தபால்காரர் நாற்காலியில் மன்னிப்பு கேட்கிற பாணியில் அமர்ந்திருந்தார். காரணம்- நாவிதரின் பார்வை கம்பீரமாகவும் ஏளனமாகவும் இருந்தது.
அவர் மிகவும் முரட்டுத்தனம் கொண்ட மனிதராகவும், அமைதியாக தன்னைப் பற்றிய நினைப்பிலேயே இருப்பவராகவும் இருந்தார்.
தபால்காரரின் தலைமுடி மிகவும் குறைவாக இருக்கும் வண்ணம் க்ளிப்பர்களைக் கொண்டு முந்தைய நாள்தான் வெட்டப்பட்டிருந்தது.
"தலைமுடி வெட்டணுமா?''- நாவிதர் அமைதியான...
அதே நேரத்தில்.... மிகவும் பயங்கரமான குரலில் கேட்டார்.
"சவரம்....''- தபால்காரர் கூறினார்.
நாவிதர் தன் கண் புருவங்களை உயர்த்தினார்.
அதிகமான அலட்சியத்துடன் தன் இரையின்மீது ஒரு பார்வை பார்த்தார். ஒரு பெரிய சத்தத்துடன் நாற்காலியைத் தள்ளிவிட்டு, சாய்வு நிலையில் இருக்குமாறு செய்தார்.
தொடர்ந்து ஒரு பீங்கான் "மக்'கையும் ப்ரஷ்ஷையும் எடுத்து வைத்து விட்டு, தபால்காரரின் மீது ஆசீர் வதிப்பதைப் போல குனிந்து கொண்டு, கேவலமாகப் பார்த்தவாறு நீர்க் குழாய் இருந்த பக்கம் அலட்சிய மாக திரும்பினார். பிறகு அவர் திரும்பி, அமைதியாக இருந்த தன் வாடிக்கையாளரை ஒரு பெரிய துணியால் போர்த்தினார். அவரின் வாயைச் சுற்றி ஒரு இரக்கமற்ற கையால், ப்ரஷ் முழுவதும் இருக்கக் கூடிய இனிப்பான சுவையைக் கொண்ட நுரையைப் பூசினார்.
தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.
"வாஷிங்டன் பகுதியில் உள்ள சியாட்டிலுக்கு எப்போதாவது போயிருக்கீங்களா?''-அவர் கேட்டார்.
"ப்ளப்... அ... லப்... ப்ளப்....''- சோப்பின் நுரைக்கு எதிராகப் போராடியவாறு தபால்காரர் கூறினார். தொடர்ந்து தன் தலையை பலவீனமாக அசைத்தார்.
"நானும் போகவில்லை''- நாவிதர் கூறினார்: "ஆனால், எனக்கு பில் என்ற பெயரில் ஒரு சகோதரன் இருக்கி றான். ஃப்ளாவில் உள்ள செயின்ட் ஜானிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் அவனுக்கு ஒரு ஆரஞ்சுத் தோட்டம் இருக்கிறது. உங்களின் கழுத்தில் ஒரு சிறிய அளவு முடிதான் இருக்கிறது. அது தவறான முறையில் வளர்ந்திருக்கு. கழுத்தைத் தவறான திசையில் சவரம் செய்த காரணத்தால், அது நிகழ்ந்திருக்கு. சில நேரங்களில் விஸ்கி இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய வைத்துவிடும். விஸ்கி பயங்கரமான விஷயம். நீங்கள் அதைப் பருகியது உண்டா?''
தபால்காரரிடம் சோப் நுரையால் மூடப்படாமல் இருந்தது ஒரு கண் ம

தபால்காரரிடம் சோப் நுரையால் மூடப்படாமல் இருந்தது ஒரு கண் மட்டும்தான். அந்த கண்ணின் மூலம் 'இல்லை' என்பதை பாவனைகளை வெளிப்படுத்தி கூறுவதற்கு முயற்சித்தார். ஆனால் நாவிதர் அவர் விஷயத்தில் மிகவும் வேகமாக இருந்தார். தன் தூரிகையின் ஒரு பகுதியால் கண்ணை சோப்பால் நிறைத்தார்.
"என் சகோதரன் பில் அருந்துவான்''- நாவிதர் தொடர்ந்து கூறினார்: "ஹவுஸ்டனில் இருக்கும் எந்த மனிதனையும்விட அதிகமான விஸ்கியை அவன் அருந்த முடியும். ஆனால், அவன் எந்தச் சமயத்திலும் அருந்தியதில்லை.
என் கடையில் அவனுக்கு ஒரு நாற்காலி இருந்தது. ஆனால், நான் அவனைச் செயல்பட விடுவேன்.
பில்லுக்கென ஒரு அருமையான கொள்கை இருந்தது. தான் நினைத்த அளவிற்குப் பருகியவுடன், குடிப்பதை நிறுத்திவிடுவான். அதைத் தன் கண்களின் மூலம் மட்டுமே அவன் உணர்த்துவான். அவை எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
அவனுடைய தலையில் அது அசையாமல் இருக்கும். ஒரு பக்கமாக பார்க்க வேண்டுமென பில் நினைத்தால், அவன் தன் கைகளை எடுத்து,அதன் மூலம் தன் கண்களைத் திருப்பி, தான் பார்க்கும் பார்க்க நினைப்பதைப் பார்ப்பான்.
முழுமையாக மது அருந்தியிருக்கும் வேளையில், தெருவில் மூச்சு விட்டுக் கொண்டு வரும் பில்லை நீங்கள் பார்க்கலாம். தான் மது அருந்தியிருக்கும் சமயத்திலும், பலவீனமாக இருக்கும் வேளையிலும் கூட அவன் சவரம் செய்வான். ரேஸரால் உங்களுக்கு வேதனை இருக்குதா?''
தனக்கு எந்த விதமான வலியும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காக தபால்காரர் தன் கைகளில் ஒன்றை அசைக்க முயற்சித்தார். ஆனால், வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நாவிதரின் கண் அந்த அசைவைப் பார்த்துவிட்டது. கையின் மீது தன் முழு எடையையும் வைத்து, நாற்காலிக்கு மேல் அதை அழுத்தினார்.
"நான் கவனித்தேன்...''- நாவிதர் தொடர்ந்து கூறினார்: "எனக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்தால், பில்லுக்கு நான்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.... அவன் அதிகமாகக் குடித்திருந்தாலும். ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்குபேர்கூட வருவார்கள். என் நாற்காலி காலியாகக் கிடக்க, பில்லைத் தேடி வந்தவர்கள் தங்களுடைய முறையை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
பணிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் பில்லிடம் இருந்தன. அவனிடம் மிகப் பெரிய கூட்டம் இருக்கும். வெளியே போவதற்குக் கூட அவனுக்கு நேரம் இருக்காது. ஆனால், பின்னாலிருக்கும் அறையில் ஒரு பெரிய "ஜக்' வைத்திருப்பான். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவன் அங்கு சென்று குடிப்பான்.
ஒருநாள் பில்லின் நாற்காலியிலிருந்து எழுந்து வந்த ஒரு மனிதன் வினோதமாக நடந்து கொள்வதை கவனித்தேன். வெளியே செல்லும்போது, அவன் ஆடிக்கொண்டே சென்றான். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, காலையிலிருந்து மாலை வரை கடை முழுக்க வாடிக்கையாளர்கள்.ஒரு மனிதன் திரும்ப வந்தான். அவன் மதியத்திற்கு முன்பே மூன்று வெவ்வேறு நேரங்களில் சவரம் செய்திருந்தான். அடுத்த இரண்டு நாட்களுக்குள் கடையில் மனிதர்களின் கூட்டம்... இரண்டாவது அல்லது மூன்றாவது கதவிற்கு வெளியே...
பாதைக்கு அருகில்... அவர்கள் வரிசை உண்டாக்கினார்கள்.
அந்த நாளன்று பில் 9 டாலர்கள் சம்பாதித்தான். அன்று சாயங்காலம் ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார். உரிமையே இல்லாமல் "சலூன்' நடத்தியதாகக் கூறி, என்னை அதிர வைத்தார். பில்லின் மூச்சுக் காற்று முழுக்க விஸ்கியின் வாசனை வெளிவர, அவன் சவரம் செய்த ஒவ்வொரு மனிதனும் மிகுந்த உற்சாகத்துடன் வெளியே சென்றிருக்கிறான். அவன் தன் நண்பர்களை சவரம் செய்வதற்காக அனுப்பி இருக்கிறான். அதிலிருந்து வெளியே வருவதற்கு எனக்கு 300 டாலர்கள் செலவானது.
அதற்குப் பிறகு வெகு சீக்கிரமே நான் பில்லை ஃப்ளோரிடாவிற்குக் கப்பல் ஏற்றி விட்டேன்.''
----
"நான் ஒரு முறை வெளியே அனுப்பப்பட்டேன்''- தொடர்ந்து கூறினார் நாவிதர். தன் வாடிக்கையாளரின் காதைத் தொட்டவாறு, அவரின் தலையை வேறொரு பக்கமாக திருப்பி விட்டார். "பினேய் தெருவிற்குச் சென்று, ஒரு இறந்த மனிதருக்குச் சவரம் செய்தேன். நாவிதர்கள் இந்த மாதிரியான வேலையைப் பொதுவாக விரும்பமாட்டார்கள். அந்த வேலைக்கு 5 லிருந்து 10 டாலர்கள் வரை கட்டணமாக கிடைத்தாலும்... இது நடைபெற்றது 1908, பினேய் தெருவில். இரவு சுமார் 11 மணிக்கு நான் புறப் பட்டேன்.
தெருவை நான் சரியாக கண்டுபிடித்துவிட்டேன்.
முனையிலிருந்து 1908 ஐப் பார்க்கும் வரை நான் எண்ணிக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி வேலைகளுக்கு நான் பயன்படுத்தும் ஒரு சிறிய டப்பாவில் ரேஸர்கள், சோப், "மக்' ஆகியவை இருந்தன. நான் உள்ளே நுழைந்து, கதவைத் தட்டினேன். அதை ஒரு வயதான மனிதர் திறந்தார். அவருடைய கண் என் டப்பாவின் மீது பதிந்தது.
"நீங்க வந்துட்டீங்க... நீங்கதானா?''
-அவர் கேட்டார்: "சரி.. படிகளில் ஏறி மேலே போங்க. உங்களின் வலது பக்கத்தில் முன்னால் இருக்கும் அறையில் அவர் இருக்கிறார்.
அவருடன் வேறு யாரும் இல்லை. நகரத்தில் அவருக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று யாருமில்லை. ஒரு வாரமாகத்தான் அவர் இங்கு தங்கியிருக்கிறார்.''
"எவ்வளவு நேரமாச்சு... அவர்.... இது நடந்து?''- நான் கேட்டேன்.
"சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்... நான் நினைக்கிறேன்.''- அந்த வயதான மனிதர் கூறினார். எனக்கு சந்தோஷம் உண்டானது. ஏனெனில், குளிர்ந்து போவதற்கு முன்னால் என்றால், பிணங்களுக்கு நன்றாக சவரம் செய்ய முடியும். நான் உள்ளே சென்று, விளக்கைப் போட்டேன். மனிதர் படுக்கையில் படுத்திருந்தார். இன்னும் அவரிடம் வெப்பம் இருந்தது. ஒரு வாரத்திற்கான தாடியை அவர் வளர்த்து வைத்திருந்தார். நான் வேலையில் இறங்கினேன். நான் அவருக்கு மிகவும் அருமையான ஒரு சவரத்தைச் செய்துவிட்டேன். அவர் உயிருடன் இருந்திருந்தால், இதற்காக அவரின் மனம் மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கும். தொடர்ந்து நான் படிகளில் இறங்கி கீழே வந்து, வயதான மனிதரைப் பார்த்தேன்.
"வெற்றிகரமாக முடிந்ததா?''- அவர் கேட்டார்.
"ஆமாம்...''- நான் கூறினேன்:
"அவருக்கு நல்ல முறையில் நடந்தது. யார் பணத்தைத் தருவது?''
"அலபாமாவில் இருக்கும் தன் உறவினர்களுக்கு அனுப்பும்படி நேற்று என்னிடம் 30 டாலர்களைக் கொடுத்தார்''- வயதான மனிதர் கூறினார்:
"அதிலிருந்து உங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நான் நினைக் கிறேன்.''
"இதற்கான கட்டணம் 5 டாலர்கள்''.- நான் கூறினேன்.
வயதான மனிதர் 5 டாலர்களைத் தந்தார். நான் முழுமையான திருப்தியுடன் வீட்டிற்குச் சென்றேன்.
இப்போது நாவிதர் நாற்காலியை இழுத்து, அதை நேராக உயர்த்தி, துணியைக் கழற்றி, தன் கைகளை தபால்காரரின் முடிக்குள் நுழைத்து, ஒரு கைப்பிடி அளவு ரோமத்தை நீக்கி, தன் தலையைக் குலுக்கி, கிண்டலாக கிசுகிசுத்தார்.
" "பே ரம்' லோஷனைப் போடவா?''
தபால்காரர் முட்டாளைப் போல தலையை ஆட்டினார். தன் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட முயற்சித்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்துவிட்டது.
"மறுநாள்...''- நாவிதர் கூறினார்:
"நான் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். 1908, பினேய் தெரு முகவரியில் ஒரு மனிதர் மரணத்தைத் தழுவியிருக்கிறார். பக்கத்து வீட்டிலிருந்த ஒரு மனிதர் விஷத்தைக் குடித்திருக்கிறார். இது மரணத்திற்குச் சற்று முன்பு நடந்திருக்கிறது. ஒரு வீட்டிலிருந்த மனிதர்கள் ஒரு டாக்டருக்கு ஆள் அனுப்ப, இன்னொரு வீட்டில் உள்ளவர்கள் ஒரு நாவிதருக்குத் தகவல் தந்திருக்கின்றனர். இதில் தமாஷான விஷயம் என்னவென்றால், தவறான வீடுகளுக்குள் நுழைந்த தப்பை நானும் டாக்டரும்... இருவருமே செய்திருக்கிறோம். இறந்த மனிதரைப் பார்ப்பதற்காக அவர் உள்ளே நுழைந்திருக்கிறார். அப்போது குடும்ப மருத்துவர் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் நிலையில் இருந்திருக்கிறார். கேள்விகளைக் கேட்டு, நேரத்தை வீணாக்க டாக்டர் விரும்பவில்லை. தன் வயிற்று பம்ப்பை வெளியே எடுத்து, அதை இறந்த மனிதருடன் இணைத்து, விஷத்தை வெளியே எடுக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். அதே நேரத்தில் விஷத்தை உட்கொண்ட மனிதருக்குச் சவரம் செய்யும் வேலையில் நான் தீவிரமாக இருந்திருக்கிறேன்.
இதில் தமாஷான விஷயம் என்னவென்றால், இன்னொரு டாக்டரின் அனைத்து மருந்துகளையும் வந்திருந்த டாக்டர், இறந்த மனிதரிடமிருந்து பம்ப் மூலம் வெளியேற்றிய செயல்தான். அவர் கண்களைத் திறந்து, படுக்கையிலிருந்து எழுந்து, உருளைக் கிழங்குகளையும் குருமாவையும் கொண்டு வந்து தரும்படி கேட்டிருக்கிறார்.
அந்தச் செயல் குடும்ப மருத்துவரைப் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கிறது.
அவரும் வயிற்று பம்புடன் வந்த டாக்டரும் சண்டையில் இறங்கி விட்டனர். படிகளில் விழுந்து, தொப்பிகளை மாட்டும் அலமாரியைத் துண்டு துண்டாக நொறுங்கவிட்டிருக்கின்றனர்.''
"விஷத்தைப் பருகிய உங்களின் ஆள் என்ன ஆனார்?''- தபால்காரர் தயக்கத்துடன் கேட்டார்.
"அவரா?''- நாவிதர் கூறினார்: "அவரும் ஒரு வகையில்... இறந்து விட்டார். ஆனால், ஒரு மனிதனுக்கு எந்தக் காலத்திலும் கிடைத்திராத அருமையான சவரம் கிடைத்து, இறந்திருக்கிறார்.... ப்ரஷ்!''
முரட்டுத்தனமான குணத்தைக் கொண்ட ஒரு ஆஃப்ரிக்க மனிதர், தபால்காரரின்மீது கீழ்நோக்கி குனிந்து, அவரை ஒரு துடைப்பத்தைப் போன்ற ஒன்றால் வன்முறை எண்ணத்துடன் பலமாக தாக்கி, பின்னாலிருந்து அவரின் கோட்டைப் பிடித்து,
அதன் கழுத்துப் பகுதியிலிருந்து அதை விடுவித்தார்.
"மீண்டும் வாங்க''- நாவிதர் பயமுறுத்தும் குரலில் உறுமினார்.
எழுத்தாளர் வேகமாக கதவை நோக்கி வர, அந்த மனிதர் தப்பித்தார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us