வெற்றியை அனுதினமும் அருளும் வெற்றிலை வெறும் இலை அல்ல, அது 11 தெய்வங்களின் மகத்தான அலைவரிசையை கொண்ட சிம்மாசனம் ஆகும். 

Advertisment

வடமொழியில் நாகவல்லி என்று போற்றப்படும் இந்த வெற்றிலை, தமிழ் மரபுகளில் ஒரு மங்களப் பொருளாக ஆராதிக்கப்படுகின்றது. இதனை தாம்பூலம் என்று போற்றுகின்றன நம்மவர்கள். 

Advertisment

முப்பெரும் தேவியர்களின் கடாட்சமும் இதில் அமைந்துள்ளது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் அமர்ந்து அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. 

இது மட்டுமல்ல வெற்றிலை புதன் மற்றும் சுக்கிரனின் ஆளுமையை கொண்டது என்பதால் ஞானம், கல்வி, ஐஸ்வரியம், ஆகியவற்றை நம்மிடம் சேர்க்கும் ஆற்றல் இந்த தாம்பலத்திற்கு உண்டு.

Advertisment

வாக்கு வன்மையையும், வாழ்வில் தின்மையும், நம்மிடம் சேர்க்கும் இந்த தாம்பூலம் வாழ்வை மாற்றி வரவேண்டிய நல்லவையை ஈர்க்கும் ஆற்றல் பெற்றது. 

ஏதும் அறியாத சபையில் அவமானப் பட்ட காளிதாசனுக்கு அன்னை காளிதேவி அளித்த தாம்பூலம் வாக்கு சக்தி, கல்வி, ஞானம், இலக்கிய மேன்மை போன்றவற்றை அளித்தது. 

வால்மீகிக்கு நாரதர் காட்டிய வழியால் கிடைத்த தாம்பூலம், கவிமேன்மை, ஞானம், அளித்து இராமாயணம் எழுதும் ஞானத்தை வழங்கியது. 

வியாசருக்கு நாராயணன் அளித்த தாம்பூலம், வேத, உபநிஷ ஞானத்தை, வழங்கி மகாபாரதம் இயற்றக்கூடிய வல்லமையை அளித்தது. 

இன்னும் பஞ்ச பாண்டவர்கள் தொட்டு அனேக புராண பாத்திரங்கள் இந்த தாம்பூலத்தினால் வளம் பெற்ற புராணங்கள் எண்ணில் அடங்காதவை. 

மங்களத்தின் அடையாளமான வெற்றிலையை கொண்டு நம் வாழ்வில் சாதிக்க வேண்டியவற்றை நம்மால் சுலபமாக சாதித்துக் கொள்ளமுடியும் எவ்வாறு என்பதை காணலாம். 

உழைப்பின் சாரத்தை விதைத்து அதனால் வளர்ந்த நமது உடமைகளோ, சொத்துகளோ அல்லது நமக்கு சேரவேண்டிய நியாயமான பங்குகளோ அல்லது கொடுத்த கடனோ, திரும்பி வராதபட்சத்தில் மீட்க வெற்றிலை ஒரு அதிசூட்சமமான கருவியாக செயல்படும். 

ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெற்றிலை மற்றும் பாக்கை வைத்து வழிபடும் முறையை தெரிந்துகொண்டால் அந்த தெய்வ சக்தியி னால் கிடைக்கக்கூடிய அலைவரிசையை நம்மால் எளிதில் பெற்று விடமுடியும். 

வீடுகளில் பொதிந்து கிடக்கும் எதிர்மறை ஆற்றல்களை ஒரு வெற்றிலை கொடி வளர்ப்பதன்மூலமே ஈர்த்து அப்புறப்படுத்த முடியும். 

எந்தவகை தோஷமாக இருந்தாலும் குறிப்பாக செய்வினை தோஷம் பிதுர் தோஷம் போன்ற அதீத இன்னலை தருகின்ற தோஷங்களின் நிலை மாறும் தன்மையை இந்த வெற்றிலை பரிகாரம் உங்களுக்கு வழங்கும். 

கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் இந்த வெற்றிலை வரம் அருளும். 

இந்த தாம்புலத்தை எவ்வாறு பயன் படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்தி கொள்ளலாம் என்கின்ற பரிகாரங்களை ஒவ்வொன்றின் பின் ஒன்றாக காணலாம். 

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க, வெற்றிலையை காம்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டு வசம்பை வைத்து, பூ கட்டுவதுபோல் இரட்டைப்படை எண்ணிக்கையில் கட்டி, பூஜையறையில் வைத்து வழிபட கொடுத்த பணம் வீடு வந்துசேரும். 

வெற்றிலை காய்ந்து விடுவதற்குமுன்பு நீர் நிலைகளில் சேர்த்து விடவேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்த மாலைகளை உருவாக்கி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 

புதன் தசையில் ராகு புக்தியோ அல்லது ராகு தசையில் புதன் புக்தியோ, நிகழும் பொழுது செய்வினை தோஷங்கள் மேலோங்கி இன்னல்களை வழங்கும். இந்த காலகட்டத்தில் ஆஞ்சனேயருக்கு 21 வெற்றிலைகளை காம்புடன் சேர்த்து மாலையாகக் கட்டி 17 புதன்கிழமைகள் வழிபட்டுவர செய்வினை தோஷமும் குறையும். 

வீட்டில் ஐஸ்வரியம் பெருக வெற்றிலை பாக்குடன் இரண்டு வாழைப் பழங்களை வெள்ளிக்கிழமைதோறும் பசுவிற்கு உணவாக அளித்து ஒன்பது சுற்றுகள் சுற்றி வழிபட்டுவர செல்வம் கொழிக்கும். 

12 ராசிகளுக்குமான வெற்றிலை பரிகாரங்கள் 

மேஷம்

செவ்வாய்க்கிழமைகளில் 3 வெற்றிலை, 2 பாக்கு வைத்து முருகன் ஆலயத்தில் நெய் தீபமேற்றிவர, தைரியம், வேலையில் முன்னேற்றம் போன்றவை அமையும். 

ரிஷபம் 

வெள்ளிக்கிழமைகளில் 5 வெற்றிலை, 2 பாக்கு மகாலட்சுமி தாயாருக்கு வைத்து தீபமேற்ற பணவரவு, குடும்ப நிம்மதி ஏற்படும்.

மிதுனம் 

புதன்கிழமைகளில் 2 வெற்றிலை, 1 பாக்கு மகாவிஷ்ணு அல்லது சரஸ்வதி தாயாருக்கு வைத்து வழிபட, புக்தி தெளிவு, பேச்சுத்திறன், வாக்கு சித்தி, போன்றவை ஏற்படும் 

கடகம் 

திங்கள்கிழமைகளில் 4 வெற்றிலை, 2 பாக்கு சிவன்- பார்வதி அமைந்த ஆலயங் களில் வைத்து விளக்கேற்ற மன அமைதி, குடும்ப ஒற்றுமை அமையும். 

சிம்மம் 

ஞாயிற்றுக்கிழமைகளில் 1 பெரிய  வெற்றிலை அதனுடன் 1 பாக்கு வைத்து சூரியன் அல்லது சிவன் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்ற, கௌரவம், அதிகார உயர்வு, அரசு வேலை போன்றவை அமையும்.

கன்னி 

புதன்கிழமைகளில் 6 வெற்றிலை, 2 பாக்கு மகாவிஷ்ணுவிற்கு வைத்து தீபமேற்ற, நோய் குறைவு, வேலையில் ஸ்திரம் போன்றவை ஏற்படும். 

துலாம் 

வெள்ளிக்கிழமைகளில் 2 வெற்றிலை, 1 பாக்கு 1 தாமரை பூ வைத்து மகாலட்சுமியை வழிபட, திருமணம், சுபயோகம், ஐஸ்வரியம் போன்றவை அமையும். 

விருச்சிகம் 

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் 7 வெற்றிலை, 2 பாக்கு வைத்து சிவன் அல்லது பைரவர் ஆலயங்களில்  வழிபட, ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும் .

தனுசு 

வியாழன் கிழமைகளில் 9 வெற்றிலை குரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பித்து விளக்கேற்ற கல்வி, ஞானம் சித்திக்கும்.

மகரம்

 சனிக்கிழமைகளில் 8 வெற்றிலை, 2 பாக்கு அனுமன் அல்லது சனிபகவானுக்கு வைத்து தீபமேற்ற தொழில் தடைகள் நீங்கும்.

கும்பம்

 சனிக்கிழமைகளில் 11 வெற்றிலையுடன் 2 பாக்கு வைத்து நீல நிற சங்கு பூவை சமர்ப் பித்து ஐயப்பன் அல்லது சனிபகவானுக்கு விளக்கேற்ற மன குழப்பம் நீங்கி தீர்க்கமான தெளிவு ஏற்படும்.

மீனம் 

வியாழக்கிழமைகளில் 5 வெற்றிலை, 2 பாக்கு மற்றும் செவ்வந்தி பூவை மகாவிஷ்ணு அல்லது குரு பகவானுக்கு சமர்ப்பித்து விளக்கேற்ற, ஆன்மிக முன்னேற்றம், மன அமைதி போன்றவை கிடைக்கும். 

குறிப்பு: நாம் வீட்டில் வழிபடும் பூஜையறையில் வெற்றிலையை தண்ணீரால் சுத்தம் செய்தபிறகு வைக்க வேண்டும். 

வெற்றிலை வாடுவதற்குமுன்பு  உபயோகப் படுத்தி விடவேண்டும். வெற்றிலை போடும் பழக்கம் இல்லையென்றால் யாராவது ஒரு முதிர்ந்தவர்களுக்கு தானமாக அளித்துவிட வேண்டும். 

3 வெற்றிலை, 2 பாக்கு வைத்து வழிபடுவது பஞ்சபூதங்களின் அனுகிரகம் கிடைக்க வழிவகுக்கும். 

வேண்டாதவர்களுக்கு வெறும் வெற்றிலை என்கின்ற பழமொழி நம்மிடையே நிலவி வருகின்றது எனவே பாக்கு இல்லாமல் வெறும் வெற்றிலையை யாருக்கும் அளிப்பது அவ்வளவு சிறப்பு கிடையாது.

இன்றைய பிரசன்னத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அநேக வித்தகர்கள் இந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தை விடாப்பிடியாக பிடித்து சாதித்து வருகின்றனர். 

செல்: 80563 79988