சனியிடம் அச்சம்கொள்ளும் மனிதன், அவரை தலை வணங்கி, மன்றாடி, மண்டியிட்டு, மன்னிப்பு கேட்டு, அவருடைய கருணைக்கும், தர்ம நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நிற்கின்றான்.
சனி ஒருவனுக்கு அவன் வாழ்க்கை பாதையில் பல கஷ்டங்களை கொடுத்து ஞானி ஆக்கிவிடுவதோடு, அவன் எவ்வளவு பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் பக்தி மார்க்கத்துக்கும் அழைத்துச் செல்கிறான். கால தேவன் சனி காலகாரகன் ஆகிறார். காலமே அனைத்து உலகுக்கும் எஜமானன் ஆகிறது. (மாஸ்டர் ஆகிறது.) மனித வாழ்க்கையின் பாதையை காலசக்கரம் அனுகூலமாகவும், பிரதி கூலமாகவும் மாற்றிவிடுகிறது. கர்ம வினைகள் கனியாகி புதிய மாற்றங்களை வாழ்க்கையில் உருவாக்கிவிடுகிறது. காலமே பிரபஞ்சத்தை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசெல்கிறது. பழையன கழிந்து (பழமைகள் மறந்து) புதுமைகள் பல புகுந்துவிடுகின்றன. கர்மாவும், சம்சார வாழ்க்கையையும் பிரிக்க முடியாதவைகள் ஆகின்றன. கர்மா இல்லையேல், சம்சார வாழ்க்கை இ
சனியிடம் அச்சம்கொள்ளும் மனிதன், அவரை தலை வணங்கி, மன்றாடி, மண்டியிட்டு, மன்னிப்பு கேட்டு, அவருடைய கருணைக்கும், தர்ம நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நிற்கின்றான்.
சனி ஒருவனுக்கு அவன் வாழ்க்கை பாதையில் பல கஷ்டங்களை கொடுத்து ஞானி ஆக்கிவிடுவதோடு, அவன் எவ்வளவு பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் பக்தி மார்க்கத்துக்கும் அழைத்துச் செல்கிறான். கால தேவன் சனி காலகாரகன் ஆகிறார். காலமே அனைத்து உலகுக்கும் எஜமானன் ஆகிறது. (மாஸ்டர் ஆகிறது.) மனித வாழ்க்கையின் பாதையை காலசக்கரம் அனுகூலமாகவும், பிரதி கூலமாகவும் மாற்றிவிடுகிறது. கர்ம வினைகள் கனியாகி புதிய மாற்றங்களை வாழ்க்கையில் உருவாக்கிவிடுகிறது. காலமே பிரபஞ்சத்தை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசெல்கிறது. பழையன கழிந்து (பழமைகள் மறந்து) புதுமைகள் பல புகுந்துவிடுகின்றன. கர்மாவும், சம்சார வாழ்க்கையையும் பிரிக்க முடியாதவைகள் ஆகின்றன. கர்மா இல்லையேல், சம்சார வாழ்க்கை இல்லை, சம்சார வாழ்க்கை இல்லையேல் கர்மாவும் இல்லை. இனி, சனி சில பாவங்களில் தரும் பலன்களை பற்றி அலசுவோம்.
ஒரு ஜாதகத்தில், சனியானவர் 3, 6, 7, 10 மற்றும் 11 ஆகிய வீடுகளுக்கு காரகர் ஆகிறார். ஜோதிடத்தில் திரிசதய வீடுகள் என்பது 3, 6, 11-ஆம் வீடுகளை குறிக்கிறது. அதை ஆளும் எந்த கிரகமும் தீங்கு விளைவிக்கும். இந்த துர் ஸ்தானங்கள் சவால்களையும், முயற்சி, விருப்பங்கள் மற்றும் இன்னல்கள் ஆகியவற்றையும் குறிக்கும். ஆயினும், தடைகளை தகர்த்தெறிந்து முழு வளர்ச்சியையும் குறிக்கும். 11-ஆம் வீடு லாபம் மற்றும் விருப்பம் பூர்த்தி ஆகுதல், மூத்த சகோதரரின், நம்பிக்கைகள் ஆகியவற்றை குறித்தாலும், 3-ஆம் வீடு தைரியம் மற்றும் சகோதரத்துவத்தையும் சிறு பயணங்கள், தகவல் தொடர்பு மற்றும் முயற்சியையும் குறிக்கிறது.
6-ஆம் வீடு எதிரிகள், நோய்கள், சேவை, தினசரி துன்பங்கள், தடைகள் மற்றும் கடன் ஆகியவற்றை குறிக்கும். 11-ஆம் வீட்டின் தீய குணம் பேராசை, விருப்பங்கள், சமூக தொடர்புகள் ஆகும். எனவே, இது பக்தி மார்க்கத்தைவிட, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நிலையைக் குறிக்கும். இது காமத்தின் மூன்று வீடுகளில் ஒன்றாகும். இந்த வீடுகள் அல்லது பாவங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் வீடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன, இங்கு அமைந்துள்ள அசுப கிரகங்கள் நோய்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவை மூன்றும் ஒரு ஜாதகத்தின் எதிர்மறை வீடுகளாக கருதப்படுகின்றன. ஒரு அசுப அல்லது துரதிர்ஷ்டம் ஏற்படுத்தும் கிரகம் அதன் காரகத்துவ தன்மைகளை குறைக் கின்றன. அதாவது எதிர்மறை தன்மைகளை குறைக்கிறது.
இதன்காரணமாக இந்த தீய வீடுகளின் மோசமான விளைவுகள் மாற்றப்பட்டு அதன் முடிவுகள் அனுகூலமானதாக மாறிவிடுகின்றன. அதனால் ஜாதகருக்கு கஷ்டங்களையும், சவால்களையும் சமாளிக்க கூடிய திறமையை அளித்துவிடுகிறது.
கொடுமையான, பிரிவினை அளிக்கும் மற்றும் பழிவாங்கும் குணம்மிக்க சனி மூன்றாம் வீட்டில் இருக்கும்போது, ஜாதகரின் இளைய உடன்பிறப்புகளுக்கு சந்தோஷம் குறைகிறது, 6-ஆம் வீட்டில் இருக்கும்போது நோய், கடன்கள், வழக்கு விவகாரங்கள், போட்டிகள் என எதிரிகளை அழிக்க சனி உதவுகிறது. அத்துடன் சேவை மற்றும் வேலைக்கு காரகம் பெறும் சனி, அதன்மூலம் ஜாதகர் நல்ல வருமானங்களை பெறவும் உதவுகிறது.
இப்படிப்பட்ட ஜாதகர் தனது பணியிடத்தில் மிகவும் கடினமாக உழைக்க நேரிடுகிறது. 6-ஆம் வீட்டிலுள்ள சனி, தாய்மாமன் மற்றும் அத்தை ஆகியோர்மூலம் வரும் இன்பங்களை குறைத்துவிடுகிறது. 11-ஆம் வீட்டில் உள்ள சனிமூலம் ஜாதகரின் வருமானம் அதிகரிக்கிறது. ஒரு ஜாதகர் நல்லொழுக்கமுள்ள, சிறப்பான வேலை களில் ஈடுபட்டால், சனி அவர்களின் அனைத்துவிதமான ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கிறார்.
லாப பாவத்தில் இருக்கும் சனி மூத்த சகோதரர்கள் சந்தோஷத்தை குறைத்துவிடுகிறது. மேற்கு திசையை குறிக்கும் சனி 7-ஆம் வீட்டில் திக் பலம் பெறுவதால் இந்த திசையில் சனி மிகுந்த பலம் பெற்றதாகிறது. எனவே, 7-ஆம் வீட்டில் இருக்கும் சனி தம்பதிகளின் நீண்டகால உறவுக்கு, வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஒருவரின் வாழ்க்கைத் துணை மிகவும் கருத்தூன்றிய நிலையில் உள்ள வினையார்ந்த, விளையாட்டுத்தனமாக இல்லாத அதாவது- ஆணித்தரமானவராகவும் மற்றும் தன் உணர்வுகளில் ஆழ்ந்து, சமூக தொடர்பில் இருந்து விலகி, தனியாக நேரத்தை செலவிட விரும்பி கூச்ச சுபாவத்துடன் உள்ளவராகவும், மொத்தத்தில் உம்மணா மூஞ்சியாக இருப்பார்.
சனி இங்கு இருப்பதால் அவர் தனது வியாபாரத்தில் விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுவார். ஏனெனில், காலபுருஷ தத்துவத்திற்கு பத்தாம் இடமான மகர ராசிக்கு உரியவராக சனி இருப்பதால் அங்கு பலம்மிக்கவராராகி, அதன் காரண மாக அதிர்ஷ்டம் மிக்கவராராகி, தன் கடின உழைப்பால் தனது நிறுவனத்தை முன்னேற்றி முன்னுக்கு வரும் கர்மயோகி ஆகிறார் ஜாதகர். இது சனியின் கர்ம விளையாட்டு!
செல்: 97891 011742
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us