மிழ் மொழி தொன்மையான மொழி. பழமையான மொழிகள் எத்தனைஇருந்தாலும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பொருள் தருவதே சொல் ஆகும் என்பதை புரிந்து அதையே சொல்லிற்கான இலக்கணமாய் அமைத்த மொழியும், அதிகமான சொற்களை பொருள் தரும் சொல்லாய் உபயோகித்து வரும் தமிழ்மொழியன்றி வேறெந்த மொழியும் முதல்மொழியாய் இருப்பதற்கு சான்றுகள் நிலைநிறுத்தப்படவில்லை. மற்ற மொழிகள் பேசப்படும் மொழியாய் இருந்தாலும், நாகரீகத்தால் தம்மை மேம்படுத்திக் கொண்டன என்று கூறலாம்.

Advertisment

உலகின் பழமையான ஆறு மொழிகள் வரிசையில் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது அதன் தொன்மையை விவரிப்பதாய் உள்ளது. 

Advertisment

1. தமிழ்மொழி, 2. எபிரேய மொழி, 3. லத்தீன் மொழி, 4. சீனமொழி, 5. கிரேக்க மொழி, 6. வடமொழி/சமஸ்கிருதம். உலக மொழிகள் பற்றிய தகவல் களஞ்சியம் கூறும் விவரங்களின்படி 7,457 மொழிகளில் 7,097 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 360 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 700 மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் முடியும். சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் 100 மட்டுமே. இவற்றுக்கெல்லாம் தாயாக மூலமொழியாக திகழ்பவைதான் மேலே குறிப்பிடப்பட்ட 6 மொழிகள்.

பொது மொழியும் வட்டார மொழியும்

மனிதனின் இடப்பெயர்வு, நிலப்பரப்பு மற்றும் கலாச்சார வேறுபாடு களால் ஒரே மொழியைப் பேசுபவர்கள் தங்களுக்குள் ஒரு தனித்துவமான உச்சரிப்பு மற்றும் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது வட்டார மொழிகள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 22 வட்டார வழக்குகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. 

Advertisment

அவற்றில் தென் மாவட்டங்கள், திருநெல்வேலி, மதுரை, குமரி வட்டார மொழி ஒரு பிரிவு. மேற்கு மாவட்டங்கள் கோயம்புத்தூர், ஈரோடு (கொங்கு) 

ஒரு பிரிவு, வடக்கே அமைந்துள்ள சென்னை (மெட்ராஸ் பாஷை) மற்றும் ஆற்காடு ஒரு பிரிவு. இன்றைய இலக்கியத்தில், சிறுகதை, புதினங்களில் பெரும்பாலும் வட்டார மொழிகளே இடம்பெற்றுள்ளன. தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன் போன்ற எழுத்துலக சிற்பிகள் கையாண்ட மொழி வட்டார மொழியே.

பொது மொழி

கல்வி சார்ந்த நடைமுறைகளிலும், அரசாங்க நடைமுறைகளிலும், பொது மக்கள் தொடர்பு சார்ந்த ஊடகங்களிலும் பொது மொழி கையாளப்படுகிறது. இது தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.

வட்டார மொழி 

உள்ளூர் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் சமூகம் அல்லது தொழில் சார்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டவையே தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும். பெரும் பாலான வட்டார மொழி நடைமுறைகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றது.

வட்டார மொழிகளில் என்றும் தனித்துவமாக விளங்கும் வழக்குகள், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கொங்கு மற்றும் சென்னை ஆகும். ஒரு மொழி, பேசப்படும் வரை அது வளர்ச்சியடைந்த மொழியாகவும், நிலைத்து நிற்கும் மொழியாகவும் கருதப்படும். அவ் வகையில் பொது மொழி கல்வி, அலுவலகம், அரசு, பொதுமக்கள் தொடர்பு சார்ந்த பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டாலும், பேச்சு மொழியான வட்டார மொழியைக் கையாளுவது என்பது மொழியை வளர்ப்பதாகவும், அதன் தொன்மையை அழியாமல் காப்பதற்கு வழி வகுப்பதாகவும் அமையும்.

நாகரீக வளர்ச்சியினால் உலகில் பல தாய்மொழிகள் மறக்கடிக்கப்பட்டு, வேற்று மொழியை மக்கள் தொடர்பிற்கும், தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கத்தில் உள்ளது. பல மொழிகள் தனது எழுத்து வடிவத்தைத் தொலைத்துள்ளன.

மொழி என்பது வெறும் ஒலி அல்ல. சிரிப்பு, அழுகை, துன்பம், ஏக்கம், கவலை, காதல், நட்பு, இழப்பு என்று எல்லா சூழ்நிலைகளிலும் அதற்கேற்றவாறு நாட்டுப்புறங்களில், பழமொழியாக, ஒப்பாரியாக, கதையாக, பாட்டாக மண்ணின் தன்மைக்கேற்றவாறு வெளிப்படுத்தும் மனித உணர்வுகளைச் சார்ந்தது. வார்த்தைகளை  வடித்தல் என்பது வட்டார மொழிகளில் கைவந்த கலை என்று சொல்லலாம். ஒரு சொல் ஒரு மனிதனை எப்படி பண்படுத்தும் என்பதை வடித்த பெருமை வட்டார மொழிக்கு உண்டு. சுருக்கமாக கூறவேண்டுமெனில் வட்டார மொழியை வாய்மொழி இலக்கியம் என்று வகைப்படுத்தலாம்.

தமிழ் இலக்கிய உலகத்தில் பொது மொழியைக் கையாண்ட எழுத்தாளர்கள் பல பேர் இருந்தாலும் வட்டார மொழியை பயன்படுத்தி எழுதிய எழுத்தாளர்கள் "சாகித்ய அகாதமி' விருது பெற்றவர்கள் வரிசையில் நின்றது பெருமைக்குரியது. குறிப்பாக, பேராசிரியர் எழுத்தாளர். கி.ராஜநாராயணனின்  கரிசல் காட்டு மண் சார்ந்த கதைகள் நம் கண் முன்னே காட்சிப்படலமாக தெரிவதற்கு, அவர் கையாண்ட மண் சார்ந்த பேச்சு வழக்குகளே காரணமாகும். எழுத்து இலக்கியத்திற்கு, வரையறை வைத்திருக்கிறார்கள். வட்டார இலக்கியத்திற்கு வரையறை ஏதுமில்லை. காரணம் வழக்கிலிருக்கும் மக்கள் பேசும் மொழி வாழ்கின்ற மொழி. அது உயிர்ப் பாயிருக்கும்.

வட்டார மொழியை ஒரு இனம் சார்ந்த மொழியாக பிரித்துப் பார்ப்பது இலக்கிய வளர்ச்சியை தடை செய்வதாக அமையும், நாட்டுப்புற பாடல்கள் வட்டார மொழியின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒற்றப்பாட்டு, நடவுப்பாட்டு, களைபறித்தல் பாட்டு, கதிர் அறுத்தல் பாட்டு, சடங்குகளுக்கான பாட்டு, ஒப்பாரி, பழமொழிகள் என்று வாழ்வியலை எளிமையாக, விவரித்தவை வட்டார மொழிகளே. ஒரு மொழியின் சிறப்பை ஒரு வாக்கியத்தி லேயே சொல்லிவிடும் தன்மை வட்டார மொழிக்கே உரிய சிறப்பாகும். பொது மொழி உடல் என்றும், வட்டார மொழி உயிர் என்றும் கருத்தில் கொள்வோம்.