Advertisment

கிழமை சொல்லும் குணங்களின் ரகசியம்! நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

kilamai


ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள் 
சூரியனின் அம்சம் கொண்டவர்கள்..
எல்லாவற்றிலும் 
தலைமை பதவியை விரும்புவர்..
குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துவர்..
சூழ்நிலை சூழ்ச்சியால்
தைரியம் அதிகமாகி
எதையும் சாதிப்பர்..
தந்தையை வணங்கினால்
எண்ணிய காரியம் கைகூடும்..
தனக்கு கீழ்தான் எல்லாம் என்கிற
ஆதிக்க சிந்தனையை கைவிட்டால்
அனைத்திலும் வெற்றிபெறலாம்... 

Advertisment

திங்கட்கிழமை பிறந்தவர்கள்
சந்திரனின் அம்சம் கொண்டவர்கள்..
தாயுள்ளம் கொண்டு
அனைவரிடமும் 
அன்போடு நடந்துகொள்வர்..
பாசத்தாலும் வேசத்தாலும்
பாதிக்கப்பட்டு
பார் போற்ற வாழ்ந்து காட்டுவர்..
வளரும் தேயும் சந்திரன்போல்
வாழ்க்கையில் ஏற்ற- இறக்கம் உண்டு..
அதீத கற்பனைகளை
குறைத்துக்கொண்டால்
ஆளுமைமிக்க பதவியை பெறலாம்...

Advertisment

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள்
செவ்வாய் அம்சம் கொண்டவர்கள்..
சமத்து


ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள் 
சூரியனின் அம்சம் கொண்டவர்கள்..
எல்லாவற்றிலும் 
தலைமை பதவியை விரும்புவர்..
குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துவர்..
சூழ்நிலை சூழ்ச்சியால்
தைரியம் அதிகமாகி
எதையும் சாதிப்பர்..
தந்தையை வணங்கினால்
எண்ணிய காரியம் கைகூடும்..
தனக்கு கீழ்தான் எல்லாம் என்கிற
ஆதிக்க சிந்தனையை கைவிட்டால்
அனைத்திலும் வெற்றிபெறலாம்... 

Advertisment

திங்கட்கிழமை பிறந்தவர்கள்
சந்திரனின் அம்சம் கொண்டவர்கள்..
தாயுள்ளம் கொண்டு
அனைவரிடமும் 
அன்போடு நடந்துகொள்வர்..
பாசத்தாலும் வேசத்தாலும்
பாதிக்கப்பட்டு
பார் போற்ற வாழ்ந்து காட்டுவர்..
வளரும் தேயும் சந்திரன்போல்
வாழ்க்கையில் ஏற்ற- இறக்கம் உண்டு..
அதீத கற்பனைகளை
குறைத்துக்கொண்டால்
ஆளுமைமிக்க பதவியை பெறலாம்...

Advertisment

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள்
செவ்வாய் அம்சம் கொண்டவர்கள்..
சமத்துவ தர்மம் கொண்டு
சகலர்க்கும் வழி காட்டுவர்..
முன்கோபத்தால்
மூத்தவர்களை பகைத்துக்கொள்வர்..
வேகமும் விவேகமும் இருப்பதால்
நினைத்த காரியத்தை 
நினைத்தபடி முடிப்பர்..
வீண் பிடிவாதத்தை விட்டு ஒழித்தால்
வீரமிக்க சாதனைகள் செய்து
விருதுகள் பல பெறுவர்... 

புதன்கிழமை பிறந்தவர்கள் 
புதன் அம்சம் கொண்டவர்கள்..
புத்திசாலியாக இருப்பதால்
சுற்றி இருப்பவர்களுக்கு பிடிக்காது..
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்படுவர்..
அடுத்தவரை கெடுக்கும் 
எண்ணம் கொண்டவரை
அருகில் வைத்து அவதிப்படுவர்..
அனைத்தும் தெரிந்த அறிஞர் என
பெயரெடுக்க ஆசைப்பட்டு
நுனிப்புல் மேய்வார்கள்..
ஒரு தொழிலில் கவனம் செலுத்தினால்
ஒப்பற்ற புகழும்
செல்வம் செல்வாக்கு அடைவர்...
  
வியாழக்கிழமை பிறந்தவர்கள் 
குருவின் அம்சம் கொண்டவர்கள்..
அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதில் 
வல்லவர்..
ஆனால் அவருக்கே ஆலோசனை 
சொல்ல முடியாமல் அவதிப்படுவர்..
அனைத்து பாக்கியங்களும் கிடைக்க
அமைதிப் பொறுமைதான் அவசியம்..
தன்னை அவதாரமாய் எண்ணி
அவ்வப்போது அவமானம் அடைவர்..
தன்னைத் திருத்திக்கொண்டு வாழ்ந்தால்
தரணி எங்கும் புகழ்பெறுவர்...

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் 
சுக்கிரனின் அம்சம் கொண்டவர்கள்..
ஆடம்பரத்திலும் 
அழகிலும் மயங்கி கிடந்தால்  
எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும்..
அடுத்தவரை ஆழம் 
பார்ப்பதை விட்டுவிட்டு..
தன்னுடைய யோக்கிதையில் 
கவனம் செலுத்தினால் 
போகிற போக்கில் 
வெற்றிகளை குவிக்கலாம்..
பிறரை கெடுக்க நினைக்காமல்
தன் பிழையை திருத்தி வாழ்ந்தால்
தீர்க்கமான வெற்றி உண்டு...

சனிக்கிழமை பிறந்தவர்கள் 
சனியின் அம்சம் கொண்டவர்கள்..
சோம்பேறித்தனத்தை விட்டு 
சுறுசுறுப்பாக செயல்பட்டால் 
எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்..
எதிர்காலத்தை எடுத்துச் சொல்லும்
முன்னறிவு, நுண்ணறிவு கொண்டவர்..
கடினமாக உழைத்தால்
யாரும் கணக்கிட முடியாத
யாரும் கணிக்க முடியாத
பெரிய பதவியில்
எளிதாக அமரலாம்..
கோள் மூட்டுவதும், புறம் பேசுவதும்
செய்யாமல் இருந்தால்
செயற்கரிய காரியங்கள் செய்து முடிப்பர்...

ராகு காலத்தில் பிறந்தவர்கள்
ராகுவின் அம்சம் கொண்டவர்கள்..
ராட்சச குணம் படைத்தவர்களையும்
வெல்லும் வல்லமை கொண்டவர்..
பிரம்மாண்டமான 
கற்பனைகளைத் தவிர்த்தால் 
பிரச்சினை இல்லாத நல்வாழ்வு வாழலாம்..
ராகு காலம் நல்ல நேரம் என்பதெல்லாம்
நடைமுறைக்கு ஒத்து வராது..
தாய்- தந்தையை பிரிக்கும்
ராகு காலத்தில் பிறந்தால்  
முன் பாதி கஷ்டமும் 
பின் பாதி இஷ்டப்பட்ட வாழ்வு கிடைக்கும்...

எமகண்டத்தில் பிறந்தவர்கள்
கேதுவின் அம்சம் கொண்டவர்கள்..
போராட்டமான வாழ்க்கை தொடங்கி  
நின்று நிதானமாக 
யோசித்து முடிவெடுத்து
மெது மெதுவாக செயல்பட்டால்
சிறப்பான வாழ்க்கை வந்துசேரும்..
எந்த காரியமாக இருந்தாலும்
முதலில் சுருக்கி
எதிர்வரும் காலத்தை பெருக்கும்..
இழப்புகளும் இம்சைகளும் உடனே நடக்கும்
நன்மைகளும் லட்சியங்களும்
தாமதமாக நடந்தாலும்
தரமான வாழ்க்கை உண்டு...

எந்த கிழமையில் பிறக்கிறேமோ
அந்தக் கிழமை கிரகத்தின்
குணங்கள் வரும்..
சுப கிரக தொடர்பு இருந்தால்
நல்லவராகவும்
அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்..
பாவ கிரக தொடர்பு இருந்தால்
கெட்டவராகவும்
நிம்மதியற்ற 
வாழ்க்கையாகவுமே அமையும்..
சுப அசுப கிரக தொடர்புகள் பெற்றவர்கள்
நன்மை- தீமைகள்
கலந்தே அனுபவிப்பர்..

தோஷங்களை யோகமாக்கும்
பரிகாரம் என்னவென்றால்
"பிறர் வாழ்க்கையை 
நீ கெடுத்தால் 
உன் வாழ்க்கை கெடும்'' என்பதை
அறிந்து..
நன்மை செய்யாவிட்டாலும்
பிறருக்கு தீங்கு செய்யாதே..
இஷ்ட தெய்வத்தை வழிபட்டு 
இஷ்டம்போல் 
"வாழ்க வளமுடன்''...


செல்: 9600353748

bala221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe