"நீ அழகாக இல்லை... பேச மாட்டாய்.... நடனமாட மாட்டாய்!''- இந்த வார்த்தைகளுடன் ரூபி அத்தை, வட இந்தியாவிலுள்ள பாட்டிக்குச் சொந்தமான பங்களாவின் நீளமான கூடத்தின் ஒரு மூலையிலிருக்கும் தன் கலை வேலைப்பாடுகள் கொண்ட கூண்டிற்குள் இருந்தவாறு ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் நீளமான வாலைக் கொண்ட அதிர்ஷ்டமற்ற கிளியைக் கிண்டல் பண்ணுவாள்.

Advertisment

அந்த நாட்களில் கிட்டத்தட்ட அனைவரும்- இந்தியனாக இருந்தாலும்... ஐரோப்பாக்காரனாக இருந்தாலும், ஒரு செல்லமான கிளியையோ அல்லது ஒரு நீள வாலைக் கொண்ட கிளியையோ அல்லது "லவ் பேர்ட்' என்று அழைக்கப்படும் சிறிய பறவைகளையோ வளர்ப்பார்கள். சில நேரங்களில் இந்த பறவைகள் மிகப் பெரிய பேச்சாளராகவோ அல்லது மிமிக்ரி செய்பவர்களாகவோ அல்லது முழு மந்திரங்களையும் கூறுவதற்குக் கற்றவர்களாகவோ (ஆன்மிக மந்திரங்கள்) அல்லது வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறுபவர்களாகவோ... உதாரணத் திற்கு...

Advertisment

"படி, குழந்தை, படி'' அல்லது என்னைப் போன்ற சிறுவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ள "பேராசைப்படாதே! பேராசைப் படாதே!'' என்று கூறுபவர்களாகவோ ஆகி விடுவார்கள்.

ஒரு வகையில் கூறுவதாக இருந்தால்.... இந்த விஷயங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வீட்டில் இருப்பவர்களில், பறவைக்குப் பேசுவதற்குக் கற்றுத் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் யாரோ, அவர்களின் தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு, கிளிகள் கற்றுக்கொள்கின்றன.

Advertisment

ஆனால், நம் கிளி பேச மறுத்துவிட்டது.

எங்களின் சாலையிலிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் வருகை தரக்கூடிய... பறவைகளைப் பிடிக்கும் ஒரு மனிதனிடமிருந்து அவனை ரூபி அத்தை விலைக்கு வாங்கினாள். பல வர்ணங்களைக்கொண்ட காதல் கிளிகளில் இருந்து சிலிர்க்க வைக்கும் சிறிய குருவிகள் வரை அவன் விற்பனை செய்யும் கூண்டுப் பறவைகளில் இருக்கும். இன்னும் கூறுவதாக இருந்தால்... சாதாரண குருவிகள் கூட இருக்கும்.

அவற்றிற்கு வர்ணம் அடித்து, மிகவும் மதிப்பு வாய்ந்த உயிரினம் என்று கூறி, கையிலிருந்து கடத்தி விடுவான். கூண்டுப் பறவைகளை பாசப் பறவைகளாக வளர்ப்பதில் பாட்டிக்கோ தாத்தாவிற்கோ விருப்பம் கிடையாது. தனக்கு ஒரு வழி கிடைக்காவிட்டால், ரூபி அத்தை  கோபத்தை வெளிப்படுத்தி பயமுறுத்துவாள். ரூபி அத்தையின் கோபங்கள் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும்.

எது எப்படியோ...

கிளியைத் தான் வைத்திருக்கவேண்டும் என்பதி லும், அதை பேசுவதற்குக் கற்பிக்க வேண்டும் என்பதிலும் அவள் பிடிவாதமாக இருந்தாள். ஆனால், அந்த பறவை என் அத்தையின் மீது ஆழமான வெறுப்பை வைத்திருந்தது.

அவளுடைய அனைத்து அர்த்தமற்ற செயல்களையும் அது எதிர்த்தது..

"முத்தம்.... முத்தம்!''- ரூபி அத்தை உரத்த குரலில் கத்தினாள். அவள் தன் முகத்தைக் கூண்டின் கம்பிக்கு அருகில் வைத்துக் கொண்டு கூறினாள். ஆனால், கிளி பின்னோக்கி நகர்ந்தது. ரூபி அத்தை முத்தம் கொடுத்து விடுவாளோ என்பதால் உண்டான கோபம் காரணமாக அதன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்கள் மேலும் சிறியவையாக ஆயின. ஒருநாள் எந்தவித எச்சரிக்கையும் விடாமல் அது முன்னோக்கி நகர்ந்து என் அத்தையின் கண்ணாடிகளை மூக்கிலிருந்து கீழே விழுமாறு செய்தது.

அதற்குப் பிறகு, ரூபி அத்தை தன் அன்பான நடவடிக்கைகளை விட்டெறிந்து விட்டு, அந்த அப்பிராணி பறவையிடம் கடுமையாக நடக்க ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்து கூறுவாள்: "பேசமாட்டாய்... பாடமாட்டாய்... ஆட மாட்டாய்!''. இதற்கும் மேலாக சில கெட்ட வார்த்தைகளையும்...

கிளிக்கு இரை கொடுக்கும் வேலை என்மீது வந்து விழுந்தது. அப்போது எனக்கு பத்து வயது. என் கைகளிலிருந்து பச்சை மிளகாய்களையும், பழுத்த தக்காளிகளையும் பெற்றுக்கொள்வதில் அது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவே தோன்றியது. இந்த உணவுப் பொருட்களுடன், மாம்பழ சீஸன் வேறு நடந்துகொண்டிருந்ததால், மாம்பழங்களும் அளிக்கப்பட்டன.

கிளிக்கு உணவு தரும் சாக்கில் இரண்டு மாம்பழங்களைச் சாப்பிடக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு பிற்பகல் வேளையில், அனைவரும்  சிறிய தூக்கத்தில் இருக்க, நான் கிளிக்கு மதிய உணவை அளித்துவிட்டு, வேண்டுமென்றே கூண்டின் கதவைத் திறந்து வைத்தேன். சில நொடிகளுக்குப் பிறகு, திறந்து கிடந்த மாந்தோப்பை நோக்கி அந்தப் பறவை தன் வழியில் சிறகடித்துப் பறந்து சென்றது.

அதே நேரத்தில் வாசலுக்கு வந்த தாத்தா கூறினார்:

"உன் அத்தையின் கிளி தப்பித்துச் சென்று விட்டதை நான் பார்க்கிறேன்.''

"கதவு இறுக்கமாக இல்லாமல் இருந்தது''- ஒரு குலுக்கலுடன் நான் கூறினேன்:

"நல்லது... நாம் அதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்று நான் நினைக்கிறேன்.''

ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த ரூபி அத்தை இன்னொரு பறவையை வாங்கப்போவதாக மிரட்டலுடன் கூறினாள். ஒரு பாத்திரம் முழுவதும் இருக்கும் வண்ணம் தங்க மீன்களை அவளுக்கு வாங்கித் தருவதாகக் கூறி, அவளை நாங்கள் அடக்கிவைத்தோம்.

"ஆனால், தங்க மீன்கள் பேசாதே!''- அவள் எதிர்த்தாள்.

"இருக்கட்டும். உன் பறவை கூடத்தான் பேசாது''- தாத்தா கூறினார்: 

"அதனால்... நாங்கள் உனக்கு ஒரு இசைத்தட்டு இயக்கும் கருவியை (க்ராமோஃபோன்) வாங்கித் தருகிறோம். நாள் முழுக்க நீ க்ளாரா க்ளக்கைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவள் ஒரு வானம்பாடியைப் போல பாடுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.''

மீண்டும் கிளியை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தன் பச்சை மிளகாய்களை தான் இழந்துவிட்டதாக அது நினைத்திருக்கும் போலிருக்கிறது.

ஏனென்றால், சில நாட்களுக்குப் பிறகு, வாசலில் இருந்த வேலியில் அந்தப் பறவை அமர்ந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வைத்தவாறு, அது எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

சுயநல உணர்வின்றி, என் மாம்பழத்தில் பாதியை நான் கிளிக்கு அளித்தேன்.

மாம்பழத்தைச் சுவைத்து கிளி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, தன் அறையிலிருந்து வெளியே வந்த ரூபி அத்தை ஆச்சரியத்துடன் சத்தமாக கத்தினாள்: "பாருங்க... என் கிளி திரும்பவும் வந்துவிட்டது! அதற்கு என் நினைவு வந்திருக்கவேண்டும்!''.

உரத்துக் கத்தியவாறு, கிளி அவளின் கண்கள் படும் இடத்திலிருந்து பறந்து சென்று, அருகிலிருந்த ரோஜா புதரில் சென்று அமர்ந்து ரூபி அத்தையைப் பார்த்தவாறு, அவளுடைய வழக்கமான குரலில் கூறியது: "நீ அழகாக இல்லை... பேசமாட்டாய்... பாடமாட்டாய்.... ஆட மாட்டாய்!''

ரூபி அத்தை கோபமடைந்து, வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.

ஆனால், விஷயம் அத்துடன் முடியவில்லை.

தோட்டத்திற்கும் வாசலுக்கும் அடிக்கடி வரக்கூடிய விருந்தாளியாக கிளி  ஆனது.

எப்போதெல்லாம் ரூபி அத்தையைப் பார்க்கிறதோ, அப்போது அது சத்தமாகக் கூறும்:

"நீ அழகாக இல்லை... நீ அழகாக இல்லை....! பாடமாட்டாய்... ஆட மாட்டாய்!''

எது எப்படியோ.... கிளி பேசுவதற்குக் கற்றுக்கொண்டுவிட்டது.