நீல்கண்ட் மகாதேவ் மந்திர்.....
இந்த ஆலயம் உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. பாரி கார்வால் என்ற மாவட்டத்தில் இது இருக்கிறது.
இது ஒரு சிவன் ஆலயம்.
ரிஷிகேஷிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் மீது இருக்கிறது. திராவிட கட்டடக்கலை பாணியில் இந்த ஆலயம் இருக்கிறது என்பது இதன் சிறப்பம்சம்.
வட இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று இது. இந்த ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. நர நாராயணா என்ற மலைச் சிகரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
மணி கூட், பிரம்ம கூட், விஷ்ணு கூட் ஆகிய மலைகள் இருக்கும் பகுதியில் இந்த கோவில் இருக்கிறது. பங்கஜா, மதுமதி ஆகிய இரண்டு நதிகள் இதற்கு அருகில் ஓடுகின்றன.
புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் இந்த ஆலயம் உண்டானதாக வரலாறு. பாற்கடலைக் கடைந்த போது வந்த விஷத்தை சிவபெருமான் அருந்துகிறார். அப்போது அவரின் கழுத்தை அன்னைபார்வதி இறுக பிடிக்கிறாள். விஷம் கீழே இறங்கிவிடக்கூடாது என்பதற்காக அவள் அதைச் செய்கிறாள். விஷம் கழுத்திலேயே தங்கிவிடுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/sivan1-2025-11-04-16-01-08.jpg)
அதனால் கழுத்துப்பகுதி நீல நிறத்திற்கு மாறிவிடுகிறது. சிவபெருமான் விஷத்தைப் பருகிய இடம் இது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, கடலிலிருந்து 14 ரத்தினங்கள் கிடைத்தன. அவற்றில் விஷமும் ஒன்று. அந்த விஷத்தின் பெயர் "கால் கட்'.
அந்த விஷம் பூமியில் விழுந்திருந்தால் பூமியே அழிந்திருக்கும்.
பகவான் சிவன் விஷத்தை உட்கொண்டு பூமியைக் காப்பாற்றினார் என்பது வரலாறு.
அதற்குப்பிறகு, 60,000 வருடங்கள் அவர் தியானத்தில் இருந்திருக்கிறார்.
அவர் தவம் செய்த இடத்தில்தான் இந்த ஆலயத்தின் கர்ப்பக் கிரகம் இருக்கிறது. இந்த இடத்தில் இருக்கும் சிவலிங்கம் நாக்கு வடிவத்தில் இருக்கிறது.
ஆலயத்தில் கோபுரம் இருக்கிறது. பாண்டியர்களின் கட்டடக் கலை பாணியில் கோபுரம் இருக்கிறது.
இந்த கோபுரத்தில் தேவர்களின் உருவங்களும் அசுரர்களின் உருவங்களும் இருக்கின்றன.
இங்கு இருக்கக்கூடிய ஊற்றில், வரும் பக்தர்கள் நீராடுவார்கள். பிப்ரவரி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியும், சிராவண மாதத்தில் வரும் சிவராத்திரியும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். வில்வம், தேங்காய், பூ, பால், நீர், தேன், பழம் ஆகியவற்றை இங்கு சிவனுக்கு பிரசாதமாக வைக்கின்றனர்.
அப்போது காவடியுடன் எடுத்துக் கொண்டு வரப்படும் நீரால், சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் சென்னையிலிருந்து டில்லிக்குப் பயணிக்க வேண்டும். பயண நேரம் 32 மணிகள். டில்லியிலிருந்து ஹரித்துவாருக்குப் பயணிக்கவேண்டும். பயண தூரம் 223 கிலோமீட்டர். அங்கிருந்து நீலகண்டா மகாதேவ் ஆலயம் 52 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
பேருந்து, ஜீப் ஆகிய வாகனங்கள், பயணிப்பதற்கு இருக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/sivan-2025-11-04-16-00-57.jpg)