ம்ப ராயாணத்தில நீங்கள் மிகவும் ரசிக்கிற ஒரு கதாபாத்திரம் என்ன? இன்றைய சூழல்ல மக்களுக்கு இந்த கதாபாத்திரத்தோட குணம் இருந்தா ஓரளவு எல்லாம் சமாளிச்சுக்கலாம். ஒரு அறம் சார்ந்த வாழ்க்கையை வாழலாம். அப்படின்னா நீங்கள் எந்த கதாபாத்திரத்தை சொல்வீங்க? 

Advertisment

சகோதர பாசம்னு சொன்னா லட்சுமணன் பற்றி சொல்லணும். அவனை காட்டுக்கு போக சொல்லல... போறான். அண்ணனுக்கு நீ வந்து பணிவிடை செய்யணும்கிற விஷயத்தில் அவனே எடுத்து செய்றான். 

Advertisment

அவன் அம்மாவிடம் போய் விடைபெறுகின்றபொழுது  அவன் அம்மா சொல்றா, அப்பா நீ போய்ட்டு வா, ஒருவேளை காட்டுல இராமனுக்கு என்னமாவது ஆச்சுன்னா நீ இறந்த செய்திதான் எனக்கு முதலில் வரணுமே தவிர, அவன் இறந்தான் என்கிற செய்தி வரக்கூடாது. அப்படின்னு அம்மாவே சொல்லி அனுப்புறா.  அது மட்டுமல்ல; போர்க்களத்தில் இரண்டு முறை  இறக்கிறான். 

அண்ணி சொல்லும் கடுமையான சொற்களை யும்  பொறுத்துக் கொள்கிறான். அப்படியான ஒரு பாத்திரம். சில இடங்களில் இராமன் தப்பு செய்யும்போதுகூட கண்டுபிடிக்கிறான். 

Advertisment

கண்டுபிடித்து கண்டிக்கிறான். "மாய மான்னு உலகத்தில் ஒன்று இருக்குமா அண்ணே, இதெல்லாம் போய் அவங்க சொல்றாங்கன்னு நீ கேட்டுக்கொண்டு... விடுன்னேன்'' 

அப்படிங்கிறான்.  "அப்படியெல் லாம் சொல்லாத. நீ பாக்கலைங்றதுக்காக இல்லையென்று எதுக்கு சொல்ற.'' "இல்லாததென இல்லை இலைமறா' நீ பார்க்கவில்லை என்பதற்காக இல்லையென்பதா. 

அப்டினு தத்துவமா சொல்றார். 

வாலியை கொல்ல போகும் போதும் தடுக்கிறான். அண்ணனை கொல்வதற்கு தம்பி ஆள் கூட்டிட்டு போறார். நீயும்கூட போறீய அப்டின்னு சொல்கிறான். 

உடனே பதிலுக்கு இராமனும் எதையோ சொல்லிட்டு கடைசில வாலி கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில்சொல்ல முடியாம லட்சு மணன்தான் சொல்கிறான். இறக்கிறான்... இருக்கிறான்... 14 வருஷம் முழிக்கிறான்... சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் இந்திரஜித்தன் அப்பாவுக்காக உயிர் துறந்தவன் அவன். வேறு யாரும் இல்ல. மற்றவனெல்லாம் அரசு துறந்தான்னு சொல்லலாம். அவன் ஒருத்தன்தான் அப்பாட்ட சொல்லிட்டு போறான். 

நான் திரும்பி வரமாட்டேன்பா. ஆனா நீ சீதையைவிட்டு நீ நல்லார்க்கணும். ஒரு மகன் அப்பாவுக்கு சொல்லும் வார்த்தை இது. கம்பராமாயணம் என்று வெறும் பிரம் மாண்டங்களை வெச்சல்லாம் சொல்லக்கூடாது.  சின்னசின்ன உணர்வுகள்... நான் அன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்பி போறேன், ஒரு சேனலில் வால்மீகி இராமாயணம் ஓடிட்டு இருக்கு. 

அதுல சீதா கல்யாணம். இராமன் சீதைக்கு மாலை போடுறார். சீதை இராமருக்கு மாலை போடனும். இராமர் உயரமா கிரீடம் வைத்திருக்கிறார். சீதை குள்ளமா இருக்காங்க. அது வழக்கமா அப்படித்தான். இப்ப இராமர் ஒரு மாலை போடுறார். சரியா கழுத்தில விழுகுது. சீதை ஏறிட்டு  பாக்கிறாங்க போடமுடியுமானு. அவரு கொஞ்சம் வேணும்னே பேசாமல் இருக்காரு.  குனிந்து கொடுக்காமல் நிக்கிறார். இப்ப இந்தக் காட்சில வசனம் இல்ல. வேற ஒன்றும் இல்ல. சட்டுன்னு  இலக்குவனன்  வந்து  குனிந்து அண்ணன் காலை தொட்டுக் கும்புடுறான். உடனே அவன தூக்குவதற்காக குனிகிறார் இராமர். உடனே சீதா மாலை போட்றாங்க.  இப்ப இந்தக் காட்சியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அதாவது இன்னும் அந்தப் பொண்ணு வீட்டுக்குள்ள வரல. அந்தப் பொண்ணு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, அது கஷ்டம் இல்லதான் இருந்தாலும் அந்த ஒரு உணர்வோடு அந்த கேரக்டர் இருக்குது. அதேமாதிரி இந்த நகையெல்லாம் அண்ணியுடைய நகையானு பாருன்னு கேக்குறாங்க. அவன் கழுத்தில் இருக்கிற அணி, கையில போடுர அணி எல்லாத்தையும் எடுத்து எடுத்து வைச்சுட்டு இதெல்லாம் நான் பார்த்ததே இல்லையே. 

அப்டின்னு சொல்றவன், கால்ல போடக்கூடிய மெட் டியை பார்த்ததுமே என் அண்ணியுடை யது தான் என்கிறான். ஏன்னா அவன் தினமும் வணங்குற இடம் கால்தான். முகத்தைக்கூட அவன் நிமிர்ந்து பார்த்தது இல்ல. நாம சொல்லலாம். கொஞ்சம் ஓவரா தெரியுது அப்படின்னு... ஆனா இதுதான் இயல்பு. 

அப்படி உள்ளவர்கள் அப்படி இருக்காங்க. நம்ம இப்படில்லாம் ஆள் இல்லாததுனால  அவர்கள் இல்லைன்னு நாம சொல்லிறக்கூடாது. இதெல்லாம் ரொம்ப ஈர்த்த ஒரு பாத்திரம்னு நாம சொல்லலாம்.  

இன்றைய வாழ்க்கை என்பது, முக்கியமா டிஜிட்டல் உலகத்துல புறவாழ்க்கை என்கிறதுதான் ரொம்ப அதிகமா இருக்கு. மத்தவங்க நம்மள எப்படி  கவனிக்கிறாங்கனு யோசிச்சு அவங்களுடைய அக உணர்வையும் அக வாழ்க்கையையும் சில பேர் விட்டுடுராங்களே?

 அதுவேற. அந்த வாழ்க்கை முறை  என்கிறதே ஒரு ஆச்சரியமான ஒன்னு. எப்ப ஒருத்தருடைய புகழ சொல்லணும்னா, இப்ப என்னை புகழணும்னா இன்னார் பேரைச் சொல்லி சொல்லலாம். ஆனா காதல்ங்றப்ப என் பேரை சொல்லக்கூடாது. இன்னார் மகன் இன்னார், இன்னார் மகன் இன்னார் என்று சொல்லவே கூடாது.  

இது மாதிரியான ஒரு நாகரிகம் உலகத்தில் எங்கேயுமே கிடையாது.  அந்த அக உணர்வு என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும். அந்த ஊருக்குக்கூட தெரியாது. தெரிந்துவிட்டா புறம். இப்ப உங்களுக்கு பத்து பாட்டுல  எது எது புறம்பாட்டு அப்படின்னு பாத்தீங்கன்னா தலைவன் தலைவி வராத குறிஞ்சி பாட்டுன்னா அது வந்து அகம் சார்ந்ததா இருக்கும். பட்டினப் பாலைன்னா புறம் சார்ந்ததா இருக்கும். நெடுநெல்வாடி மட்டும் அகமும் புறமும் சேர்ந்ததாக சொல்லுவாங்க. என்ன காரணம்னா அது அகம்தான். 

ஒரு இடத்துல மட்டும் வேப்பம் பூ மாலை அணிந் ததுன்னு வந்துரும். அதனால அதை புறம்னு சொல்வாங்க..

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் என்பது தொல்காப்பியம். மூவாயிரம் வருடத்திற்கு முன்பாக, பரிசு வாங்குன ஒருத்தன் பரிசு வாங்கப் போற ஒருத்தனைப் பார்த்து எப்பா இந்த வழியா போய், "இந்த மலையைத் தாண்டி, இந்த ஆற தாண்டி அந்த ஊருக்கு போனா அங்க ஒருத்தன் இருப்பான். 

அவனிடம் நீ கேட்டதை கொடுப்பான். நீ வாங்கிட்டு வா' எனச் சொல்லி, தான் பெற்ற பெருவளத்தை மற்றவன் பெறச்செய்வதுக்கு பெயர்தான் வாழ்க்கை. அதுதான் இன்னைக்கு என்ன செய்றோம்  நல்ல சாப்பாடு சாப்பிட்டால்  போன் பண்ணி சொல்றோம். நல்ல புத்தகம் படிச்சா உடனே பகிர்ந்துக்கிறோம். இதுதான் நம்முடைய மரபா இருந்தது. 

அது இப்போ கொஞ்சம் பெரிய அளவுல நடந்துட்டுருக்கு. வெவ்வேறுவிதமா சொல்றாங்க. சிலதை சொல்லாம விட்டாத்தான் நல்லா இருக்கும். இப்ப நீங்க கண்ணதாசனுடைய பாட்டுல அவர் என்ன நடந்ததுன்னு சொல்லாம விடுறப்பத்தான் நமக்கு நல்லா இருக்குமே தவிர அக்குவேரா ஆணி வேரா பிக்கக்கூடாது. "இதய கமலம்'னு ஒரு படத்துல கதாநாயகி... கதாநாயகனுடைய முதலிரவு காட்சில, "மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே'ன்னு ஒரு பாட்டு இருக்கு. இப்ப அந்த இரவு என்ன நடந்ததுன்னு தனக்குத்தானே சொல்லிக்கிறா. சொல்றபோது நமக்கு புரியவைக்கிறா, சேர்ந்து மகிழ்ந்து விளையாடி தலைசீவி முடித்தேன். நீராடி கன்னத்தை பார்த்தேன். 

முன்னாடி பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி' அவ்வளவுதான். என்ன நடந்ததுன்னு இதுக்குமேல சொல்லக்கூடாது. போனேன் அங்க நடந்தது. கண்ணாடி பாக்கிறேன். கன்னத்தில காயம் இருக்கு. இதுக்கு நாம ஒரு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அத சொன்னோம்னு வச்சுக்கோங்க  அது  நல்ல இருக்காது. இதையே அப்பட்டமா நாம வெளிய சொல்லிட்டம்னா, அது நல்லாவும் இருக்காது. ரசிக்க முடியாம போயிரும்.

இப்பவர சில சினிமா பாடல்கள் அப்பட்டமா, வெளிப்படையா சொல்றமாதிரிதான் ஐயா வருது? 

அதுதான். அதுலயும் வியாபாரம் புகுந்துடுச்சி. அவங்களுக்கு புரியாதுங்க. அந்த வரிய மாத்திடுங்கன்னு சொல்றாங்க. மாத்திடுறாங்க. அதனாலதான் அத ஒன்னும் செய்யமுடியல. ஆனா பாரதிதாசன் ஒரு தடவை பாட்டுல ஒரு வரி ஏழுதியிருந்தபோது ஒலிப்பதிவாளர் வந்து ஐயா இந்த வரியை மாத்த முடியுமா லகரம் பதிய மாட்டேங்குது அப்டின்னு சொன்னவுடனே நாமளாயிருந்தா கொடுங்க மாத்திதாரேன்னுதான சொல்லுவோம். அவரு "அந்த மிஷின மாத்துன்னு சொன்னாராம். என் மொழிய பதியல்லன்னா அது என்ன மிஷினு. அத போயி மாத்து, நா மாத்தித் தரமுடியாது'ன்னு சொல்லிட்டாராம். அது அவருடைய வித்யாகர்வம்னு சொல்வோம். படிப்ப சொல்வது. எல்லாருக்கும் புரிய வைக்கணும்கிறதுக்காக நாம எல்லாத்தையும் அப்பட்டமா போட்டு உடைக்கக்கூடாது அவ்வளவுதான்.

இன்னைக்கு டிஜிட்டல் உலகத்துல ஒரு ஆசிரியரோட தேவை என்பது மாணவர்கள் மத்தியில குறைஞ்சிட்டதா நினைக்கிறாங்க. ஒரு ஆசிரியர் அடுத்த வார்த்தை எழுதுறதுக்குள்ளே இவன் இங்கிருந்து அடுத்த வார்த்தை சொல்லிடுறான் அப்டின்னு. இந்த AI வந்ததுக்கு அப்புறம் ஒரு ஆசிரியர கிட்டதட்ட 50-60 சதவீதம் அதை நிவர்த்தி பண்ணிருச்சு. அப்படியிருக்கும் காலகட்டத்திலே ஒரு ஆசிரியரோட தேவை எந்தளவு இருக்கு. அவரு என்னென்ன மாதிரி மாணவர்களை அணுகணும்?

என்னதான் AI வந்து ஆசிரியர் மாதிரி உங்களுக்கு செயல்பட்டாலும் அதிலிருக்கும் வேறுபாடு என்னவென்றால் ஒரு சந்தேகத்திற்கு அடுத்திருக்கும் சந்தேகம் இருக்கும் பார்த்தீங்களா அதை அது தீர்க்காது. ஏனென்றால் அது ஏற்கெனவே ப்ரோகிராம் செய்யப்பட்டது. இப்போ நீங்க ஒரு கேள்வி கேட்கிறீங்க.
 
அந்த கேள்விக்குள்ள ஒரு கேள்வி வந்ததுன்னா அத அது ஒன்னும் செய்யாது. அது நோ அப்படினுட்டு போயிடும். நம்ம வாத்தியார் அப்படியில்ல. உ.வே. சாமிநாதருடைய என் சரித்திரம் நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன். என்னுடைய சிறுவயதிலிருந்து இப்பவும் படிப்பேன். ஒவ்வொருமுறையும் நான் படிக்கும்போது சில ஆச்சரியங்கள் அதில் தோன்றும். என்ன காரணம் என்றால் அவர் ஆறு ஆண்டு காலம்தான் தன்னுடைய ஆசிரியருடன் இருந்திருக்கிறார். மீனாட்சி சுந்தரம்பிள்ளையோட... அந்த காலம் முழுவதும் அவர் எவ்வளவு விஷயத்தை தெரிந்திரிக்கிறார். காலைல ஆறு மணிக்கு எழுந்திருச்சி அவரோட போயி ஆத்தங் கரைக்கு போயிட்டு வரப்ப அவர் சொல்லக்கூடிய விஷயங்கள், ஒரு மலர பார்த்தவுடனே சொல்லக்கூடிய விஷயம், மணலப்பார்த்த வுடனே சொல்லக்கூடிய விஷயம், உணவு சாப்பிடும்போது, அதுபோல இரவு பன்னி ரெண்டு மணி, சாமிநாதா அந்த  சில சந்தேகங்கள் வந்ததே ஞாபகமிருக்கா என்று கேட்டு அவர் பேசுவது. இதை நான் என் அப்பாவிடம் பார்த்திருக்கிறேன். என் அப்பா தமிழாசிரியர். நாளைக்கு நான் ஒரு இடத்திலே பேசப் போறேன்னா ஆரம்ப காலத்தில இந்த பாட்டு தயார் பண்ணிக்கிட்டயா அப்படின்னு கேட்பார். 

அப்படிப்பட்ட ஆசிரியர்களால் தான் நான் இருக்கிறேனே தவிர நான் என்னதான் கருவியில தெரிஞ்கிட்டாலும் எனக்கு அந்த கருவி அதற்கு மேலே சொல்லாது; சொல்ல முடியாது; அவ்வளவுதான். அதுக்குமேலே ஒன்னுமில்லை, அதுகிட்ட அவ்வளவுதான். 

அந்த கிரியேட்டிவிட்டி என்பது இருக்காது... 

ஆமாம். கிரியேட்டிவிட்டி என்பது இருக்காது. கூகுள் தருவதெல்லாம் உண்மையென்று யார் சொன்னா? ஏன்னா ண்ய்ல்ன்ற் பண்ணியவன் என்ன தப்பு பண்ணினான் என்று யார் கண்டா? பாட்டு பிரிண்டிங் மேட்டர்லேயே தப்பு இருக்கு. "மணப்பார மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி' என்ற ஒரு பாட்டு கண்ணதாசன் தொகுப்பிலே பார்த்தேன் அதுல இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தொகுப்பிலே பார்த்தேன் அதுல இருந்தது. எனக்கு ஆச்சர்யம். இவங்க இரண்டு பேரும் நம்ம காலத்திலே வாழ்ந்தவங்கதான். ஆனா இரண்டு பேரும் எழுதல அந்த பாட்ட எழுதியவர் மருதகாசி. இப்ப பிரிண்டிங் மீடியால தப்பு. அப்படின்னா நாம என்ன பண்ணவேண்டியது இருக்கு. இதே தப்பு உ.வே. சாமிநாதருக்கும் இருந்தது. இந்த ஏட்டுல ஒருமாதிரி, அந்த ஏட்டுல ஒருமாதிரி இத மாதிரி சரியானத தேடித் தேடி மேக்ஸிமம் சரியா இருக்கிறத வைச்சுத்தான்தான் அவர் தீர்மானித்திருக்கிறார்.

இப்படி பல்வேறு சுவையான செய்திகளை நமது சேனலில் பகிர்ந்திருக்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்!