அமெரிக்காவில் பறந்த நக்கீரன் கொடி! - ஃபெட்னாவிழாவில் ஆசிரியர்!

editor

"தமிழால் இணைவோம்! தமிழராய் வாழ்வோம்' என்ற உன்னத உணர்வுடன், கடந்த ஜூலை 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38-ஆவது தமிழ் விழா மற்றும் முதலாம் சர்வதேசத் திரைப்பட விழா நிகழ்ச்சி, அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ராலே நகரில் நடைபெற்றது. 

இவ்விழாவில், அமெரிக்கவாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி பாண்டி உள்ளிட்ட விழாக்குழுவினர் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது சிறப்பு!

இவ்விழாவில் நமது நக்கீரன் ஆசிரியர், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதலாவது பன்னாட்டுத் திரைப்பட விழாவில், இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட திரைத்துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இயக்குநர் சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் திரையிடப்பட்டது. 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக, சிகாகோவிலிருந்து வந்திருந்த பறையிசைக் குழுவினர் மிகச்சிறப்பாக பறையிசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். கவிஞர் சினேகன் தலைமையில் 'யாதுமாகி நின்றாய் தமிழே!' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. எழுதும் கலை குறித்து எழுத்தாளர் சு.வேணுகோபால், பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 'நூற்றாண்டு விழா நாயகர்களும் தமிழும்' என்ற தலைப்பில், தவத்திரு குன்றக்குடி அடிகளார், தோழர் இரா. நல்லகண்ணு ஆகியோரைப் பற்றி புலவர் செந்தலை ந.கவுதமன் சிறப்புரை யாற்றினார். அந்நிகழ்வில், நூற்றாண்டு விழா நாயகர்கள் இருவரைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது தனிச்சிறப்பு! 

fetna

நக்கீரனின் படைப்பான 'கூச முனுசாமி வீரப்பன்' ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதன்பின், அந்த ஆவணப்படம் குறித்த கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நக்கீரன் ஆசிரியர் பதிலளித்தார். 

இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ நூலை ப

இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ நூலை புலவர் செந்தலை ந.கவுதமன் வெளியிட, நக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், வி,ஐ,டி. வேந்தர், டாக்டர் விஸ்வநாதன், முனைவர் சௌமியா அன்புமணி, பாடலாசிரியர் சினேகன், நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட பலரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசளிக் கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதி நாளில் இசையமைப்பாளர் டி.இமானின் இசைநிகழ்ச்சி, அனைவரின் ஆட்டம்பாட்டத்துடன் குதூகலமாக நடந்தது. 

ஃபெட்னா விழாவில் கலந்துகொண்ட அனுபவங்களை ஓவியர் டிராட்ஸ்கி மருது நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது, "இதுவரை மூன்று முறை ஃபெட்னா விழாவில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். டாலஸ், நியூயார்க், இப்போது ராலே என மூன்று நகரங்களில் நடைபெற்ற ஃபெட்னா விழாவில் நான் பங்கெடுத்திருக்கிறேன். இதுதவிர, தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்ற என்னுடைய நண்பர்கள் அவ்விழாவில் பலமுறை கலந்துகொண்டதோடு, இணைந்து செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு சென்று, அமெரிக்கா முழுக்க பரவியுள்ள தமிழ்ச் சமூகத்தினர், ஒருவரையொருவர் சந்தித்து உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கிடையிலான நட்பை, பிணைப்பை மேலும் மெருகூட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்புதான் இந்த விழா. 

ஃபெட்னா அமைப்பில், கடந்த காலங்களிலிருந்து தொடர்ச்சியாகப் பலரும் உழைத்த உழைப்பின் பலனாக, தற்போது மிகப்பெரிய தமிழர் திருவிழா கொண்டாட்டமாக இந்த விழா உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்விழாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து தமிழறிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், பேச்சாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களை தொடர்ச்சியாக அழைத்துவருகிறார்கள். அதேபோல், சமகாலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் இவ்விழாவில் தொடர்புபடுத்தி கொண்டுசெல்வதும் அருமையாக இருக்கிறது. இந்த முறை கூடுதல் சிறப்பாக திரைப்பட விழாவும் நடத்தியுள்ளார்கள். இதன் தாக்கமாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிழ்ச்சி, துயரம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை கலாப்பூர்வமாக வெளிப்படுத்தும் திரைப்படங்கள் நிறைய வெளிவரக்கூடுமென்று நம்புகிறேன். 

இளம் வயதினரை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் தமிழ் மொழி சார்ந்தும், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் சார்ந்தும் போட்டிகளை சிறப்பாக நடத்துகிறார்கள். இனிவரும் காலங்களில், இந்த விழாவை, தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் களிக்கும் களமாக மட்டுமே முன்னெடுக்காமல், வளரும் தமிழ்ச்சமூகம் இனி எதிலெல்லாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு வழிகாட்டும்விதமாகவும் கையாளலாம். குறிப்பாக, தற்போது திரைத்துறை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், அதை சரியான முறையில் எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்துவது, தமிழரென்ற நம்முடைய அடையா ளத்தை காப்பதற்கான வழிமுறைகளை கற்றுத்தருவது உள்ளிட்ட பலவற்றையும் முன்னெடுக்கலாம். முக்கியமான இன்னொரு விஷயம், தற்போது மத்தியிலுள்ள அரசு, தமிழ்ச்சமூகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலில், உலகத் தமிழ்ச்சமூகத்தின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அரசியலை பிரதிபலித்து, உலகத் தமிழர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட வழிவகுத்திடக்கூடாது. இதில் கவனம் தேவை" என்று குறிப்பிட்டார்.

ஃபெட்னா விழாவில் நக்கீரன் ஆசிரியர், 'துணிச்ச லான இதழியல் பணி' என்ற தலைப்பில் நக்கீரனின் 38 ஆண்டுகால இதழியல் பணியில் சவாலான நிகழ்வுகளைப் பற்றி உரையாற்றினார். ஆசிரியரின் உரையில், "ஃபெட்னா 38-வது ஆண்டு விழா, நக்கீரனுக்கும் இது 38-வது ஆண்டு. இருவருக்கும் இது ஒற்றுமை. ஃபெட்னாவில் நக்கீரன் பங்கெடுக்கிறது என்றால் அதற்கு நாங்கள் கொடுத்த விலை அதிகம். விலை அதிகமென்றால் காசை சொல்லவில்லை. எனக்கு 'துணிச்சலான இதழியல் பணி' என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். எங்கள் இதழியல் பணியில் நிறைய விஷயங்களை துணிச்சலோடு வெளிக்கொண்டு வந்துள்ளோம். அலுவலகத்தில் அமர்ந்தபடியே இதழியல் பணியை நடத்தக்கூடிய காலகட்டத்தில், நாங்கள் அடுத்தகட்டமாக, புலனாய்வு செய்யக்கூடிய இதழியல் பணியை, அதாவது, உயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரிக்கக்கூடிய இதழியல் பணியைச் செய்தோம். அதை ஒரு குறிக்கோளாக வைத்துக்கொண் டோம். இதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். 

தற்போது பொள்ளாச்சி வழக்கு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பத்திரிகையால் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த பெருமை நக்கீரனுக்குதான் இருக்கும். மக்களுக்கான பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதில் நக்கீரன் முதன்மையாக இருக்கிறது. வீரப்பன் குறித்து புலனாய்வு செய்ய நாங்கள் களமிறங்கியதற்கு காரணமே, கிட்டத்தட்ட 16,000 சதுர கிலோமீட்டர் காட்டில் வாழ்ந்துவந்த சுமார் 6 லட்சம் மக்களுக்கு ஒரு பிரச்சனை… அதை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் அந்த காட்டுக்குள் சென்றோம். அதன்பிறகுதான் வீரப்பன், தூது, அவரைப் பார்த்ததற்காக என் மீது வழக்கு என்றெல்லாம் போனது. ஆனால் அந்த மக்களுக்கு ஒரு நிம்மதியை தேடித்தந்தோம். அது பெரியதொரு மனநிறைவு!

fetna1

எனது அப்பா, நெடுஞ்சாலைத்துறையில் பியூனாக பணியாற்றியவர். பத்து மூட்டை இருக்கு, இதுல ஒரு மூட்டைய எடுத்துட்டு போய் நாட்ட திருத்திட்டு வான்னு சொல்லியெல்லாம் என்னை அனுப்பல. நக்கீரனுடைய முதலீடே வெறும் 4,000 ரூபாய்தான். 

ஆனால் தைரியம் என்ற கூடுதல் முதலீட்டை வைத்து தான் இதில் நாங்கள் இறங்கியதும் நக்கீரன் கிடைத்தது. நக்கீரன் கிடைத்தபிறகு நக்கீரனாக வாழ்வதற்கு இன்றுவரை கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஒரு அரண்மனையில் எலி புகுந்துவிட்டது. எலியைப் பிடிக்க அந்தப்புரத்து பூனைகளைவிட்டுப் பார்க்கிறார்கள், பாரசீகத்திலிருந்தெல்லாம் பூனைகளைக் கொண்டுவந்து விட்டுப்பார்த்தும் எலியை பிடிக்க முடியவில்லை. அதே அரண்மனையில் பணியாற்றிய காவலாளி, தன் வீட்டில் வளர்க்கும் பூனையை கொண்டுவந்து விட்ட பத்தே நொடிகளில் அந்த எலியை பூனை கவ்விக்கொண்டுவந்தது. எப்படி உன் வீட்டுப்பூனை மட்டும் எலியை பிடித்தது என்று கேட்க, “என்னோட பூனை பசியில் இருந்தது" என்று காவலாளி கூறுகிறார். பசியிலிருக்கும் பூனை தான் எலி பிடிக்கும்! அதுதான் நக்கீரன்! நாங்கள் செய்திகளை சேகரிப்பதற்காக வெறியோடு அலைகிறோம். 

6 கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் விஷயத்தில், கொலைகளை செய்த காரணத்தை வெளிக் கொண்டுவர, சிறைச்சாலைக்கே சென்றோம். சிறைத்துறை யினரின் மிரட்டலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று, உத்தரவு பெற்று ஆட்டோசங்கரை எழுதவைத்து பலரின் முகத்திரையைக் கிழித்தோம். 

அதேபோல நித்யானந்தா விவகாரத்தில், ஒரு சாமியார் கல்லூரியிலிருக்கும் பிள்ளைகளை கட்டிப்பிடித்து ஆசிர்வாதம் தருவதாக போன் வந்ததும், அதை விசாரித்ததில் உண்மையெனத் தெரிந்து அதிர்ச்சியாகி செய்தியாக்கினோம். அடுத்த நாளே எனக்கு 2,500 மறுப்புக் கடிதங்கள் வந்தன. அதே நித்யானந்தா குறித்து 2010-ஆம் ஆண்டில் ஒரு சி.டி. வெளிவருகிறது. அதில் அவன் கட்டிலில் படுத்திருக்க, அந்த நடிகையும் உடனிருக்கிறார். உடனே அந்த விவகாரத்தை பெரிதாக வெளிக்கொண்டு வந்தோம். 

fetna2

அதற்குப் பின்னர் அவன் என்மீது போட்ட வழக்குகளே நிறைய!" என நக்கீரனின் துணிச்சலான பத்திரிகை பணி குறித்து பேசிய நக்கீரன் ஆசிரியர், சென்னை எழும்பூரில் பட்டப்பகலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்ட சம்பவத்தில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளி உலகிற்கு காட்டவேண்டுமென்பதற்காகவும், அவரது முகத்தில் ஆசிட் அடித்தவன் யாரென்பதை கண்டுபிடிப்பதற்காகவும் நக்கீரன் புலனாய்வு செய்து மும்பை வரை சென்றுவந்த துணிச்சலான நடவடிக்கைகள் குறித்து நக்கீரன் ஆசிரியர் விவரித்தபோது பார்வையாளர்கள் மிகுந்த ஆச்சர்யத்தோடு கவனித்தனர்.

அதேபோல் வீரப்பன் விவகாரத்தில், வீரப்பனின் புகைப்படத்தை எடுப்பதற்காக நக்கீரன் நிருபர்கள் துணிச்சலோடு காட்டுக்குள் சென்று வீரப்பனை புகைப்படம் எடுத்ததோடு, வீரப்பன் தமிழக காட்டுப்பகுதியில்தான் இருக்கிறார் என்பதையும் நிரூபித்தது நக்கீரன். வீரப்பனை புகைப்படம் எடுத்ததன் பின்னணியில் நக்கீரனின் துணிச்சலான, சவாலான செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார் நமது ஆசிரியர். அதேபோல், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை கொலை என்று நிரூபிப்பதற்காக நக்கீரனின் தொடர்ச்சியான புலனாய்வுப் போராட்டம் குறித்தும் விவரித்தார். நக்கீரன் ஆசிரியர் பேசிமுடித்த தும் நக்கீரனின் தொடர்ச்சியான புலனாய்வுப் பணி களைப் பாராட்டி, அரங்கிலிருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்ப, நக்கீரன் ஆசிரியருக்கு ஃபெட்னா அமைப்பினர் விருது வழங்கி சிறப்பித்தனர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் நமது ஆசிரியர் கலந்துகொண்டதன்மூலம் கடல் கடந்து அமெரிக்க மண்ணில் நக்கீரனின் கொடி பறந்தது!                              

uday010825
இதையும் படியுங்கள்
Subscribe