Advertisment

பக்தர்களின்  துயர் தீர்க்கும் நீதிமான் கொளஞ்சியப்பர் !

kolaynchiappar

பயக்குரல் கொடுக்கும் பக்தர்களுக்கு "யாமிருக்க பயமேன்'' என்று கரம் நீட்டி அரவணைத்து துணை நிற்பவன் கந்தவேல் குமரன். அந்த குமரன் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களில் அறுபடை வீடுகள் அழியா புகழ் பெற்றவை. அவற்றையும் தாண்டி இலக்கியங்களும், அடியார்களும், போற்றி வணங்கும் முருகப்பெருமான் அருள் புரியும் சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ஆலயம். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணி முத்தாற்றங்கரையின் தென்பகுதியில் அழகுற அமைந்துள்ளது. கொளஞ்சியப்பர் ஆலயம்.

Advertisment

இக்கோவில் உருவாவதற்கு முன்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. சிறுவர்கள் பகல் நேரங்களில், இந்த வனப்பகுதியில் மாடுகளைக்கொண்டு வந்து மேயவிட்டு மாலை ஆனதும், வீட்டுக்கு ஓட்டி செல்வார்கள். ஒரு நாள்சிறுவர்கள் மேய ஓட்டி வந்த, அந்த பசு கூட்டத்திலிருந்து. ஒரு பசுமட்டும் (சமீபத்தில் கன்றை ஈன்ற அந்த பசு) மந்தையைவிட்டு புதர் மண்டிய பகுதிக்கு தனியே சென்று மேய்ந்துவிட்டு திரும்பியது. முதலில் அதை சாதாரணமாக கருதிய மாடுகளை மேய்க்க வந்த சிறுவர்களில் ஒருவன் அந்தப் பசுவின் செயலை கவனித்து வந்தான். 

Advertisment

அடுத்தடுத்த நாட்களும் அந்தப் பசு மட்டும் தனியே பிரிந்து சென்று ஒரு இடத்தில் மேய்வதை கவனித்தான்.

அந்தப் பசுவின் செயல் அந்த சிறுவனுக்கு வினோதமாக தெரிந்தது. இது குறித்து தன்னுடன் மாடு மேய்க்க வந்த மற்ற சிறுவர்களிடம் கூற அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உண்மையைக்காண முடிவு செய்தார்கள். அதன்படி, ஒரு நாள் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து சென்ற அந்த பசுவை பின் தொடர்ந்து சென்று பசுவின் கண்களில் படாமல் மறைந்து நின்றுகொண்டனர். அந்தப் பசு சற்று தூரம் சென்று ஒரு இடத்தில் ஆடாத அசையாது அப்படியே நின்றது. அங்கே கன்று முட்டாமல் கரப்பார் இல்லாமல் அந்தப்பசு தன் மடியில் இருந்த பாலை காம்புகள் வழியே சொரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு சிறுவர்கள் அதிசயித்தனர். இதுகுறித்து மாலை வீடுகளுக்கு திரும்பிய சிறுவர்கள், தங்கள் கண்ட காட்சியை ஊர் மக்களிடம் கூறினார்கள். 

இதையடுத்து மறுநாள் ஊர் மக்கள் சிலர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களுடன் அந்த பசுவை பின் தொடர்ந்தனர், பசு தானே பால் சொறியும் அந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த

பயக்குரல் கொடுக்கும் பக்தர்களுக்கு "யாமிருக்க பயமேன்'' என்று கரம் நீட்டி அரவணைத்து துணை நிற்பவன் கந்தவேல் குமரன். அந்த குமரன் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களில் அறுபடை வீடுகள் அழியா புகழ் பெற்றவை. அவற்றையும் தாண்டி இலக்கியங்களும், அடியார்களும், போற்றி வணங்கும் முருகப்பெருமான் அருள் புரியும் சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ஆலயம். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணி முத்தாற்றங்கரையின் தென்பகுதியில் அழகுற அமைந்துள்ளது. கொளஞ்சியப்பர் ஆலயம்.

Advertisment

இக்கோவில் உருவாவதற்கு முன்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. சிறுவர்கள் பகல் நேரங்களில், இந்த வனப்பகுதியில் மாடுகளைக்கொண்டு வந்து மேயவிட்டு மாலை ஆனதும், வீட்டுக்கு ஓட்டி செல்வார்கள். ஒரு நாள்சிறுவர்கள் மேய ஓட்டி வந்த, அந்த பசு கூட்டத்திலிருந்து. ஒரு பசுமட்டும் (சமீபத்தில் கன்றை ஈன்ற அந்த பசு) மந்தையைவிட்டு புதர் மண்டிய பகுதிக்கு தனியே சென்று மேய்ந்துவிட்டு திரும்பியது. முதலில் அதை சாதாரணமாக கருதிய மாடுகளை மேய்க்க வந்த சிறுவர்களில் ஒருவன் அந்தப் பசுவின் செயலை கவனித்து வந்தான். 

Advertisment

அடுத்தடுத்த நாட்களும் அந்தப் பசு மட்டும் தனியே பிரிந்து சென்று ஒரு இடத்தில் மேய்வதை கவனித்தான்.

அந்தப் பசுவின் செயல் அந்த சிறுவனுக்கு வினோதமாக தெரிந்தது. இது குறித்து தன்னுடன் மாடு மேய்க்க வந்த மற்ற சிறுவர்களிடம் கூற அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உண்மையைக்காண முடிவு செய்தார்கள். அதன்படி, ஒரு நாள் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து சென்ற அந்த பசுவை பின் தொடர்ந்து சென்று பசுவின் கண்களில் படாமல் மறைந்து நின்றுகொண்டனர். அந்தப் பசு சற்று தூரம் சென்று ஒரு இடத்தில் ஆடாத அசையாது அப்படியே நின்றது. அங்கே கன்று முட்டாமல் கரப்பார் இல்லாமல் அந்தப்பசு தன் மடியில் இருந்த பாலை காம்புகள் வழியே சொரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு சிறுவர்கள் அதிசயித்தனர். இதுகுறித்து மாலை வீடுகளுக்கு திரும்பிய சிறுவர்கள், தங்கள் கண்ட காட்சியை ஊர் மக்களிடம் கூறினார்கள். 

இதையடுத்து மறுநாள் ஊர் மக்கள் சிலர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களுடன் அந்த பசுவை பின் தொடர்ந்தனர், பசு தானே பால் சொறியும் அந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தனர். 

kolaynchiappar1

பசு தானே பாலை சொரிந்ததைக் கண்டுவியந்தனர். பசுசென்ற பிறகு, அந்தப் புதர் பகுதிக்கு அருகில் சென்று பார்த்தபோது, அந்த புதர்களுக்கிடையே கருங்கல் பீடம் ஒன்று பசுவின் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு ஒளி வீசிக்கொண்டிருந்தது. இது வெறும் பீடமல்ல. இது தெய்வம்குடி கொண்ட இடம். அதனால்தான் இந்தக் கல்மீது பசு தானே பாலை சொரிந்துள்ளது என்பதை கண்டறிந்தனர். ஊர் மக்கள் ஒன்றுகூடி அங்கிருந்த செடி கொடிகளை அகற்றி புதர் மறைவிலிருந்த அருவுருவமான சிலையை எடுத்து சுமார் 2 அடி உயரம் கொண்ட பீடத்தில் அமைத்தனர். இந்த இடத்தில் குடி கொண்டிருக்கும் தெய்வம் எந்த தெய்வமாக இருக்கும் என்று எண்ணி குழப்பம் அடைந்தனர். ஆவின் என்றழைக்கப்படும் பசு தன்மடியில் இருந்து பாலை தானே சொரிந்ததால் அபிஷேக பிரியரான முருகப்பெருமானே இங்கு தோன்றியுள்ளார் என்று மகிழ்ந்தனர். 

அப்பனே முருகா என்று வணங்கினர். இந்த செய்தி காட்டுத்தீயாக அக்கம் பக்க கிராமங்களுக்கும் பரவியது. மணவாளநல்லூர், விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து வழிபட ஆரம்பித்தனர். அந்த இடத்தில் சிறு கொட்டகை அமைத்து சிலை வழிபாடு நடத்தி வந்தனர்.

இக்காட்டுப் பகுதியில் நாரத்தை என்று கூறப்படும் கொளஞ்சி மரங்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன. இந்த விக்ரகம் கொளஞ்சி மரத்தின் அடியிலிருந்து வெளிப்பட்டதால்,  இவருக்கு கொளஞ்சியப்பர் என்று மக்களால் பெயர் சூட்டப்பட்டார். முருகப்பெருமானின் மறு உருவமே இங்கு கொளஞ்சியப்பராக கொலோச்சி வருகிறார்.  

மேலும் இத்திருக்கோவில் வளாகத்தில் "ஏறலஞ்சி'' என்று கூறப்படும் ஒருவகை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சுமார் 15 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது. இப்பகுதி யில் சுமார் 40-க்கும் மேற்பட்ட ஏறலஞ்சி மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் காய்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து பின்னர் தாமே மேல் எழுந்து சென்று மரத்திலேயே சேர்ந்து விடுமாம் அப்படிப்பட்ட அதிசய மரங்கள் உள்ளன அப்படி ஏறலஞ்சி மரக்காட்டுக்குள் முருகப்பெருமான் வெளிப்பட்டதால் மரப்பெயரின் திரிவாக கொளஞ்சியப்பர் என்று பெயர் அமைந்திருக்க கூடும் என்கிறார்கள் முருக பக்தர்கள். கொளஞ்சியப்பர் கோவிலில் இடது பக்கம் விநாயகர் சன்னதி, இருவர் சன்னதிக்கு கோவில் பின்புறம் இடும்பன், கடம்பன், சிலைகள் உள்ளன. கொளஞ்சியப்பருக்கு எதிரே இடதுபுறம் முனியப்பர் காண்போரை அச்சம் தரும் வகையில் உருட்டு விழிகளுடன் மக்களுக்கு தரிசனம் தருகிறார். இவர் கொளஞ்சியப்பரின் ஏவல் தெய்வம்.

தன்னை நாடி வருபவர்களின் குறைகள் எதுவாக இருந்தாலும், எந்தவித பேதமும் இன்றி தீர்த்து வைக்கும் பெரும் கருணை கொண்டவர் கொளஞ்சியப்பர். பக்தர்களை கண்ணும் கருத்துமாக காத்து வருகிறார் கொளஞ்சியப்பர். கொளஞ்சியப்பர் தனித்தன்மைமிக்கவர் ஒருவரின் பொருள் களவு போய்விட்டாலோ அல்லது அவர்களது உடைமைகளை மற்றவர்கள் அபகரித்துக்கொண்டாலோ அல்லது அவருக்கு யாராவது தீங்கு செய்தாலோ, பல்வேறு துன்ப செயல்களுக்கு ஆளாக்கப்படுகிறவர்கள் நீதி வேண்டி இங்கு வருகிறார்கள். முன்பெல்லாம் ஊர் சபையில் வழக்கு தொடர்வார்கள். அரசர்கள் காலத்தில் மன்னருக்கு புகாரை விண்ணப்பிக்கவேண்டும். தற்போதைய காலத்தின் செயல்களின் தன்மைக்கு ஏற்ப காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் தங்கள் குறைகளை நீக்கவேண்டி எழுத்து மூலம்வழக்கு தொடுத்து நீதியை பெறுகிறார்கள். அதேபோல், இங்கு நீதிமானாக உள்ள கொளஞ்சியப்பரிடம் நீதி வேண்டி, பிராது எழுதி சீட்டு கட்டும் முறை காலம் காலமாக இருந்து வருகிறதுஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வழக்கில் வந்த சொல் பிராது கொடுத்தல் (புகார் அளித்தல்). 

அதன்படி மணவாளநல்லூரில் கோவில் கொண்டுள்ள கொளஞ்சியப்பரிடம் வேண்டிக்கொண்டு பிராது சீட்டு கட்டும் முறை தொடர்கிறது.

இங்கு பிராது சீட்டுக்கட்டும் நடைமுறைக்கு சில விதிமுறைகளும் உள்ளன. அதன்படி, ஒருவர் எந்த ஊரில் இருந்து கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வருகிறாரோ, அந்த ஊருக்கும் கோவிலுக்கும் உள்ள தூரத்தை கிலோ மீட்டர் கணக்கில் கணக்கீடு செய்து ஒரு கிலோமீட்டருக்கு, இத்தனை பைசா என்ற தொகையை வகுத்து கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு கோவில் நிர்வாகத்தில் ரசீது கொடுப்பார்கள்.

இது எதற்காக தெரியுமா? நீதிமன்றத்தில் பிராது கொடுத்தால் பிரதிவாதிக்கு சம்மன் அனுப்புவார்கள். அதற்கான கட்டணத்தை புகார் கொடுப்பவர் நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும். அந்த அடிப்படையில் கொளஞ்சியப்பராகிய நீதியரசர், தனது ஏவல் தெய்வமான முனியப்பர் மூலமாக, சூலத்தில் கட்டிய சம்மனைக்கொண்டு சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு சென்று உரிய விசாரணை செய்வார். பிராது கொடுத்தவர் உண்மை யிலேயே பாதிக்கப்பட்டுள்ளாரா? அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் யார்? இப்படி, அவர் அளித்த புகாருக்கான தகவல்களை சேகரித்துக் கொண்டுவந்து கொளஞ்சியப்பரிடம் தெரிவிப்பார். அதை ஆய்ந்து ஆராய்ந்து உரியவருக்கு நீதியும் நிவாரணமும் வழங்குகிறார் கொளஞ்சியப்பர். பிராது கட்டுபவர்களின் குறைபாடுகளை, ஒரு மணி நேரத்திலோ 3 நாளிலோ மூன்று மாதத்திலோ கொளஞ்சியப்பர் நிச்சயம் நிறைவேற்றித் தருகிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. மேலும், பிராது கட்டியவர்களின் பிரச்சினைகள் தீர்ந்தவுடன் மீண்டும் அந்த பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தன்னுடைய பிரச்சினை தீர்ந்ததை எழுத்துமூலம் குறிப்பிட்டு எழுதி முனியப்பர் சூலத்தில் கட்டுவதன்மூலம் பிராதை வாபஸ் வாங்கி கொள்கிறார் என்று அர்த்தம்.

இப்படி பிராது கட்டி தங்கள் பிரச்சினைகளை, இன்னல்களை தீர்த்து வைத்தார் கொளஞ்சியப்பர் என்பதற்கு அனுபவத்தில் கண்ட லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பக்தர்களே உதாரணமாக திகழ்கிறார்கள். 

கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் இவ்வால யத்திற்கு வந்து தங்களின் நேர்த்திக்கடனை செய்துவிட்டு செல்கிறார்கள்.

உதாரணமாக முருகனுக்கு உகந்தபங்குனி உத்திர திருவிழாவின்போது பல லட்சக் கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகளை தோளில் சுமந்தும் பக்தி பரவசத்துடன் ஆடி பாடியபடி கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதை மெய்சிலிர்ப்போடு பார்க்க முடிகிறது.

வைகாசி விசாக நட்சத்திரத்தன்று 10 நாட்கள் வசந்த உற்சவம். இவ்வாலயத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாதந்தோறும் கார்த்திகை நாள் அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி கிருத்திகையின் போதும் பக்தர்கள் காவடி எடுத்து பிரார்த்தனை செய்கிறார்கள். திருவிழாக்களின் போது நேர்த்திக்கடனாக எல்லாப் பொருட்களும் தங்களுக்கு கிடைக்கச் செய்தவர் கொளஞ்சியப்பர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் நெல், கரும்பு, கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா, உளுந்து, பயறு, கொள்ளு, நவ தானியங்கள், மஞ்சள், முந்திரி மற்றும் பழவகைகள், பசுமாடுகள், காளைகள், ஆடுகள் கோழிகள் என தங்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அனைத்தையும் காணிக்கை யாக செலுத்தி வழிபட்டு வருகிறார்கள்.

கொளஞ்சியப்பர் குறித்து இங்குள்ள அர்ச்சகர்கள் நம்மிடம், தினசரி  கொளஞ்சியப் பருக்கு அபிஷேகம் உட்பட எல்லா பணி களையும் முடித்து, வரும் பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கிய பிறகு பொறுமையாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். 

அதே நேரத்தில் எங்கள் சொந்த பணிகள். அது குறித்து பார்க்கவேண்டிய நபர்கள் இப்படிப்பட்ட பலவித சிந்தனைகளோடு கொளஞ்சியப்ருக்கான பணிகளை செய்து கொண்டிருந்தால், அன்றைய தினம் எங்கள் சொந்த பணிகüல் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் சொந்த விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் முழு மனதோடு கொளஞ்சியப்பருக்கான பணிகளை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றால், அங்கே எங்கள் சொந்த பணிகள் அனைத்தும் சுபமாக முடியும். இதன்மூலம் கொளஞ்சியப்பர்மீது முழு நம்பிக்கையோடு வருபவர்களுக்கு அவரது அருள் நிச்சயம் உண்டு என்கிறார்கள் அர்ச்சகர்கள்.

ஆலயத்தின் ஊழியர் ஒருவர் ஒருசம்பவத்தை கூறினார். தந்தை மகன் உறவு உன்னதமானது. ஆனால் அந்த உறவு தற்காலத்தில் தறிகெட்டு போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு தந்தை கொளஞ்சியப்பருக்கு முன்வந்து கண்ணீர் சிந்திவேண்டி நின்றார். காரணம் கேட்டபோது தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த அவரது மகன் அவரை கைநீட்டி அடித்து துன்புறுத்தி யுள்ளான். அப்படிப்பட்ட தன் மகனுக்கு நீதான் சரியான பாடத்தை புகட்டவேண்டும் என்று பிராது எழுதி கட்டிவிட்டு வீடு சென்றார். மறுநாள் அவரது மகனின் எந்தக் கை தன் தந்தையை அடித்ததோ அந்தக்கை வாதத்தால் முடங்கிப் போய்விட்டது, தவறை உணர்ந்த அவரது மகன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டார் இரவு பகல் பாராது கண் விழித்து காப்பாற்றிய தன்மகன் செய்த தவறை மன்னித்து விடுமாறு மகனை அழைத்து வந்து கொளஞ்சியப்பர் முன்பு மன்னிப்பு கேட்க வைத்தார். சில மாதங்களில் அவரது மகனின் கைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இப்படிப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் ஏராளம் என்கிறார் கள் கோவில் ஊழியர்கள்.

இவ்வாலயத்தில் வேப்பெண்ணையை மருந்தாக தருகிறார்கள். ஆம்... வேப்பெண் ணையை அர்ச்சகரிடம் வாங்கிக்கொடுத்தால் அவர் அதை கொளஞ்சியப்பர் காலடிமுன்பு வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார். அது மருந்தாக மாறிவிடும். அந்த எண்ணெ யில் விபூதியை சிறிதளவு கலந்து அதை தூய்மையாக பாதுகாத்து வைத்து, தேய்த்துக் கொண்டு வந்தால் தீராத நோய்கள் தீரும். கொளஞ்சியப்பர் அருள் கலந்த இந்த எண்ணெயை அருமருந்தாக வாங்கி செல்கிறார்கள் பக்தர்கள். இந்த எண்ணெய் தமிழகத்திற்குள் மட்டுமல்ல கடல் கடந்தும் கொண்டு செல்லப்படுகிறது.

கொளஞ்சியப்பரின் ஆலய திருப்பணியில் பொருளுதவி செய்ய விரும்பும் பக்தர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்: 97881 85779.

om011025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe