ஒட்டுமொத்த பூமியின் சுழற்சியில் ஜீவிதங்கள் தழைப்பது, போல் நம் அன்றாட வாழ்வியல், கடிகாரத்தைச் சார்ந்தே நகர்ந்து கொண்டிருக்கின் றது.
நொடி, நிமிட, மணி, நேரங்களை தன்னகத்தே பிரதிபலிக்கும் கடிகாரங்கள் முற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.
சூரிய, சந்திர, நிழல்களையும் உதய, அஸ்தமன, வேலைகளையும் கொண்டு நேரங்கள் உணரப்பட்டது.
நாகரிக வளர்ச்சியின் பாதையில் மணிக் கூண்டுகள் அமைத்து பொதுவாக நேரம் எல்லோராலும் பார்க்கப்படும் சூழலும் அமைந்தது.
ஒரு பேழைக்குள் உயிர் மூன்று வட்ட மிடும் ஜாலம் நம் வாழ்வின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றது.
"நாள் என ஒன்று போல் காட்டி
உயிர் என ஒன்றை வாங்கும் காலம்''
என்கின்றது வள்ளுவம்.
அதாவது காலம் உயிரையே வாங்கும். அதனால் நேரத்தை மதிக்க வேண்டும் என்கின்றார்.
கடிகாரம்= கால சக்தி
காலத்தை மதிக்கும் வீட்டில் காலம் மதிக்கும் வாழ்க்கை அமையும் என்பது உறுதி.
பொதுவாக இந்த கடிகாரம் வட்டம் அல்லது சதுர, செவ்வக, வடிவில் வைப்பது சிறப்பு. அதிலும் வட்ட வடிவ கடிகாரங்கள் வாழ்வின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பொதுவாக வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு சுவரில் கடிகாரம் அமைத்துக் கொள்வது நல்லது.
வடக்கு
பண வரவு, தொழில் வளர்ச்சி, ஆகியவை மேலோங்கும்.
கிழக்கு
நல்ல ஆரோக்கியம், புத்துணர்ச்சி, கல்வி வளர்ச்சி போன்றவற்றை அருளும்.
தெற்கு
நஷ்டம் தடைகள் மன அழுத்தம்
மேற்கு
வேலை தாமதம், சோம்பல் போன்றவற்றை வழங்கும்.
பூஜையறைக்குள் கடிகாரம் மாட்டும் சூழல் அமைந்தால் அந்த குடும்பத்தில் மன அமைதி வெகுவாக குறைவதைக் கண்கூடாகக் காணமுடியும்.
படுக்கை அறையில் தலைக்கு நேராக மாற்றுவதைத் தவிர்ப்பது சிறப்பு. பொதுவாகவே படுக்கையறையில் கடிகாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.
எப்பொழுதுமே சரியாக ஓடக்கூடிய கடிகாரம் இருப்பது வாழ்வில் சுமுகமான தன்மையை அருளும்.
நின்ற கடிகாரம் வைத்திருந்தால் முன்னேற்றம் தடையாகும். உடைந்த கண்ணாடி, சத்தம் வரும் கடிகாரம் போன்றவை வாழ்க்கையில் சில தடங்கல்களையும், வெகு ஜனங்களுடன் நட்பையும் முறிக்கும்.
வீட்டின் வரவேற்பு அறையில் வடக்கு அல்லது கிழக்கிலும், சமையலறையில் கிழக்கு சுவரிலும், அலுவலகம் மற்றும் கடைகளில் நுழைவாயிலுக்கு எதிரேயுள்ள வடக்கு சுவரிலும் கடிகாரம் அமைப்பது சிறப்பு.
மேஷம், சிம்மம், தனுசு.
நிறம்- தங்க நிறம்
திசை- கிழக்கு
வடிவம்- வட்டம்
ரிஷபம், கன்னி, மகரம்.
நிறம்- இளம் சாம்பல் அல்லது பச்சை.
திசை- வடக்கு
வடிவம்- சதுரம் அல்லது வட்டம்.
கடகம், மீனம், விருச்சிகம்.
நிறம்- வெள்ளை, நீலம்
திசை- வடகிழக்கு வடிவம்- வட்டம்
மிதுனம், துலாம், கும்பம்.
நிறம்- நீலம், இளம் சாம்பல்.
திசை- வடக்கு வடிவம்- ஓவல் அல்லது வட்டம்.
தவிர்க்கவே முடியாத சூழலில் மேற்குப் பக்கம் கடிகாரத்தை அமைக்கலாம். தெரிந்தும் தெரியாமலும்கூட தெற்கு சுவற்றில் கடிகாரத்தை அமைப்பது பெரும் இன்னலை குடும்பத்திற்கு வழங்கி விடும். தெற்கு என்பது நம் முன்னோர்களான தென்புலத்தாரின் திசை, அதோடு மட்டுமல்லாமல் காலத்தை கையில் கொண்ட காலதேவனின் திசையும் அதுதான். அதனால் இங்கு கடிகாரம் அமைக்க கூடாது என்று ஆழமான கருத்து உள்ளது.
எந்த காரணத்தை கொண்டும் ஒரு நிமிடம்கூட தாமதமாக கடிகார நேரத்தை அமைக்க கூடாது. நமக்கு கிடைக்க வேண்டிய சுகங் களும், நன்மைகளும், தாமதமாக நம்மை வந்துசேரும் என்று கூறுவார்கள்.
மாறாக சற்று கூடுதலாக நேரத்தை அமைப்பது நம்மை சுறுசுறுப்பாக மாற்றுவதற்கான ஆயுதமாக திகழும்.
நிலை வாசலுக்கு வெளியில் கடிகாரம் மேசைகளில் அமைக்கப்படும் டிஜிட்டல் கடிகாரங்களுக்கு வாஸ்து தோஷம் கிடையாது. மாறாக சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கும் எண்களுக்கு பதில் பச்சை நிறத்தில் நேரத்தை காட்டும் டிஜிட்டல் கடிகாரங்களை வீட்டில் அமைக்கலாம் அதுவும் கிழக்கு அல்லது வடக்கு சுவற்றில் மட்டுமே.
கைகளில் அணியும் கை கடிகாரங்கள் ஒருவரின் ஆளுமையை உணர்த்தும்.
ஏதோ ஒரு பயத்தன்மையை சுமந்து கொண்டே பயணிக்கும் பெண்கள் கை கடிகாரங்கள் அணியும்பொழுது அவர் களின் துணிவு மேம்படும்.
நாளும், நாழிகையும், நொடிகளும்- ஓட நாடும் உயிரும் நலிந்து- போக கோலும், வினையும், குறுக்கே வந்து கூட்டும் துன்பம் காண்கிலையோஎன்று திருநாவுக்கரசர் கூறிய பதிகத்தை மனதில் பதியவைத்து, காலத்தின் தன்மையை கைகொண்டு முன்னேறும் வழியை தேடுங்கள்.
நிச்சயமாக ஏழரைச்சனியோ, சனி தசா புக்தியோ, ஜனன சனியின்மீது சந்திரன் பயணிக்கும் காலங்களிலோ, இந்த நேரத்தை கையாளுவது மிகக் கடினம் என்பது எல்லோரும் அறிந்ததே. இருந்தபொழுதிலும் முடிந்தவரை நேரத்தை சரியாக பயன்படுத்தும் பொழுது கிரகங்களும் உங்களுக்கு ஆசி வழங்கும் என்பதே உண்மை.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/clock-2026-01-02-17-40-00.jpg)