ற்போது பள்ளி பொதுத்தேர்வு ஆரம்பிக்க சற்றேறக்குறைய மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலை குறித்த கவலையில் அதிகம் வருகிறார்கள். இதில் நன்றாக படித்த பிள்ளைகள் திடீரென கல்வியில் பின்தங்கிய நிலைக்கு செல்வதை முன் வைக்கிறார்கள்.

Advertisment

நன்றாக படிக்கும் ஒரு குழந்தைக்கு திடீரென கல்வியில் ஆர்வம் குறைவதற்கும், சுமாரான குழந்தை சூப்பராக- நன்றாக படிப்பதற்கும் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் ஜோதிடரீதியான காரணங்கள் உண்டு. நன்றாக படிக்காத பிள்ளை திடீரென படிக்கவும் ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு. ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே சுய ஜாதகரீதியாக, தசாபுக்திரீதியாக கோட்சாரரீதியாக பலன் தரும். இதில் ஒரு ஜாதகத்திலுள்ள கிரகச்சேர்க்கை அதிகமான பலனுண்டு. பிள்ளைகளின் கல்வி நிலை குறித்த கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்விதமாக இந்த கட்டுரையை வடிவமைக்திருக்கிறேன்.

Advertisment

கல்விக்கான சுய ஜாதகரீதியான அமைப்பு

ஒரு ஜாதகத்தில் எட்டாம் வகுப்புவரை படிக்கும் கல்வியை குறிப்பது இரண்டாம் பாகம். பிளஸ் டூ வரை படிக்கும் கல்வியை உணர்த்துவது நான்காம் பாவகம். கல்லூரி படிப்பை குறைப்பது ஐந்தாம் பாவகம். உயர்நிலைக் கல்வியை குறிப்பது 9-ஆம் பாவகம். ஆராய்ச்சி கல்வியை குறிப்பது 11-ஆம் பாவகம். அத்துடன் கல்விக்கு காரண கிரகமான புதன் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.இப்படி கல்விக்கான பாவகம் பலவாக இருந்தாலும் ஒரு ஜாதகத்தில் 4, 5-ஆம் அதிபதி மற்றும் புதனின் நிலை மிக அவசியம். 

நான்காம் அதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் ஆரோக்கியம் நிறைந்தவராக இருப்பார். நல்ல கல்வி ஞானம் உண்டு. இளமைப் பருவத்திலேயே கண்ணும் கருத்துமாக படிக்கும் ஆர்வம் இருக்கும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்புகொள்ளும் பாவகம் தொடர்பான சிந்தனை ஜாதகருக்கு எப்போதும் இருக்கும். கள்ள கல்வி ஏழேழு பிறவிக்கும் ஜாதகருடன் பயணிக்கும். ஜாதகரின் தாயும் ஜாதகரின் கல்விக்கு உதவியாக இருப்பார். தான் கற்ற கல்வியை பிறருக்கு உபதேசிக்கும் ஞானம் இருக்கும்.

Advertisment

நான்காம் அதிபதி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் கற்ற கல்வியின்மூலமாக பேச்சுத் திறமையால் வருமானம் சம்பாதிப்பார். பேச்சுத்திறமை கூடும். சரஸ்வதி கடாட்சம் நிறைந்தவராக இருப்பார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப பள்ளியில் சேர்ந்த நாள் முதல் படிப்பில் தனி திறமையுடன் இருப்பார். ஜாதகரின் முகம் தேஜஸாக இருக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். செல்வாக்கும் சொல்வாக்கும் நிறைந்தவராக இருப்பார். சொல்லாலும் செயலாளர் ஒன்றுபட முடியும். ஜாதகரின் தாயாருக்கு பேச்சுத்திறமை நிறைந்தவராக இருப்பார். தாயின்மூலமாக ஜாதகருக்கு ஞானம் பெருகும்.

நான்காம் அதிபதி மூன்றாம் இடத்தில் நின்றால் கற்ற கல்வி ஜாதகருக்கு பயன்தராது. அல்லது ஜாதகருக்கு கற்றல் குறைபாடு இருக்கும். தன் வீட்டிற்கு பின் வீட்டில் நான்காம் அதிபதி மறைவதால் படித்த படிப்பு நினைவில் இருக்காது. ஜாதகர் பிறரை சார்ந்தே வாழ்வார். நன்றாக படித்தாலும் பரிட்சை எழுதும்பொழுது மறந்துவிடும். தான் கற்ற வித்தையை தைரியமாக  வெளிப்படுத்தத் தெரியாது. ஜாதகருக்கு சுவாசக் கோளாறு இருக்கும். அதனால் கல்வியில் ஆர்வம் குறையும். ஜாதகரைவிட ஜாதகரின் இளைய சகோதர- சகோதரிகள் நன்றாக படிப்பார்கள். சில சூழ்நிலைகளில் இளைய சகோதர- சகோதரிகளின் கல்விக்கு ஜாதகர் உதவியாக இருப்பார். ஆனால் ஜாதகரின் கல்விக்கு உடன்பிறந்தவர்கள் உதவியாக இருக்க மாட்டார்கள்.

குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க விரும்பும் மாணவர்கள் நூறிலிருந்து நம்பரை தலைகீழாக ஒன்றுவரை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நான்காம் அதிபதி நான்கில் இருந்தால் ஜாதகரின் தாயார் கல்வியில் நிபுணத்துவம் நிறைந்தவராக இருப்பார். நல்ல தேகசுகம், தோற்றப்பொலிவு உண்டு. கற்ற கல்வியின்மூலம் சம்பாதித்து சொகுசான வாழ்க்கை வாழ்வார். 

தான் கற்ற கல்வியை பிறருக்கு உபதேசிக்கக்கூடிய திறமை இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு கல்வி கற்றுக்கொண்டே இருப்பார். புத்தகம் வாசிப்பில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அட்டை டு அட்டை படித்து இரவு தூக்கத்தில் எழுப்பி கேள்வி கேட்டால்கூட கேள்விக்கான விடையை கூறிவிடுவார். எத்தனை வயதானாலும் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனாவது பக்கத்தில் என்ன பாடம் இருந்தது என்பதை நினைவில் நிறுத்தி வைத்திருப்பார். கல்வி நிறுவனம் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். சிறந்த கல்விமானாக இருப் பார்கள். 

நான்காம் அதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகர் நிச்சயமாக ஒரு டிகிரியாவது படிப்பார். வாழ்க்கையில் நன்றாக படித்து உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள், லட்சியங்கள் மிகுதியாக இருக்கும்.

படிக்கும்போது தன்னைச் சார்ந்த வர்களுக்கு மாடத்தை எளிமையாக போதிப்பார்கள். 4-க்கு 2 என்பதால்  பேங்கிங் ஆடிட்டிங் டீச்சிங், ஐ.டி போன்ற துறையில் தனித்தன்மையுடன் பிரகாசிப்பார்கள்.

பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டு, கவிதை எழுதுதல் போன்றவற்றில் முதன்மை மாணவராக திகழ்வார்கள். அசுப கிரக சம்மந்தம் இல்லாதவரை ஆசிரியருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடிய வல்லமை உண்டு. குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருப்பார். பல பிறவியில் கற்ற வித்தை எந்த ஜென்மத்திலும் பலன் தரும். 

ஜாதகரின் குடும்பமே ஆசிரியர் பணியில் இருப்பார்கள். படிக்கும்போதே காதல் வரும். சிலர் கல்வியை காதலிப்பார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் சிலர் காதலிக்கவே பள்ளிக்கு செல்வார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத (காதல் நினைவு) ஆட்டோகிராப் இருக்கும்.  ஐந்தாம் இடம் என்பது மனம் என்பதால் சிலருக்கு காதலித்து பைத்தியம் பிடிக்கும். சிலர் படிக்கும்போதே வருமானம் ஈட்டு வார்கள். படிப்பதற்காக பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட  பகுதி நேர பார்ப்பார்கள். படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்வார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு பெறுவார்கள். சிலர் படிக்காத மேதை ஆக வாழ்நாள் முழுவதும் இயல் பிலேயே பிறவியிலேயே ஞானம் இருக்கும்.

தொடரும்...

செல்: 98652 20406