Advertisment

திருக்குறளின் மெய்யியல் நெறி

thirukural
லகியலில் உள்ள கருத்துக்களைப் பண்டைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இலக்கியங்கள் மாந்தரின் வாழ்வுக்குப் பல வகையில் உதவுகின்றன. அவ்வகையில் நீதி இலக்கியங்கள் பெரிதும் பயனுடையவனாக அமைகின்றன. 
Advertisment
அவற்றில் தமிழில் பிறந்தாலும் உலகத்தார் பலரும் படித்து இன்புற்ற அற இலக்கியம் திருக்குறள். அறம், பொருள், இன்பம் என்ற அமைப்புடன் படைக்கப்பெற்றுள்ளது. மனிதனுக்குத் தேவையான பண்புகளை விளக்கும் பெட்டகமாகத் திகழ்கிறது.
Advertisment
 இந்நூல் பொதுத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர்பெற்ற சிறப்புடைத்தாகும். இந்நூலின் காலம் கடைச்சங்க காலத்தின் படைப்பாகும். இந்நூல் வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், கல்லாமை போன்ற விழுமியங்களைத் தாங்கிநிற்கின்றது. எல்லாக்காலத்தும், எல்லாருக்கும் ஏற்ற கருத்துக்களைத் தந்துநிற்பதே திருக்குறளின் பெருமை. அவ்வகையில் திருக்குறளின் மெய்யியல் நெறி என்ற நோக்கில் இக்கட்டுரையைக் காண்பதே  நோக்கமாகும். 

மெய்யியல் வரையறை

தத்துவ மேதை சாக்ரடீஸ் மெய்யியல் என்ன என்பதற்குக் கூறும் கருத்தாவது நன்மை என்றால் என்ன? தீமை என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன? என்பன போன்றவையே அன்றைய காலத்தில் மெய்யியலின் மைய ஆய்வுப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. மெய்யியல் என்பது உண்மை, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி ஆகியவற்றைப் பற்றி ஆய்வுசெய்யும் அறிவுத்துறை ஆகும். மெய்யியல் தத்துவ அறிவுத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. மெய்யியல் என்பதை மெய்+இயல் என்று பிரிக்கலாம். மெய்யியல் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் விதிகளைக் குறித்த அறிவியல் என்றும் கூறப்படுகிறது. எது உண்மை? எது சரி? எது அறிவு? எது கலை? எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா? எது அழகு? என்பன போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை காணமுயலுவதே மெய்யியல் என்று இன்றைய காலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. மெய்யியல் கீழைத்தேய மெய்யியல், மேலைத்தேய மெய்யியல் என இரு பிரிவுகள் உள்ளன. இவை போக தமிழ்ச் சூழலில் உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் வேதத்தை  தத்துவம் என்று குறிப்பிடுவாரும் உண்டு. இங்கு வைதீகம், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், பக்தி இயக்கம், புத்தம், சமணம், சைவம், மீமாம்சை போன்ற அனைத்து மெய்யியல் மற்றும் சமயவியல் எனப் பல்வேறு நிலையில் சமயக்கருத்தும் விளக்கமும் க
லகியலில் உள்ள கருத்துக்களைப் பண்டைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இலக்கியங்கள் மாந்தரின் வாழ்வுக்குப் பல வகையில் உதவுகின்றன. அவ்வகையில் நீதி இலக்கியங்கள் பெரிதும் பயனுடையவனாக அமைகின்றன. 
Advertisment
அவற்றில் தமிழில் பிறந்தாலும் உலகத்தார் பலரும் படித்து இன்புற்ற அற இலக்கியம் திருக்குறள். அறம், பொருள், இன்பம் என்ற அமைப்புடன் படைக்கப்பெற்றுள்ளது. மனிதனுக்குத் தேவையான பண்புகளை விளக்கும் பெட்டகமாகத் திகழ்கிறது.
Advertisment
 இந்நூல் பொதுத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர்பெற்ற சிறப்புடைத்தாகும். இந்நூலின் காலம் கடைச்சங்க காலத்தின் படைப்பாகும். இந்நூல் வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், கல்லாமை போன்ற விழுமியங்களைத் தாங்கிநிற்கின்றது. எல்லாக்காலத்தும், எல்லாருக்கும் ஏற்ற கருத்துக்களைத் தந்துநிற்பதே திருக்குறளின் பெருமை. அவ்வகையில் திருக்குறளின் மெய்யியல் நெறி என்ற நோக்கில் இக்கட்டுரையைக் காண்பதே  நோக்கமாகும். 

மெய்யியல் வரையறை

தத்துவ மேதை சாக்ரடீஸ் மெய்யியல் என்ன என்பதற்குக் கூறும் கருத்தாவது நன்மை என்றால் என்ன? தீமை என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன? என்பன போன்றவையே அன்றைய காலத்தில் மெய்யியலின் மைய ஆய்வுப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. மெய்யியல் என்பது உண்மை, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி ஆகியவற்றைப் பற்றி ஆய்வுசெய்யும் அறிவுத்துறை ஆகும். மெய்யியல் தத்துவ அறிவுத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. மெய்யியல் என்பதை மெய்+இயல் என்று பிரிக்கலாம். மெய்யியல் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் விதிகளைக் குறித்த அறிவியல் என்றும் கூறப்படுகிறது. எது உண்மை? எது சரி? எது அறிவு? எது கலை? எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா? எது அழகு? என்பன போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை காணமுயலுவதே மெய்யியல் என்று இன்றைய காலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. மெய்யியல் கீழைத்தேய மெய்யியல், மேலைத்தேய மெய்யியல் என இரு பிரிவுகள் உள்ளன. இவை போக தமிழ்ச் சூழலில் உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் வேதத்தை  தத்துவம் என்று குறிப்பிடுவாரும் உண்டு. இங்கு வைதீகம், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், பக்தி இயக்கம், புத்தம், சமணம், சைவம், மீமாம்சை போன்ற அனைத்து மெய்யியல் மற்றும் சமயவியல் எனப் பல்வேறு நிலையில் சமயக்கருத்தும் விளக்கமும் கூறப்படுகின்றன. இந்த நோக்கில் சிலர் திருக்குறளை ஆய்ந்துள்ளனர் என்றாலும், திருக்குறள் சமயவியல் கொள்கைகளுக்கு அப்பால் நின்று தனித்தன்மையுடன் விளங்குகிறது என்று வள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூல் ஒன்றை கு.ச.ஆனந்தன் வெளியிட்டுள்ளமை திருக்குறளின் தனிச்சிறப்பைக் காட்டுவதாகக் கருதலாம். திருக்குறள் உலகப்பொதுமறை என்று போற்றப்படுவது வேறு எந்த நூலுக்கும் மொழிக்கும் கிடைக்காத பேறாக உள்ளது. திருக்குறள் கூறும் மெய்யியல் எந்த வகையானது எனில், மனிதன் படிப்படியாக அகநிலை வளர்ச்சியைப் பெற்று இவ்வுலகில் துன்பத்தைத் தவிர்த்து இடைவிடாத இன்பத்தை அடைவதற்கு வழி கூறும் நடைமுறை மெய்யியல் என்பதையே பிரதிபலிக்கிறது. 
திருக்குறள் வந்த காலத்திற்கு முன் தமிழன் முன்னுரிமை கொடுத்தது இன்பம், பொருள், அறம் என்ற படிநிலையாகும். வள்ளுவர் இந்த படிநிலையை மாற்றுகிறார். அறத்தை முதன்மைப்படுத்தி, பிறகு பொருள், இன்பம் என்ற படிநிலையை அமைத்து குறள் வடிவம் தந்துள்ளார். வள்ளுவம் அறத்திற்குத்தான் முதன்மை என்ற கருத்தை நாம் உணரவேண்டும்.  பிறப்பில் மூன்று நிலையைத் தொடர்புபடுத்தியுள்ளார் வள்ளுவர். நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் ஆகிய மூன்று அதிகாரத்தையும் வரிசையாக வைத்துள்ளமை, நிலையாமையை உணர்ந்தால் துறவு மேற்கொள்ள முடியும் என்றும், துறவு மேற்கொண்டாலே மெய்யுணர முடியும் என்ற கருத்தில் வள்ளுவத்தின் கட்டமைப்பை உணரலாம். 
மனிதன் அன்றாட வாழ்வில் பின்பற்றப் படும் நெறிமுறைகளைப் போதிக்கின்ற நூல் திருக்குறள். எது நல்லது? எது தீயது என்று ஆராயும் அறிவு மனிதனுக்குத் தேவை. ஆராயாமல் செய்யும் வினை மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். ஆகவேதான் நன்மையும் தீமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று உரைக்கின்றார்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் (குறள் 511)
வள்ளுவர் காலத்தில் அரசர்கள் நாட்டை ஆண்டுள்ளனர். முடியாட்சி காலம். ஆகவே அரசனானவன் எவ்வாறு ஆட்சிசெய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். தம்மிடம் பணிபுரியும் ஆட்களை நல்லவன் தீயவன் யார் என்பதைக் கண்டறிந்து ஆளக்கூடியவனாக அரசன் செயல்பட வேண்டும்.  

நிலைத்தலும் நிலையாமையும்

 நிலையாமை என்பது உலகியல் வாழ்க்கை நிலையில்லாதது என்பதைக் குறிக்கும் சொல்லாகும். பண்டைய நூல்களில் நிலையாமை பற்றிய செய்திகள் முன்வைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகப் புறத்திணையியலில் காஞ்சித்திணை நிலையாமையை உணர்த்துவதாகப் பாடியுள்ளனர் புலவர்கள். இந்த உலகிற்கு நிலையாமை ஏன் வேண்டும் என்று ஆராய்ந்தால், நல்லறங்களைப் போற்றுவதற்காகப் பாடியிருக்கலாம். நிலையானவைக்கு எதிரானது நிலையாமையாகும். உறுதியற்ற தன்மையுடையது. நிலையாமை தத்துவம் சுகபோக வாழ்வில் திளைக்காமல் இருப்பதை அறிவுறுத்துகிறது. பொருள்களைக் கண்டு மனம் மயங்கிடக்கூடாது. இதனையே வள்ளுவர்,
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை  (குறள் 331)
வாழ்க்கையில் இழிவான நிலை எது என்பதை இக்குறள் காட்டுகிறது. நிலையில்லாத பொருள்களை நிலையானவை என உணர்வது இழிநிலை ஆகும். இதற்கு தேவநேயப் பாவாணர் நாள்தோறும் மாந்தர் எல்லாப் பருவத்திலும் இறக்கக்கண்டும், குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர் ஒருவரும் உலகத்தில் இல்லாமையறிந்தும், இளைஞர் முதியராகவும் செல்வர் வறியராகவும் மாறுவதைப் பார்த்தும், யாக்கையும் இளமையும் செல்வமும் தமக்கு நிலைக்குமென்று கருதுவது பேதமை யாதலால் “புல்லறிவாண்மை“ என்றும் இறுதிவரை ஒருபோதும் அறிவுபெறாமையாற் “கடை“யென்றுங் கூறினார்(ஞா.தேவநேயப் பாவாணர், திருக்குறள் மரபுரை,ப.196)
செல்வம் வரும் போகும் என்ற நிலையை வள்ளவர்,
கூத்தாட்டு அவைக்குழாந் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று  (குறள் 332)
என்று கூறுவது, ஒருவனுக்கு பெருஞ்செல்வம் வருவது என்பது கூத்தாடும் அரங்கிற்கு காண்போர் கூட்டம் வருவது போன்றதாகும். செல்வம் கெடுவது என்பது நாடகம் முடிந்தபின் கூட்டம் எவ்வாறு கலைந்து செல்லுமோ அதேபோன்றதே.
பிறப்பின் உண்மை
வள்ளுவர் மனித வாழ்க்கை என்பது என்ன? 
என்பதற்கு அவரின் பார்வை நுட்பமானது.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (குறள் 339)
  சாவு என்பது உண்டு என்ற உண்மையைக் கூறுகிறார். ஒருவனுக்குச் சாவு வருவது என்பது உறக்கம் வருவதைப் போன்றதாகும். பிறப்பு என்பது உறங்கி விழிப்பது. உறக்கத்தையே உவமையாக்கி பிறப்பின் உண்மையைப் பதிவிடுகிறார். “உயிர்கட்கு ஒரு தனித்த பிறவியில் உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வருவது போன்றே, தொடக்கமிலியாக வரும் பொது நிலைமையில் இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருவதும் இயல்பாகும் என்பது கருத்து. ஆகவே வீடுபெறாத நிலையில், ஒரு பிறவியால் மட்டுமன்றிப் பலவிறவியாலும் நிலையாமை தோன்றி நிலைப்பதாம்.“ (ஞா.தேவநேயப் பாவாணர், 
திருக்குறள் மரபுரை,ப.201) என்று பிறப்பின் தன்மையைக் கூறி, மறுபிறப்பு உண்டு என்று குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகப் பெருமானும் பல பிறப்பு உண்டு என்று பாடுவதும் வள்ளுவரின் கருத்தியலுடன் ஒத்திருப்பதை உணரலாம். 

உயிர்நிலை

உயிர் என்பது பற்றி வள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். உடலோடு உயிர் கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அன்புடைமை என்னும் ஓர் அதிகாரத்தையும் படைத்துள்ளார். அவற்றில்,அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு   (குறள் 80)
  என்று கூறியுள்ளார். அன்பின் வழியது 
உயிர்நிலை. அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப்பெற்றுள்ளது. அன்பு செய்யாத உடல் எலும்பை தோல் போர்த்தியதற்கு ஒப்பாகும். உடலில் உயிர் உள்ளது எனவும் அவ்வுயிர் அன்பு செய்வதற்கே என்ற கருத்தும் புலப்படுகிறது. உடல் பிறப்பின் நெறியே அன்பு செய்ய என்ற உண்மையை வள்ளுவர் வலியுறுத்தி யுள்ளார். 
  மனித வாழ்க்கைக்கு மானம் மிகவும் இன்றியமையாததாகிறது. மானம் என்பது தன்நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும். இக்கருத்தினை வள்ளுவர், 
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்  (குறள் 969)
என்றுரைக்கின்றார். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒத்த மானிடர், மானம் வரின் தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர் நாடிப் பண்பு கெடும் நிலை வரின், உயிர் நீப்பர் என்ற விளக்கம் தேவநேயப் பாவாணர் உரைவழி அறியமுடிகிறது. மனிதன் மானம் கெடும் எனில் உயிர் விடுதல் சிறந்தது என்ற நிலைக்கு வள்ளுவம் கூறப்படுவதை உற்றுநோக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் கோவலனுக்குத் தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டியன் உயிர்நீத்த நிலையையும் காணலாம். 
இடுக்கண் நிலை  மாந்தருக்கு, துன்பம் வருவது இயல்பு. அறிவுடையோர் துன்பத்தைப் பெரிதாக எண்ணமாட்டார். தீதும் நன்றும் பிறரால் வருவது அல்ல என்று கணியன் பூங்குன்றனாரும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகப் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். 
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில் (குறள் 621)
தனக்கு அறியாமல் வரும் துன்பத்தைக் கண்டு மகிழ்க என்கிறது வள்ளுவம். வள்ளுவர் துன்பத்தை  இடுக்கண் என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்வில் ஒருவருக்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். 
அது பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி. இருவருக்கும் நியதி ஒன்றுதான். இரவு பகல் போலத்தான் இன்பமும் துன்பமும். இன்பமாக வாழ்க்கை இருந்தால் வாழ்வு சலித்துவிடும். துன்பமாகவே வாழ்க்கை அமைந்துவிட்டால் வாழ்வு வெறுத்துவிடும். எதைக்கண்டும் உணர்ச்சி வயப்படாமல் இருப்பதே வாழ்வின் நெறியாகும். 
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்   (குறள் 625)
மேலும் மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.

மெய்ப்பொருள்

மெய்ப்பொருள் என்பது மெய்யறிவு, மெய்ஞானம், மெய்யுணர்தல் என்ற சொற்களால் வழங்கப்படுகிறது. சொற்கள் பலவிருந்தாலும் அவை ஒரே பொருளைத்தான் உணர்த்துகிறது. உண்மை, சத்தியம், நிலையானது, உடல், இறைவன் என்ற பல பொருள் இருப்பதை அறியலாம். 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு   (குறள் 423)
  ஒரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. வாய் என்பது சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம் என்று விளக்கம் தருகிறார் தேவநேயப் பாவாணர். 
அறிவு என்பதற்கு வள்ளுவர் கூறும் கருத்து,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு  (குறள் 355)
  பொருளின் தோற்றத்தைக் கண்டு மயங்காமல், அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு. “பொருள் என்பது பொருளும் பொருளைப் பற்றிய செய்தியும் என இருவகைப்படும். அவ்விருவகைப் பொருளின் மெய்த்தன்மையும் அறியும் முறை, முறையே மெய்ப்பொருள் முறையும் உண்மைப் பொருட்பாட்டு முறையும் என இரு திறப் படும்.“ (ஞா.தேவநேயப் பாவாணர், திருக்குறள் மரபுரை,பக்.208, 209) மனிதனுக்கு பொருள் மயக்கம் ஏற்படக்கூடாது. அறிவு நிலைதான் வேண்டும் என வள்ளுவம் கூறுகிறது.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற் பயனே என்கிறது நன்னூல். வள்ளுவரும் அறம் பொருள் இன்பம் பற்றியே பேசுகிறார். இம்மூன்றையும் பின்பற்றி வீடு அடைதலே அறிவு 
என்கிறார். பிறப்பு உணர்தல் பற்றியே மிகுதியும் சிந்தித்துள்ளார். அன்பின் வழியது உயிர் நிலை. நிலையாமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மெய்ப்பொருளை அறிந்து 
செம்பொருளை அடைதலே அறிவு நிலை போன்ற உண்மைத் தத்துவங்களை அறிவுறுத்துகிறார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது அறிவுநிலைதான் என்பதை வள்ளுவர் போதித்துள்ளார். அந்த அறிவு கொண்டு பொய்யையும் மெய்யையும், நன்மையையும் தீமையையும், பிறப்பையும் இறப்பையும் போன்ற முரண் கருத்துக்களில் உண்மையைக் கண்டுணர வேண்டும் என்பதே வள்ளுவத்தின் கோட்பாடாகும். வள்ளுவத்தைப் படிக்கப் படிக்க மனிதனுக்குத் தெளிவு பிறக்கும் என்பதும் உண்மை.
uday011125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe