ஜோதிடத்தில் 12 ராசி கட்டங்களையும் பலவாறாக பிரித்து கூறப்பட்டுள்ளது. அது திரிகோணம், கேந்திரம், உபஜய ஸ்தானம். துர்ஸ்தானம் என அறியப்படுகிறது.
திரிகோணம்- 1, 5, 9.
கேந்திரம்- 1, 4, 7, 10.
உபஜய ஸ்தானம்- 3, 6, 10.
துர் ஸ்தானம்- 6, 8, 12 எனப்படும்.
இதில் உபஜய ஸ்தானம், ஒரு மனிதனின் முழு முயற்சியில், உழைத்து வெற்றி ஏற்படச் செய்யும்.
இதில் 3-ஆம் பாவம் மிக முக்கியமானது. இந்த 3-ஆம் பாவத்தின் விசேஷம் என்ன?
லக்னத்திற்கு- வெற்றி ஸ்தானம். 2-ஆமிடத்திற்கு 2-ஆம் ஸ்தானம் உபரி வருமான ஸ்தானம்.
4-ஆமிடத்திற்கு விரயஸ்தானம்- வீடு, வாகன முதலீட்டிற்கு உரிய இடம். 5-ஆமிடத்திற்கு 11-ஆம் ஸ்தானம். இதுதான் உங்கள் வாரிசு, அறிவு, பூர்வீகம்மூலம் வரும் லாபத்தைக் கூறும்.
6-ஆமிடத்திற்கு 10-ஆமிடம் உங்கள் மாத சம்பள வேலையின் வெற்றி மற்றும் அதே வேலை. பிற் காலத்தில் சொந்தத் தொழிலாக மாறும் முன்னேற்றம் என இவ்விஷயங்களை எடுத்துரைக்கும்.
7-ஆமிடத்திற்கு 9-ஆமிடம்: வாழ்க்கைத் துணையின்மூலம் வரும் அதிர்ஷ்டம் தோள் கொடுத்து உதவும் தன்மை இவை பற்றிக் கூறும்.
8-ஆமிடத்திற்கு 8-ஆமிடம்: ஆயுள் பாவத்திற்கு, ஆயுள் பாவம். இதுவும் ஆயுள் விருத்தியைக் கூறும். (2, 7-ஆமிடங்கள் மாரக ஸ்தானம் என்று அறிக.)
9-ஆமிடத்திற்கு 7-ஆமிடம்: அதிர்ஷ்டத்தை வரவழைப்பதில், உங்கள் வாழ்க்கைத்துணை, பங்குதாரர் மற்றும் உங்கள் வெளிவட்டார பழக்கம் பற்றி கூறும்.
10-ஆமிடத்திற்கு 6-ஆமிடம்: உங்கள் சொந்தத் தொழில், உங்களின் உழைப்பு மற்றும் முயற்சி பற்றிக் கூறும்.
11-ஆமிடத்திற்கு 5-ஆமிடம்: நீங்கள் எண்ணியது நடக்க, நினைத்தது நடக்க, உங்கள் அறிவின் அளவை எடுத்துரைக்கும்.
12-ஆமிடத்திற்கு 4-ஆமிடம்: 12-ஆமிடம் விரய ஸ்தானம். 4-ஆமிடம் சுக ஸ்தானம். எனவே உங்களின் சௌகர்யத்தை எவ்வழியில் அனுபவிப்பீர்கள் என்பதை அளந்து கூறும்.
3-ஆமிடச் செயல்கள்: சிறு தூரப் பயணம், பணியாள், தரகர்கள், பயிற்சிகள், வீரம், உறுதி, ஆண்மை, வதந்தி, தகவல் தொடர்பு, ஒப்பந்தம், கைபேசி என பல காரகமுண்டு.
3-ஆமிடமும் காலபுருச தத்துவமும் காலபுருச தத்துவப்படி, 3-ஆமிட அதிபர் புதன் ஆவார். இவர் தன்னுடைய இன்னொரு வீட்டில், கன்னியில் உச்சமடைவார். மேலும் ஒரு மாதத்துக்கு ஒரு ராசி மாறிவிடுவார். சூரியனைவிட்டு விலக மாட்டார். எப்போதும் சூரியன் கூடவே இருப்பதால் இவருக்கு அஸ்தமன தோஷம் இல்லை என்றும் கூறுவர். மறைந்த புதன் நிறைந்த பலன் என்பர். ஏùனினில் இவர் காலபுருசனின் 6-ஆமிடத்தில் உச்சம் அடைவதால், இவ்விதம் கூறப்படுகிறது.
தற்காலத்தில், மனிதர்களில் அனேகர், ஏன் அனைவரும்கூட என்றும் சொல்லலாம். கைபேசி இல்லாத ஆட்களே கிடையாது. பெரும்பாலும், கைபேசிமூலம் தொழில் நடத்தவும் செய்கிறார்கள்.
ஆனால் 3-ஆமிடத்திற்கு கைபேசி தவிரவும். பல பணிகள் உள்ளது. 12 லக்னத்தாருக்கும் 3-ஆமிடம் என்னவிதமான உபரி வருமானம் அல்லது நேரிடையான வருமான வழங்கும்.
மேஷ லக்னம்
உங்களின் 3-ஆமிடம் மிதுனம் அதிபர் புதன். இவர் உங்கள் 3-ஆமிடத்தில் ஆட்சியும், 6-ஆமிடத்தில் உச்சமும், 12-ஆமிடத்தில் நீசமும் அடைவார்.
இந்த 3-ஆமிட புதன், உங்கள் லக்னாதிபதி செவ்வாய்கூட சேர்ந்தால், உப தொழில், உபரி வருமானம் கிடைக்காது.
புதன், சுக்கிரன் சேர்க்கை, உங்கள் வாழ்க்கைத்துணையின் வீட்டி-ருந்து அவ்வப்போது வருமானம் தந்துகொண்டிருக்கும்.
அல்லது உங்களது மாத சம்பளம், எக்ஸ்ட்ர இன்கம் தரும். சிலரின் வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்கள். நிறைய யோசனைக் கூறி அதன்மூலம் வியாபார பெருக்கம் உண்டாக்கி, பண விருத்தியை அதிகரிப்பர்.
புதன் சந்திரனுடன் இணையும்போது, கல்வி பெருக்கம் உண்டாகும். இந்த அமைப்பு ஜாதகர்கள், வாகனம். வீடு சம்பந்த கல்வி கற்று, அவை சார்ந்த சர்வீஸ் சென்டர் ஆரம்பித்துவிடுவர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழி-ல், கட்டடம் புதுப்பிப்பதில் நுண்ணிய அறிவு, பழைய கட்டங்களை இடித்து புதுசாக கட்டும் பிரிவு என இவற்றில் முக்கியமானவராக இருப்பர். சிலர் போர் பம்ப, குடிநீர் வாரிய பணி மற்றும் குளம், ஆறு, நதி இவற்றின மேம்பாடு சம்பந்த பணியில் இருப்பர். சந்திரன், புதனின் சுபத்தன்மை, கல்வி, கட்டடம்மூலம் நல்ல வருமானமும், வெற்றியும் தரும்.
மேஷ லக்னம் 3-ஆம் அதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்தால் கண்டிப்பாக அரசியல் அல்லது அரசு பதவியில் மிக மேன்மையாக இருப்பர். உங்களில் பலர் பங்குவர்த்தகத்தில், நல்ல அறிவு தெளிவு பெற்று, அதன்மூலம் லாபம் அடைவர். சிலர், வாரிசுகளின்மூலம் நல்ல மேன்மை காண்பர். இவர்களின் நல்ல ஞாபக சக்தியும், விஷய நிபுணத்துவமும், இவரை மக்களில் முதன்மையராக மாற்றும். பூர்வீக இடத்தில் இருந்து, ஏதோ ஒரு உபரி வருமானம் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். கலை உலகில், உங்களின் உழைப்பு, வெற்றி தேடித்தரும். அவ்வளவு ஏன்? உங்கள் காதலும் நிறைய வெற்றிகொண்டு வந்துசேர்க்கும். சினிமா உலகில் உங்களின் இயந்திர சம்பந்த உழைப்பு புகழ் தேடித்தரும். புதனும், சூரியனும் சுபமாக இருப்பின், புத்தி பூர்வ உபரி வருமானம் உண்டு.
3-ஆமிட அதிபதி புதன், குரு சம்பந்தம் இந்த சேர்க்கை அனேகமாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு பயண சம்பந்த தொழிலை அல்லது பயணசீட்டு ஒப்பந்தத்தை குறிக்கும். உங்களில் பலர் ஆன்மிக ஸ்தல யாத்திரை என்ற பெயரில் வெப்சைட் ஆரம்பித்து, நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். ஐ.ஏ.எஸ், நீர் தேர்வு போன்ற உயர்கல்வி பயிற்சி மையம் ஆரம்பித்து, செழிப்பு பெறுவீர்கள். சிலர் உங்கள் வேலை தவிர்த்து, இம்மையங்களில் பகுதி நேர பயிற்சியாளராக உபரி பணம் ஈட்டுவீர்கள். சிலர் நாலு சக்கர வாகனம், விமானம், கப்பல் இராணுவ தளவாடங்கள் இவை ஓட்ட கற்றுத் தரும். பயிற்றுவிப்பனளாராக இருப்பீர்கள். வேத பாட சாலையில் பகுதி நேர உபாத்யாராக இருந்து ஸைட் இன்கம் பெறுவீர்கள். சிலர் சட்டத்துறையில் நடுவராக இருப்பீர்கள். சொந்த ஆன்மிக பத்திரிகை நடத்த இயலும். இந்த புதன்+குருவின் சுப சம்பந்தம், பெரிய கல்வி கற்ற மனிதர்களின் தொடர்பை ஏற்படுத்தி அதன்மூலம் உபரி வருமானம் தரும்.
மேஷ லக்னம் 3-ஆம் அதிபதி புதனும், சனியும் சேர, இவர்கள் தொழில் முனைவோரின் வழிகாட்களாக இருப்பர். புதிய தொழில் ஆரம்பிப்பது, அதன் செய் முறைகள்: யாரை, எப்படி எந்நேரம் அணுகி கடன் வாங்குவது, பொருட்களை சந்தைப்படுத்துவது எங்ஙனம் என இம்மாதிரி பயிற்சிகளை, யோசனையாக கூறி, திட்டமிட உதவும் பணியில் இருப்பர். சிலர் இதனையே முழு நேர தொழிலாகவும், சிலர் பகுதி நேர தொழிலாகவும் கொண்டிருப்பர். வேறு சிலர், அரசிய-ல் நிழல் உலக புள்ளிகளாக வலம் வருவர். இவர்கள் வெளியில் பிரபலம் ஆகாமல் இருந்து, மறைவாக, கட்சிகளுடன், கூட்டணிகளை சேர்ப்பது, பிரிப்பது, கட்சிக்குள் சண்டை மூட்டிவிட்டு, ஒரு கட்சியை ஒம்பது கட்சியாக பிரிப்பது, புதுக்கட்சி ஆரம்பிக்கச் செய்து அம்போவென கைவிடுவது, தொண்டர்களிடையே கலக மூட்டுவது, நிறைய குசும்பு பரப்புவது, சண்டை மூட்டுவதெற்கென்றே கை பேசியில் சேனல் ஆரம்பிப்பது என அரசியலை அதகளம் செய்வர். இவர் பெயர் பொது வெளியில் தெரியவே தெரியாது. கமுக்கமாக இருந்து, பெரிய சம்பவம் செய்வர். சனியும், புதனும் மிகச் சுபமாக இருப்பின், நாடு, மாநில அளவில் இந்த வேலை செய்வர். ரொம்ப சுமார் தன்மையாக இருந்தால் மாவட்ட அளவில் இந்த வேலை செய்வர்.
மேஷ லக்னம் 3-ஆம் அதிபதி புதன், ராகுவோடு சேர்ந்தால் சுபத்தன்மை பெற்றிருந்தால், அயல்நாட்டு தூதராக பணியாற்றுவார். இவர்களின் மன தைரியம் அச்சமூட்டுவதாக அமையும். இவர்கள் உள்நாட்டில், துப்பறியும் வேலை செய்வர். உளவுத்துறையில் பணிபுரிவர், சிலர் வேறு வேலை பார்த்துக்கொண்டே உளவு வேலையை பகுதி நேரத்தில் செய்து, உபரி பணம் சம்பாதிப்பர். இது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் இருக்கும். மக்களின் மத்தியில் குண்டு வீசவும் இருக்கும். வேறு சிலர் கள்ள நோட்டு அச்சிட்டு ரகசிய விநியோகம் செய்வர்.
சிலர் கள்ள பத்திரம், போ- சர்டிபிகேட் இவற்றை பகுதி நேர வேலையாக செய்வர்.
புதனும், கேதுவும் சேர்க்கை பெற்றால் அது நிச்சயமாக காதல் விவகாரம்தான். காதல் சார்ந்து வேண்டாத- வௌங்காத வேலைகள் அனைத்தும் நிபுணராக இருப்பர்.
மேஷ லக்னம் 3-ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்றால், மிகுந்த மன தைரியமாக, யாரையும் எதிர்த்து போராடுவீர்கள். அதனால் இவர்கள் வழக்கறிஞர்களாக, மனிதவள மேம்பாட்டு தலைவர்களாக, நீர்நிலை, குழந்தைகள் பாதுகாவலராக, உபரி நேர வேலையாக, ஒரு தொண்டாகச் செய்வர்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/kuber-2026-01-09-14-32-23.jpg)