Advertisment

நான் மதிக்கும் கவிப்பேரரசர்! - சுரா

sura

1980...

அண்ணா சாலை நூல் நிலைய கட்டடத்தின் மாடியில் ஒரு கவியரங்கம். வெளியே அதற்கான அறிவிப்பு. அதை முன்நின்று நடத்தியவர் நண்பர் இளையபாரதி.

Advertisment

அப்போது நான் "பிலிமாலயா' மாத இதழின் இணையாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

Advertisment

கவியரங்கம் நடக்கும் இடத்திற்குச் சென்றேன். பல கவிஞர்கள் தங்களின் கவிதைகளை வாசித்தார்கள். அவர்களில் ஒருவர் வைரமுத்து. அவரை முதல் தடவையாக அங்கு நான் பார்க்கிறேன். அவரின் பெயரையே அப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.

அவர் தன் கவிதையை வாசித்தார். மற்ற அனைத்துக் கவிஞர் களையும் விட, என்னை அதிகம் ஈர்த்தவர் வைரமுத்துதான்.

அவர் கவிதையை வாசித்த முறை, அவரின் உடல் மொழி, தமிழ் சொற்களை அவர் உச்சரித்த விதம்... இவை அனைத்தும் அவரின் மீது எனக்கு உயர்ந்த எண்ணத்தை உண்டாக்கின. "எதிர்காலத்தில் இவர் மிகப்பெரிய கவிஞராக வருவார்' என்ற நம்பிக்கை எனக்கு அப்போதே உண்டானது.

இது நடைபெற்று சில நாட்களுக்குப் பிறகு, அறிவுமதி 'பிலிமாலயா' அலுவலகத்திற்கு வந்தார். எம். ஜி. வல்லபனைப் பார்ப்பதற்காக... அவர்தான் 'பிலிமாலயா' மாத இதழின் ஆசிரியர். அப்போது அவர் "தைப்பொங்கல்' என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார் அறிவுமதி.

அறிவுமதியின் கையில்  கவிஞர் வைரமுத்து எழுதிய "வைகறை மேகங்கள்', "திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற இரு கவிதைத் தொகுதிகள் இருந்தன.

வைரமுத்துவின் திறமையைப் பற்றி வ

வைரமுத்துவின் திறமையைப் பற்றி வல்லபனிடம் அறிவுமதி புகழ்ந்து கூறினார். அவரிடம் அந்த இரு நூல்களையும் அறிவுமதி கொடுத்தார். "பிலிமாலயா'வின் இணையாசிரியரான நான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த இரு நூல்களிலுமிருந்த சில கவிதைகளை நான் வாசித்துப் பார்த்தேன். கவிதைகள் புதுமையான சொற்களுடன் மிகவும் அருமையாக இருந்தன.

கவியரங்கத்தில் நான் பார்த்து வியந்த வைரமுத்து அந்த நூல்களிலிருந்த கவிதைகளின் மூலம் என் உள்ளத்திற்குள் ஆழமாக நுழைந்தார்.

எம். பாஸ்கர் இயக்கிய 'சூலம்' திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கும் வைரமுத்து பாரதிராஜா இயக்கும் 'நிழல்கள்' திரைப்படத்தில் பாடல் எழுதுவதாக அறிவுமதி கூறினார்.

"எதிர்காலத்தில் மிகப் பெரிய பாடலாசிரியராக வைரமுத்து நிச்சயம் பவனி வருவார்' என்பதையும் கணித்துக் கூறினார் அறிவுமதி.

சில நாட்களில் "நிழல்கள்' திரைக்கு வந்தது. "பொன்மாலைப் பொழுது' பாடல் வைரமுத்துவை எங்கோ உயரத்திற்குக் கொண்டு சென்றது.

படவுலகில் வைரமுத்துவின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது. வைரமுத்துவைப் பற்றிய என் கணிப்பும், அறிவுமதியின் கணிப்பும் பொய்யாகவில்லை.

நான் உதவி இயக்குநராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றிய ஒரு திரைப்படத்திற்கு வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதினார். அதற்காக கோடம்பாக்கம் யுனைட்டெட் இந்தியா காலனி, சர்க்குலார் சாலையிலிருந்த அவரின் வீட்டிலிருந்து அவரை நான் நிறுவனத்தின் வாடகைக் காரில் அழைத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

வைரமுத்து நட்சத்திர பாடலாசிரியராக மின்னினார். நிறைய திரைப்படங்களுக்கு அவர் பாடல்களை எழுதினார்.

"இளையராஜா- வைரமுத்து காம்பினேஷன்' அருமையான காம்பினேஷன் என்று அனைவரும் கூறினர். பாடல் உலகில் வைரமுத்து கொடிகட்டிப் பறந்தார்.

அமீர்ஜான் இயக்கிய 'நட்பு' படத்திற்கும், ஓடங்கள், துளசி ஆகிய படங்களுக்கும் வைரமுத்து கதை- வசனம் எழுதினார். அப் படங்களைத் தயாரித்தவர் பி. எஸ். வீரப்பா.

அமீர்ஜான் என் நண்பர். அவரைப் பார்ப்பதற்காக நான் அந்நிறுவனத்திற்குச் செல்வேன். அங்கு கவிஞர் வைரமுத்து இருப்பார். நான் அவரிடம் உரையாடுவேன். அவர் எப்போதும் என்னிடம் அன்புடனும், பாசத்துடனும் பழகுவார்.

அமீர்ஜான் இயக்கிய "வண்ணக் கனவுகள்' படத்திற்கு வைரமுத்து உரையாடல்களை எழுதினார். அப்படத்தையும் இயக்கியவர் அமீர்ஜான். "கவிதாலயா' நிறுவன அலுவலகத்தில் நான் வைரமுத்துவைப் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.

நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய பல திரைப்படங் களுக்கு மிகச் சிறந்த பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படும் வேளையில் ஒலிப்பதிவுக் கூடங்களில் அவரின் பாடல் வரிகளைப் பாராட்டுவேன். அவர் சந்தோஷத்துடன் அதைக் கேட்பார்.

நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய பல மொழிமாற்றுப் படங்களுக்கு அருமையாக வசனம் எழுதியிருக்கிறார் வைரமுத்து.

"புதிய முகம்'.... சுரேஷ்மேனன் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம். கதாநாயகி... ரேவதி.

அப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரஹ்மான். அதில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. அப்படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளர். அதில் இடம்பெற்ற நேற்று இல்லாத மாற்றம்', "கண்ணுக்கு மை அழகு' ஆகிய பாடல்களை நம்மால் மறக்க முடியுமா?

அப்படத்திற்காக அட்லாண்டிக் ஹோட்டலில் நான் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏ.ஆர். ரஹ்மானும் வைரமுத்துவும் வந்திருந்தனர்.

அதற்குப் பிறகு சுரேஷ்மேனன் இயக்கி, அரவிந்த்சாமி நடித்த "பாசமலர்கள்' படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார் வைரமுத்து.

அப்படத்திற்கு இசையமைத்தவர் வி.எஸ். நரசிம்மன். நான் மக்கள் தொடர்பாளர். அரோமா மூவீஸ் தயாரிக்க, வைரமுத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். அதற்கு என்னை மக்கள் தொடர்பாளராக அமர்த்த விரும்பிய வைரமுத்து, அதைப் பற்றி என்னிடம் பேசவும் செய்தார். ஆனால், அது செயல் வடிவத்திற்கு வரவில்லை.

வைரமுத்து எழுதிய வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழுக்கு நிறமுண்டு, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, இன்னொரு தேசிய கீதம், கவிராஜன் கதை ஆகிய கவிதை நூல்களின் ரசிகன் நான். அவரின் "இதுவரை நான்' நூலில் என்னைக் கரைத்துக்கொண்டவன் நான்.

வடலூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்திருந்த கவிஞர் பழமலய் என்னிடம் கேட்டார்...

"உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?' என்று. நான் கூறினேன்...

"ஜெயகாந்தன்'.

அதற்குப் பிறகு அவர் கேட்டார்... "பிடித்த கவிஞர்?' நான் கூறினேன்....

"வைரமுத்து'.

பின்னர் ஒரு சூழலில் வைரமுத்துவிடம் இந்தச் சம்பவத்தைக் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

"நக்கீரன் ஸ்டுடியோ' யூ ட்யூப் சேனலில் கவிஞர் வைரமுத்து வைப் பற்றி நான் பேசியிருந்தேன். அந்தக் காணொலியை முழுமை யாகக் கேட்டு விட்டு, என்னை அலைபேசியில் அழைத்து அவர் பாராட்டினார்.

சில வருடங்களுக்கு முன்பு என்னைத் தன் பெசன்ட் நகர் வீட்டிற்கு அழைத்த வைரமுத்து, மலையாளத்தில் வெங்கடாச்சலம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருந்த "கள்ளிக்காட்டு இதிகாசம்' நூலின் முதல் அத்தியாயத்தைக் கொடுத்து, அதை வாசிக்கும்படி கூறினார். அதை வாசித்துவிட்டு "அருமையாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு போன்றே இல்லை. நீங்களே மலையாளத்தில் எழுதியதைப் போல இருக்கிறது' என்று கூறினேன்.

அதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி... கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களுக்கு. அப்போது "வைரமுத்து சிறுகதைகள்' நூலில் தன் கையெழுத்தைப் பதித்து எனக்குத் தந்தார்.

மலையாளத்தில் "கள்ளிக்காட்டு இதிகாசம்' "வைரமுத்து சிறுகதைகள்'... இந்த இரண்டு நூல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

1980-ஆம் வருடத்தில் நான் கவிஞராகப் பார்த்த வைரமுத்து அவர்கள், இப்போது கவிப்பேரரசராக இலக்கிய உலகில் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத சாதனைகள் பலவற்றையும் படைத்துவிட்டு, உயர்ந்த பீடத்தில் அமர்ந்து, கம்பீரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

அதைப் பார்த்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

கவிப்பேரரசரின் சாதனைகள் தொடரட்டும்....!

uday010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe