Advertisment

பக்தர்களின் குறைகளைப் போக்கும் ஈஞ்சம்பாக்கம் முத்தப்பன் ஆலயம்! -சுரா

amman

முத்தப்பன் ஆலயம்..

இது ஒரு சிவன்- விஷ்ணு ஆலயம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்... ஈஞ்சம்பாக்கத்தில், வி. ஜி. பி. தங்கக் கடற்கரைக்கு எதிரில் இந்த ஆலயம் இருக்கிறது.

Advertisment

தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகின்றனர்.

தினமும் காலையிலும் மாலையிலும் இங்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

தங்களின் குறைகள் தீர்வதற்காக பக்தர்கள் இங்குவந்து சிறப்பு பூஜைகளைச் செய்துதருமாறு கேட்டால், அவற்றையும் இந்த ஆலய நிர்வாகத்தி னர் செய்து தருகின்றனர். அத்கைய பூஜைகள் இங்கு தினந்தோறும்

முத்தப்பன் ஆலயம்..

இது ஒரு சிவன்- விஷ்ணு ஆலயம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்... ஈஞ்சம்பாக்கத்தில், வி. ஜி. பி. தங்கக் கடற்கரைக்கு எதிரில் இந்த ஆலயம் இருக்கிறது.

Advertisment

தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகின்றனர்.

தினமும் காலையிலும் மாலையிலும் இங்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

தங்களின் குறைகள் தீர்வதற்காக பக்தர்கள் இங்குவந்து சிறப்பு பூஜைகளைச் செய்துதருமாறு கேட்டால், அவற்றையும் இந்த ஆலய நிர்வாகத்தி னர் செய்து தருகின்றனர். அத்கைய பூஜைகள் இங்கு தினந்தோறும் நடக்கின்றன.

Advertisment

திருமணமாகி 12 வருடங்கள் கடந்தோடியும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த ஆலயத்திற்கு வந்து முத்தப்பனை வழிபட, அடுத்த மாதமே அந்த மனைவி கருத்தரிக்க, இப்போது அவர்களுக்கு குழந்தை இருக்கிறது.

மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருந்திருக்கிறார். அவர் இங்குவந்து முத்தப்பனை வேண்ட, அவரைப் பிடித்திருந்த நோய் விடுதலைபெற, அவர் மரணத்தின் கரங்களிலிருந்து தப்பித்துவந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு மார்பகத்தையே இழக்க வேண்டிய நிலைக்கு ஆளான ஒரு பெண் இந்தக் கோவிலுக்கு வந்து மனமுருக முத்தப்பனுக்கு பூஜை செய்திருக்கிறார்.

முத்தப்பன் அந்தப் பெண்ணின்மீது தன் கருணையைச் செலுத்த, அவர் இப்போது குணமாகி நல்ல நிலையில் இருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளான ஒரு இளைஞரை, அப்படியொன்று நடக்காமலே முத்தப்பன் தன் அருளால் காப்பாற்றி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

முத்தப்பனின் இப்படிப்பட்ட மகத்தான அற்புதச் செயல்கள் பலவற்றையும் இந்த ஆலயத்தின் பொறுப்பாளரும், அர்ச்சகரு மான  புருஷோத்தமன் கூறியபோது, நான் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன்.

"அந்த அளவிற்கு மாபெரும் அற்புத சக்தியா இந்த முத்தப்பன்!' என்ற எண்ணம் தான் அப்போது எனக்கு உண்டானது.

மக்கள் தங்களின் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லா மல் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற் காகவே இந்த ஆலயத்தில் முத்தப்பன் வீற்றிருக்கிறார்.

அவருக்கு முன்னால் பக்திப் பெருக்குடன் நின்றுகொண்டிருக்கும் மக்களின் சந்தோஷ முகத்தைப் பார்ப்பது என்பதே ஒரு இனிய ஆன்மிக அனுபவம்தான்.

இந்த ஆலயத்தில் இம்மாதம் (பிப்ரவரி) 22 ஆம் தேதி "வெள்ளாட்டம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கென முத்தப்பன் வேடம் பூண்டு, மக்களின் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் கூறுவதற்காக கேரளத்திலிருந்து ஒருவர் வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நாளன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

அவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாமே!

கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை பகுதியில், "ஹாட் கிச்சன்' உணவகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் முத்தப்பனின் ஆலயத்திற்கு வருகைதந்து, அவரின் அருளையும் ஆசிர்வாதத்தையும் பெறலாமே!

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe