சிம்ம லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்
சிம்ம லக்ன 8-ஆம் அதிபதி குரு. இவர் சிம்ம லக்னத்தின் 12-ஆமிடமான கடகத்தில் உச்சமடைவார்.குரு, கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் உங்களின் அதிர்ஷ்டம், உங்களின் குறுக்கு புத்தியால் மட்டுமே கிடைக்கும். குறுக்கு புத்தி லாபம் எனில், அது வக்கில், ஆடிட்டர்கள், ஜோதிடர்கள், இன்ஷூயூரன்ஸ் அதிகாரிகள், அரசியலில் மந்திரிகள், பங்கு வர்த்தகர்கள், சினிமா போன்ற கலையுலகம் என இந்தமாதிரி இனங்கள் நல்ல அதிர்ஷ்டம் தரும்.சிம்ம லக்னத்தாருக்கு, 8-ஆம் அதிபதி, உச்சமாகும் இடம் 12-ஆமிடம். இது ஒரு கெட்ட பாவ கிரகம். இன்னொரு கெட்ட பாவத்தில் மறைகிறது என்றாகும். எனவே சிம்ம லக்னத்தாருக்கு, வரும் யோகம் மிகவும் அரிதானதாக, உலகில் மற்றவருக்கு எளிதில் கிடைக்க இயலாதவகையில் அமையும்.இது புனர்பூச நட்சத்திரத்தில் நிற்பதால் மட்டுமல்ல; அடுத்து பூச நட்சத்திரத்தில் நின்றாலும், இவ்விதமே அபூர்வமான அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவர். ஏனெனில் பூச நட்சத்திர சார அதிபதி சனி அவர் 6-ஆம் அதிபதி. அவர் 12-ல் மறையும்போது, உச்சமும், அவரது காலில் 8-ஆம் அதிபதி நின்றால், அந்த அதிர்ஷ்டமும் அரியவகையில் அமையும். சிம்ம லக்ன 8-ஆம் அதிபதி, ஆயில்ய நட்சத்திரத்தில் நின்றால், இவர்கள் அரசியல் பேசி, பேசியே, நல்ல அதிர்ஷ்டத்தை கயிறு கட்டி இழுத்து வந்துவிடுவர். அத்தனையும் பொய், பொய்யைத் தவிர வேறு பேச மாட்டார்கள் எனத் தனியாக சொல்ல வேண்டியதில்லை.சிம்ம லக்னத்தாரின் 8-ஆம் அதிபதி குரு. இவர் உச்சமானாலும், நீசமானாலும் இவர்களின் மறைவு ஸ்தானங்களில் அவ்வமைப்பு பெறுகிறார். எனவே சிம்ம லக்னத்தார் வெளிப்படையாக சண்டை இடுவார்கள் தவிர சம்பவம் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்ய வேண்டுமென்றால் வேறு ஆட்கள்மூலம் செய்வார்களேயொழிய தானே தன் கையால் செய்யமாட்டார்கள். எனவே சிம்ம லக்ன 8-ஆம் அதிபதி அதிரிபுதிரி அதிர்ஷ்டம் தரமாட்டார்.
கன்னி லக்னத்துக்கு
8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்
கன்னி லக்ன 8-ஆம் அதிபதி செவ்வாய் ஆவார். இவர் உங்களின் 5-ஆமிடமான மகரத்தில் உச்சமடைவார். 8-ஆம் அதிபதியான செவ்வாய், மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் நின்றால், நீங்கள் உங்கள் வீர தீரத்தோடு, மற்றவர்களை விரட்டி அடித்து அதிர்ஷ்டம் காண்பீர்கள். அது துப்பறியும் ஏஜென்சி, கலையுலகின் சண்டை பயிற்சியாளர், வங்கியில் கடன் வாங்கியவர்களை, விரட்டி பிடித்து வசூல் செய்பவர்கள், மந்திரிகளுக்கு அரசு தரும் பாதுகாப்பு அதிகாரி, ரியல் எஸ்டேட் சம்பந்தமான வில்லங்களை பஞ்சாயத்து செய்பவர்கள் என இவர்களின் அதிர்ஷ்டம் இவ்விதம். இவர்கள் அதிர்ஷ்டம் வரும் வழிகளை ரொம்ப வெளியே சொல்லமுடியாத நிலையும் உண்டு.கன்னி லகன் 8-ஆம் அதிபதி செவ்வாய் திருவோண நட்சத்திரத்தில் நின்றால் கண்டிப்பாக மந்திரி பதவி இருக்கும். அரசியலின் அடாவடிகள் ஒன்று பாக்கி இல்லாமல் பின்பற்றுவர். இந்த விளங்காத செயலுக்கு, இவருடைய தாயார் அல்லது தம்பி அல்லது இளைய தாரம் என இவர்கள் வெகு உறுதுணையாக இருப்பர். அது மட்டுமல்ல, துணிச்சலாக சம்பவங்களும் செய்துவிட்டு, சிரித்துக்கொண்டே செல்லும் சமர்த்தர்கள்.கன்னி லக்ன 8-ஆம் அதிபதி செவ்வாய் அவிட்ட நட்சத்திரம் பெற்றால், இது வெகு வேறுபாடாக இருக்கும். இந்த அமைப்பு ஆயுள் விருத்தி தரும். மற்றபடி அதிர்ஷ்டம், யோகம் தருமா என்பது நிச்சயமில்லை. இவ்வமைப்பு, ஜாதகர்களை வீரமான பாதுகாவலர் ஆக்கலாம். அல்லது இரகசிய காதல் நிறைய இருக்கலாம். கள்ளக் கையெழுத்து போடுவதில் வெகு திறமைசாலியாக இருக்கலாம். நிறைய யோக நிகழ்வுகள் இருக்கும் என சொல்ல இயலாது.
துலா லக்னத்துக்கு
8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்
துலா லக்ன 8-ஆம் அதிபதி சுக்கிரன். இவரே துலா லக்ன அதிபதியும் ஆவார். இவர் 6-ஆமிடமான மீனத்தில் உச்சமடைவார்.துலா லக்ன 8-ஆம் அதிபதி மீனத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால் இவர்கள் வேலை வாங்கித் தருகிறேன் என்றோ, நல்ல ஏஜென்சி எடுத்துத் தருகிறேன் என்றோ, போலி பத்ரம் தயாரித்தோ, மோசமான செய்திகளை பத்திரிகை, டி.வியில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியோ, வீண் வழக்கு போட்டுவிடுவேன் என மிரட்டியோ என இந்தமாதிரி, ஒன்றுமேயில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கி, மிரட்டி, உருட்டி யோகத்தை தன் பக்கம் இழுத்து வைத்துக்கொள்வர்.துலா லக்ன 8-ஆம் அதிபதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால், இவர்களுடைய அதிர்ஷ்டம் அனைத்தும் கல்வி குழந்தைகள் சார்ந்ததாக அமையும். பள்ளிக்கு நிறைய சீர்திருத்தம் செய்கிறேன் என்று அனைத்து பணத்தையும் தன் பாக்கெட்டுக்கு திருப்பி விடுவது, சத்துணவு பொருட்களை விற்று, காசை தனதாக்கி கொள்வது, விளையாட்டு பயிற்சி, மனபல பயிற்சி, கல்வி ஞாபக சக்தி பயிற்சி, வீரக்கலைகள் பயிற்சி, எழுத்துப் பயிற்றி என இத்தனை பயிற்சிகளும் கொடுக்கிறேன் என்று அரசாங்கம் மற்றும் தனியார் உதவி, தர்ம மையங்களில் பணம் வாங்கி, பிறகு குழந்தைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தன் வசதியை பெருக்கிக் கொள்வது என யோகத்தை புறவாசல் வழியாக அழைத்துக்கொள்வர்.துலா லக்ன 8-ஆம் அதிபதி, மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் நின்றால் இவர்கள் தனது அதிர்ஷ்டத்தை, ஒன்லி வெளிநாட்டு சம்பந்த மட்டும்தான் வைத்துக்கொள்வர். உள்நாட்டு விஷயம் பிடிக்கவே பிடிக்காது. வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு கடன், ஏற்றுமதி, வெளிநாட்டு தீர்ப்பு சம்பந்தம், வெளிநாட்டு ஆன்மிகம், வெளிநாட்டு மீன் பிடித்தல், வெளிநாட்டு கள்ள கடத்தல், கரன்சி அச்சடிப்பது, அதுவும் டாலர் மட்டும்தான், ரூபாய்க்கு நோ என பலவாறாக, கெத்தாக, புத்திசாலித் தனமாக யோகத்தை தோள்மீது கைபோட்டு அழைத்துவருவர். இதன் உச்சமாக, சந்திரனுக்கு, ராக்கெட் ரெடி, டிக்கெட் நெறைய இருக்கிறது. முதலிலியே புக் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள் என செமத்தியாக கல்லா கட்டிவிடுவார்கள்.
விருச்சிக லக்னத்துக்கு
8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்
விருச்சிக லக்ன 8-ஆம் அதிபதி புதன் ஆவார். இவர் விருச்சிக லக்ன, 11-ஆமிடமான கன்னியில் உச்சமடைவார்.கன்னியில் புதன், உத்திர நட்சத்திரத்தில் நின்றால், அரசியலையே தொழிலாக கொள்வீர்கள். தொழிலே அரசியல் சார்ந்துதான் இருக்கும். நல்ல காலத்திலேயே, அரசியல்வாதிகளுக்கு நேர்மை என்றால் என்னவென்று தெரியாது. அதிலும் ஒரு 8-ஆம் அதிபதியின் சாரத்தில், அரசியல் ஸ்தானத்தில் உச்சம்பெறுவது மிக முக்கியமானது. உலகத்திற்கே, அரசியல்வாதியாக இருந்து எதிர்மறை தன்மையில் வெற்றிக்கொடி ஏற்றுவது எப்படி என சொல்லிக் கொடுப்பர். அந்தளவுக்கு மோசமாக இருப்பர். மேலும் இவர்களின் மூளையின் ஆற்றல், வெகு துரிதமாகவும், மின்னல்போல முடிவெடுக்கவும், எதிராளியை தனது புத்தி தீட்சணயத்தால், ஒன்றும் இல்லாமல் ஆக்கவும் இயலும். விருச்சிக 8-ஆம் அதிபதி, கன்னியில் ஹஸ்த நட்சத்திரத்தில் நின்றால், நோகாமல் நுங்கு தின்பது, வலிக்காமல் பிள்ளை பெறுவது என்று சொலவடை சொல்வார்களே, அதுபோல் ரொம்ப பிரயத்தனப்படாமல் தாங்கள் விரும்பிய விஷயத்தை எட்டிப் பிடித்துவிடுவர். இவர்களின் மனோ வேகம் மிக அபிரிதமாயிருக்கும். உடனுக்குடன் முடிவுஎடுத்து செயலாற்றுவர். அனைத்தும் தவறுதலாக, இருந்தாலும், அதனை பிறர் புரிந்துகொள்ள இயலாது. விருச்சிக 8-ஆம் அதிபதி, கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் அமர்ந்தால், இவ்வமைப்பு சிலாக்கியமில்லை. அட யோகம், அதிர்ஷ்டம் தராவிட்டாலும் பரவாயில்லை. ஜாதகரை, சிறையில் தள்ளாமல் இருந்தாலே போதுமானது. அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுவிடும். எனவே இந்த அமைப்பு யோகம் தராது. இதர லக்னங்கüன்
அதிர்ஷ்டம் வரும் இதழில்...
செல்: 94449 61845