குதிரையில் சென்றுகொண்டிருந்த சேந்தன் நல்லனாரின் எண்ணங்கள் முழுவதும் பாண்டியர் மாளிகையில் யாழ்ப்பாணனின் நண்பனிடம் தான் செய்த விசாரணையைப் பற்றியதாகவே இருந்தது. அவன் சொன்ன செய்திகளிலிருந்து எரிகலன்கள் நிரப்பப்பட்ட பகைவர்களது கப்பல் கடலுக்குள் எத்திசையில் எவ்வளவு காத தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை வானிலிருந்த நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து யூகித்துக்கொண்டே சென்றார். அவன் கூறியிருந்த துல்லியமான விவரங்கள் தென்திசையிலுள்ள கலங்கரை விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அந்தக் கப்பலில் பரதவர்கள் வாழும் முத்தூற்றுக் கூற்றம் முழுவதையும் அழிக்கும் அளவிற்கான எரிகலன்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்க நினைக்க அவரது செயல்பாடு துரிதமடையத் தொடங்கியது. மன்னவரைக் கொன்றவனின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து அவன் உயிர் பிரிவதற்குள் பகைவர்களது மரக்கலன் முழுமையும் அழிக்கப்படுவதை அவன் கண்களால் பார்க்கவேண்டும் என்ற மன உந்துதலும் அவரது குதிரையை வேகமாகச் செலுத்தக் காரணமாக இருந்தது. இதனால் குறுகிய நேரத்திற்குள் தென்திசையிலிருந்த கலங்கரை விளக்கத்தைச் சென்றடைந்தார்.
அவர் சென்ற வேகத்தைப் பின்பற்றி வீரர்கள் அனைவரும் கலங்கரை விளக்கத்திற்கருகே வந்துசேர்ந்தனர். அவர்களை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, கலங்கரை விளக்கத்தை இடித்துக்கொண்டிருந்த பகைவர்கள் ஒருவர்கூட உயிர் தப்பிவிடக்கூடாது என மும்முரமாகப் போர் செய்துகொண்டிருந்த மெய்மொழி அரையனார் படை இருக்கும் இடம் நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினார். அரையனாரின் அருகே மிகக் கவனமாக வந்துசேர்ந்தவுடன் "அரையனாரே! பாண்டியர் மாளிகைக் காவலை சீராளர் அதுகையாரிடம் ஒப்படைத்துவிட்டு நானும் கல்லாடனாரும் அங்கிருந்து இருபது வீரர்களை அழைத்துக்கொண்டு ஒரு முக்கியப் பணியைச் செய்து முடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம்' எனப் பரிதவிப்போடு கூறினார்.
அதுகண்ட அரையனார் தனது போரில் நிதானமாகி "நல்லனே! என்ன பணி? ஏன் இவ்வளவு பதற்றம்?' என வினவினார். அதற்கு "சீராளரே!
நம் பரதவர்கள் வாழும் முத்தூற்றுக் கூற்றத்தை எரிப்பரந்தலை செய்து அழிப்பதற்காக பகைவர்கள் ஒரு கப்பற்கலன் முழுவதும் எரிகலன்களை நிரப்பி இங்கிருந்து ஐந்து காத தூரத்தில் கீழ்த்திசையில் கடலில் நங்கூரமிட்டுக் காத்திருப்பதாகச் செய்தியறிந்தோம். விடிவதற்குள்அதை நாம் தகர்த்தழிக்கவில்லையெனில் நாளை அவர்கள் மிகப்பெரிய பேரழிவை இங்கு ஏற்படுத்திவிடுவார்கள். ஆதலால், பொழுது
குதிரையில் சென்றுகொண்டிருந்த சேந்தன் நல்லனாரின் எண்ணங்கள் முழுவதும் பாண்டியர் மாளிகையில் யாழ்ப்பாணனின் நண்பனிடம் தான் செய்த விசாரணையைப் பற்றியதாகவே இருந்தது. அவன் சொன்ன செய்திகளிலிருந்து எரிகலன்கள் நிரப்பப்பட்ட பகைவர்களது கப்பல் கடலுக்குள் எத்திசையில் எவ்வளவு காத தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை வானிலிருந்த நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து யூகித்துக்கொண்டே சென்றார். அவன் கூறியிருந்த துல்லியமான விவரங்கள் தென்திசையிலுள்ள கலங்கரை விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அந்தக் கப்பலில் பரதவர்கள் வாழும் முத்தூற்றுக் கூற்றம் முழுவதையும் அழிக்கும் அளவிற்கான எரிகலன்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்க நினைக்க அவரது செயல்பாடு துரிதமடையத் தொடங்கியது. மன்னவரைக் கொன்றவனின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து அவன் உயிர் பிரிவதற்குள் பகைவர்களது மரக்கலன் முழுமையும் அழிக்கப்படுவதை அவன் கண்களால் பார்க்கவேண்டும் என்ற மன உந்துதலும் அவரது குதிரையை வேகமாகச் செலுத்தக் காரணமாக இருந்தது. இதனால் குறுகிய நேரத்திற்குள் தென்திசையிலிருந்த கலங்கரை விளக்கத்தைச் சென்றடைந்தார்.
அவர் சென்ற வேகத்தைப் பின்பற்றி வீரர்கள் அனைவரும் கலங்கரை விளக்கத்திற்கருகே வந்துசேர்ந்தனர். அவர்களை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, கலங்கரை விளக்கத்தை இடித்துக்கொண்டிருந்த பகைவர்கள் ஒருவர்கூட உயிர் தப்பிவிடக்கூடாது என மும்முரமாகப் போர் செய்துகொண்டிருந்த மெய்மொழி அரையனார் படை இருக்கும் இடம் நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினார். அரையனாரின் அருகே மிகக் கவனமாக வந்துசேர்ந்தவுடன் "அரையனாரே! பாண்டியர் மாளிகைக் காவலை சீராளர் அதுகையாரிடம் ஒப்படைத்துவிட்டு நானும் கல்லாடனாரும் அங்கிருந்து இருபது வீரர்களை அழைத்துக்கொண்டு ஒரு முக்கியப் பணியைச் செய்து முடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம்' எனப் பரிதவிப்போடு கூறினார்.
அதுகண்ட அரையனார் தனது போரில் நிதானமாகி "நல்லனே! என்ன பணி? ஏன் இவ்வளவு பதற்றம்?' என வினவினார். அதற்கு "சீராளரே!
நம் பரதவர்கள் வாழும் முத்தூற்றுக் கூற்றத்தை எரிப்பரந்தலை செய்து அழிப்பதற்காக பகைவர்கள் ஒரு கப்பற்கலன் முழுவதும் எரிகலன்களை நிரப்பி இங்கிருந்து ஐந்து காத தூரத்தில் கீழ்த்திசையில் கடலில் நங்கூரமிட்டுக் காத்திருப்பதாகச் செய்தியறிந்தோம். விடிவதற்குள்அதை நாம் தகர்த்தழிக்கவில்லையெனில் நாளை அவர்கள் மிகப்பெரிய பேரழிவை இங்கு ஏற்படுத்திவிடுவார்கள். ஆதலால், பொழுது புலர்வதற்குள் அக்கப்பற்கலனைச் சிதைத்தழிக்கவேண்டும். இப்பணி யைச் செய்துமுடிக்க நீங்கள் எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என வேண்டினார் சேந்தன் நல்லனார்.
இதைக்கேட்ட அரையனார் "இது மிகக் கடுமையான செயலல்லவா? உங்களால் எவ்வாறு இப்பணியைச் செய்து முடிக்க முடியும்?' என வினவினார். உடனே நல்லனார், "சீராளரே! அதற்கு மிகக் கவனமாக செயல்திட்டங்களை வகுத்து வந்துள்ளோம். நேரம் கழிந்துகொண்டிருக்கிறது. உங்கள்மீது ஆணையாக, குரு ஆதனார் மீது ஆணையாக, பாண்டியப் பேரரசின் மக்கள்மீது ஆணையாக, இதைச் செய்து முடிப்போம். உத்தரவு தாருங்கள் என வேண்டினார். அவரது ஊக்கத்தைக் கண்ட அரைய னார் "வெல்லட்டும் உமது பணி! விவேகமுடனும் வீரத்துடனும் செயல்படுங்கள்!' என அனுமதியளித்தார்.
உடனே நல்லனார், கல்லாடனாரும் தமது வீரர்களும் இருக்குமிடத்திற்கு வந்து "கல்லாடனாரே! தலைமைச் சீராளரிடம் அனுமதி பெற்றுவிட்டேன். இங்கு குதிரைகளைக் கட்டிவிட்டு, இங்குள்ள பத்து ஓடங்களை அவிழ்த்து, ஓடத்திற்கு இருவர்வீதம் பயணிப்போம்' எனக் கூறிவிட்டு, "வீரர்களே பத்து ஓடங்களை அவிழுங்கள்' எனக் கட்டளையிட்டார்.
இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், சேந்தன் நல்லனாருடன் வந்த கல்லாடனாரும், பாண்டிய மாளிகையில் காவற்பணி மேற்கொண்டுள்ள அதுகையாரும், அடுத்து அறிமுகமாக விருக்கும் குடப்புலவியனாரும் குரு ஏகன் ஆதனார் குருகுலப் பள்ளியில் பயின்ற ஒத்த வயதுடைய மாணவர்கள். இந்நால்வரும் பயிற்சிபெறும் நாள்களிலிருந்து இணைபிரியா உயிர்த் தோழர்களாய் இருந்து வருகிறார்கள். இவர்களில் கல்லாடனாரும் குடப் புலவியனாரும் தமிழ் இலக்கணத்திலும் மருத்துவத்தி லும் மிகுந்த ஆர்வமுடையவர் களாக இருந்து வந்தனர்.
சேந்தன் நல்லனாரும், அதுகையாரும் போர்த்திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.
இளவலின் தந்தை பாண்டியப் பேரரசர் வெற்றிவாகை சூடிய கூடற்பரந்தலைப் போரில் நல்லனாரும், அதுகையாரும் இளம்வயதிலேயே கலந்து கொண்டவர்கள். கல்லாட னாரும் குடப்புலவியனாரும், இளவல் பட்டமேற்று மன்னரான பின் அவரைப் பற்றி சங்கப் பாடல்களில் பாடியுள்ளனர். (இது இலக்கியச் சான்றாகும். தற்போது இவர்களின் வயது முப்பத்து இரண்டாகும்.) குருகுலப் பயிற்சி முடிந்தபின்னும் குரு ஏகன் ஆதனார்மீது கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அக்குருகுலத்தின் சீராளர்களாக இருந்துவருகிறார்கள்.
அக்குருகுலத்தில் வயதில் குறைந்த சீராளர்கள் இவர்கள் நால்வரே. தற்போது குடப்புலவியனார் பாண்டியப் பேரரசரின் இறுதிப் பயணத்துடன் சேர்ந்து கூடற்நகரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.
இன்று இரவுதான் ஏகன் ஆதனாருடன் மருங்கூர் துறைமுகத்திற்கு இந்நால்வரும் வந்துசேர்ந்திருந்தனர். இவர்கள் நால்வரில் சேந்தன் நல்லனார் துறுதுறுப்பான செயல்பாடுடையவர். குரு ஏகன் ஆதனாரின் மிகுந்த பாசத்திற்குரியவர்.
இனி நாம் வரலாற்றுக்கு வருவோம். சேந்தன் நல்லனார் தன் குதிரையைவிட்டு இறங்கினார். வானில் இருந்த விண்மீன்களைப் பார்த்தார். அப்போது இரவு மூன்றாம் யாமம் தொடங்கும் பொழுதாகிறது என்பதை உணர்ந்தார். உயிரினங்கள் அனைத்தும் அயர்ந்து கண்ணுறங்கும் நேரம். அதாவது நமது தற்போதைய மணிக்கு இரவு 2.45 சேந்தன் நல்லனாரின் இதயம் கனத்திருந்தது. இரவு விடியும்போது நாம் இப்பாண்டிய மண்ணைத் தொடு வோமா? இல்லையா? என்பது தெரியாது என அவர் மனதில் எண்ணம் ஓடியது. அவர் மேற்குத் திசை நோக்கி மண்ணில் மண்டியிட்டு மருங்கூரையும் தான் பயின்ற ஆதனார் குருகுலத்தையும் நினைத்து வணங்கி, மண்ணை முத்தமிட்டார். ஏகன் ஆதனார் தனக்கு உணர்த்தியிருந்த கடமையான "மக்கள் உயிர்காக்க நம் உடலின் ஒவ்வொரு அணுக்களும் பயன்பட வேண்டும்' என்பதை மனதில் உறுதிபூண்டு நிமிர்ந்தெழுந்தார். இவரது செய்கை புதிதாக இருப்பதைக் கல்லாடனார் உணர்ந்தார். அப்போது சேந்தன் நல்லனார் "கல்லாட னாரே! கடற்காற்று நாம் செல்லும் திசைக்கு எதிரானதாக இருக்கிறது. ஆதலால் ஓடங்களிலுள்ள பாய்மரங்களை சுருட்டிவிடச் சொல்லுங்கள்' என்றும் "ஓடங்களை எவ்வளவு விரைவாகச் செலுத்தமுடியுமோ, திறனுள்ள மட்டும் துடுப்பு வழித்து விரைந்து செலுத்துங்கள்.
எங்கள் ஓடத்தைப் பின்தொடருங்கள்' எனவும் வீரர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். அதன்படியே குதிரைகள் கட்டப்பட்டு, ஓடங்களின் பாய்மரச் சீலைகள் சுருட்டப்பட்டு, கடலுக்குள் செல்லத் தயாரானார்கள்.
ஓடங்களின் பாய்மரக் கம்பங்களில் பெருக்கல் வடிவில் அவர்கள் கொண்டுவந்த தீவெட்டிகள் கட்டப்பட்டன. நல்லனாரும் கல்லாடனாரும் ஒரு ஓடத்தில் குதித்தமர்ந்தனர். நல்லனார்,
தன் முதுகிலிருந்த சீனக்குடுவையை சரிபார்த்துக்கொண்டார். "விரையுங்கள், எங்களைப் பின்தொடர்ந்து வாருங்கள்' என நல்லனார் உரக்கக் கூறியவுடன், அவரும் கல்லாடனாரும் துடுப்பை விரைந்து வழிக்கலாயினர். காற்றின் வேகம் மிக அதிகமாக எதிர்த்து வீசியது. ஓடங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கீழ்த்திசை நோக்கி விரைந்தன.
சேந்தன் நல்லனார், தனது கணிப்புப்படி தொலைவில் கடலுக்குள் கருநிறத்தில் அமைதியாக ஒரு கப்பற்கலன் மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். மூன்றாம் யாமத்து ஆழ்ந்த அமைதியில் காற்றின் ஓசையும், கடல் அலையின் ஓசையும், துடுப்பு வழிக்கின்ற ஓசையும் கலந்து, கருநிறக் கடலும் வானம் நிறைந்த விண்மீன்களும், அதன்நடுவே கருநிழலாகக் காட்சியளித்த எதிரிகளின் மரக்கலனும், வீரர்களின் மனதைச் சிறிது அச்சுறுத்தக் கூடியவையாக இருந்தன.
அப்போது நல்லனார், தான் துடுப்பு வழிப்பதை நிறுத்திவிட்டு, கட்டியிருந்த தீவெட்டிகளை அவிழ்த்து, தன் இருகைகளால் அவற்றைப் பிடித்துக்கொண்டு, தனக்கு இருமருங்கிலும் ஓடங்கள் பிரிந்து வரும்படி சைகை காட்டினார். அதன்படி ஒரே கிடைமட்ட நேர்க்கோட்டில் ஓடங்கள் அனைத்தும் கப்பலை நெருங்கின.
பெரிய கருநிற பூதமாகக் காட்சியளித்த அக்கப்பலில் எந்த விளக்கும் ஏற்றப்படாமல் இருந்தது. ஏனெனில், கப்பல் கடலில் நிறுத்தப்பட்டிருப்பது, பாண்டிய நாட்டுத் துறைமுக வீரர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக. ஆனால், அதன் உள்ளே மனிதர்கள் சிலரது சலசலப்பு ஓசைகள் கேட்கத் தொடங்கின. அவ்வோசைகள் மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. ஓடங்களில் இருந்த தீவெட்டிகளின் வெளிச்சங்களை அவர்கள் உணர்ந்துவிட்டதுபோல் தோன்றியது.
நிலைமை தங்களின் செயல்பாட்டிற்குக் கடுமையாகிவிடுமோ என நல்லனார் அஞ்சலானார். ஓடங்கள் அனைத்தும் நெருக்கமாக வந்துசேர்ந்தன. அவ்வோடங்களிலுள்ள வீரர்களுக்கு உரத்த குரலில் கட்டளையிட்டார். "விரைவாக ஓடங்களை இக்கப்பலைச் சூழ்ந்து நிறுத்துங்கள். கப்பலிலிருந்து பகைவர் எவரேனும் கடலுக்குள் குதிப்பாராயின் அவரைத் தப்பவிடாது. கடலுக்குள்ளேயே கொன்று வீழ்த்திவிடுங்கள்' என்றும், "எனக்கு இருமருங்கிலும் இருக்கும் ஓடத்தி லுள்ள வீரர்களே! உங்கள் வேற்கம்புகளில் தீவெட்டிகளைக் கட்டுங்கள்' எனவும் ஆணையிட்டார்.
அதன்படி, அனைத்து ஓடங்களும் அக்கப்பற்கலனைச் சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டன. அதேநேரத்தில், அக்கப்பற்கலனுக்குள் விளக்குகள் ஏற்றப்படத் தொடங்கின. தாங்கள் சுற்றிவளைத்திருப்பதை கப்பலுக்குள் இருக்கும் பகைவர்கள் அறிந்துவிட்டதை நல்லனாரும், கல்லாடனாரும் உணர்ந்தனர்.
கப்பலுக்குள் சலசலப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே சென்றது. நிலைமை மேசமடைந்துவிட்டது என்பதை அறிந்தார் சேந்தன் நல்லனார். "அனைத்து வீரர்களும் வேற்கம்புகளைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்...' எனக் கூறிவிட்டு, துரிதமான செயல் நடவடிக்கையில் இறங்கினார். கப்பற்கலனில் இருந்த பகைவர்களின் செயல்பாட்டால், அக்கப்பல் இடமும் வலமும் ஆடத் தொடங்கியது. அதுகண்ட வீரர்கள் கப்பலுக்குள் பகைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை உணர்ந்து அச்சமுறத் தொடங்கினர். கல்லாடனாரும் சிறிது கலக்கமுற்றார்.
அதையுணர்ந்த சேந்தன் நல்லனார் "வீரர்களே! இன்னும் சில நாளிகைகளில் கப்பல் வெடித்துச் சிதறிவிடும். அஞ்சவேண்டாம். கடலில் குதிக்கும் பகைவர்களை மட்டும் குறிவையுங்கள்' என உரத்த குரலில் உத்தரவிட்டார். கல்லாடனாரிடம் "நமது ஓடத்தை மட்டும் எதிரிகளின் கலனுக்கருகே கொண்டுசெல்லுங்கள்' என நல்லனார் கேட்டுக்கொண்டார். தனக்கு இருபுறத்திலும் இருந்த ஓடங்களில் இருந்த வீரர்களிடம் "நான் இந்த ஓடத்திலிருந்து பகைவரது மரக்கலனுக்குச் சென்றவுடன் உங்களது கைகளில் இருக்கும் எரியீட்டிகளை என்மீது குறிபார்த்து தீவெட்டியுடன் எறியுங்கள்.' "இது பாண்டியப் பேரரசின் சீராளனது அரச கட்டளை' எனக் கூறிவிட்டு, தனது இடையிலிருந்த இரு ஓலைச் சுவடிகளையும், உடும்புத் தோலில் வரையப்பட்ட ஒரு வரைபடத்தையும் கல்லாடனாரிடம் கொடுத்துவிட்டு, "கல்லாடனாரே! இக்கப்பல் தகர்க்கப்பட்ட பின் நீங்கள் பத்திரமாகக் கரை சேர்ந்தபின் இதைப் பாருங்கள்' எனக் கூறி, கண்களில் கண்ணீர் மல்க கல்லாடனாரைக் கட்டியணைத்துவிட்டு, ஓடத்தில் சுருட்டப்பட்டிருந்த பாய்மரக் கம்பத்தில் மளமளவென ஏறினார்.
"நல்லனாரே! என்ன செய்கிறீர்கள்? ஏன் என்னோடு கரைக்கு வரமாட்டீர்களா?' எனக் கல்லாடனார் கத்தினார். "கல்லாடனாரே! சில கணப்பொழுதில் உங்களுக்கு விடை கிடைக்கும்' என அவரும் உரக்கக் கத்தினார்.
கம்பத்தின் உச்சியிலிருந்து பகைவர்களின் கலனைத் தாவிப் பிடித்தார். தன் முதுகில் இருந்த சீனக்கலனை அவிழ்த்து அதனுள்ளிருந்த வெள்ளை நிறப்பொடியைத் தன்உடல் முழுவதும் கொட்டினார். கப்பற்கலனில் கட்டப்பட்டிருந்த பக்கக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு "பாண்டியப் பேரரசு வெல்லட்டும்! வீரர்களே என்மீது எரியீட்டியை எறியுங்கள்!' எனக் கடலே அதிரும் வண்ணம் கத்தினார்.
இரு ஓடங்களிலிருந்து கடம்பர்களால் எறியப்பட்ட எரியீட்டிகள் குறிதவறாமல் அவர்மீது பாய்ந்தன. அவற்றிலிருந்த தீவெட்டி நெருப்பு சேந்தன் நல்லானார்மீது பட்டவுடன், அவர் உடல் முழுவதும் மளமளவெனப் பரவியது நெருப்பு. "தமிழர் இனம் வெல்லட்டும்.
மக்கள் அமைதியுறட்டும்' என உரத்த குரலில் கூறிக்கொண்டே மரக்கலனுக்குள் குதித்தார்.
எரிந்துகொண்டிருந்த அவரது உடல் கலனுக்குள் மறைய மறைய சில நொடிகளில் அக்கப்பற்கலன் நெருப்பால் வெடித்துச் சிதறியது எரிமலை வெடிப்பதுபோல்.
வரலாறு தொடரும்..
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us