சென்னை கோடம்பாக்கம் வன்னியர் தெருவில் ஐம்பது ஆண்டுகளாக சிறிய கடையாக ஆனால் பெரிய புகழுடன் செயல்பட்டு வரும் "சங்கர் ஸ்டோர்' என்ற "அக்கா கடை' உரிமையாளர்கள், எழுபது வயதை கடந்தும் சுறுசுறுப்பாக காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை தங்களின் மளிகை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து வாடிக்கையாளர்களின் வற்றாத ஆதரவை நம்பிக்கையை பெற்றுவிட்ட, உதவிக்கு என்று தங்கள் கடையில் எவரையும் வேலைக்கு அமர்த்தாமல் இவர்கள் இருவர் மட்டுமே பம்பரமாய் சுழன்று கடையை தேடிவந்து கேட்கும் கஸ்டமர்களுக்கு தேவைப்படும் மளிகை சாமான்களை வழங்கி வரும் காளிராஜன்-அஞ்சாதேவி தம்பதியை அவர்கள் இல்லத்தில் சந்தித்தோம். புன்னகையுடன் நம்மை வரவேற்று அமர வைத்து கணவர் காளிராஜன் உடன் இருக்க நம் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
உங்கள் சங்கர் ஸ்டோர் "அக்கா கடை' ஆக புகழ் பெற்றது எப்படி?
"சங்கர் எங்கள் ஒரே மகனின் பெயர்.. தவமாய் தவமிருந்து நாங்கள் பெற்றெடுத்த தவப்புதல்வனின் பெயர்.. சொந்த ஊரான சிவகாசியில் நானும் என் கணவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தோம். எங்களுக்கு ஐம்பது ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்ததும் எங்களின் குலதெய்வமான பெரியாண்டவர் பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று பரிபூரணமாக சரண் அடைந்து கண்ணில் நீர் பெருக பிரார்த்தனை செய்து, சிவகாசி மண்ணில் சிறப்பான சக்திகளுடன் வேண்டி வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வரும் பெரியாண்டவர்-பேச்சியம்மன் திருவருளை வேண்டி வணங்கிவிட்டு எங்களை வாழ வைப்பது உன் பொறுப்பு என்று எதிர்கால முன்னேற்றத்தை தரும் பொறுப்பை பெரியாண்டவர் பேச்சியம்மனிடம் ஒப்படைத்து விட்டு மன தைரியம், ஆழ்ந்த நம்பிக்கை உடன் சென்னை வந்து என்னுடன் பிறந்த அண்ணன் சேர்மக்கனி, அண்ணி காளீஸ்வரி அவர்கள் மகன் சரவணன் உதவியுடன் கோடம்பாக்கம் வன்னியர் தெருவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்ணாக இருந்த நானும், இளைஞராக இருந்த என் கணவரும் உடல் பலம் மற்றும் மனபலம் துணை இருக்க, பெரியாண்டவர் பேச்சியம்மனை முழுவதுமாக நம்பி சாமி கும்பிட்டுவிட்டு இந்த சங்கர் கடையை துவங்கினோம்.
இங்கே அக்கம் பக்கத்தில் குடி இருக்கும் மக்கள் இனி அதிக தூரம் அலைய வேண்டாம்.
நமக்கு தேவைப்படும் பொருட்களை இந்த சங்கர் ஸ்டோரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சந்தோஷமாக வந்து வாங்கிட இனி நாம் பசி.. பட்டினி இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று முதல் கட்ட முன்னேற்றத்தை தந்த எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் பேச்சியம்மனுக்கு நன்றி கூறினோம்.
பள்ளி மாணவர்கள்-மாணவிகளுக்கு தேவைப்படும் அனைத்தையும் வாங்கி எங்கள் சங்கர் ஸ்டோரில் வைத்ததும் அக்கா கடைக்கு போனால் அனைத்தும் கிடைக்கும் என்று வந்து அவரவர்களுக்கு தேவையானதை வாங்கியதோடு என்னை பாசமான அக்காவாக மதிக்க துவங்கிவிட்டார்கள். அவர்கள் "அக்கா கடை' என்று அன்போடு அன்று வைத்த பெயர் இன்றும் நிலைத்து விட்டது.
மாணவ, மாணவிகளுக்கு "அக்கா கடை' ஆனதால் அனைவருக்குமே வயது வித்தியாசம் இல்லாமல் நான் அக்கா ஆகிவிட்டேன். என்னை விட வயதில் பெரியவர்கள் கூட என்னை "அக்கா' என்றும் எங்கள் கடையை "அக்கா கடை' என்றும் அழைக்க துவங்கி விட்டார்கள்.
அக்கா கடை தந்த அதிர்ஷ்ட மற்றும் அபார கடின உழைப்பு வளர்ச்சியை சொல்லுங்க?
"எங்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டி லேயே "சங்கர்' பிறந்தார். அவர் பெயரில் தான் "சங்கர் ஸ்டோர்' துவங்கினோம்.
சங்கரை அருகில் உள்ள நடிகை பண்டரி பாய் நடத்தி வந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம்.
நாங்கள்தான் படிக்கவில்லை.. எங்கள் பிள்ளை "சங்கர்' நன்கு படித்து பட்டம் பெற பெரியாண்டவர் பேச்சியம்மன் அருளை தினமும் வேண்டி பிரார்த்தனை செய்தோம்.
எங்கள் குலதெய்வம் எங்களை கைவிட வில்லை. சங்கர் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே நன்கு படித்தார்.
குலதெய்வம் கோவிலுக்கு செல்வீர் களா?
"வாழ்வில் உயர்வு தந்த பெரியாண்டவர் பேச்சியம்மனுக்கு நன்றியோடு இருக்கிறோம்.
வருடம்தோறும் மகன்- மருமகள், பேரன்கள் உள்üட்ட எங்கள் குடும்பத்தினர் அனைவருமாக குலதெய்வத்தின் பேரருளை பரி பூரணமாக பெற்று வருகிறோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/kuladeviya1-2026-01-03-16-52-40.jpg)
சமீபத்தில் நீங்கள் பெருமை பெற்ற விஷயம் எது?
"துபாயில் பணிபுரியும் சங்கர் பல தமிழ் சேவைகளை செய்து வருகிறார். எனவே அதனை கௌரவிக்கும் விதமாக சமீபத்தில் அமைச்சர்கள் பலர் வந்து கவர்னர் முன்னால் என் மகன் சங்கர் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது தந்து கௌரவிக்கப்பட்டார். சென்னையில் கவர்னர் மாளிகையில் பிரம் மாண்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் நாங்களும் பங்குபெற்று எங்கள் மகன் சங்கர் விருது வாங்கு வதை பார்த்து பூரிப்பும் பெருமையும் அடைந்து குலதெய்வத்திற்கு மனமார நன்றி சொன்னோம்.
அக்கா கடையை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டா?
எங்களுடைய கடையை விரிவுபடுத்தி பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோராக ஆக்கி தருகிறேன் என்று சொன்னார் சங்கர். நாங்கள் மறுத்துவிட்டோம். எங்கள் ஆயுள் உள்ளவரை அக்கா கடையில்தான் இருப்போம். மற்றும் பழைய கடை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ தொடர்ந்து அதேபோலவே எங்களுக்கு உடல்பலம் மனபலம் இருக்கும்வரை தொடர்ந்து இப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எங்கள் விருப்பத்தை சொன்னோம்.
அதனை சங்கர் மகிழ்வுடன் ஏற்று எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறார்.'
குலதெய்வ அருளும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பெற்ற மகன் மற்றும் அவர் குடும்பத்தின் உற்ற துணை இருந்தால் வாழ்வில் உயரலாம் என்பதை நிரூபித்து காட்டிய "அக்கா கடை' தம்பதிகளின் ஆசி பெற்று விடைபெற்றோம்.
இந்த சென்னை அக்கா கடை சாதனை தம்பதிகளை வாழ்த்த தொடர்பு கைபேசி எண்: 98418 12125
-பேட்டி, படங்கள்: ஆர்.பட்டம்மாள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/kuladeviya-2026-01-03-16-52-26.jpg)