கோயில் -சேதுபதிகள் -குருக்கள்மார்கள்!
இராமபிரான் எந்த இடத்தில் மணலைக் குவித்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாரோ அந்த இடத்திற்கு சேதுஸ்தானம் எனப் பெயரிட்டார்கள்! .
அந்தச் சேதுஸ்தானமே இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் கருவறை. சேது ஸ்தானத்தைச் சுற்றி விரிவாக்கப்பட்டதே இராமேஸ்வரம் கோவில்.
சேது ஸ்தானத்தை, திருக்கோவிலை,கோவில் பணியாளர்களை, வந்து செல்கின்ற பக்தர்களைப் பாதுகாப்பதும் வளப்படுத்து வதும் தங்கள் பிறவிப்பணியென வாழ்ந்த வர்கள் சேதுபதி மன்னர்கள்.1604-ல் மதுரை மன்னன் திருமலை நாயக்கன் மணிமுடி எடுத்துக் கொடுக்க சேதுநாட்டின் முதல் மன்னரானார் உடையான் சேதுபதி என்ற தளவாய் சேதுபதி என்கிறது எழுதப்பட்ட வரலாறு.
ஆனால், அதற்கு முன்பே ஆதி ரகுநாத சேதுபதி தொடங்கி விஜய முத்துராமலிங்க சேதுபதி ஈறாக பத்து சேதுபதிகள் சேது நாட்டை ஆண்டிருப்பதாக. தர்க்ஷங்ழ்ற் நங்ஜ்ங்ப்ப் எழுதிய ஆ நந்ங்ற்ஸ்ரீட் ர்ச் பட்ங் உஹ்ய்ஹள்ற்ண்ஸ்ரீ ஞச் நர்ன்ற்ட் ஒய்க்ண்ஹ என்ற நூ-ல் 87-ஆம் பக்கத்தில் உள்ளதாக அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார் குறிப்பிடுகிறார். (பக் 1026).
புதிதாக பொறுப்பேற்கும் ஒவ்வொரு சேதுபதி மன்னரும் போடுகின்ற முதல் கையெழுத்து, இராமநாத சுவாமி கோயிலுக்கு ஒரு கிராமத்தை தானமாக வழங்கும் சாசனத்தில் போடும் கையெழுத்தே.
கிழவன் சேதுபதி 1674-ல் ஆட்சிக்கு வருகிறார். அவர் தான் அரண்மனையை இராமநாதபுரத்திற்கு மாற்றியவர். அதற்கு முன்பு சத்திரக்குடிக்கு அருகிலுள்ள போகளூரிலும், அதற்கும் முன்பு குலோத்துங்க சோழ நல்லூர் என்ற காத்தூரான விரையாத கண்டனிலும் சேதுபதிகüன் அரண்மனை இருந்திருக்கிறது. இந்த ஊர் இளையான்குடி சாலைக்கிராமத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளதாம்.
சேதுநாட்டின் முதல் மன்னன் உடையான் (எ)தளவாய் சேதுபதி தனது இரண்டாம் ஆட்சியாண்டில் வழக்கம் போல ஓருநாள் இராமேஸ்வரம் கோவிலுக்கு வழிபடச் சென்ற போது. கோயில் குருக்கள் மாரில் ஒரு பகுதியினரான பஞ்ச தேசத்து ஆரியமகா சனங்கள் தங்கள் வாழ்வா தாரத்தை வளப்படுத்த வேண்டிக் கோரிக்கை வைத்தார்கள்.
பஞ்ச தேசத்து ஆரிய மகாசனங்கள் எனில், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் கொங்கணம் மராட்டியம் ஆகிய ஐந்து தேசப் பிராமணர் கள் எனப் பொருள்.
இவர்கள் இராமேஸ்வரம் கோயிலில் ஸ்தானிகம், பூஜை, பரிசாதகம் செய்து கொண்டிருந்தார்கள்.
வடக்குச் சமுத்திரக் கரைக்கு தெற்கே, அக்கினி தீர்த்தத்திற்கு மேற்கே, தெற்கு சமுத்திரக் கரைக்கு வடக்கே, தாசரதி கோயிலுக்கு கிழக்கே உள்ள நிலங்களையும் அவற்றின் வாயிலாகக் கிடைக்கும் வருமானம் முழுதையும் பஞ்சதேச ஆரியர்களுக்குத் தானமாக பட்டய சாசனம் செய்துகொடுத்தார் மன்னர். (செப்பேடு 3)
இரண்டாம் மன்னன் கூத்தன் சேதுபதி (எ)தளவாய் சேதுபதி காத்த தேவரின் 11 ஆம் ஆட்சியாண்டில் ஒரு பெரிய பஞ்சாயத்து.
இராமேஸ்வரம் கோவிலில் பணி செய்கின்ற குருக்கள்மார், சபையார், தமிழ் ஆரியர் ஆகிய மூவகைப் பணியாளர்களும் அரண்மனைக்குச் சென்றார்கள்.
தங்கள் பணிகள் உரிமைகள் கடமைகள் பயன்கüல் தங்களுக்குள் பிரச்சனைகள் பெருகிவிட்டதாகவும், பகைமை வளர்வதாகவும் மூன்று அணியினரும் முறையிட்டார்கள்.
இப் பிரச்சினைகளுக்கு முடிவு செய்து ராஜமுத்திரை (அரசாணை) இட வேண்டும் என்றும் வேண்டினார்கள்.
அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகளை அழைத்த மன்னர் "இந்த மூன்று அணியினரும் காலம்காலமாக எந்தெந்தச் சந்நிதியில் எந்தெந்தத் தீர்த்தத்தில் என் னென்ன பணி செய்தார்களோ அதுவே தொடர வேண்டும். ஒரு அணியினருக்கு உரிய பணியில் மற்ற அணியினர் தலையிடக் கூடாது. மற்றவர் வருமானத்தை அபகரிக்கக் கூடாது. அப்படிச் செய்திருந்தால் அதையெல்லாம் உடனே உரியவர்கüடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
யார்யாருக்கு எங்கு என்னென்ன பணிகள், நிர்ணயிக்கப்பட்ட வருமானம் என்ன என்பதையெல்லாம் இசைவுமுறியாக (சம்மத உறுதிமொழிப் பத்திரம்) எழுதி மூன்று அணியினரும் கையெழுத்திட வேண்டும் இசைவுமுறியை மீறுவோர் 1200 பொன் அப ராதம் செலுத்த வேண்டும். இசைவுமுறியை இவர்கள் திருமலை நாயக் கருக்கும் எனக்கும் (தளவாய் சேதுபதி காத்த தேவர்) எழுதித் தரவேண்டும் எனக் கட்டளையிட்டார் சேதுபதி மன்னர்.
அவ்வாறே எழுதிக் கையெழுத்துப் போட்டார்கள் மூன்று அணியினரும். அந்த இசைவுமுறியில் அரசமுத்திரை குத்தப்பட்டு அது அரசின் சாசனமாக்கப்பட்டது.
அந்தச் சாசனத்தின் முக்கிய விபரங்கள்..
குருக்கள்மார் பணிகள் அணுமேஸ்வரர், இராமநாதசுவாமி மலைவளர் காதலியம்மன் படிகலிங்கம், இராமநாதசுவாமி உற்சவ மூர்த்தி தாண்டவேசுவரர், தேவைஅம்பலவாணர், பல்லக்கு நாயகர் ஆகிய கடவுளரின் சந்நிதி களில் பூசை செய்தல், நெய்வேத்தியம் படைத் தல், தீபாராதனை செய்தல், திருவாபரணம் சாற்றுதல் மற்றும் இவற்றால் கிடைக்கும் வருமானத்தைப் பெறுதல்.
சபையார் வேலை
கடவுளர் திருமேனிகளுக்கு திருமஞ்சனம் செய்தல், உள்ளே கொண்டுவந்து வைத்த கட்டளையை எடுத்துக் கொடுத்தல், சுயம் பாகம் பண்ணி நெய்வேத்தியத்தை சந்நிதியில் கொண்டுவந்து போடுதல், தூபதீபம் கொடுத் தல், பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் செய்தல், உற்சவமூர்த்திகளை பல்லக்கில் எழுந்தருளச் செய்தல் யானைமேல் திரு மஞ்சனம் கொண்டுவருதல் அடியார்க்கு கோடிதீர்த்தம் எடுத்துவிடுதல்.
தமிழ் ஆரியர் வேலை
கடவுளர் சந்நிதிகளில் நெய்வேத்தியம் பண்ணின தளிகை மாற்றுதல், சைவப் பண்டாரங்கள் உள்ள அறைகள் தவிர மற்ற அறைகளில் தங்கள் முறைமைப் பணிகளைச் செய்தல், சந்தனம் அறைத்தல் திருவிளக்குப் பார்த்தல், பல்லக்கு எழுந்தருளச் செய்தல், சந்நிதி வாசலில் காவல் இருத்தல், பண்டாரங்கள் இல்லாதபோது மாலை கட்டுதல், தானத் தாருக்கு திருவாபரணம் கொண்டுவைத்தல், கோவிலுக்கு வரும் காரியக்காரர்களுக்கு பிரசாதம் கொண்டுபோய் அளித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். கோவில் திறந்திருக்க வேண்டிய நேரத்தில் அடைத்தாலும், அரசர் ஆணைக்கு உட்பட்டு நடக்காவிட் டாலும் 1200 அபராதம் அளிப்ப தோடு தங்கள் காணியாட்சிகளையும் இழக்க நேரிடும்!
இதற்கெல்லாம் ஒப்புக் கொண்டு, இசைவு முறியில் குருக்கள்மாரும் சபையாரும் தமிழ் ஆரியரும் முறியில் கையெழுத்திட்டனர்.
கையெழுத்திட்ட குருக்கள்மார் விபரம்
1. வாமதேவக் குருக்கள் 2. கெங்காதரக் குருக்கள் 3. சங்கரக் குருக்கள் 4. சர்வேஸ்வரக் குருக்கள் 5. இராமநாதக் குருக்கள் 6. சந்திர சேகரக் குருக்கள்சபையார்
1. சேதுராமப் பட்டன்
2. விரிசிப் பட்டன்.
3. நரசிங்கப் பட்டன்.
தமிழ் ஆரியர்
1. நயினார் 2. அரிச்சந்திரன் 3. நாராய ணன் 4. வேல்வாங்கினான் 5. தம்பிராமன் உமையாள்தேவன் 6. அமரர் தொழநின்றான் 7. சோமேஸ்வர முதலி 8. கடலடைந்தான் 9. கங்கையாடிப் பெருமாள் 10. சருவேசுரன் 11. ஆண்டயினான் 12. நயினாப்பிள்ளை 13. சேதுநிலையிட்ட பிராதிராயன் 14. தெசரதராமன் 15. தாண்டவமூர்த்தியார் 16. அரிபட்டன் 17. பெரியமுதலி 18. யெங்குதேவன் 19. சந்திர தேவன் 20. ஆண்டாயினான் 21. மாதவப் பட்டன் 22. இராமப்பிள்ளை 23. தன்மராசி தாண்டவமூர்த்தி 24. ஆண்டாயினான் 25. சருவேசுரன் 26. தம்பி நயினார் 27. ஒப்பிலாத பெருமாள் 28. தும்மினியாண்டி.
இராமநாதசுவாமி கோவில் அக்காலத்தில் 37 ஊழியர்கள் வேலை செய்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட இசைவுமுறி ஒப்பந்தம் இராஜமுத்திரையால் அரச ஆணை யாகியிருக்கிறது. (செப்பேடு 7.13-01-1632)
நான்காவது சேதுபதி மன்னரான இரகுநாத சேதுபதி (எ)திருமலை சேதுபதி தன் 11-ஆம் ஆட்சியாண்டில் மராட்டிய குருக்கள்மாருக்கு அளித்த உரிமை சாசனப் பட்டயமாகியிருக்கிறது.
முந்தைய சேதுபதி மன்னர் எவரும் மராட்டிய குருக்கள்மார் மற்றும் மராட்டிய சபையாருக்கு, அர்ச்சனை போகத்திற்காக கிராமம் எதையும் தானமளிக்கவில்லை. அக் குறையை போக்கும்விதமாக இத்தானம்.
"இராமேஸ்வரம் சேதுஸ்தானம் இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதிக்கு வருகின்ற மராட்டிய சகலசாதி பக்தர்களுக்கும் சங்கரக் குருக்கள் உள்ளிட்ட நீங்களே தீர்த்தப் புரோகிதம் செய்து வருமானத்தை நீங்களே அனுபவித்துக்கொள்ளலாம்! (செப்பேடு 14. 23-01-1658).
இராமேஸ்வரம் கோவில் வளாகத்திற்கு உள்ளும் புறமும் நிறையத் தீர்த்தங்கள் இருந்தன.
சந்நிதிகளிலும் தீர்த்தங்களிலும் ஆராதனைகள் செய்து தீர்த்தம் அளிப்பதற்கு தமிழ்ப் பிராமணர்களும் பிறமொழிப் பிராமணர்களும் பணியாற் றினர்.
தமிழ்ப் பிராமணர்கள் சபைக்கு குருக்கள்மார் சபை எனப் பெயர். பிறமொழிப் பிராமணர் சபைக்கு ஆரிய மகா சபை எனப் பெயர்.
தமிழ்ப் பிராமணர் குருக்கள் என அழைக்கப்பட்டனர். பிறமொழிப் பிராமணர் நைனா என அழைக்கப்பட்டனர்.
தீர்த்தங்களில் லட்சுமணத் தீர்த்தம் சிறப்புமிக்கதாக- சக்திமிக்கதாக திகழ்ந்தது.
லட்சுமணத் தீர்த்தத்தில் பூசை செய்து பிரசாதம் தரும் பிராமணர்களுக்கு வருமானம் அதிகம் கிடைத்தது.
லட்சுமணத் தீர்த்தத்தில் பூசை செய்து வருமானம் பெறும் உரிமை யாருக்கு? பிரச்சினை பெரிதானது.
குருக்கள்மாருக்கும் நைனார்க்களுக்கும் மோதல். இரண்டு தரப்பினரும் அரண் மனைக்குச் சென்றனர்.
சேதுபதி மன்னர் கட்டளைதான் சாசனம்.
அவர் சொல்வதே தீர்ப்பு. ஆயினும் இந்த வழக்கை மன்னர் விசாரிக்கவில்லை.
விசாரணைக் குழு ஒன்றை நியமித்தார்
1. புரோகிதம் சின்னய்யன் 2. உப்பூர் வேதமய்யன் 3. தேவிபட்டினம் வெங்கிட்டய்யன் 4. ராமேஸ்வரம் திம்மனாச்சாரி 5. தனுக்கோடி காமாட்சியய்யன் 6. ஏத்துவாரி சேஷய்யன் 7. கவிராயர் சுப்பிரமணியன் 8. கடற்துறை ராமநாதப்பிள்ளை 9. உப்பளக் கணக்கு இருளப்பப் பிள்ளை 10. அட்டவணை சுப்பிரமணியப் பிள்ளை 11. கவரை சங்கரன் செட்டியார் 12. திருமலைச் செட்டியார் 13. வயிரவன் செட்டியார் 14. சூரியநாராயணன் செட்டியார் 15. பங்காரு செட்டி 16. கோமுட்டி ராமுச்செட்டி 17. அலிப்புலி ராவுத்தர் 18. உத்தமப் பணிக்கன் 19. மயிலேறி நாடான் ஆகியோர் விசாரணைக் குழு உறுப்பினர்கள்.
பல்வேறு சாதியினர் மற்றும் ஒரு முகமதியரும் குழுவில் இருக்கிறார். குழுவில் அரசுப் பணியாளர் எவருமில்லை.
வழக்கு விசாரணையின் பார்வையாளர்களாக, அரசு அதிகாரிகளான தனகர்த்தர் வெள்ளையன் சேர்வை, ராஜப் பிரதானி ஆண்டியப்பப் பிள்ளை, பெரியகட்டளை ராமநாதப் பண்டாரம், சத்திரம் மணியக்காரர் ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இராமநாதபுரம் கோட்டை வாசல் பிள்ளையார் கோவில் சந்திதியில் 18-01-1746 அன்று விசாரணை நடந்தது.
இரு தரப்பினரிடமும் பெற்ற வாய் மொழித் தரவுகள், சுவடி ஆவணங்கள், 1430-ஆம் ஆண்டு இதைப்போன்ற ஒரு வழக்கின் விசாரணையும் தீர்ப்பும் அடங்கிய செப்பேடு மற்றும் பல ஆவணங்கள் சான்று களாக ஏற்கப்பட்டன.
நிறைவாக, லட்சுமணத் தீர்த்தத்தின் அர்ச்சனைப் பூசை உரிமைகளும் ஆதாயங்களும் தமிழ்ப் பிராமனர்களுக்கே எனத் தீர்ப்பளிக்கப் பட்டு சாசனப் பட்டயமாக்கப்பட்டது.
சாதிமத வேறுபாடின்றி பொதுமக்கள் மட்டுமே பங்கேற்ற நடுவர் மன்றம் அமைத்து தீர்ப்புக் கண்டிருப்பது சேதுபதி மன்னர்களின் சால்புக்கு எடுத்துக்காட்டு. (பட்டயம் 77.)
"இராமேஸ்வரம் கோவிலுக்காக, கோவில் பிராமணர்களுக்காக அளவின்றி செய்தவர் கள் சேதுபதி மன்னர்கள்.அவர்களில் ஒருவரை தீண்டத்தகாதவர் எனப் புறணி பேசி மன்னரைக் கண்கலங்கி ராஜினாமா செய்யவைத்த கொடுமையையும் பிராமணக் குருக்கள்மார் செய்யத் தயங்கவில்லை!!'' அதிர்வூட்டும் தகவல் ஒன்றைச் சொன்னார் சேதுபதிகள் மற்றும் மருதுபாண்டியர்கள் வரலாற்று ஆர்வலர் ஐயா இராமநாதபுரம் மாரி சேர்வை.
"பிரிட்டிசார் ஆண்ட காலம். கோவில் நிர்வாகி சாமிநாதப் பிள்ளை மற்றும் கோவில் ஊழியர்களின் தான்தோன்றி செயல்களால் சீரழிந்துகொண்டிருந்தது இராமேஸ்வரம் கோவிலின் மாண்பு.
இது குறித்த வழக்கை விசாரித்த மதுரை கிழக்கு நீதிமன்றம், கோவில் நிர்வாகி சாமிநாதப் பிள்ளையை நீக்கிவிட்டு, மன்னர் பாஸ்கர சேதுபதியை 16-03-1895 அன்று அறங்காவலராக நியமித்தது.
மன்னர் பாஸ்கர சேதுபதி சைவசித்தாந்த நெறியிலும் ஆகம விதிகளிலும் வசையிலாத் தேர்ச்சிபெற்றவர். மன்னர் பொறுப்பேற்றதும் கோவில் பூசைகளும் மண்டகப்படிகளும் கட்டளைகளும் விழாக்களும் பெருமைமிகு பீடுடன் நடக்கத் தொடங்கின.
அதுவரை கேட்பாரற்று ஆட்டம் போட்ட ஊழியர்களால் மன்னரின் கண்காணிப்பை மேலாண்மையை பொறுத் துக்கொள்ள முடியவில்லை.
மாமிச உணவு சாப்பிடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மறவர் சாதிக்காரரான மன்னர் பாஸ்கர சேதுபதி அறங்காவலராக இருக்கலாமா? கடவுளருக்குச் சாத்தும் நகைகளை இவர் தொட்டுத் தரலாமா? வெள்ளை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டதோடு மன்னர் செவியில் கனல் பாயும் அளவுக்கு புறணி பரப்பவும் தொடங்கினர் குருக்கள்மார்.
வேதனையில் துவண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி 1901-ல் தனது அறங் காவலர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்!
கோவில் நிர்வாகம் மீண்டும் மீட்டெழுந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1913-ல் பிரிட்டீஷ் அதிகாரிகள் மன்னர் பாஸ்கர சேதுபதியை யும் மன்னரின் நண்பர் தேவகோட்டை ஜமீன்தார் இராமசாமி செட்டியாரையும் அறங்காவலர்களாக நியமித்தது.
தமிழகமே வியக்கும் வண்ணம்06-02-1925 இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கை மன்னர் பாஸ்கர சேதுபதி நடத்தியிருக்கிறார் என்று பெருமிதத்தோடு சொன்னார் வரலாற்று ஆர்வ லர் இராமநாதபுரம் மாரி சேர்வை.