொழியில், பெரியாழ்வார் நரசிம்ம அவதாரத்தைப் புகழ்ந்தது.

"அளந்து இட்ட தூணை அவள் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வான் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஓண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய் மூலை உண்டானே சப்பாணி''

எனப் பாடியுள்ளார். இப்பாசுரத்தில் தூணிலிருந்து சிங்க உருவ வடிவில் நரசிம்மர் தோன்றினார் எனக் கூறுகிறார்.

இதே கருத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இரணிய வதை பற்றிப் பாடும்போது, 

"உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகு எங்கும் பரந்துளனை 
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல்
கும்பத்தின் கரியைக் கோள்மாக் கொன்ளென நின்னைக் கொன்றுள்
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென்''

என்று பாடியுள்ளார்.

இப்படியாக பல வைணவப் பெரியவர்கள் தங்களது பாணியில் போற்றிப் பாடி யுள்ளனர்.

அசுரகுலத் தலைவன் இரணிய வதை முடிந்து, கோபமான முகத்துடன் இருந்த நரசிம்ம சுவாமியை பக்தன் பிரகலாதன்தான் சாந்தப்படுத்தினான். 

நரசிம்ம அவதார காலத்தில், நரசிம்ம சுவாமியை நோக்கி இன்று கோவில் அமைந்துள்ள இடத்தில் (முன்பு காடு) ஜாபா- எனும் முனிவர் கடும் தவமிருந்தார். தவத்தின் பயனாக முனிவருக்கு ஒருநாள் மாலைப் பொழுதில் இரணியனை வதம்செய்த கோலத்திலேயே காட்சியளித்து அருளினார். முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தலத்தில் அர்ச்சா அவதார கோலத்தில் இன்றும் வீற்றிருக்கிறார்.

rajesharan1

தமிழக பகுதியை ஆண்ட பல்லவ மன்னர்களின் ஆட்சி (கி.பி. 4-8-ஆம் நூற்றாண்டு) காலத்தில் இக்கோவிலின் முதல் திருப்பணி நடைபெற்றது. மலைப் பாறைகளைக் குடைந்து, அங்கே கோவில் கட்டும் கலையை முதன்முதலில் உருவாக்கியவர்கள் பல்லவர்கள். எனவேதான் குகைக் கோவில்கள் யாவும் பல்லவர்களின் காலத்தில் தோன்றின. அந்தவகையில் பல்லவ மன்னர்களால் முதலில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் பல மன்னர்கள் திருப்பணியைச் செய்து பராமரித்து வந்தனர்.

நம் பாரத தேசத்தில் பல இடங்களில் புராதன நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஆந்திர மாநில அஹோபிலம் (குகை) பிரசித்தி பெற்ற ஸ்தலம். இங்குள்ள நரசிம்மருக்கு மாலோலன் என்கிற ஒரு பெயரும் உண்டு. லட்சுமி தேவியுடன் காட்சி தருவதால் "லட்சுமி பதே' எனவும் அழைக்கலாம். திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியில், இக்கோவிலை "சிங்கவேள் குன்றம்' எனப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். 

அஹோபிலம் போன்றே  சிங்கப்பெருமாள் கோவிலின் குகையில் ஸ்ரீ நரசிம்மர் அருள்பாலிக்கிறார். 

நம்முடைய வேண்டுதலை நிறைவேற்ற பக்தியுடன் இத்தலத்திற்குச் சென்று நரசிம்மரின் மகா மந்திரமான

"உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்''
என்ற மந்திரத்தை ஜெபித்து வழி
பட்டால் காரியம் சித்தியாகும்.

om011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe