களத்திரஸ்தானாதிபதி அஷ்ட காம்சம் பெறக்கூடாது.
ப் களத்திரஸ்தானாதிபதி 6 அல்லது 8-ல் இருக்கக்கூடாது (அ) 6, 8-க்குடையவரோடோ (அ) 6, 8-க்குடையவரின் சாரத்திலோ இருக்கக்கூடாது.
ப் களத்திரஸ்தானாதிபதி நின்ற நட்சத்திராதிபதிக்கு வேதை நட்சத்திர சாரம் பெறக்கூடாது.
ப் சுக்கிரன், செவ்வாய், ராகு, சாரத்தில் மாந்தி இருக்கக்கூடாது.
ப் 6, 8, 12-க்குடையவரின் தசை ஆரம்பகால தசையாக வராமல் இருப்பது நன்று. நடைமுறையிலுள்ள தசாபுக்தியையும், எதிர்கால தசாபுக்தி இவற்றையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்.
ப் களத்திரஸ்தானத்திற்கு (அ) களத்திரகாரகனுக்கு, பாபகத்ரி தோஷம் இருக்கக்கூடாது.
ப் களத்திரஸ்தானம், களத்திரஸ்தானாதிபதி நின்ற இடம். களத்திரஸ்தானாதிபதி, களத்திரஸ்தானத்திலுள்ள கிரகம். களத்திரஸ்தானாதிபதி நின்ற நட்சத்திராதிபதி போன்றவை திதி சூன்யத்தில் சிக்காமல் இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்யவேண்டும்.
ப் சூரியனுக்கு சந்திரன் "சஷ்டாஷ்டகமாக' இருக்கக்கூடாது.
ப் எட்டில் ராகு (அ) விரையத்தில் (12-ல்) சனி (அ) 6, 8-ல் சந்திரன் போன்றவை கூடாது.
ப் ஆணின் ஜாதகத்தில், சூரியனுக்கோ (அ) செவ்வாய்க்கோ எட்டில் ராகு- கேது இருப்பின், இது ஊழ்வினை கர்மா அனு பவித்துதான் கழிக்க வேண்டும்.
ப் சர லக்ன ஜாதகமெனில், 2 அல்லது 7-க்குடையவன் தசை நடத்தும்போது, பாதகாதிபதி எவ்விதத்திலும் தொடர்பில் இருக்கக் கூடாது.
ப் சூன்ய ராசி எந்தப் பாவமோ, அந்தப் பாவத்தின் காரகத்துவம் பாதிக்கப்படும்.
ப் மாந்தி நின்ற பாவமும், மாந்தி நின்ற நட்சத்திராதிபதி எந்தப் பாவத் திற்கு உரியவரோ, அந்தப் பாவமும் பாதிக்கப்படும்.
ப் சந்திரனுக்கு, செவ்வாய் 6 அல்லது 8-ல் இருப்பின் சஷ்டாஷ்டக தோஷம்.
ப் ராகு தசையில் திருமணம் என்பதை ஆய்வுசெய்தே முடிவு செய்யவேண்டும்.
ப் லக்னாதிபதி தசையில் திருமணம் என்றாலும், அவர் லக்னத்திற்குப் பாபியின் சாரத்தில் இருக்கக்கூடாது.
ப் மணமகள் (வதுவை) ஜாதகத்திற்கு, மணமகன் (வரனின்) நட்சத்திரம் வேதை நட்சத்திரமா என்பதனைக் காணவேண்டும். அவ்வாறு இருப்பின் தவிர்த்துவிடவும்.
ப் ஆண் எனில் சுக்கிரனுக்கோ, பெண் எனில் செவ்வாய்க்கோ, களத்திரஸ்தானாதிபதிக்கோ (அ) களத்திரஸ்தானாதிபதி நின்ற நட்சத்திராதிபதிக்கோ, அஷ்டமத்தில் பாபர் இருப்பின், அவர்களின் காரகத் துவத்தில் பாதிப்பை ஏற்படுத் தும்.
ப் உபய லக்ன ஜாதகருக்கு, லக்னத்திலும், களத்திரஸ்தானத்திலும் கிரகங்கள் இருப்பின், அவை ஒன்றுக்கொன்று பாதகத்தையே செய்யும்.
ப் லக்னப் புள்ளி நின்ற நட்சத்திராதிபதி, 6, 8, 12-ல் இருந்தாலும், பாபருடன் கூடினாலும், வாழ்வில் மகிழ்ச்சி குறைவே.
ப் மூலம், ஆயில்யம், கேட்டை நட்சத்திரங்களின் முதல் பாதமும், விசாக நட்சத்திரத்தின் கடைசி பாதமும் கூடாது என்ற ஜோதிட பொது விதியை நேரடியாகக் கையாளாமல், ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்.
ப் பெண்களுக்குக் களத்திர காரகனான செவ்வாயுடன் சாயா கிரகங்களின் சேர்க்கை (அ) செவ்வாய், சாயா கிரகங்களின் சாரம் பெறுவது காரகத்துவத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதில் கேதுவைவிட ராகு அதிக பாதிப்புகளைத் தருகிறது. ஆண் எனில் சுக்கிரனைக் கொண்டு பார்க்கவும்.
ப் மறைந்த குரு (நீசம்- அஸ்தமனம்), நிறைந்த தனத்தைத் தந்தாலும், உயிர்க்காரகத்துவத்தில் ஒரு பங்கத்தை ஏற்படுத்துவதுடன், நிலை யான ஒரு வியாதியையும், மனவேதனையையும் ஏற்படுத்தி விடுகிறது.
ப் காரக கிரகத்தைவிட பாவத்திற்குப் பலம் அதிகம் சுக்கிரன் (அ) செவ்வாயைக் களத்திர காரகனாகக் கொண்டால், இவர்களைவிட களத்திரஸ்தானத்திற்கும், களத்திரஸ்தானாதிபதிக்கும். களத்திரஸ்தானாதிபதி நின்ற நட்சத்திராதிபதிக்கும் பலம் அதிகம்.
ப் ஒரு பாவாதிபதி, தன் வீட்டிற்கு 6, 8, 12-ல் இல்லாமல் இருப்பது நன்று. இதிலும், எட்டாமிடத்தில் இருப்பது மிகக் கெடுதல்.
ப் வக்ர குருவின் பார்வை நன்மை செய்யும் வக்ர குரு தான் இருக்கும் இடத்தைக் கெடுக்கும்.
ப் உபய லக்ன ஜாதகருக்கு, குரு திக்பலம் பெறுவதும் (அ) திரிகோணத்தில் இருப்பதும், நன்மை இல்லை என்றாலும், தீமைகளை குறைத்துச் செய்வார் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
ப் எந்த லக்னம் ஆயினும், விருச்சிகத்தில் சனி இருப்பின், குடும்ப உறவில் பாதிப்புகள் இருக்கும்.
ப் சனியுடன் கேது இணைவு என்பதைவிட ராகு இணைவு கெடுதல் சனியுடன் ராகு இணைவு இருப்பின், அந்தப் பாவமும், அதற்கு 6, 8-ஆம் பாவமும் பாதிக்கப்படும் விதியின் விளையாட்டு தவிர்க்க முடியாததாகிவிடும்.
ப் பெண் ஜாதகத்தில், செவ்வாய்க்கோ (அ) சுக்கிரனுக்கோ அஷ்ட ராசியில் சனியோ (அ) ராகுவோ இருப்பின் இது ஊழ்வினை கர்மா. அனுபவித்துதான் கழிக்கவேண்டும்.
ப் சுப கிரகங்கள், தன் சொந்த வீட்டில் வக்ரம் பெற்றால். சோதனையும், கஷ்டமுமே மிஞ்சும்.
ப் சந்திரன் 6, 8, 12-ஆமிடங்களில் இருந்து, அது திதி சூன்ய ராசி ஆனாலோ (அ) நீச நிலையில் இருந்து பாவ கிரகங்களுடன் கூடியிருந்தாலோ, வாழ்வில் ஒரு முறையேனும் விதியின் விளையாட்டை அனுபவிக்க நேரிடும்.
ப் எந்த லக்னம் ஆனாலும், ராசியிலோ (அ) அம்சத்திலோ, சந்திரனை சுக்கிரன் பார்க்கப் பிறந்தவர்கள் யோகவான்கள். இதிலும், சந்திரன் உச்சம் எனில் மிகச் சிறந்த யோகம்.
ப் அஷ்டமாதிபதி ஆட்சிபெற்று, இரண்டாமிடத்தைப் பார்த்தால் பொருளாதாரத் தடை, குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி யின்மை போன்றவை உண்டு. அஷ்டமாதிபதி இரண்டாமிடத்தில் இருப்பினும் மேற்கண்ட பலன்களே.
செல்: 63824 12545.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/marriage-2025-12-12-17-28-49.jpg)