ஒருவரின் முக அழகுக்கு தலைமுடி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தலைமுடி குறைவாக இருந்தாலும் முறையற்றிருந்தாலும் முக அழகு பாதிக்கப்படும். ஒருசிலர் இதன் காரணமாக பல ஆயிரம் செலவுசெய்து செயற்கை முடி வைத்துக் கொள்ளக்கூடிய பழக்கங்கள்கூட தற்போது அதிகரித்து வருகிறது. தலைமுடி பற்றி ஜோதிடரீதியாக இங்கு பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் தலையை குறிக்கக்கூடிய ஸ்தானம் ஜென்ம லக்னம் ஆகும். காலபுருஷப்படி முதல்
ஒருவரின் முக அழகுக்கு தலைமுடி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தலைமுடி குறைவாக இருந்தாலும் முறையற்றிருந்தாலும் முக அழகு பாதிக்கப்படும். ஒருசிலர் இதன் காரணமாக பல ஆயிரம் செலவுசெய்து செயற்கை முடி வைத்துக் கொள்ளக்கூடிய பழக்கங்கள்கூட தற்போது அதிகரித்து வருகிறது. தலைமுடி பற்றி ஜோதிடரீதியாக இங்கு பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் தலையை குறிக்கக்கூடிய ஸ்தானம் ஜென்ம லக்னம் ஆகும். காலபுருஷப்படி முதல் ராசி என வர்ணிக்கப்படக்கூடிய மேஷ ராசியும் தலையை குறிக்கக்கூடிய பாவமாகும். ஒருவர் ஜாதகத்தில் முக அழகு சிறப்பாக இருப்பதற்கு ஜென்ம லக்னத்தை சுபகிரகங்கள் பார்வை செய்வது, ஜென்ம லக்னத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும், ஜென்ம லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலும் தலை முடி போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்பட்டு அதன்காரணமாக முக அழகு பாதிக்கப்படும்.
நவகிரகங்களில் உஷ்ண கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய் ஜென்ம லக்னத்தில் சாதகம் இல்லாமல் இருக்கின்றபொழுது தலையில் முடி பாதிப்பு ஏற்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயின் ராசிகளான மேஷம், சிம்மம் விருச்சிகமாக ஜென்ம லக்னம் அமைவது ஒருவருக்கு தலை முடி ரீதியாக நல்ல அமைப்பு கிடையாது.
நவகிரகங்களில் கருப்பு நிறத்திற்கு காரணமான சனி பகவானும் தலைமுடிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். அதுபோல முக அழகுக்கு சந்திரன், சுக்கிரன் முக்கிய பங்குவைக்கிறது. ஜென்ம லக்னத்தில் சந்திரன் சுக்கிரன் பலமாக அமையப்பெற்று சுப கிரக பார்வையோடு இருந்தால் முக அழகு சிறப் பாக இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தை சூரியன், செவ்வாய் பார்வை செய்தாலும் ஜென்ம லக்னத்தில் சூரியன் செவ்வாய் பலவீனமாக அமையப்பெற்றாலும், சூரியன், செவ்வாய், சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங் களை பார்வை செய்தாலும் முடி உதிர்ந்து தலை வழுக்கையாகக்கூடிய அமைப்பு ஏற்படுகிறது. லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெறுவதும் நல்லதல்ல.
ஜென்ம லக்னத்தை சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்து சுப கிரக பார்வை இல்லாமல் இருக்கின்றபொழுது முறையற்ற முடி அமைப்பு உண்டாகிறது. பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு உஷ்ணம் கிரகங்களான சூரியன், செவ்வாய் தொடர்பு ஏற்படுகின்ற பொழுதும் பாவ கிரகங்கள் சூரியன், செவ்வாய், ஜென்ம லக்னத்தை பார்க்கின்றபொழுதும் முடி உதிரல் பிரச்சினை உண்டாகிறது.