ரு முதிய மனிதர் ஸ்டீலால் ஆன ஓரங்களைக் கொண்டிருந்த கண்ணாடிகளுடனும் மிகவும் அழுக்கடைந்த ஆடைகளுடனும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

Advertisment

ஆற்றின் குறுக்காக ஒரு பாலம் இருந்தது. மாட்டு வண்டிகள், லாரிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அந்த பாலத்தைக்கடந்து போய்க் கொண்டிருந்தனர். கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் வண்டிகள் பாலத்தைத் தாண்டி மேட்டில் ஏறும்போது நின்றுவிட, சிப்பாய்கள் சக்கரங்கள் சுழன்றோடும் வகையில் தள்ளிவிட்டு உதவினார்கள்.

லாரிகள் மெதுவாக நீங்கி பாலத்தைக் கடந்தன.

விவசாயிகள் முழங்கால் வரை சேறு படித்திருக்க, அதில் அமர்ந்திருந்தனர்.

ஆனால், வயதான மனிதர் அசையாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

அதற்கு மேல் நகர முடியாத அளவிற்கு, அவர் களைப்புடன் இருந்தார்.

பாலத்தைக் கடந்து சென்று, பாலத்தின் முனைவரை ஆராய்ந்து பார்த்து, பகைவர்கள் எந்த இடம் வரை வந்திருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பது என்னுடைய பணியாக இருந்தது. நான் இந்த செயலைச் செய்துவிட்டு, பாலத்தின் வழியாகத் திரும்பிவந்தேன். இப்போது வண்டிகள் அதிகமாக இல்லை. கொஞ்ச ஆட்கள் மட்டும் கால்நடையாக சென்று கொண்டிருந்தனர்.

ஆனால், முதியவர் மட்டும் இப்போதும் அங்கேயே இருந்தார்.

"நீங்க எங்கிருந்து வர்றீங்க?''- நான் அவரிடம் கேட்டேன்.

"ஸான் கார்லோஸிலிருந்து..'' -அவர் கூறி விட்டு, புன்னகைத்தார்.

அதுதான் அவரின் சொந்த ஊர். அதனால் அதைக் கூறும்போது, அவருக்கு சந்தோஷம் உண்டாகவே, புன்னகைத்தார்.

Advertisment

"அங்கு பிராணிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.''- அவர் விளக்கிக் கூறினார்.

"அப்படியா?''- எதுவுமே புரியாமல் நான் கூறினேன்.

"ஆமாம்....''- அவர் கூறினார்: "நான் அங்கு தங்கியிருந்து, பிராணிகளைப் பார்த்துக் கொள்வேன். 

ஸான் கார்லோஸ் நகரிலிருந்து வெளியேறிய கடைசி மனிதன் நான்தான்.''

அவர் ஒரு இடையனாகவோ கால்நடைகளை மேய்ப்பவராகவோ பார்ப்பதற்குத் தெரியவில்லை. நான் அவருடைய அழுக்கடைந்த ஆடைகளையும் அவருடைய சாம்பல்நிற அழுக்கடைந்த முகத்தையும் அவருடைய ஸ்டீலால் ஆன ஓரங்களைக் கொண்ட கண்ணாடிகளையும் பார்த்துக்கொண்டே கேட்டேன்: "என்ன மிருகங்கள் அவை?''

Advertisment

"பல்வேறு பிராணிகள்...''- தலையை ஆட்டிக்கொண்டே அவர் கூறினார்: "நான் அவர்களை விட்டு, வரவேண்டிய நிலை உண்டாகி விட்டது.''

நான் பாலத்தையும் எப்ரோ டெல்டா என்ற ஆஃப்ரிக்கர் வாழும் நாட்டையும் பார்த்தேன்.

எதிரிகளை எப்போது நாம் பார்ப்போம், மிகப்பெரிய சம்பவத்தை பூடகமாக வெளியிடும் அவர்களின் முதல் குரல்களை எப்போது கேட்போம் என்பதை வியப்புடன் நினைத்துக் கொண்டிருந்தேன்.

முதியவர் இப்போதும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

"அந்த பிராணிகள் என்ன?''- நான் கேட்டேன்.

"மொத்தத்தில்.... மூன்று பிராணிகள்''- அவர் விளக்கிக் கூறினார்: "இரண்டு ஆடுகள்.... ஒரு பூனை.... இவை தவிர... நான்கு ஜோடி புறாக்கள்...''

"அவற்றைவிட்டு, நீங்கள் விலகி வர வேண்டியதாகி விட்டதா?''- நான் கேட்டேன்.

"ஆமாம்.. பீரங்கிகள் காரணமாக. பீரங்கிகள் வந்து கொண்டிருப்பதால், கிளம்பி விடும்படி கேப்டன் கூறினார்."

"உங்களுக்கு குடும்பம் இல்லையா?''- பாலத்தின் தூரத்திலிருந்த முனைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே நான் கேட்டேன். அங்கு சில இறுதி மாட்டு வண்டிகள் வேகமாக போய்க் கொண்டிருந்தன.

"இல்லை...'' - அவர் கூறினார்:'' நான் கூறிய அந்த பிராணிகள் மட்டுமே...பூனை...

அது சரியாகி விடும். ஒரு பூனை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்.மற்றவை என்ன ஆகும் என்பதைப் பற்றி என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை."

"உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன?''- நான் கேட்டேன்.

"எனக்கு அரசியல் நிலைப்பாடு எதுவுமில்லை.''- அவர் கூறினார்: "எனக்கு எழுபத்தாறு வயதாகிவிட்டது. இப்போது பன்னிரெண்டு கிலோ மீட்டர்களைத் தாண்டி நான் வந்திருக்கிறேன்.

இதற்கு மேல் என்னால் போக முடியாது என்று நான் நினைக்கிறேன்.''

"நிற்பதற்கு இது சரியான இடமல்ல...''- நான் கூறினேன்: "நீங்கள் நடந்து சென்றால், சாலையில் லாரிகள் போய்க்கொண்டிருக்கும்.... போர்க்கருவிகளுடன் டார்ட்டோஸாவிற்கு''.

"நான் சிறிது நேரம் காத்திருக்கிறேன்.''- 

அவர் கூறினார்: 

"பிறகு நான் செல்கிறேன். லாரிகள் எங்கு செல்கின்றன?''

"பார்ஸிலோனாவை நோக்கி...''- நான் அவரிடம் கூறினேன்.

"அந்த திசையில் எனக்கு யாரையும் தெரியாது.''- அவர் கூறினார்:  "எனினும், உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கு மீண்டும் மிகப் பெரிய நன்றி...''

அவர் என்னையே மிகவும் உயிரற்று, களைப்புடன் பார்த்தார். தொடர்ந்து யாரிடமாவது தன் கவலையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதைப் போல கூறினார்: "பூனை சரியாகி விடும். என்னால் அதை உறுதியாகக் கூற முடியும். பூனையைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மற்றவை.....? மற்றவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

"ஏன்? பெரும்பாலும்... அவையும் சரியாகிவிடும்.''

"அப்படியா நீங்க நினைக்கிறீங்க?''

"ஏன் நினைக்கக்கூடாது?''- கரைக்கு அப்பால் தூரத்தில் வண்டிகள் எதுவுமே இல்லை என்பதை கவனித்துக் கொண்டே நான் கூறினேன்.

"ஆனால்... பீரங்கிகள் வரும்போது, அவை என்ன செய்யும்? பீரங்கிகள் காரணமாக நானே வெளியேறிச் செல்லவேண்டும் என்று கூறப்பட்ட நிலையில்....?''

"நீங்கள் புறா கூண்டை மூடாமல் வைத்துவிட்டு வந்தீர்களா?''- நான் கேட்டேன்.

"ஆமாம்...''

"அப்படின்னா... அவை பறந்து விடும்''.

"ஆமாம்... உறுதியாக அவை பறந்துவிடும்.

ஆனால், மற்றவை....? மற்றவையைப் பற்றி நினைக்காமல் இருப்பது நல்லது...''- அவர் கூறினார்.

"நீங்கள் இங்கேயே இருந்தால், நான் கிளம்பிவிடுவேன்.''- நான் வற்புறுத்தினேன்: "எழுந்திருங்க...''

இப்போது நடப்பதற்கு முயற்சி பண்ணுங்க.''

"உங்களுக்கு நன்றி...''- எழுந்துகொண்டே அவர் கூறினார். இப்படியும் அப்படியுமாக ஆடிய அவர், தொடர்ந்து மண்ணில் பின்னோக்கிச் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.

"நான் பிராணிகளை கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...''- அவர் பலவீனமான குரலில் கூறினார். இப்போது என்னிடம் அல்ல. "நான் பிராணிகளை மட்டுமே பார்த்துக்கொண்டேன்''.

அவரைப் பற்றி கூறுவதற்கு எதுவுமே இல்லை. அது... ஈஸ்டர் ஞாயிறு.....

ஃபாசிஸ்ட்கள் எப்ரோவை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அது ஒரு சாம்பல் நிறத் தில்... தாழ்ந்த நிலையில் மேகங்கள் மூடிய நாளாக இருந்தது. அதனால், அவர்களின் மேகங்கள் பறக்கவில்லை.

தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வதற்கு பூனைகளுக்கு நன்கு தெரியும் என்பது உண்மைதான். அந்த வயதான மனிதருக்கு எப்போதும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கட்டும்....