உலக நியதியின் சார்பில் இருப்பாக ஆணையும், இயக்கமாக பெண்ணையும் இயற்கை வழங்கியுள்ளது.
இந்த இயக்கத்தின் ஆழ்ந்த சூட்சமம் தன்னி-ருந்து ஒரு உயிர்ப்பித்தலை தொடங்குவதுதான்.
அதாவது- அடுத்த தலைமுறையினை உருவாக்குவதுதான். இந்த உருவாக்குதலை அடிப்படையாகக் கொண்டது ருது என்கின்ற பூப்பெய்தும் நிகழ்வு.
பூமியின் சுழற்சியில் ருதுக்கள் 6 ஆக வகுக்கப்பட்டுள்ளது.
1. வசந்த ருது
2. கிரீஷ்ம ருது
3. வர்ஷா ருது
4. சரத் ருது
5. ஹேமந்த் ருது
6. சிசிர ருது
என்று பூமியின் பருவ காலங்களை பகுத்துள்ளனர்.
இதேபோன்று பூமியின் தன்மைவாய்ந்த பெண்களுக்கும் பருவங்களை வகுத்து தந்துள்ளது இலக்கியங்கள் குழவி, பேதை, யவதி, மங்கை, மடந்தை பேரிளம்பெண் என்று.
இதில் பேதையில் இருந்து யுவதிக்கு மாற்றமடையும் காலகட்டமே ருது காலம் என்று போற்றப்படுகின்றது.
ஆக, பெண்ணின் உடலில் மாற்றங்களின் ஆரம்பம் ருதுதான். குரு பகவானின் ஒரு சுற்று அதாவது- 12 வருடங்களை கடந்தபின்பு ஒவ்வொரு மனிதப் பிறவியிலும் சில குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியினை வழங்கி செல்லும்.
இது உடலியல் மாற்றம் மட்டுமல்லாமல், மனரீதியான, அறிவு, சிந்தனைரீதியான மாற்றமாகவும் இருக்கும்.
இதுநாள்வரை அதாவது- ருதுவாவதற்கு முன்புவரை பாலதிரிபுரசுந்தரியின் ஆளுமையில் இருந்த பெண் குழந்தைகள், ருதுவான பிறகு மதுரை மீனாட்சியாகவும், கன்னிகா பரமேஸ்வரியாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்து அந்த குடும்பத்தின் சுபிட்சத்தை கையாளுகின்றனர்.
உடலில் தோன்றுகின்ற முதல் கரு முட்டை உடைந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் தகுதியை பறைசாற்றும் நிகழ்வான ருதுவின்மூலம் சில வாழ்க்கை ரகசியங்களையும், திருமணம், குழந்தைகள், சார்ந்த வழிமுறைகளையும் காணலாம்.
ஒரு பெண்ணின் கருமுட்டைக்கும், சூரிய, சந்திர, பூமியின் தூரமாகக் கருதப்படும் திதிகளுக்கும், மிகமிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
திதி சந்திரனின் அடிப்படையில் 27 நாள்முதல் 30 நாட்களை கொண்டுள்ளதால் கருமுட்டையின் வளர்ச்சி சந்திரனின் முழு ஆளுமையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திரனுடன் சேர்ந்து செவ்வாயும் வினைபுரியும் காலம் ருது காலமாகக் கருதப் படுகின்றது.
பிறப்பு ஜாதகம் வெகுவாக கையாளப் படாத சூழலில் பெண்களுக்கு இந்த ருது ஜாதகம் பார்க்கப்பட்டது. இன்றைய சூழலில் பிறப்பு ஜாதகம் போதுமானதாக இருந்தாலும் ருது ஜாதக தன்மையையும் சற்று ஆராயலாம்.
முழு ஆளுமைபெற்ற ஆதிசக்தி பெண் குழந்தையின் இந்த பூப்பெய்தல், அந்த குடும்பத்தின் வளர்ச்சியிலும், தாய்லி தந்தையரின் வளர்ச்சியிலும் பெரும் பங்கினை சூட்சமமாக ஆற்றுகின்றது.
கிழமைகள், திதிகள், நட்சத்திரங்கள் என்று பின்னிப் பிணைந்து பலனை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
முதலில் எந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன் என்பதை காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை
சூரியனின் ஆளுமையில் ருதுவாகும் பொழுது மரியாதை, கௌரவம், குடும்பத்தில் தலைமை பொறுப்பு, தன்னம்பிக்கை, போன்றவை வளர்வதோடு அதீத கோபமும் சற்று அகம்பாவமும் வளரலாம்.
திங்கட்கிழமை
சந்திரனின் ஆளுமையை கை கொள்ளும் பொழுது தாய்மை சக்தி, குடும்ப செழிப்பு, குடும்ப ஒற்றுமை, பெண் தெய்வ அருள், ஆகியவற்றை வழங்குவதோடு சற்று உணர்ச்சி வசப்படக்கூடிய தன்மையை வழங்கும்.
செவ்வாய்க்கிழமை
தைரியம், செயல்வேகம், எதிரிகளை வெல்வது போன்றவற்றை வழங்குவதோடு உதிரப்போக்கு சார்ந்த பிரச்சினைகளையும் சேர்த்தே வழங்கும்.
இதற்கு முருகனின் வழிபாடு பெரும் பலம் சேர்க்கும்
புதன்கிழமை
சாஸ்திர ஞானம், புத்திசாலித்தனம், வியாபாரம் லாபம் போன்றவற்றை வழங்கும். இதே புதன் தோல் சார்ந்த பிரச்சினைகளை யும் சற்றே வழங்கும்.
வியாழக்கிழமை
குரு பகவானின் ஆளுமையில் நிகழும் ருது பல பாக்கியங்களையும், ஆன்மிக வளர்ச்சி களையும், நல்ல ஆலோசனைகளையும், இவர்களின் கரம் சேர்ப்பதோடு சிறந்த கௌரவத்தையும் சேர்த்தே வழங்கும். மேலும் சற்று சோம்பலையும் அளிக்கதான் செய்கின்றது
வெள்ளிக்கிழமை
சுக்கிரனின் ஆளுமையில் அழகு, சுகம், வசதி, பாசம், பணவரவு, பால் பாக்கியங்கள் போன்றவற்றை மிக எளிதில் வழங்குகின்றது.
சனிக்கிழமை
சனியின் ஆளுமையில் பொதுவாக அதீத நாள்பட்ட கடன்கள் தீர்க்கப்படும்.
குறிப்பாக காலை 10.00 மணிமுதல் 2.00 மணிவரை உழைப்பால் உயரும் தன்மையை அளிக்கும் மாலை 2.00 மணிமுதல் 6.00 மணிவரை. உறவுகளால் வாழ்க்கை மாற்றம் அடையும்.
இரவு 6.00 10.00 மணிவரை சுகமான குடும்ப வாழ்க்கை அமையும்
நள்ளிரவு 10.00 மணிமுதல் 4.00 மணிவரை. ஆன்மிகம், தெய்வ நம்பிக்கை உயரும்.
அதேபோன்று எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் எந்த மாதத்தில் திருமணம் செய்யவேண்டும் என்பதை காணலாம்.
அஸ்வினி மகம் மூலம் வைகாசி, தை, மாதங்களில் திருமணம் செய்ய வேண்டும்.
பரணி, பூரம், பூராடம்
சித்திரை, கார்த்திகை, தை, மாசி.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.
சித்திரை, வைகாசி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி.
ரோகினி, அஸ்தம், திருவோணம்.
சித்திரை, ஆவணி, கார்த்திகை.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.
வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி.
திருவாதிரை, சுவாதி, சதயம்.
தை, மாசி, ஆணி, பங்குனி.
புனர்பூசம், பூரட்டாதி, உத்திரட் டாதி.
சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
சித்திரை, வைகாசி, தை, மாசி, பங்குனி.
ஆயில்யம், கேட்டை, ரேவதி.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, தை, மாசி.
ஆகிய மாதங்களில் திருமணம் செய்யும்பொழுது பிறந்த குடும்பமும், வாக்கப்பட்டு செல்கின்ற குடும்பமும் சுபிட்சத்தை தழுவும்.
மேலும் ருதுவாகும் அன்று கிரக நிலைகளில் நான்காம் பாவகத்தில் ராகு மற்றும் செவ்வாய் சேர்ந்து அமரும்பொழுது நிச்சயமாக முருகன் மற்றும் பெண் தெய்வங்களின் வழிபாடு மேற் கொள்வதை ஏற்கவேண்டும்.
இந்த இணைவு அடிவயிறு சம்பந்தப்பட்ட உஷ்ணத்தையும், வலிகளையும் தர வாய்ப்புகள் உண்டு.
ருதுவாகும் காலங்களில் அந்தப் பெண் குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவு மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நல்லெண்ணெய், மிளகு, உளுந்து, முட்டை போன்ற புரதங்களின் அளவீடு அதிகமாகஉள்ள உணவுகளை வழங்குவது கிரக காரக ரீதியாகவும், உடல் சார்ந்த விஷயங்களிலும் பெரும் மேன் மையை வழங்கும்.
காமாக்யா கோலத்தில் வீற்றிருக் கும் அன்னையே உங்களின் நிலை வாசலை தாண்டி வரும் சூழல்தான் பெண்களின் ருதுவான காலம்.
ருது ஜாதகத்தில் சுக்கிரன் மாந்தி இணைவு மற்றும் பலவீனங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவை.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/lifestyle-2025-12-18-14-58-21.jpg)