சிகேதன் கேட்கிறார். இந்த உடம்பின் தலைவன் யார்...?

யமதர்மன் சொல்கிறார்

பிராணனே மேலே இயக்குவதும், 

அபாணனை கீழே தள்ளுவதும், உடம்பின் தலைவனாகிய ஜீவன் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதையே சார்ந்திருக்கின்றன. பிராணன், உடம்பில் பத்து விதமாகச் செயல்படுகிறது அவை:

Advertisment

1) பிராணன் மேல் நோக்கிய இயக்கம்.

2) அபாணன் கீழ் நோக்கிய இயக்கம்.

3) வியாணன் எல்லாப் பக்க இயக்கம்.

4) உதாணன் மரணவேளையில்.. ஜீவன் வெளியேற உதவுதல். 

5) ஸமாணன் ஜீரணம், உணவை இரத்தம் போன்றவையாக மாற்றுதல்.

6) நாகன் வாந்தி, ஏப்பம்.

7) கூர்மன் கண் இமைகளின் இயக்கம்.

8) க்ருகலன் பசி.

9) தேவதத்தன் கொட்டாவி.

10) தனஞ்ஜயன் உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்.

இவையெல்லாம் சேர்ந்ததே பிராணன். இவற்றை இயக்குவது ஜீவன். இந்தப் பிராணன் வழியே உடம்பையும் மனதையும் கட்டுப்படுத்தி அதனால் சுக- துக்கங்களை பெறுகிறது. அதனால் தான் மனதிற்கும், உடம்பிற்கும் தலைவன் ஜீவன். மனிதன் ஐந்து தொகுதிகளால் சூழப்பட்டவன்.

Advertisment

1) உடம்பு.

2) மனம்.

3) பிராணன்.

4) விஞ்ஞானம்.

5) புத்தி.

இவையெல்லாம் ஆன்மாவின் உறைகள். 

நாம் உயிர் வாழ கடைசி நான்கும் தேவை. ஆன்மாவின் ஒரு பகுதி அனுபவங் களைப் பெறுகிறது. அடுத்தது இவற்றுக்கு சாட்சியாக இருப்பது, உடம்பு என்ற கருவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபொழுது...

உயிர் அதனை (பிராணனை) விட்டு விடுகிறது. இதுதான் மரணம்.

மரணம் உடம்புக்கு மட்டும்தான். அந்த உடம்பை விட்டு உயிரின் யாத்திரை தொடங்குகிறது. இந்த பயணத்திற்கு ஆன்மாவே சாட்சி.

Advertisment

உடம்பில் இருக்கின்ற இந்த உயிர் உடம்பி-ருந்து விடுபட்டு வெளியேறி விட்டால் இங்கே மீதி என்ன இருக்கும்..? அதுவே நீ கேட்ட பொருள் நசிகேதா...!

உடம்பு வீழ்ந்து உயிர் வெளியேறியபிறகு இந்த மாற்றங்களால் பாதிக்கப்படாத ஏதாவது நம்மில் உள்ளதா என்றால்...? உள்ளது.

அதுவே ஆன்மா. அதுவே நீ என்பது  தியானத்தின் முக்கியமான பகுதி. இது மரணத்தையே தியானிக்கத் தூண்டுகிறது. எந்த மனிதனும் பிராணனாலோ, அபாணனாலோ வாழ்வதில்லை. அதற்கு எது ஆதாரம் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

பிராணனும் அபாணனும் முறையே உள் மூச்சு மற்றும் வெளி மூச்சு இவற்றுக்கு காரணமாகும் மூச்சுவிடுவதால் மட்டும் மனிதன் உயிர் வாழ்வதில்லை. அதற்கும் மேலே ஏதோ இருப்பதால் மூச்சுவிடுவது நடைபெறுகிறது.

அதாவது- மின் சாதனங்கள் மின்சாரத்தை சார்ந்தவை. ஆனால் சாதனங்களை மின்சாரம் சார்ந்திருப்பதல்ல. அதுபோல் உடல் இயக்கம் அனைத்தும் ஆன்மாவை மட்டும் சார்ந்திருக்கின்றன. ஆன்மாவிற்கு எதனையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்மாவிற்கு இல்லை மரணம் மரணத்திற்கு பின்னால் உயிரின் நிலை என்ன...? நசிகேதன் கேட்கிறார்.

யமதர்மன் சொல்கிறார்.

நசிகேதா.... மரணத்திற்கு பின்னால் உயிர் என்னவாகும் என்பது பற்றியும் ரகசியமானதும், அழிவற்றதுமான ஆன்மாவைப் பற்றி இப்போது கூறுகிறேன்....

மரணத்திற்கு பிறகு உயிரைக் தாங்கிக்கொண்டிருந்த அந்த மனிதனின் கர்மவினைகளுக்கு ஏற்ப, மனித உடம்போ விலங்கின உடம்போ தாவரங்கள் போன்ற நிலைகளை அடைகின்றனர்.  பிறவி, மறுபிறவி வினைப் பயனை தொடர்ந்தே அமையும்.

எனவே, நாம் எதைச் செய்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை.

எண்ணமே வாழ்வு என்ற கோட்பாட்டின்படி ஆரோக்கியமான எண்ணங்கள் நமக்கு மறுபிறவியில் நல்ல நிலையை தருகின்றன. ஒரு பிறவியின் செயலும் அனுபவமும் அதற்கேற்ப அடுத்த பிறவியாக அமையும். 

புலன்கள் தூங்கும்பொழுது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விதித்திருக்கிறதோ அதுவே தூய மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. 

அதாவது, ஜீவன் வெளியேறும்பொழுது இறுதியாக அந்த புலன்கள் எதை நினைத்து வெளியேறுகிறதோ அதுவாகவே மாறுகிறது. 

இந்த வித்தியா சத்தை நாம் உணர வேண்டுமானால் நாம் எதையாவது நினைத்து உறங்கும் பொழுது கனவில் அதுவாகவே மாறி இருப்போம்.

ஆனால் விழித்துக் கொண்ட உடன் ஸ்தூல உடலுக்கு வந்துவிடுவோம். அதேசமயம் மரணத்திற்கு பின்னர் இந்த உடலுக்கு திரும்ப முடியாததாகையால், அந்த உலகிற்கே சென்றுவிடுவோம்.

எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனை கடக்க யாராலும் முடியாது. 

இது உண்மையா எனில் தூக்கமும், கனவும் இன்னமும் நமக்கு புதிர்களே..! இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் முடியவில்லை. இது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. பலர் மனோதத்துவ வழியில் சென்று ஆராய்ந்தாலும் உண்மை நிலை அகப்படுவதில்லை. 

சுருக்கமாகச் சொன்னால் உடம்பும், மனமும் கருவிகள். அவற்றுக்கு ஓய்வு தேவை. 

உடம்பு ஓய்வெடுத்தால் அது தூக்கம். மனம் தூங்குவதில்லை. கனவுகள் அப்போது வருகின்றன. அங்கே ஏதுமில்லை. வாகனங்கள் இல்லை, சாலைகள் இல்லை. விலங்கினங்கள் இல்லை, களிப்பு இல்லை, இன்பம் இல்லை, குணம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை, ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன என எதுவும் இல்லை இவைகள் அனைத்தையும் உருவாக்கி தருபவன் அவனே..!

(இதைத்தான் கீதையில் கண்ணன் கூறுகிறார் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய் என்று. ஆன்மாவிற்கு எதுபோலவும் உருமாறும் சக்தி உள்ளது. அது நம் எண்ணத்தில் உள்ளது. ஆகவேதான் அவர் இறுதியாக தன்னையே நினைத்து சரணடைந்து பிறவிப் பெருங்கட--ருந்து விடுபட வழி சொல்கிறார்.

ஆனால் மனிதனோ இறக்கும்போது விடுபட்டு போகும் சொந்த பந்தங்கள் உற்றார்- உறவினர், தொழில், சொத்து இவற்றை நினைத்து மீண்டும் இவற்றுக்குள்ளேயே வந்து பிறக்கின்றான்)

இதன்காரணம் இவ்வாறும் அராயப்படுகிறது. விழிப்புணர்வில் ஆராயப்பட்ட, நடைபெற்ற நிகழ்ச்சிகள், தொடர்ச்சியாகக் கனவிலும் வருகிறது. சிலநேரங்களில் நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடும் இவையே.! சிலவேளைகளில் இவை எதிர்காலத்தைப் பற்றியும் எச்சரிக்கலாம். இது மன உலகம், தனி உலகம்.

நாம் அயர்ந்து உறங்கும்பொழுது, ஒருவர் மட்டும் தூங்குவதில்லை. அவரால்தான் நாம் எல்லாவற்றையுமே உணரமுடிகிறது. அதுவே நீ, அதுவே ஆன்மா..! அது இல்லாவிட்டால் தனியே உறங்கும் ஒருவன் தான் நன்றாக தூங்கினதாக எப்படி உணரமுடியும்..?

அந்த ஆன்மாவால் நாம் மூன்று நிலைகளில் சஞ்சரிக்க வேண்டியிருக்கிறது விழிப்புணர்வு, கனவு, ஆழ்ந்த உறக்கம், அந்த நிலையில் உடம்பின் மாற்றங்களோ, மனதின் செயல்பாடுகளோ, நம்மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை உடம்பின் மாற்றமாகிய மரணமும் நம்மைப் பாதிக்காத நிலைக்கு நாம் சென்றுவிடுகிறோம்.

அதுவே நீ என்ற தியானப் பகுதி. இதற்கு மூன்று உவமைகள் அது என்ன..?

ஆன்மாவின் உவமைகள்

நசிகேதன் அந்த ஆன்மாவைப் பற்றிய மூன்று உவமைகள் என்ன..?

யமதர்மன்

அக்னி, காற்று, சூரியன், அக்னி.

அக்னி 

ஒன்றுதான் அது. பல்வேறு பொருள்களில் அந்தந்த வடிவத்தில் அமைகின்றன.

அம்மாதிரியே ஆன்மா எந்தெந்த பொருள்களில் உறைகிறதோ அந்தந்த பொருள்களுக்கேற்ப உயிரினங்களுக்கு ஏற்ப அந்தந்த வடிவத்தில் விளங்குகின்றன.

அதேநேரம் அந்த வடிவங்களுக்கு வெளியிலும் அது திகழ்கிறது.

(அத்வைத கொள்கையில் ஒரு பகுதி என்னவெனில் ஒரு கொசுவில் தங்கியிருக்கும் ஆன்மா அதன் அளவிலும் யானையில் தங்கியிருக்கும் ஆன்மா அதன் அளவிலும் இருப்பதாக நம்புவது அவர்களின் கொள்கை.)

ஒரு மரத்துண்டில் அக்னியை நாம் எங்கு பற்ற வைத்தாலும் அது பற்றிகொள்கிறது.

அக்னிக்கு நடுப்பகுதி, நுனிப்பகுதி என்பது பற்றி கவலையில்லை. அக்னி அந்த மரத்துண்டு முழுவதிலும் வியாபித்துள்ளது. 

மரத்துண்டு எரியும்போது, அக்னி பாதிக்கப்படுவதில்லை. அதுபோலவே ஆன்மாவும்.

அக்னி போன்றதே ஆன்மா. உடல் மரணமடைந்து எரியும்போது  அது பாதிக்கப்படுவதில்லை.

உடல் காலத்தால் பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் என்று பாதிக்கப்படுவதேயாகும். 

அதை இயக்கிய ஆன்மாவாகிய நீ எக்காலத் திலும் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை,

காற்று

காற்று ஒன்றுதான் அதற்கு இடம், பொருளுக்கேற்ப அந்தந்த சூழ்நிலைக்கேற்ப அதனை நாம் பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

தென்றல், இதமான காற்று, சூறாவளி, மழையை கலைக்கும் காற்று, புயல், டைபூன், சுனாமி, டார்னடோ, ஊழிக்காற்று இவையெல்லாம் காற்றின் பெயர்கள்தான்.

ஒரு குடும்பத்தின் ஒரு குடும்பத் தலைவன் பல பெயர் வடிவங்களை எடுத்துக்கொள்கிறான் தந்தை, தாய்க்கு மகன், மனைவிக்கு புருஷன், தம்பிக்கு அண்ணன், மாப்பிள்ளைக்கு மாமனார்,  இப்படி சொல்-க்கொண்டே போகலாம். 

ஒரு சிறிய குடம் அதனுள் கடல் நீரை நிரப்புகிறோம். தண்ணீர் குடத்தின் உள்ளே இருக்கும்பொழுது அது குடம் நீர். அதை மறுபடியும் கட-ல் கொட்டினால் அது பெரிய வடிவம் பெற்ற கடல் நீராகிறது. 

அதுபோலத்தான் ஆன்மாவும்.

அது எங்கும் நிறைந்தது அதேபோல் ஒவ்வொரு உயிரினமும் அதற்கேற்ப வடிவங்களை பெறுகிறது. கடல் நீரால் குடம் பாதிக்கப்படுவதில்லை. ஆன்மாவும் உடம்புகளால் பாதிக்கப்படுவதில்லை.

ஆன்மா பெருவிரல் அளவில், ஒளி வடிவில் இருப்பதாக அறிகிறோம். ஆனால் அந்த ஒளியின் அளவு குறையாது. ஆன்மாவின் வடிவம் மட்டும் மாறுவதாக உபநிஷதம் கூறுகிறது. ஆன்மா அப்படியேதான் இருக்கிறது. அது மாறுவதில்லை.

சூரியன்

சூரியன் ஒன்றுதான் அவன் எல்லோராலும் பார்க்கப்படுகிறார். பார்வை கோளாறு சூரியனின் உருவத்தையே- ஒளியையோ மாற்றுவதில்லை.

அதுபோல் ஆன்மா எல்லோருடைய  இதயத்திலும் இருந்தாலும் உடம்பில் இருந்தாலும் அதனை தாங்கும்  மனிதனின் சுக- துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. அது இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. 

தாமரைப்பூ, மல்-கை, முல்லை மலர்வதும். இனிக்கும் பழங்களும். எட்டிக்காயும், பாகலும் பழுப்பு சூரிய வெப்பத்தால் மட்டுமே..! பழங்கள் மலர்களின் குண தோஷங்கள் சூரியனை பாதிப்பதில்லையே..! 

மரணத்தால் பாதிக்கப்படாதது ஆன்மா ஒன்றுதான். அந்த ஆன்மாதான் நான் என்று உணர முடியும்பொழுது, அதுதான் பெரிய விஷயம். இதனை உணரத் தவம் வேண்டும். ஆன்மிகச் சாதனைகள் வேண்டும்..!

-தொடர்ந்து பார்ப்போம்!

செல்: 96599 69723