மானுட தத்துவத்தின் ஆணிவேரான மரபணுவை, தன்வசம் வைத்துள்ள ஆதிதேவன், மாய உலகின் மன்னன், ராகுவின் மாயாஜாலங்கள் எண்ணில் அடங்காதவை. அதன் சாராம்சமும், சதுராட்டமும், ஜாதகங்களை ஆய்வுசெய்யும் எங்களையே திகைப்பின் உச்சத்திற்கு ஒரு கணம் அழைத்துச்சென்று அனுபவத்தை காணவைத்து தரை இறக்குகின்றது.
அதன்வழியில் ஒரு ஜாதக ஆய்வோடு உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகின்றேன்.
மேன்மையான மேஷ லக்னத்திலும், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரத்திலும், ஜனித்த ஜாதகம்.
லக்னாதிபதி 2-ல்
அவரே 8-க்கு அதிபதி இதன்விளைவு ஆரம்பக் கல்வியில் அதிஅற்புத மான தன்மையில் பயணிக்க நேர்ந்தது.
புதனின் நீசம் உயர் கல்வியை தன்வசம் ஈர்த்து நீசத்தின் தன் மையை புகட்டி ஒரு சிறு மாறாட்டத்தை அளித்தது.
அதன்படி தொடர்ந்த முதல் திசையான சுக்கிரன் 1985 முதல் 1990 வரை.
இரண்டாம் திசை யான சூரியன் 1990 முதல் 1996 வரை.
மூன்றாம் திசையான சந்திரன் 1996 முதல் 2006 வரை.
நான்காம் திசையான செவ்வாய் 2006 முதல் 2013 வரை.
நம் கதையின் நாயகன் ராகு இந்த வாழ்க்கையின் பயணத்தை கையில் எடுத்த நாள் 2013. இதன்பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளை, ராகு தசா புக்திகளின் ஜாலங் களை காணலாம்.
31-7-2013 இந்த ஜாதகரின் பயணத்தில் கைகோர்த்த ராகு 14-11-2013 அன்று சூரியன் சனி, ராகு என்கின்ற கூட்டு துலாத்தில் நிகழும் தருணத்தில், சனி அஸ்தங்கமாகும் சூழலில், இவரின் மூத்த சகோதரத்தை இவரிடம் இருந்து நிரந்தரமாக பிரித்துவிட்டது.
அதாவது- இறப்பின்வசம் இட்டுச் சென்றுவிட்டது.
இதுநாள் வரை மதுவின் வாடைகூட அறியாத இந்த ஜாதகர் மதுவின்வசம் முழுக்க முழுக்க ஆட்கொள்ளப்பட்டார்.
இந்த காலகட்டம் ராகுவின் தசை ராகுவின் புக்தி ராகுவின் அந்தரத்தில் நிகழ்ந்தது.
ஜோதிடர்கள் கூறும் ராகுவின் தன்மைகள் அனைத்திலும் இந்த ஜாதகர் பயணித்தார்.
ஆன்லைன் சூதாட்டம், மது, பணம் சம்பந்தப்பட்ட தேவையற்ற பரிவர்த்தனைகள், தவறான நட்பு போன்ற அனைத்தின் வசமும் ஆட்கொள்ளப்பட்டது இந்த ஜாதகம்.
ராகு தசை குரு புக்தி அதாவது, 2016 காலம் தொட்டு 2018 வரை- கழுத்தை நெறிக்கும் கடன் வசம் பயணிக்க நேர்ந்தது.
பொன், பொருள், மரியாதை, கௌரவம் ஆகிய அனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டது இந்த பாசமிகு ராகு.
ராகு தசை புதன் புக்தி ராகுவின் அந்தரத்தில் வெளிநாடு செல்லக்கூடிய பெரும் வாய்ப்பு அமைய அதையும் நம்பி வெளிநாடு சென்றார் 14-12-2022 அன்று.
இந்த பயணம் எண்ணி இரண்டு மாதங்கள்கூட தொடரவில்லை திரும்ப தனது சொந்த ஊருக்கே மிக கடினப்பட்டு வந்தடைந்தார்.வந்தடைந்த பின்பு என் கைவசம் கிடைத்த ஜாதகம் இது.
ஜாதகத்தினை ஆராய்ந்து அவரிடம் கூறியது நிச்சயமாக உங்களுக்கு வெளிநாட்டு வாசம் சிறப்பை அளிக்காது. காரணம் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கக்கூடிய ஒன்பதாம் பாவக அதிபதியும் நீசம், பன்னிரண்டாம் இடத்திலும் ஒரு நீச கிரகம், 12- ஆம் அதிபதியும் நீசம் என்கின்ற இந்த கணிதத்தை உரைத்தபின்பு சற்று ஆசுவாச மடைந்தார்.
இன்னும் என்னதான் செய்யப் போகின்றார் இந்த ராகு என்ற கேள்விக்கு?
தன் கையில் இருக்கும் பெட்டியில் இருக்கும் பொருட்களை உங்களிடம் அளித்துவிட்டார் இன்னும் ஒருசில பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. அவை என்ன என்று காணலாம் என்று கூறினேன்.
என்ன தெரியுமா?
ஒன்பதாம் பாவக அதிபதி குரு நீசம், ஒன்பது உரைக்கும் இடம் பூர்வீகம், இந்தப் பூர்வீகத்தில் அமைந்த வீடு, மண், உங்களுக்கு நிச்சயமாக ஒத்து வராது. வீட்டை விற்று, கடனை அடையுங்கள் என்று கூறினேன்.
இறை சித்தத்தின் பிரகாரம் வீட்டை விற்று கடனை அடைத்து, மீதி நின்ற நிதியில் அற்புதமாக அவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு வீட்டை அமைத்து தற்சமயம் சிறப்பாக வாழும் தன்மையை இந்த ராகு அளித்துள்ளது.
ஒரு தசை நடக்கும்பொழுது கிடைக்கின்ற வழிகள் நமக்கு சாதகமானதா என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. அந்த வழியில் பயணிப்பதா, வேண்டாமா என்கிற தன்மை உங்களின் வாழ்க்கை யையே நிச்சயமாக மாற்றும்.
பூர்வீகமே சாத்தியப்படாத இந்த ஜாதகர் பூர்வீக வீட்டில் வசித்ததும் பன்னிரண்டாம் பாவகம் நீசமாகியும் வெளிநாடு சென்றதும் இந்த ஜாதகத் தின் வசமிருந்த அனைத்தும் பிடுங்கப்பட்டது.
அதேபோன்று மாயையை அளிக்கும் ராகு, சில தேவையற்ற சகவாசங்களை நெருங்கத் தூண்டும். அதிலிருந்து தப்பித்துக் கொண்டால் வாழ்க்கையை மிக அற்புதமாக வடிவமைத்துக் கொடுக்கும் அன்னையும் இந்த ராகுவே.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/raghu-2026-01-28-16-14-21.jpg)