"நான்'' என்னும் அங்கீகாரம் ஏழாம் அறிவுக்கான பயணம்.

"நான் என்னும் அகங்காரம்' என்று கூறவில்லை. "நான் என்னும் அங்கீகாரம்' என்று குறிப்பிட்டுள்ளோம்.

Advertisment

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பில் சிந்தனை சக்தி விலங்கின் ஐந்தாம் அறிவிலிருந்து ஆறாம் அறிவுக்கு கடந்து வந்ததைப் பற்றி விளக்கியுள்ளோம்.

Advertisment

பிரபஞ்சம் அளித்த சிந்தனை சக்தியை ஆறாமறிவு என்றுதான் நாம் குறிப்பிடுகிறோம். அந்த அளவுக்கு தான் நாம் சிந்தனை சக்தியை புரிந்து கொண்டுள்ளோம்.

இன்னும் ஏழாமறிவு எட்டாமறிவு என்று சிந்தனை சக்தி வளர்ந்து கொண்டே செல்லும். 

Advertisment

அசுர சக்தியிலிருந்து விடுபட விடுபட நமது சிந்தனை சக்தியும் மென்மேலும் வளர ஆரம்பிக்கும்.

ஒருபுறம் கடல்நீரை குடிநீராக மாற்றும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந் துள்ளது. ஆனால் மனிதன் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது என்ற அசுர சக்தியின் ஆர்ப்பாட்டத்தை நாம் அப்படியே நம்புகிறோம்.

அந்த அளவிற்கு அறியாமையில் தான் இன்னும் மனித இனம் வாழ்ந்து வருகிறது.

மனிதனுக்கு பிரபஞ்சம் சிந்தனை சக்தியை அளித்ததின் நோக்கம் மனிதன் சுயநலமாக வாழ்வதற்கு அல்ல. மனிதன் சுயநலமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை.

ஆம் பிரபஞ்சம் நமக்கு தேவையான அனைத்தையும் வாரி வழங்கியுள்ளது. மனிதனுக்கு தேவையானவற்றை அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாக இந்த பூமியை உருவாக்கியுள்ளது.

அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் நமது சிந்தனை சக்தி வளரவில்லை. சிந்தனை சக்தி வளரவில்லை என்று குறிப்பிடுவது தவறு.

அசுர சக்தியை ஆக்கிரமித்துள்ள நிலையிலிருந்து விடுபட முயற்சி செய்யவில்லை என்று தான் கூறவேண்டும்.

ஆறாம் அறிவை கடந்த ரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும் பிரபஞ்சத்தோடு ஐக்கிய மாகி ஏழாம் அறிவுக்கான பாதையை வகுத்துள் ளார்கள் என்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

மனிதன் சுயநலத்திலிருந்து விடுபட்டு இறைவன் அளித்த அபரிமிதமான அமுதசுரபியை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பதற்கு அசுர சக்தியால் ஆக்கிரமிக்கப்பட் டுள்ள மூன்று நிலைகளை புரிந்துகொண்டு அதை கடந்து வரவேண்டும்.

அந்த நிலையிலிருந்து பார்க்கும்பொழுது மனிதனுக்கு தேவையான அனைத்தும் இந்த பூமியில் அபரிமிதமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அந்த நிலையில் இந்த பூலோகம் மனிதனுக்கு சொர்க்கமாக மாறிவிடும்.

அந்த மூன்று நிலைகள் என்னென்ன...

1 நான் என்னும் அங்கீகாரம்.

2. பேராசையை தூண்டும் பணம்.

3. காம உணர்வு.

இறைவன் மனிதனுக்கு வரமாக அளித்த சிந்தனை சக்தி மூலமாகவே அசுர சக்தி இறை சக்தியை அழித்துவிட ஓயாமல் முயற்சி செய்கிறது. ஆனால் இறை சக்தி அமைதியாக பயணிக்கிறது. பிரபஞ்சத்திற்கு காலம் ஒரு பொருட்டல்ல. அமைதியாகவும் சீராகவும் அதன் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிரபஞ்சத்தோடு முழுமையாக இணைந்த சந்தர்ப்பங்களில் திடீர் திடீரென என்ன ஓட்டங்களில் உதித்ததுதான்.

அத்தகைய கண்டுபிடிப்புகளையும் அசுர சக்தி ஆக்கிரமிக்க முற்படுகிறது. அன்னப்பறவை பாலையும் நீரையும் தனித்தனியாக பிரிப்பதுபோல அறிவியல் கண்டுபிடிப்பு களில் இறை சக்தியையும், அசுர சக்தியையும் தனித்தனியாக பிரிக்கும் அளவுக்கு சிந்தனை ஓட்டம் மாற்றமடையும் பொழுது ஏழாம் அறிவு துவங்கும். ஆனந்தமான எண்ணங்களில் திளைத்திருக்க முடியும். அதற்கான பயணத்தை ஆரம்பிப்போம். முதல் காரணியான நான் என்னும் அங்கீகாரத்தை பற்றி பார்ப்போம்.

நான் என்னும் அங்கீகாரம் பற்றிய புரிதல் சிந்தனை சக்தியின் ஏழாமறிவுக்கான பயணத்திற்கு நம்மை கொண்டு செல்லும். நான் என்னும் அங்கீகாரம் மிகப்பெரிய சூத்திரம். இதை உணரத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. என்னால் முடிந்த அளவு உங்களுக்கு புரியும் வகையில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன். 

நான் என்னும் உணர்வு இறைவனோடு ஐக்கியமாக, தடையாக அசுர சக்தியால் மாற்றப்பட்டது தான் நான் என்னும் அங்கீகாரம்.  புகழ் என்பதும் அவமானம் என்பதும் சக மனிதர்களால் கிடைக்கிறது என்ற அறியாமையில் ஒரு மாயையில் உழன்று கொண்டிருக்கிறோம். 

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் கணியன் பூங்குன்றனார்.

ஒரு சிறிய உதாரணத்தின்மூலம் அவமானம் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் 5 ல 5 எவ்வளவு என்ற கேள்விக்கு 15 என்று சொன்னால் மற்ற மாணவர்கள் எல்லாம் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.

பதில் சொன்ன மாணவன் அவமானத்தால் கூனிக் குறுகிப்போவான் இதை மற்றொரு கோணத்தில் பார்ப்போம். சிரித்தவர்கள் அனைவரும் அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். எனக்கு இதற்கான பதில் 25 என்பது சரியாக தெரியும். இது கூட தெரியாமல் முட்டாளாக இருக்கிறான். நான் அவனைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்ற அகங்காரம் தான் காரணம்.

இதுபோல தான் அஜாக்கிரதையால் தவறி கீழே விழுந்த ஒரு மாணவனை பார்த்து மற்றவர்கள் சிரிப்பது. அவன் முட்டாள் தனமாக விழுந்து விட்டான் நான் புத்திசாலி.

இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் நமது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களை நாம் அவமானமாக கருதி இருப்போம். எல்லா சந்தர்ப்பங்களிலும் விழிப்புணர்வுடன் ஜாக்கிரதையாக இருப்பது என்பது இயலாத காரியம். நான் என்பது அங்கீகாரத்தோடும் அவமானத்தோடும் எவ்வாறு இணைந் துள்ளது என புரிந்துகொள்ளும் பொழுது நமது எண்ணம் ஒரு மேம்பட்ட நிலையை அடைவதை உணரமுடியும். 

ஒரு குழந்தை பிறந்தவுடன் செவிலியர் அந்தக் குழந்தையின் கால்களை தலைகீழாக பிடித்த தொங்க விடுவார். உடலில் இருந்து இரத்த ஓட்டம் மூளைக்கு சென்ற பின்னர் அந்தக் குழந்தை "வீல்' என்று கத்த ஆரம்பிக்கும். ரத்த ஓட்டம் மூளையை அடைந்த பின்னர் தான் உடல்வலி தெரிய ஆரம்பிக்கிறது. மூளையின் இயக்கம் அந்த நொடியில் இருந்து உருவாகிறது. பேச ஆரம்பித்த உடன்தான் பெற்றோர் மூலமாக நாம் கற்றுக்கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு மூளைக்கு இரத்த ஓட்டம் சென்ற நொடியில் இருந்து உடல்வழியாக மூளை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. உணர்வுகள்மூலம் குழந்தை கற்றவற்றை மூளையில் பதிய வைக்க ஆரம்பிக்கிறது. குழந்தை தாயார் தன்னைவிட்டு விலகும் பொழுது அழுகிறது. தாயைத் தவிர வேறு யாராவது தன்னைத் தூக்கும்பொழுது அந்த உணர்வு உடலுக்கு இம்சையாக தோன்றுகிறது அதனால்  அழுகிறது. தாயுடன் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் அந்த குழந்தையை தூக்கும்பொழுது குழந்தை அந்த உணர்வை பழகிக்கொள்கிறது. அதன் பின்னர் அழுவதில்லை. புதிதாக யாராவது தூக்கும்பொழுது அந்த உணர்வு வித்தியாசப்படும் பொழுது அழுகிறது. திரும்பத் திரும்ப அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு இருப்பவர்களுடன் அமைதியாக இருக்கிறது. அவர்களைத் தவிர வேறு யாராவது தூக்கும் பொழுது அழ ஆரம்பிக்கிறது.

அதாவது உடலின் உணர்வுகள் மூலமாக இன்பம், மற்றும் துன்பத்தை (டஆஒச ஆசஉ டகஊஆநமதஊ) குழந்தை வெளிப்படுத்துவதை புரிந்துகொள்ள முடியும்.

இனிமையான இசை குழந்தைக்கு மகிழ்ச்சியையும் கடுமையான சப்தங்கள் பயத்தையும் உருவாக்குகிறது. 

பசி எடுக்கும்பொழுது அழுகிறது. எந்த வகையிலாவது உடலில்வலி அல்லது பயம் ஏற்பட்டால் அழுகிறது. உடல் சுகமாக உணரப்பட்டால் சிரிக்கிறது அல்லது அமைதியாக இருக்கிறது.

குழந்தை பேச துவங்குவதற்கு குறைந்தபட்சம் 18 மாதம் ஆகிறது அதற்கு முன்னரே உடல்மொழி வாயிலாக கற்றுக்கொள்வதை நாம் முழுமையாக சிந்தித்துப் பார்த்ததில்லைபிறந்த ஆறு மாதத்திலேயே பெயர் வைக்கப்பட்டு அந்தப் பெயர் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதை மூளை பதிய வைத்துக் கொள்கிறது. குழந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் பொழுது கண்களின் மூலமாக தனது உணர்வை வெளிப்படுத்துகிறது.

ஒப்பீடு அல்லது ஒப்பு நோக்குதல். (ஈஞஙடஆதஒநஞச) மற்றும் வெற்றி- தோல்வி "நான்' என்பது விஸ்வரூபம் அடைவது குழந்தைப் பருவத்திலிருந்து பிறரோடு ஒப்பீடு செய்வதால் தான். நாம் கற்றுக் கொள்ளும் அனைத்தும் ஏதாவது ஒன்றுடன் ஒப்பீடு செய்வதைக் கொண்டு தான் நடக்கிறது என்பதும் நமக்கு அவ்வளவு எளிதாக புரிவதில்லை. குழந்தை ஒப்பீடு செய்யப்படுவது முதலில் உடன்பிறந்த அண்ணன் அல்லது அக்காவுடன் தான்.  வெற்றி தோல்வி என்ற உணர்வு துவங்குவதும் அங்கிருந்துதான்.

தனது பொம்மையை அல்லது தனது உடமையை சக குழந்தை எடுத்துக் கொள்வதை அனுமதிப்பதில்லை. உடனே பிடுங்கி வைத்துக்கொள்வதை சர்வ சாதாரணமாக நாம் பார்க்க முடிகிறது.

"நான்', "எனது' என்ற உணர்வு வேரூன்ற ஆரம்பிக்கிறது. 

ஒவ்வொரு குழந்தையும் பிறரோடு ஒப்பீடு செய்வது இயல்பான விஷயம். பெற்றோர்கள் இரண்டு குழந்தைகளில் ஒன்றை ஏதேனும் ஒருசில விஷயங்களில் சம்பந்தமே இல்லாமல் அவர்கள் புரிந்த அளவுக்கு ஒருவரை திறமையானவர் மற்றொருவரை திறமையற்றவர் என்று தவறாக உறுதிப்படுத்தினாலும் அது தான் அந்த குழந்தையின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

படிப்படியாக குழந்தையை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி குழந்தையின் மனதில் தீவிர நம்பிக்கையாக மாற்றி விடுகிறார்கள். திறமையான குழந்தை என்று சான்று அளிக்கப்பட்ட குழந்தைக்கு தன்னம்பிக்கை வலுப்பெறுகிறது.

திறமையற்ற குழந்தை என்று சான்றளிக்கப்பட்ட குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மை வலுப்பெறுகிறது. ஆனால் சிறுவயதில் தன்னம்பிக்கை வலுப்பெற்ற குழந்தைக்கும் தாழ்வு மனப்பான்மை வலுப்பெற்ற குழந்தைக்கும் இயல்பு வாழ்க்கையில் வெற்றி- தோல்வி இரண்டையும் சந்திக்கும் சூழ்நிலை வந்து கொண்டே தான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் வெற்றி அடைவதும் தோல்வியடைவதும் வாழ்நாள் முழுவதும் மாறி மாறி வருகிறதுதன்னம்பிக்கை வலுப்பெற்ற குழந்தை ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் திறமை என்ற மனப்பான்மை அதிகரிக்கிறது வெற்றி பெறும் பொழுது தற்பெருமையும், அகங்காரமும் வளர்கிறது தோல்வியடையும்பொழுது பொறாமையும் பழிவாங்கும் உணர்வும் வலுப்பெறுகிறது.

தாழ்வு மனப்பான்மை வலுப்பெற்ற குழந்தைக்கு சகிப்புத்தன்மையும் பணிவும் அதிகரிக்கிறது. அதனுடன் பிடிவாதம் என்னும் குணம் விவரிக்க இயலாத அளவிற்கு வலுப் பெறுகிறது. அது தீவிர நம்பிக்கையாக மாறுகிறது.

80/20 பிரபஞ்ச உண்மை (மசஒயஊதநஆக பதமபஐ) என்ற ஒரு கூற்று உண்டு.

ஒருவர் நல்லவர் என்றால் 80 சதவிகிதம் நல்ல குணங்களும் 20 சதவிகிதம் தவறான குணங்களும் அவரிடம் இருக்கும்.

ஒருவர் தவறானவர் என்றால் 80 சதவிகிதம் தவறான குணங்களும் 20 சதவிகிதம் தவறான குணங்களும் அவரிடம் இருக்கும். இது போலவே தன்னம்பிக்கை உள்ளவர்களிடம் 20 சதவிகிதம் தாழ்வு மனப்பான்மை இருக்கும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் 20 சதவிகிதம் தன்னம்பிக்கை இருக்கும்தன்னம்பிக்கை உள்ளவர் நல்லவரா? அல்லது தாழ்வு மனப்பான்மை உள்ளவர் நல்லவரா?

மாற்றி சிந்திக்க துவங்குவோம்!

தொடர்புக்கு: 95666 55804