Advertisment

சாயி மகானின் அற்புதங்கள்! - சாய் ராம்ஜி

saibab

"ஓம் சரவணபவ' மாத இதழ் இப்போ நெம்பர் ஒன் ஆன்மிக இதழா, ஒரு ஆன்மிக தகவல் களஞ்சியமா வந்துட்டிருக்குதுங்குறது தமிழ் மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியான செய்தி. இந்த இதழ்ல அடியேன் சாயிபாபாவோட அற்புதங்களை பல ஆண்டுகளா தொடர்ந்து பகிர்ந்துகிட்டு வந்தேன். கொரோனா பரவலுக்குபிறகு அது கொஞ்ச காலம் தடைபட்டது. ஆனா இப்போ மீண்டும் உங்களோடு சாயி மகானின் அற்புதங்கள் மூலமா சந்திக்கிறேன். அதற்காக பாபாவுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.

Advertisment

இந்த இதழ் மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த "நக்கீரன்' குழுமத்தின் நிறுவனர், "ஓம் சரவணபவ' ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால் ஐயாவுக்கும், இந்த புத்தக நிறுவனத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு புத்தகம் பிறக்குறது ஒரு எழுத்தாளரால மட்டுமில்ல; அதுக்கு பின்னால நிறைய மனசுகள் உழைக்கணும்! நம்பிக்கையோட காத்திருக்கணும்! 

Advertisment

அந்த நம்பிக்கையோட இந்த அற்புதங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

அடுத்தது இந்த புத்தகத்தை தேடிவந்து இப்போ இந்த பக்கத்தை திறந்து படிக்க ஆரம்பிச்சிருக்குற நீங்க... ஆம்; நீங்கதான்! உங்களுக்கே இந்த புத்தகம். நீங்க இல்லனா இந்த அனுபவங்களுக்கும் இந்த வார்த்தைகளுக்கும் அர்த்தமே இல்லை. இந்த புத்தகத்துல சொல்லப்போறது கற்பனை கதைகள் இல்ல. பெரிய பெரிய அலங்கார வார்த்தைகளும் இல்ல. நம்ம வண்டலூர் வழித்துணை பாபாவை நம்பி நடந்த நிஜ வாழ்க்கை, அற்புதங்கள், கண்ணீரோடு கேட்ட பிரார்த்தனைகள், கண்ணீரோடவே கிடைச்ச பதில்கள் இதெல்லாம்தான் நான் இங்க பகிரப்போறது.

இங்க இனிமேல் எல்லாமே பேச்சுத்தமிழ்லதான் உங்க பக்கத்து வீட்டுக்காரர் உட்கார்ந்து அனுபவம் சொல்லுறமாதிரி... பெருசா அலங்காரம் இல்ல. ஆனா மனசுக்குள்ள இருக்குற வார்த்தைகள். இதுல நான் உங்களுக்கு பாபாவை புதுசா காட்டப்போறதில்லை. ஏன்னா பாபா ஏற்கனவே உங்க வாழ்க்கையில இருக்கிறார். அந்த பாபாவோட நட்பையும் நம்பிக்கையையும்தான் இங்க பகிரப்போறேன்.

வாங்க...
நம்ம வண்டலூர் வழித்துணை பாபாவோட
அற்புதங்களுக்குள்ள நுழைவோம்...
நம்பிக்கையோட...
பக்தியோட...
மனசு நிறைய...

அற்புதம் 1 

திருச்சி மாவட்டத்திலிருந்து வந்த ஒரு சாயிபக்தர் நம்ம வண்டலூர் வழித்துணை பாபா கோபுரத்துக்குள் நுழைந்த அந்த நாளே ஒரு மன

"ஓம் சரவணபவ' மாத இதழ் இப்போ நெம்பர் ஒன் ஆன்மிக இதழா, ஒரு ஆன்மிக தகவல் களஞ்சியமா வந்துட்டிருக்குதுங்குறது தமிழ் மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியான செய்தி. இந்த இதழ்ல அடியேன் சாயிபாபாவோட அற்புதங்களை பல ஆண்டுகளா தொடர்ந்து பகிர்ந்துகிட்டு வந்தேன். கொரோனா பரவலுக்குபிறகு அது கொஞ்ச காலம் தடைபட்டது. ஆனா இப்போ மீண்டும் உங்களோடு சாயி மகானின் அற்புதங்கள் மூலமா சந்திக்கிறேன். அதற்காக பாபாவுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.

Advertisment

இந்த இதழ் மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த "நக்கீரன்' குழுமத்தின் நிறுவனர், "ஓம் சரவணபவ' ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால் ஐயாவுக்கும், இந்த புத்தக நிறுவனத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு புத்தகம் பிறக்குறது ஒரு எழுத்தாளரால மட்டுமில்ல; அதுக்கு பின்னால நிறைய மனசுகள் உழைக்கணும்! நம்பிக்கையோட காத்திருக்கணும்! 

Advertisment

அந்த நம்பிக்கையோட இந்த அற்புதங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

அடுத்தது இந்த புத்தகத்தை தேடிவந்து இப்போ இந்த பக்கத்தை திறந்து படிக்க ஆரம்பிச்சிருக்குற நீங்க... ஆம்; நீங்கதான்! உங்களுக்கே இந்த புத்தகம். நீங்க இல்லனா இந்த அனுபவங்களுக்கும் இந்த வார்த்தைகளுக்கும் அர்த்தமே இல்லை. இந்த புத்தகத்துல சொல்லப்போறது கற்பனை கதைகள் இல்ல. பெரிய பெரிய அலங்கார வார்த்தைகளும் இல்ல. நம்ம வண்டலூர் வழித்துணை பாபாவை நம்பி நடந்த நிஜ வாழ்க்கை, அற்புதங்கள், கண்ணீரோடு கேட்ட பிரார்த்தனைகள், கண்ணீரோடவே கிடைச்ச பதில்கள் இதெல்லாம்தான் நான் இங்க பகிரப்போறது.

இங்க இனிமேல் எல்லாமே பேச்சுத்தமிழ்லதான் உங்க பக்கத்து வீட்டுக்காரர் உட்கார்ந்து அனுபவம் சொல்லுறமாதிரி... பெருசா அலங்காரம் இல்ல. ஆனா மனசுக்குள்ள இருக்குற வார்த்தைகள். இதுல நான் உங்களுக்கு பாபாவை புதுசா காட்டப்போறதில்லை. ஏன்னா பாபா ஏற்கனவே உங்க வாழ்க்கையில இருக்கிறார். அந்த பாபாவோட நட்பையும் நம்பிக்கையையும்தான் இங்க பகிரப்போறேன்.

வாங்க...
நம்ம வண்டலூர் வழித்துணை பாபாவோட
அற்புதங்களுக்குள்ள நுழைவோம்...
நம்பிக்கையோட...
பக்தியோட...
மனசு நிறைய...

அற்புதம் 1 

திருச்சி மாவட்டத்திலிருந்து வந்த ஒரு சாயிபக்தர் நம்ம வண்டலூர் வழித்துணை பாபா கோபுரத்துக்குள் நுழைந்த அந்த நாளே ஒரு மனிதன் எவ்வளவு பாரத்தை மனசுக்குள்ள சுமந்துட்டு வரமுடியுமோ அவ்வளவு பாரத்தையும் சுமந்துகிட்டே வந்திருந்தார். நடைமெதுவாக இருந்தது. பார்வையில் சோர்வு இருந்தது. ஆனாலும் அந்த கண்களில் எங்கோ ஒரு மூலையில் இன்னும் அணையாத ஒரு நம்பிக்கை ஒளிர்ந்துகிட்டே இருந்தது. உட்கார்ந்ததும் ரொம்ப நேரம் பேசவே இல்ல. அப்புறம் மெதுவா சொன்னார். சாய்ராம்ஜி பத்து வருஷமா கடன் என் வாழ்க்கை முழுக்க துரத்திக்கிட்டே இருக்கு. வீடு கட்டினதுக்காக ஆரம்பிச்சது. அப்புறம் தொழில் நஷ்டத்தால பெருசா வளர்ந்துடுச்சு. ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டுறதுக்கே ஓடுறேன். குழந்தைகளோட படிப்ப நினைச்சா மனசு பதறுது. யாரை பார்த்தாலும் கண் தாழ்த்தி பேசுற நிலை வந்துடுச்சு. வாழ்க்கையே ஒரு ஓட்டமா மாறிடுச்சு.

அந்த வார்த்தைகள் வெறும் பணத்தோட கஷ்டத்தை மட்டும் சொல்லல. அந்த மனிதருக்குள்ள உடைந்துகொண்டிருந்த தன்னம்பிக்கையையும் சேர்த்து சொல்லுச்சு. அந்த நேரம் பணம் எங்கிருந்து வரும் என்று சொல்லவில்லை. பெரிய பெரிய வாக்குறுதிகளும் இல்லை. ஏன்னா நம்ம வண்டலூர் வழித்துணை பாபா பணத்தை நேர்ல தர்றவர் இல்ல. 

பணம் தேடிவர வழியை மனசுக்குள்ள உருவாக்குறவர். அதனால ஒரே ஒரு விஷயம்தான் சொன்னேன். தினமும் இரவு தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் மட்டும் இந்த எண்ணத்தை மனசுக்குள்ள சொல்லிக்கோங்க. நான் என் கடனுக்கு அடிமை இல்ல. என் கடன் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. இந்த வார்த்தையை நீங்க உங்க மனசுக்குள்ள நம்பிக்கையா மாத்திக்கோங்க. அப்புறம் உங்க வருமானம் செலவு இரண்டையும் எழுத ஆரம்பிங்க ஒரு ரூபாய்கூட அலட்சியப்படுத்தா தீங்க. பாபா உங்க ளோட கணக்குப் புத்தகத்துக்குள்ளதான் முதல்ல வேலை செய்ய ஆரம்பிப்பார்.

அந்த சாயிபக்தர் இதை ஒரு சாதாரண அறிவுரையா எடுத்துக் கொள்ளவில்லை. அதை ஒரு ஆன்மிகப் பயிற்சியா எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு இரவும் அந்த ஒரே வாக்கியம் மனசுக்குள்ள ஒலிக்க ஆரம்பிச்சது. நாட்கள் நகர்ந்தது. வாழ்க்கையில சின்ன சின்ன மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சது. தேவையில்லாத செலவுகள் தானா குறைய ஆரம்பிச்சது. மறந்துபோன பழைய தொழில் தொடர்பு ஒன்று மீண்டும் வாய்ப்பாக மாறியது. ஒரே தடவையில பெரிய பணம் வரல. ஆனா ஒவ்வொரு மாதமும் கடன் மெதுவா குறைய ஆரம்பிச்சது.

ஆனா இதைவிட பெரிய மாற்றம் மனசுக்குள்ள நடந்தது முன்னாடி இருந்த பதற்றம் போய் ஒரு தெளிவு வந்தது. பயத்தோட பணத்தை பார்த்த அந்த மனம் இப்போ புரிதலோட பணத்தை கையாள ஆரம்பிச்சது. ஒருநாள் மீண்டும் கோபுரத்துக்கு வந்தபோது சொன்னார். "சாய்ராம்ஜி இன்னும் கடன் முழுசா தீரல. ஆனா இப்போ எனக்கு பயமே இல்ல. ஏன்னா இப்போ வருமானமும், செலவும் என் கையில இருக்கு. இன்னும் கொஞ்சநாள்ல எல்லாம் சரியா போயிடும்னு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை உறுதியா வந்துடுச்சு'' அவர் அந்த வார்த்தைகள் சொல்லும்போது அந்த முகத்தில் தோன்றிய அமைதி பணத்தைவிட பெரிய செல்வமா தோன்றியது.

அந்த நேரம்தான் முழுசா புரிஞ்சது நம்ம வண்டலூர் வழித்துணை பாபா கடனை மாயமா தூக்கி எறிய மாட்டார். ஆனா கடனுக்கு அடிமையா இருந்த மனசை முதல்ல விடுவிப்பார். அந்த மனசு விடுபட்டபிறகு பணம் தானாக வழி தேடி போக ஆரம்பிக்கும். இதுதான் சாயி அற்புதம். வெளியில் தெரியுற பணமாற்றம் மட்டும் இல்ல. உள்ளுக்குள்ள நடக்கும் சுயகட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையின் பிறப்பு.

இந்த அற்புதம் சொல்லும் ஒரு உண்மை உண்டு. பணம் இல்லாம போகலாம். ஆனா நம்பிக்கை இல்லாம போகக்கூடாது. அந்த நம்பிக்கையை விதைக்கும் விதைதான் நம்ம வண்டலூர் வழித்துணை பாபா.

அற்புதம் - 2

வெளிநாட்டுக்கு, டாக்டருக்கு படிக்கவைக்கணும்னு கனவு கண்டு பணத்த கொட்டி பையனை அனுப்பிச்ச ஒரு டாக்டர் குடும்பம் அந்த நாள்லிருந்து நிம்மதியையே இழந்துடுச்சு. போனவன் போனவன்தான். போன் இல்ல. ஈமெயில் இல்ல. எந்த தகவலும் இல்ல. அந்த நாட்டு காலேஜ்ல கேட்டா பையன் வரலன்னு சொல்றாங்க. வருஷம் நாலு ஆகிடுச்சு. அரசாங்க வேலைல இருக்குற அந்த தகப்பனார் வெளிநாடு போக முடியல. தாய்க்கு படிப்பு அவ்வளவா இல்ல. எங்க போய் தேடணும்னு தெரியாம அந்த குடும்பம் தினமும் தவிச்சுட்டே இருந்தது. பிள்ளை உசுரோட இருக்குதா, இல்லையா? அப்படின்னு தெரியாம வாழுறதுதான் பெரிய வேதனை.

அப்படித்தான் அந்த குடும்பம் ஒருநாள் நம்ம வண்டலூர் வழித்துணை பாபா கோபுரத்துக்கு வந்தது. எங்கெங்கோ அலைஞ்சு கடைசியா பாபாவை தேடிவந்தாங்க. யாரோ ஒருத்தர் மஞ்சத்துணியில பதினோரு ரூபாய முடிஞ்சுவெச்சு பிரார்த்தனை செஞ்சா பத்து நாள்ல பாபா காண்பிப்பாருன்னு சொல்லி அனுப்பியிருந்தாராம். அந்த ஒரு வார்த்தையை பிடிச்சுக்கிட்டே அந்த தகப்பனாரும் தாயாரும் பாபாவை பார்த்து நீ எம்புள்ளைய எங்களுக்கு கொண்டுவந்து குடுத்தே ஆகணும்னு கண்ணீரோட துடிச்சாங்க. அந்த நேரம் அந்த வேதனை வார்த்தையால சொல்ல முடியாதது.

அந்த கோபுரத்துக்குள்ள அந்த குடும்பம் உட்கார்ந்ததும் ஒரு அமைதி பரவிச்சு அந்த அமைதிக்குள்ள திடீர்னு அந்த தாயும் தகப்பனும் ஒருத்தர ஒருத்தரை அணைச்சிக்கிட்டு அழுதாங்க. அந்த அழுகை சத்தமில்லாததா இருந்தாலும் அது உள்ளுக்குள்ள வெடிச்ச ஒரு சத்தம் மாதிரி இருந்தது. அவங்க எழுந்து கௌம்பலாம்ணு சொல்லும்போதே கோபுரத்துல யாரோ மணி அடிச்சாங்க. அந்த ஒலி, அந்த அமைதியை கிழிச்சமாதிரி இருந்தது. அதே நிமிஷம் அந்த தகப்பனாரோட செல்போன் மணி அடிச்சது. நாலு வருஷமா அமைதியா இருந்த அந்த போனுக்கு அது முதல் அழைப்பு. எல்லாருமே ஒரே நேரத்துல அதைப் பார்த்தாங்க. யாரோ ஒருத்தர் பேசினாரு உங்க பையன் நாளைக்கு உங்ககிட்ட பேசுவாருன்னு... அந்த வார்த்தை கேட்டதும் அந்த கோபுரத்துக்குள்ள இருந்த எல்லாருக்குமே மூச்சே நின்ற மாதிரி ஆயிடுச்சு.

அந்த மஞ்சத்துணியில முடிஞ்ச பதினோரு ரூபாயை பாபா முன்னாடி வச்சு ஒக்காந்து மன்றாடுங்கன்னு சொன்னேன். மறுபடியும் போன் அடிச்சது. இப்போ மகனே பேசினார். அந்த குரல் கேட்டதும் அந்த தாய் துடிச்சாங்க. பாபா அற்புதம் பண்ணிட்டீங்க. நாடு விட்டு நாடு போன எம்புள்ளைய காட்டி நல்ல வழிகாட்டிட்டீங்கன்னு கதறினாங்க. அந்த நேரம் அங்க இருந்த பக்தர்கள் எல்லாருமே உடனே எழுந்து அவங்களுக்கு ஆறுதல் சொன்னோம். அது ஒரு குடும்பத்துக்கான சந்தோஷம் மட்டும் இல்ல. அங்க இருந்த எல்லாருக்கும் ஒரு உயிர் திரும்ப கிடைச்ச மாதிரி இருந்தது.

சொல்லிவெச்ச மாதிரி அந்த மகன் ரெண்டே நாள்ல சென்னை ஏர்போர்ட்ல இருந்து நேரா வண்டலூர் வழித்துணை பாபா கோவிலுக்கு வந்தார். குடும்பத்தோட நடந்த அந்த சந்திப்பு, அந்த ஆனந்த கண்ணீர் அந்த இடம் முழுக்க பரவிய நன்றியின் நிசப்தம். அங்க இருந்த எல்லாருக்குமே பாபா செய்த அற்புதத்துக்கு செலுத்தின ஒரு உயிர் பிரார்த்தனைன்னுதான் சொல்லணும். அந்த நாள்ல நம்ம வண்டலூர் வழித்துணை பாபா மனிதர்களை மட்டும் சந்திக்க வைக்கல. நம்பிக்கையையும் சேர்த்து வச்சார்.

அற்புதம் - 3

நம்ம வண்டலூர் வழித்துணை பாபா கோபுரத்துக்கு ஒரு நாள் ஒரு கணவன்- மனைவி வந்தாங்க. வந்ததுல இருந்து இருவரும் ஒருத்தருக்கொருத்தர் முகம்கூட பார்க்கல. உள்ளே நுழைஞ்சதும் கணவன் ஒரு பக்கம் உட்கார்ந்தார். மனைவி வேறொரு பக்கம் உட்கார்ந்தார். பேசுறது தூரம். பார்ப்பதுகூட தூரம். அந்த தூரத்துக்குள்ளதான் அந்த குடும்பத்தோட உடைந்த நிலை ஒளிஞ்சிருந்தது. ஆரம்பத்துல எல்லாமே நல்லாதான் இருந்தது. சிரிப்பும் சந்தோஷமும் சண்டையும் எல்லாம் வாழ்க்கையோட ஒரு பாகம்தான். ஆனா காலம் போக போக சொல்லாத வார்த்தை கள், புரியாத பார்வைகள், சேராத மனசுகள் இதெல்லாம் மெதுவா பெருசா ஆயிடுச்சு. பெரிய சண்டை இல்ல. ஆனா பேசாம இருக்குறதுதான் பெரிய சண்டையா மாறிடுச்சு. வீட்டுக்குள்ள ஒரே வீட்டுல இருந்தும் தனித்தனியா வாழுற மாதிரி ஆயிடுச்சு.

அந்த கணவன்- மனைவி நம்ம கோபுரத்துக்கு வந்தது யாரையும் குறைசொல்ல வரல. யாரிடமும் புகார் சொல்ல வரல. ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. இது இப்படியே முடியாம இருக்கணும். அதுக்குமேல என்ன செய்யணும்னு அவங்களுக்கே தெரியல. அதனாலதான் தினமும் வர ஆரம்பிச்சாங்க. பெருசா உட்கார மாட்டாங்க. பாபாவை பார்த்துட்டு சும்மா நின்னு இருப்பாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசவே மாட்டாங்க. ஆனா அந்த அமைதிக்குள்ளதான் பாபா வேலை செய்ய ஆரம்பிச்சார்.

ஒருநாள் கணவன் மெதுவா சொன்னார். இப்போ சண்டை போடணும்னு தோணல. அந்த ஒரு வரி பெரிய வார்த்தை இல்ல. ஆனா அந்த குடும்பத்துக்கு அதுமுதல் வெளிச்சம். இன்னொரு நாள் மனைவி சொன்னார். பேசாம இருக்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தை பல நாளா சேர்ந்த மௌனத்தை உடைச்சது. அதுக்கப்புறம் உடனே எல்லாம் சரியாயிடுச்சுன்னு சொல்லமுடியாது. இன்னும் வலி இருந்தது. இன்னும் புரிதல் வராத இடங்கள் இருந்தது. ஆனா ஒரே ஒரு விஷயம் மாறிச்சு. மனசு உடையாம இருந்தது. முன்னாடி நம்ம வாழ்க்கை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்ச மனசு இப்போ இன்னும் முயற்சி பண்ணலாம்னு நினைக்க ஆரம்பிச்சது அந்த மாற்றமே அற்புதம்.

ஒருநாள் இருவரும் சேர்ந்து சிரிச்சதை பார்த்தோம். ஒரே மேஜையில உட்கார்ந்து சாப்பிட் டதை பார்த்தோம். ஒரே இடத்துல உட்கார்ந்து பாபாவை பார்த்ததை பார்த்தோம். அந்த சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிய வெற்றியா தோணிச்சு. நம்ம வண்டலூர் வழித்துணை பாபா பெரிய வார்த்தைகள் சொல்லல. பெரிய வாக்குறுதிகள் கொடுக்கல. ஆனா உடைந்த மனசை மெதுவா சேர்க்குற அமைதியை கொடுத்தார். இதுதான் பாபா செய்ற அற்புதம்.  ஒரு குடும்பம் திரும்ப சேர்ந்தது மட்டுமில்ல ஒரு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. அதுதான் உண்மையான சாயி அற்புதம்.         

-சாயி அற்புதங்கள் தொடரும்

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe