Advertisment

நன்மை என்பதன் பொருள்! இறைசக்தியும் அறிவியலும்..

iyappan

வாழ்நாளில் ஒருமுறையாவது காசி சென்று வந்தால் நல்லது. திருப்பதி சென்று வந்தால் நல்லது. இந்தக் கோவி-ல் இத்தகைய சிறப்பு உள்ளது. குழந்தைகளுக்குத் திருமணமாகவில்லை என்றால் திருமணம் நடைபெற அந்தக் கோவிலுக்கு சென்றுவந்தால் நல்லது. இந்த காரியங்களுக்கு இந்தக் கோவி-ல் இந்த பூஜை செய்தால் நல்லது. இந்த நாட்களில் இவற்றை செய்தால் நல்லது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று தலையில் தீர்த்தம் தெளிப்பது நல்லது.

Advertisment

திருமணத்தில் இத்தகைய சடங்குகளை செய்வது நல்லது. இவ்வாறு நூற்றுக்கணக்கான சடங்குகளை செய்கிறோம். பொங்கல், கார்த்திகை தீபம், தீபாவளி என பல்வேறு விசேஷ நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்கிறோம். இந்த நாட்களில் இத்தகைய சடங்குகள் செய்யவேண்டும் என்றும் அவற்றை செய்தால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்றும் நாம் நம்புகிறோம். 

Advertisment

பல்வேறு சடங்குகளை செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியாமலே அத்தகைய சடங்குகளை செய்கிறோம். சுப காரியங்கள் என்று வரும்போது அதற்கு எத்தகைய சடங்குகளை செய்யவேண்டும், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்று கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு செய்கிறோம்.

இதுபோன்ற சடங்குகளுக்கு என்ன காரணம் என்று பெரியோர்களை கேட்கும்பொழுது பலருக்கு தெரியவில்லை.

ஒருசிலர் அவர்களுக்கு தெரிந்த விளக்கங்கள் கொடுக்கிறார்கள். அவற்றில் பல ஏற்புடையதாக இல்லை. பொதுவாக எல்லோரும் சொல்வது. 

"இந்த சடங்கை செய்தால் நல்லது.' "இவை நன்மை தரும்' என்ற பதில் மட்டும்தான். எனவே நல்லது என்றால் என்ன? நன்மை தரும் என்றால் என்ன?

இந்தக் கண்ணோட்டத்தில் எவையெல்லாம் நல்லவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளதோ, அவற்றையெல்லாம் விவரம் தெரிந்த காலத்தில் இருந்து தவறாமல் செய்து வந்தால் ஒருவருடைய வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்கவேண்டும்.

அவரது வாழ்க்கை செல்வ செழிப்புடன் அமைந்தி ருக்கும். அவருக்கு வாழ்நாள் முழுவதும் வறுமையே வராது.

வாழ்நாள் முழுவதும் எத்தகைய நோய் நொடி களும், உடல் உபாதைகளும் இல்லாமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்வார்.

எந்த ஒரு பிரச்சினையும் வராது. எத்தகைய துன்பங்களும் அவரை அணுகாது. அவரை ஏமாற்ற நினைப்பவர்கள், துரோகம் செய்ய நினைப்பவர்கள், கஷ்டப்படுவார்கள்.

அவருக்கு விபத்து ஏற்படாது. அகால மரணம் ஏற்படாது. அவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு இருப்பார். அவரை சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவரது புண்ணியம் அவரது குழந்தைகளுக்கும் சென்றடையும். அவரது குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் நல்லது நடக்கும் என்றால் என்ன? என்று தெள

சுருக்கமாகச் சொல்வதானால் நல்லது நடக்கும் என்றால் என்ன? என்று தெளிவாக தெரியாவிட்டாலும் நல்லது அல்லது புண்ணியம் என்பது உடலுக்கும் மனதுக்கும் எவையெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறதோ அவை அனைத்தும் கிடைக்கும்.

எவையெல்லாம் உடலுக்கும் மனதுக்கும் துன்பம் அளிக்கிறதோ அவை நம்மை நெருங்ககூட முடியாது என்ற தீவிர நம்பிக்கை நம் மனதில் ஆழமாக உள்ளது. 

இந்த நம்பிக்கையில்தான் நாம் ஓடி ஓடி சடங்குகளை செய்கிறோம். நம் வீட்டில் இருக்கும் முருகனையும் பெருமாளையும் முழுமையாக நம்பாமல் இந்தக் கோவி-ல்தான் முருகனுக்கு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அதை முழுமையாக நம்புகிறோம்.

இந்தக் கோவி-ல்தான் பெருமாளுக்கு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அதை முழுமையாக நம்புகிறோம்.

அத்தகைய தீவிர நம்பிக்கையில் கோவில் கோவில்களாக செல்கிறோம். இவையனைத்துக்கும் காரணம் குறுக்குவழியில் நமக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற தீவிர நம்பிக்கைதான்.

திருமணத்தில் இந்த சடங்குகளை எல்லாம் செய்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற தீவிர நம்பிக்கை. கும்பாபிஷேக தீர்த்தம் தலையில் தெளித்து விட்டால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற தீவிர நம்பிக்கை. இந்தக் கோவிலுக்கு சென்று வந்துவிட்டால் நமக்கு தேவையானது எல்லாம் கிடைக்கும் என்ற தீவிர நம்பிக்கை.

கூட்டமாக இருக்கும் கோவில்களில் வசதி இருப்பவர்கள் ஒரு மணிநேரம் வரிசையில் நிற்பதற்கு பதிலாக பணம் செலுத்தி சிறப்பு வழியில் சென்று உடனடியாக இறைவனிடம் புண்ணியத்தை வாங்கிக் கொள்ளமுடியும் என்ற தீவிர நம்பிக்கை.

உண்மையில் எந்த சடங்கு செய்தாலும் இறை சக்தியையும் மனதையும் ஒன்றுபடுத்தினால் மட்டும்தான் நல்லது நடக்கும். 

எனது திருமணத்தில் கணவன்- மனைவியாக அக்னியை சுற்றி வரும்பொழுது, ஐயர் கூறியது இன்று வரை என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

"எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், யார் தவறு செய்தாலும் அதை மற்றவர் பொருட்படுத்தாமல், வாழ்நாள் முழுவதும் உன்னோடுதான் வாழ்வேன் என்று அக்னி சாட்சியாக உறுதி கூறுகிறேன் என்று நினைத்துக்கொண்டு அக்னியை மூன்றுமுறை சுற்றி வாருங்கள்'' என்றார். மூன்றுமுறை வலம்வந்த அந்த மூன்று நிமிடங்களும் அவர் சொன்னதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டதன் பலன், திருமணமாகி 33 ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் ஐயர் கூறியது நினைவுக்கு வந்தவுடன் மனம் அமைதியாகும். விட்டுக்கொடுக்கும் எண்ணம் வலுப்பட்டுவிடும்.

அக்னியை சுற்றி வரும்பொழுது இறைசக்தியையும் மனதையும் ஒன்றுபடுத்தியதன் பலன்தான் அதற்கு முழுமையான காரணம்.

சடங்குகளுக்கு தெளிவான காரணம் நமக்கு தெரியவேண்டும். மேலும் மனம் இறைசக்தியோடு முழுமையாக ஈடுபடவேண்டும். புரிந்து கொள்ளமுடியாத வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதைபோலவே, நாமும் பல்வேறு விஷயங்களில் புரியாமலும், இறைசக்தியோடு ஒன்றுபடாமலும் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் நன்மை தரவே தராது.

பழக்க வழக்கம்

தீவிர நம்பிக்கை என்பதுபோலவே பழக்க வழக்கம் என்பதை பற்றியும் நமக்கு சரியான புரிதல் வேண்டும். ஏனென்றால் இறை சக்தியையும் மனதையும் ஒன்றுபடுத்தி நம் வாழ்க்கையை வளப்படுத்தும் வ-மை பழக்க வழக்கம் என்னும் புரித-ல் தான் அடங்கியுள்ளது. தன்னிச்சை யாக செய்யக்கூடிய அனைத்தும் பழக்க வழக்கங்கள். சாப்பிடுவது, பல் துலக்குவது, வாகனம் ஓட்டுவது போன்றவை பழகிய பின்னர் திரும்பத் திரும்ப செய்துகொண்டே இருப்பதால்தான் அவை தன்னிச்சையாக நடைபெறுகிறது.

வாகனம் ஓட்டும்பொழுது மனம் வேறு செயல்களில் இருந்தாலும் யாராவது குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்த முடிகிறது. வேறு சிந்தனைகள் இருந்தாலும் சாப்பிடும்பொழுது தானாக உணவு வாய்க்கு செல்கிறது.

எனவே இறைவனை நினைக்கும் போதெல்லாம் மனதில் தோன்றும் எண்ணங்களில் எது சரி- எது தவறு என்று சிந்திப்பதை எப்பொழுதும் பழக்கமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே நமது எண்ணம் இறைசக்தியோடு ஐக்கியமாகி அசுர சக்தியில் இருந்து விடுதலை அடைய இயலும்.

நமக்கு உண்மையில் எது பழக்கமாக இருக்கிறது என்றால் அசுர சக்திகளான வஞ்சக எண்ணங்களும், சூழ்ச்சிகளும் பொறாமைப்படுவதும், துரோக சிந்தனைகளும் பழக்கமாக மாறியுள்ளது. மற்றவர்களது துன்பங்களைக் கண்டு சந்தோஷப்படும் மனநிலை பழக்கமாக மாறியுள்ளது.

மனதை நேர்மறைப்படுத்தாமல் குறுக்குவழியில் இறைவனிடமிருந்து வரம் பெற்றுவிடலாம் என்று நினைத்தால் நீங்கள் அசுர சக்திக்கு முழுமையாக அடிமையாகிவிட்டீர்கள் என்றுதான் பொருள்.

அசுர சக்தியில் இருந்து விடுபட வேண்டுமானால் இறைவனை நினைக்கும்பொழுது எல்லாம் எண்ணங்களிலுள்ள சரி- தவறுகளை கண்டுபிடிப்பது உங்கள் பழக்கமாக மாறவேண்டும்.

அசுர சக்தியில் இருந்து விடுபடுவது எப்படி?

இன்றி-ருந்து நடைமுறையில் அதை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முதல்படியாக தினம் 20 நிமிடம் மட்டும் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். முத-ல் ஒரே ஒரு தவறான எண்ணத்தை கண்டுபிடிக்கவேண்டும். யாரை நினைத்தால் நமது மனம் மிகவும் கோபப்படுகிறதோ, துன்பப்படுகிறதோ அவரைப் பற்றிய எண்ணங்களில் மனதை செலுத்தி அவர்மேல் இருக்கும் நியாயங்கள் என்ன என்று மிகவும் பொறுமையாக சிந்தியுங்கள். நமக்கு சம்பந்தப்படாத சாலையில் செல்லும் யாரிடமும் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நமது நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது செய்யும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் போன்றோரிடம்தான் நமக்கு மனம் காயப்படும் அளவுக்கு பிரச்சினைகள் உருவாகின்றன. நண்பராக பழகி பணத்தை ஏமாற்றிவிட்ட நபர் ஒருவரை நினைத்தாலே கோபம் வருகிறது. அவரைப் பற்றி சிந்திப்பதே கோபத்தை அதிகப்படுத்துமானால் இறைசக்தியையும், மன்னித்தல் என்ற குனத்தையும் அவரையும் ஒன்றுபடுத்துங்கள். 

அத்தகைய சிந்தனை பழக்கமாக மாறும்வரை தினமும் 20 நிமிடம் ஒதுக்கி அந்த சிந்தனையை தீவிர படுத்துங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி இதற்கு தகுந்த உதாரணமாக இருக்கும். குடும்பத்தில் எனது தாயார் எல்லாரையும்விட மூத்தவர். அவருக்கு கீழ் மூன்று தம்பிகள் மற்றும் மூன்று தங்கைகள். அம்மாவின் மூத்த தம்பி, எனது பெரிய தாய்மாமாதான் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்தவர். எங்கள் எல்லாருக்கும் தேவையான எல்லாவற்றையும் செய்தவர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மாவின் கடைசி தம்பிக்கு திருமணம். திருமணத்தை பெரிய தாய்மாமாதான் முன்நின்று செய்தவர். திருமணத்துக்கு முந்தைய நாள் பல்வேறு சடங்குகள். அவற்றில் ஒன்று மணமேடையில் ஒருசில சடங்குகள் முடிந்த பின்னர் குலதெய்வ அமுது படைத்து பூஜித்தல்.

பின்னர் குடும்ப உறவுகள் ஒன்றுசேர்ந்து மணமேடையிலேயே சாப்பிடுவது. சாப்பிடுவதற்கு நானும் மேடையில் உட்கார்ந்து இருக்கிறேன். எல்லாரும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்துவிட்டோம். பெரியப்பாவுக்கு இடம் கிடைக்கவில்லை. உடனே பெரிய மாமா "எழுந்திரிடா' என்று என்னை எழுப்பிவிட்டு பெரியப்பாவை உட்கார வைத்தார். சுற்றிலும் உறவினர்கள். 

யாரைப் பார்த்தாலும் அவமானமாக இருந்தது. 

அப்படியே கீழே இறங்கிவந்து மண்டபத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டேன். அன்று சாப்பிடவே இல்லை.

எப்பொழுது நினைத்தாலும் அந்த நிகழ்வு மனதை மிகவும் துன்பப்படுத்தும். அந்த நிகழ்வை என் தாயாரிடம் மட்டும் பகிர்ந்துகொண்டேன்.

தாயாரோ மாமா எங்கள் குடும்பத்திற்காக என்னென்ன செய்தார் என பலவற்றையும் நினைவுபடுத்தி சமாதானப்படுத்துகிறார். சிறுவயதி-ருந்தே வறுமைதான். அன்றாட உணவை தவிர மற்ற எந்த தேவையும் எனது தந்தையால் நிறைவேற்ற முடியவில்லை. படிப்பதற்கு பள்ளிக்கு பணம் கட்டுவது முதற்கொண்டு புத்தகம், தீபாவளிக்கு  துணி எடுத்துக் கொடுப்பதுவரை அனைத்தும் எனது மாமாதான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் அவர் செய்திருக்கிறார். பள்ளிக்கு முழு ஆண்டு விடுமுறை என்றாலே ஒரு மாதம் மாமா ஊர்தான். எங்கள் ஊர் சாப்பாட்டுக்கு பஞ்சமே கிடையாது. வாரம் ஒருமுறை சினிமாவுக்கு அனுப்பிவிடுவார். புது துணி மணி கிடைக்கும். இவற்றையெல்லாம் எனது தாயார் எடுத்துச் சொன்னபொழுது என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. பத்து ஆண்டுகள் அந்த கோபமும் அவமானமும், மனதைவிட்டு நீங்கவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நேர்மறை சிந்தனைகள் வளர்ந்து வரும்பொழுதுதான் அந்த நிகழ்வு என்னை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது.

அதுவும் கோவி-ல் வரிசையில் நிற்கும்பொழுதுதான் அந்த எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறர் நிலையில் நின்று பார்க்கும் மனப்பக்குவம் வந்தபின்னர்தான் எது சரி- எது தவறு என்று நடுநிலையோடு பார்க்க முடிந்தது. ஒருமுறை விடுமுறை முடிந்து ஊருக்கு (ஊட்டி) எங்களைக் கொண்டுவந்து விடுவதற்கு மாமாவும் எங்களுடன் வந்திருந்தார். பேருந்தில் இருந்து இறங்கியதும் ஒரே மழை. மாமா இரண்டு புதிய குடைகள் வாங்கினார். இரண்டு கிலோமீட்டர் தள்ளி எங்கள் வீட்டுக்கு ஆட்டோவில் கொண்டுவந்து விட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு குடைகளை எங்களுக்கே கொடுத்துவிட்டு சென்றார். மழை வருகிறது ஒரு குடை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னாலும் வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்- இரண்டு குடைகளையும் எங்களுக்கு கொடுத்துவிட்டு சென்றார். கோவி-ல் அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும்பொழுது கண்ணில் நீர் வர ஆரம்பித்துவிட்டது. 

அந்த எண்ணங்களுக்கு பிறகுதான் மாமாவின் பக்கமுள்ள நியாயம் சிந்தனையில் உதிக்க ஆரம்பித்தது. மணமேடையில் பெரியப்பாவுக்கு சாப்பிடுவதற்கு இடம் இல்லாததால் உட்கார்ந்தவர்களில் யாரை எழுப்பலாம் என்று பார்த்து என்னைவிட மற்றவர்கள் முக்கியமானவர்கள் என்று முடிவு செய்துதான் என்னை எழுப்பி இருப்பார் என்ற நியாயம் புரிய ஆரம்பித்தது.

அந்த நிகழ்விற்கு பின்னால் கோவிலுக்கு போகும்போதெல்லாம் எனது எண்ணங்களை சரி பார்க்கும் பழக்கம் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளில் எண்ணங்களை பரிசோதிக்கும் செயல் பழக்கமாகி, கோவிலுக்கு சென்றால் மட்டுமின்றி எங்கிருந்தாலும் யார்மீது கோபமோ, பொறாமையோ, தோன்றும்போது எல்லாம். உடனடியாக அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்கள் தெளிவாக புரிய ஆரம்பித்தது.

அதன்விளைவாக தீவிர நம்பிக்கையாக மாறியது "எல்லாரும் நல்லவரே' என்ற தத்துவம். என் மனதில் இப்போது யாரைப் பற்றிய கோபமும் இல்லை. பிறர் தவறே செய்தாலும் அவருக்கென்று ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் என்று என் மனம் நம்ப ஆரம்பித்துவிட்டது. மீண்டும் மீண்டும் என்னை ஏமாற்றும் ஒருசிலர்மீது வெறுப்பு எனக்கே தெரியாமல் மறைந்திருக்கும். ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலைபோட்டு நேர்மறை சிந்தனைகள் வலுப்பெறும்பொழுது அவர்கள்மீதுள்ள வெறுப்பும் மனதில் இருந்து மாயமாய் மறைய தொடங்கிவிட்டது.

-சிந்தனையை வலுப்படுத்துவோம்.

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe