க்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் 
சுக போக வாழ்க்கை உண்டு..
நல்ல தொழில் அமைந்து 
நிரந்தர வேலை கிடைத்து 
பிடித்த வேலையில் 
நல்ல வருமானத்துடன் 
குடும்ப வாழ்க்கை 
எந்த குறையும் இன்றி நிம்மதியாக வாழலாம்... 

Advertisment

இரண்டாமிடத்தில்
வளர்பிறை சந்திரன் இருந்தால் 
பிரகாசமான எதிர்காலம் உண்டு...
எந்த தோஷங்கள் இருந்தாலும்...
குடும்ப வாழ்க்கைக்கு 
தேவையான 
அனைத்து விஷயங்களும் 
உங்களைத் தேடிவரும்...

Advertisment

இரண்டாமிடத்தில்
தேய்பிறைச் சந்திரன் இருந்தால் 
வெள்ளிக்கிழமை 
அம்மன் கோவில் சென்று 
சர்க்கரைப் பொங்கல் 
வைத்து வழிபட சகலதோஷமும் நீங்கி 
சந்தோஷமான வாழ்க்கை 
கிடைக்கும்...

இரண்டில் புதன் சுப கிரகம் இருந்தால் 
அனைத்துவிதமான அறிவும் 
உங்களுக்கு எளிதாக 
அமையப்பெறும்..
சிறுவயது முதலே கல்வியில் 
நல்ல மதிப்பெண்கள் எடுத்து நல்ல அறிவுடன் செயல்படுவீர்கள்..
ஆரம்பக்கல்வி, உயர் கல்வியில்
முதல் இடத்தில் 
மதிப்பெண் பெற்று 
மாநில, மாவட்ட அளவில் 
உங்கள் பெயர், புகழ் பரவும்..
சகல அறிவும் இருப்பதால் 
நல்ல தொழில் அமைந்து 
சிறப்பான வாழ்க்கை 
எளிதாக அமைந்துவிடும்.
மாநில அரசு பதவிகள் 
உங்களை தேடிவரும் 
சூரியன் வலுத்திருந்தால் 
சுப்பீரியர் பதவி கிடைக்கும்...

Advertisment

புதன் கெட்டு இருந்தால் 
அதாவது- செவ்வாய் சனி பார்வையில் இருந்தால் 
பொறாமை, வஞ்சகம், சூது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 
கெட்ட பழக்க வழக்கங்களால் கிரிமினலாக 
பணம் சம்பாதிக்கக்கூடிய 
அமைப்பை கொடுத்துவிடும்.. 
ஆதலால் 
புதன் வலு குறைந்தவர்கள் 
பாவ கிரகங்களால் 
பாதிக்கப்பட்டவர்கள்... 
சிவாலயங்கள் 
பிரதோஷ காலங்களில் சென்று
தொடர்ந்து வழிபட்டுவருவது 
உங்கள் தீயகுணத்தை மாற்றி
வாழ்க்கையை மேம்படுத்தும்.. 
புதன்கிழமை 
பிரதோஷத்தை வழிபட்டுவர 
அதிர்ஷ்ட யோகம் தேடிவரும்... 

இரண்டாமிடத்தில் குரு இருந்தால் 
அடுத்தவருக்கு அறிவுரை ஆலோசனைகள் வழங்கும் 
அற்புதமான தெய்வீகமான 
மக்கள் மனநிலையை 
மாற்றக்கூடிய சிறப்பான 
தொழில் அமையும்..
வாய் பேச்சால் சம்பாதிக்ககூடிய 
நல்ல வருமானம் 
பெறக்கூடிய 
அரசாங்க உதவி பெறக்
கூடிய 
அற்புதமான தொழில் 
அமையும்...

இரண்டாமிடத்தில் 
இருக்கும் குரு
நல்ல சிந்தனை
ஆன்மிக சொற்பொழிவு 
வழக்கறிஞர் தொழில்
ஆசிரியர் தொழில்
பிறருக்கு உபதேசம் செய்யக்கூடிய 
அத்தனை தொழில்களும்
உங்களுக்கு அமையும்..
நேர்மையானவர்கள் 
ஒழுக்கமானவர்கள்..
 
இரண்டாமிடம் 
கெட்டுப்போனவர்கள் 
கொடுக்கும் வாக்குறுதியை 
காப்பாற்றமாட்டார்கள் 
இரண்டில் குரு கெட்டிருந்தால் 
பாவ கிரகங்களால் 
பார்க்கப்பட்டிருந்தால், 
பொய் பேசக்கூடியவர்கள் 
வாங்கிய கடனை 
அடைக்கமுடியாதவர்கள் ஆகவும்,  
வாய்ச்சவடால் பேசுபவர்கள் ஆகவும் 
கெட்ட எண்ணம் 
கொண்டவர்களாகவே இருப்பர்.. 
வியாழக்கிழமை 
குரு ஹோரையில் 
தட்சிணாமூர்த்திக்கு 
கொண்டைக்கடலை மாலையிட்டு 
மூன்று வாரம் வழிபட்டுவர 
தீய குணங்களும் 
கெட்ட பழங்களும் விலகி 
ஒரு நல்ல வாழ்க்கை 
குரு அருளால் கிடைக்கும்...

இரண்டாமிடத்தில் 
சூரியன் இருந்தால் முன்கோபம் 
எடுத்தெறிந்து பேசக்கூடிய குணம் உண்டாகும்..
தந்தைக்கு பாதிப்பு 
தந்தையால் பாதிப்பு ஏற்படும்..
அரசாங்கத்தால் கிடைக்கவேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காது..
குரு, சுக்கிரன் போன்ற 
சுப கிரக பார்வை இருந்தால் 
அரசு பணி, அரசாங்க நன்மை, தந்தையால் 
லாபம் போன்ற 
சுப பலன்கள் 
கட்டாயம் கிடைக்கும்..
எளிய பரிகாரம் 
தினந்தோறும் 
சூரியன் நமஸ்காரம் செய்வது 
அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கும்...

இரண்டில் செவ்வாய் இருப்பவர்களுக்கு 
செவ்வாய் தோஷம்..
உண்மையை பேசுகிறேன் என்று சொல்லி 
அனைவரையும் 
நோகடிக்கும் குணம் இருக்கும்...
குரு பார்வை, சுப கிரகப்பார்வை இருந்தால் 
இவர்கள் கொடுக்கும் 
வாக்கு பலிக்கும்.. 
உண்மை, நேர்மை பேசி 
நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்...

இரண்டில் ராகு- கேதுக்கள் 
எப்பொழுதும் தொல்லையே.. 
நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கையே..
கொடுத்த வாக்கை 
காப்பாற்றமுடியாத 
துன்பங்களை கொடுக்கும்..
சுப கிரக பார்வைகள் இருந்தால் 
ஓரளவு நேர்மையாக வாழ்ந்து 
நிம்மதியான இல்லற வாழ்க்கை கிடைத்து 
சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்... 

இரண்டில் சனி 
சொன்ன வாக்குப்பலிக்கும்...
இல்லற வாழ்க்கைக்கு 
பாதிப்பை கொடுக்கும்.. 
தாமதமான திருமணம் 
முறையற்ற திருமணம் 
திருமண வாழ்க்கையில் தொல்லைகள் 
தொழில் செய்யும் இடத்தில் வாய்ப்பேச்சால் வம்புகள்.. 
நிச்சயம் இருக்கும்..
குரு,சுக்கிரன் 
சுப கிரகப் பார்வை இருந்தால் 
இன்பமான வாழ்க்கை கட்டாயம் உண்டு...

இரண்டாம் வீட்டை
சுப கிரகங்கள் பார்த்தால் 
எதிர்பாராத அதிர்ஷ்டம்தான்... இளமையில் வருமானம் 
கோடீஸ்வர யோகத்தை 
எளிதாக பெறலாம்..
இரண்டாமிடத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலோ- இணைந்தாலோ..
எடக்கு முடக்கான  
குடும்ப வாழ்க்கை..
நிரந்தர வேலையில்லை நிம்மதியற்ற இல்லறத்தில் இன்பம் இன்றி 
வாழ நேரும்..
எதற்கும் அஞ்சாதே!
ஏகாம்பரேஸ்வரரை 
எட்டு வாரம் சென்று 
வழிபட 
எண்ணிய 
காரியம் கைகூடும்...

செல்: 9600353748