ராகு ஓர் அரக்கன். தேவர் களுக்கும், அரக்கர்களுக்குமிடையே அமுதம் கிடைத்தபோது திருட்டுத் தனமாக வேடமிட்டு அமுதம் அருந்தியவன். எனவே, இந்த கலியுகத்தில் அல்லது இருண்ட காலம் என்று சொல்லப்படுகிற இக்காலத்தில் எல்லா பிரபலங்களும், அவர்கள், எவ்வளவு பெரிய தீமைகள் மற்றும் லஞ்ச லாவண்யங்கள் செய்து பிரபலமாகி இருந்தாலும், மக்கள் அந்த நபர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி துதிபாடும் நிலைக்குக் கொண்டுசென்று உயர்த்தி விடுகிறான் "தி கிரேட் ராகு' என்றால் மிகையாகாது.

Advertisment

ராகுவைப் பற்றி அறியும்முன், 7-ஆம் பாவத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

7-ஆமிடம் மொத்த சமுதாயத்தையும் குறிகாட்டுகிறது, அதேசமயம், 11-ஆமிடம் என்பது, நம்மிடம் இருந்து வேறுபட்ட, தனிப்பட்ட மனிதர்கள் நிறைந்த கூட்டத்தை குறிக்கிறது.

Advertisment

இது மற்றவர்களைக் குறிப்பதால், இந்த வீடு, கூட்டு, ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட், நெகோஷியேஷன்ஸ், பார்கெயினிங் மற்றும் கூட்டாளி ஆகியவற்றையும் குறிகாட்டுகிறது.

7-ஆம் வீடு அடிப்படையில், வியாபாரத்தைக் காட்டும். மற்றும் போர், அமைதி, ராஜதந்திரம் மற்றும் எதிர் பார்வை நிலைகளை சமன்பட வைப்பதையும் குறிகாட்டுகிறது.

Advertisment

7-ஆமிடம் எதிர் பாவத்தில் அமைவதால், எதிர்பாலரைக் குறிக்கிறது. 

எனவே, அது காமம் மற்றும் காதல் உறவு களையும் குறிக்கும். திருமணம்- இது ஒருவகையான ஒப்பந்தமும் ஆகும். ஆனால், காம முறைகள்- விளையாட்டு கள் மற்றும் அதற்கான சக்தி எட்டா மிடத்தில் குறி காட்டப்படுகிறது.

7-ஆம் வீடு 12-ஆம் வீட்டுக்கு, 8-ஆம் வீடு ஆவதால், மாரக ஸ்தானம் மரணத்தைக் குறிக்கிறது. 10-ஆம் வீட்டுக்குப் பத்தாம் வீடாவதால் பணி மற்றும் தொழில் வளர்ச்சி மற்றும் முக்கிய அதிகார நிலைகளையும் குறிக்கும். 4-ஆம் வீட்டுக்கு 4-ஆம் வீடாவதால், மக்கள் கூட்டம் மற்றும் பொதுஜனங்களைக் குறிக்கிறது. 9-ஆம் வீட்டுக்கு 11-ஆம் வீடாவதால், லாபங்களையும், மத செயல்பாடுகளையும் குறிக்கும். குரு மகா ஜனங்களின் சீடர்களையும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், புனித மகான் களையும் குறிக்கும். மேலும் உயர் கல்வி மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் குறிக்கும். 11-ஆமிடத்துக்கு 9-ஆமிடம் ஆவதால், குளோபல் (உலக) ஆதாயங்களையும், பின்பற்றுதலும், உலகப் புகழையும், வெளிநாட்டு லாபங்களையும் குறிக்கும்.
7-ல் ராகு கூட்டாளிகளை அமைத்துகொள்வதில், கட்டட ஒப்பந்தம் மற்றும் நட்புகளை அமைத்துக் கொள்வதில் அதிக ஆசைகள் இருக்கும். 

ராகு ஏழில், பிறருடன் ஜோடிசேர கட்டாய நிலைக்குத் தள்ளும். அதன்காரணமாக பலதார மணத்திற்கு, பல உறவுகளுக்கும், பல தொழில், வியாபார கூட்டாளிகளும், ரகசிய காதல் மண உறவுகளுக்கும், காம சுகங்களும், ஏற்பட வழிவகை செய்யும்.  இராகுவானவர், இணைவுகளிலும், ஒப்பந்தங்களிலும், திருமணம் மற்றும் மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகளிலும், ஒரு நிரந்தரமான நிலையை ராகு தரமாட்டார் எனலாம். ராகுவுக்கு வெளிநாட்டுக் காரகமும் உள்ளபடியால், வெளிநாட்டு நபருடன் தொடர்பு, திருமணம், கூட்டுத்தொழில், கூட்டாளி  மற்றும் நம்மை விட உயர்ந்த நிலை உடையவர்களின் தொடர்பு ஆகியவற்றுக்குக் காரணமாகிறது.

7-ஆமிடம், சமூகத்தையும் மக்கள் கூட்டத்தையும் குறிப்பிடுவதால், 7-ல்  பலமிக்க, நல்ல ராசியிலுள்ள, ராகு மற்றும் அவருக்கு இடம் கொடுத்தவரும் பலமிக்கவராக இருக்க, ஜாதகருக்கு மிக்க புகழையும், தருவதோடு, ஜாதகரை மக்களிடையே கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திவிடுவார்.

7-ஆம் வீடு ராஜதந்திரம், சமநிலை பேணுதல் குறி காட்டுவது என முன்னரே குறிப்பிட்டிருந்தோம். எனவே, ராகு 7-ஆமிடத்தில் இருக்கும்போது, பொறுமையுடன் நெகோஷியேஷன் செய்வதற்கும், மக்களிடையே அல்லது இருசாராரிடையே பேசி சமாதானம் செய்து, பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கும் துணைபோகிறது. இவ்வாறானவர்கள், 

ஜாதக பரிவர்த்தனை செய்வதற்கு, மீடியேட் டராகவும், தரகராகவும், கமிஷன் ஏஜண்டுகளாகவும் விளங்கலாம். இந்தப் பணிகளில் இருப்பவர்கள் எப்போதும் தனி ஆளாக செய்யாமல், பலரோடு சேர்ந்து செய்வார்கள். அவர்கள் ஒருவர் ஆக அல்லது தனி ஆளாக இருப்பது சிரமம். ராகு மற்றவர்களுடன், உதாரணமாக ரொமான்டிக் காதலர், வியாபார கூட்டாளி போன்றவர்களை எண்ணி, உள் மனக் குடைச்சலை ஏற்படுத்துபவர். ஏனெனில், கேதுவானவர், லக்னத்தில் இருப்பதே ஆகும். இப்படிப்பட்டவர்கள், தன் தன்மைகளை தானே உருவாக்கிக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும், தனது சுய அடையாளத்தைத் தொலைத்து, உங்களை சமூகத்திடம் அல்லது மக்களிடம் ஒப்படைத்து, அவர்கள் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவார். அதில், ராகுவோ அல்லது அவருக்கு இடம் கொடுத்தவன், பாதிப்பில் இருந்தால் மேற் சொன்னவர்களை குருட்டுத்தனமாக பின்தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

ராகு, திருமணத்தின் மூலமாகவும், கூட்டாளிகளின் மூலமாகவும் மிகப்பெரிய வெற்றிகளையும், பணிகளில் மற்றும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களையும் அளிக்கமுடியும்.

உறவுகள் மற்றும் நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோருடன் வாழ்க்கையில் நல்லுறவுகளை பேணுவதில் ஏற்படும் அனுபவமே "கர்மா' ஆகும். இதில், சவால் என்னவென்றால், நாம் நமது சுய அடையாளத்தைத் தொலைத்து, நம்மை சமூகத்திடம், மக்களிடம் ஒப்படைத்து, அவர்கள் சொல்வதைக் கேட்கும் நிலைக்கு ஆளாகாமல் இருப்பதே ஆகும். காம ராசியிலுள்ள ராகு பக்தி மாற்றதுக்கான முன்னேற்றங்களுக்கு சவாலாகவும், தடையாகவும் இருப்பான். 7-ஆம் வீட்டிலுள்ள ராகு, விருப்ப பாவமான மூன்றையும், லாப மற்றும் ஆசைகள் நிறைவேறும் பாவமான 11-ஆம் பாவத்தையும் பார்வை செய்வதால், லாபங்களையும், சந்தோஷங்களையும் இழக்கும் நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார்.

அமிதாப்பச்சன்ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை இன்றும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவில், உலக சினிமாவில் சரித்திரம் படைத்த சிறந்த கலைஞர் அமிதாப் பச்சன் ஆவார். 

அவருக்கும், ரேகா போன்ற சக நடிகைகளுக்குமிடையேயான உறவுகள் கிசுகிசுக்கப்பட்டது. ராகு 7-ல் இருந்த காரணத்தால் அளவிடமுடியாத ரசிகர்களை உலகம் முழுவதும் கொண்டிருந்தார். 4-க்கு 4-ஆமிடமான 7-ஆமிடம், பப்ளிக் கவர்ச்சி, அழகு மற்றும் கிரியேட்டிவிட்டி என சொல்லப்படுகிற புதிய பரிமாண நடிப்புத் திறன், ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 7-ஆம் அதிபதி சூரியன் 8-ல்  (லெகசி, மற்றவர்களின் அபிப்பிராயம் மற்றும் ரகசியங்களைக் குறிக்குமிடம்) உள்ளார்.

ராகு களத்திர பாவத்தில் இருந்தபடியால், சமூக தேவைகளுக்கு ஏற்ப தன் குணத்தையும், தன் எதிர்பார்ப்புகளையும் அடிக்கடி மாற்றிக்கொள்ள முடிந்தது. 9-க்கு 11-ஆம் பாவம் களத்திர பாவம் ஆதலால், உலகம் முழுவதும் புகழ் அடைந்தார். உலக அழகிப் போட்டிகள் அவர் நடத்தியதற்கு, 7-ஆமிட ராகுவே காரணம். 8-ல் உள்ள 7-ஆமிடத்து அதிபதி சூரியன், அவருக்கு அதில் முரண்பட்ட கருத்துக்களையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தியது.

இப்படி 7-ல் ராகு செய்யும் மாயங்கள்  ஜாதகர்கüடம் தொடர்கிறது.