Advertisment

ஏகன் ஆதன் கோட்டத்து யவன மருமகள்!  - மு அருளானந்தம்  (85)

marumagal

ல்லனின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவடைய மதிநுட்பத்தோடு நல்லனுடன் சேர்ந்து திறம்படச் செயல்புரிவதில் அவனது யவனபுரத்து இல்லாளுக்கு இணை வேறு யாருமில்லை. அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. ரோமாபுரி மன்னரோடு நெருங்கிய நட்பிலிருந்த கிரேக்க தேசத்து மன்னர் குடியைச் சேர்ந்தவள். மேற்கத்திய தேசங்களின் அனைத்து மொழிகளையும் பேசக்கூடியவள். அப்பகுதிகளில் நிலவும் அரசியல் சூழல்களை நன்கு உணர்ந்தவள்.

Advertisment

ஏகன் ஆதனாரின் பெரிய திட்டங் களை அப்பகுதியில் இவர்கள் இருவரும் திறம்பட நிறைவேற்றி முடித்துவிட்டனர். 

Advertisment

செங்கடற்பகுதியிலும், நைல் ஆற்றுச் சமவெளிகளிலும், பாண்டிய தேசத்தின் மேற்குப் பகுதிகளில் வாழும் காராளர் களையும், கொற்கைப் பகுதிகளில் வாழும் நற்குடி உழவர்களையும், பரதவர்களையும், சாத்தனார்களையும் அங்கு அழைத்துச்சென்று குடியமர்த்தி, "மூவதிகை' என்ற மூன்று நகரங்களை அவர்களுக்கெனக் கட்டமைத்துக் கொடுத்துள்ளனர்.

அந்நகரங்களுக்குக் காவலாக, "மூவதலை' எனப்படும் மூன்று காவற் குடியிருப்புகளைப் பாண்டிய நாட்டு போர் வீரர்களுக்காக அமைத்து, அவர்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வளமாக வாழும் வகையில் உருவாக்கி முடித்துள்ளனர். இதேபோல் செங்கடற் துறைமுகங்களில் மூன்று படகுத் துறைகளுக்கருகில் பாண்டிய நாட்டினரும், பரதவர் குடிகளும், வணிகச் சாத்தனார் குடிகளும் சேர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளை அமைத்து, அதற்கு "பாண்டியம்' எனப் பெயரிட்டு அழைப்பதற்கான உரிமையையும் ரோமாபுரி மன்னரிடம் பேசி பெற்றுக்கொடுத்த பெருமை நல்லனின் இல்லாளையே சாரும்.

இவ்விடங்களில் வாழும் தமிழ்க் குடிகள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சேந்தன் நல்லனின் விருப்பத்தின்படி, ரோமப் பேரரசனிடம் பேசி அப்பகுதிக்குரிய காராண்மை உரிமையையும் தமிழ்க் குடிகளுக் குப் பெற்றுக்கொடுத்தவளும் அவளே. இங்கிருந்து சென்ற பாண்டியக் குடிகள் உழவுத் தொழிலும்,

ல்லனின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவடைய மதிநுட்பத்தோடு நல்லனுடன் சேர்ந்து திறம்படச் செயல்புரிவதில் அவனது யவனபுரத்து இல்லாளுக்கு இணை வேறு யாருமில்லை. அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. ரோமாபுரி மன்னரோடு நெருங்கிய நட்பிலிருந்த கிரேக்க தேசத்து மன்னர் குடியைச் சேர்ந்தவள். மேற்கத்திய தேசங்களின் அனைத்து மொழிகளையும் பேசக்கூடியவள். அப்பகுதிகளில் நிலவும் அரசியல் சூழல்களை நன்கு உணர்ந்தவள்.

Advertisment

ஏகன் ஆதனாரின் பெரிய திட்டங் களை அப்பகுதியில் இவர்கள் இருவரும் திறம்பட நிறைவேற்றி முடித்துவிட்டனர். 

Advertisment

செங்கடற்பகுதியிலும், நைல் ஆற்றுச் சமவெளிகளிலும், பாண்டிய தேசத்தின் மேற்குப் பகுதிகளில் வாழும் காராளர் களையும், கொற்கைப் பகுதிகளில் வாழும் நற்குடி உழவர்களையும், பரதவர்களையும், சாத்தனார்களையும் அங்கு அழைத்துச்சென்று குடியமர்த்தி, "மூவதிகை' என்ற மூன்று நகரங்களை அவர்களுக்கெனக் கட்டமைத்துக் கொடுத்துள்ளனர்.

அந்நகரங்களுக்குக் காவலாக, "மூவதலை' எனப்படும் மூன்று காவற் குடியிருப்புகளைப் பாண்டிய நாட்டு போர் வீரர்களுக்காக அமைத்து, அவர்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வளமாக வாழும் வகையில் உருவாக்கி முடித்துள்ளனர். இதேபோல் செங்கடற் துறைமுகங்களில் மூன்று படகுத் துறைகளுக்கருகில் பாண்டிய நாட்டினரும், பரதவர் குடிகளும், வணிகச் சாத்தனார் குடிகளும் சேர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளை அமைத்து, அதற்கு "பாண்டியம்' எனப் பெயரிட்டு அழைப்பதற்கான உரிமையையும் ரோமாபுரி மன்னரிடம் பேசி பெற்றுக்கொடுத்த பெருமை நல்லனின் இல்லாளையே சாரும்.

இவ்விடங்களில் வாழும் தமிழ்க் குடிகள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சேந்தன் நல்லனின் விருப்பத்தின்படி, ரோமப் பேரரசனிடம் பேசி அப்பகுதிக்குரிய காராண்மை உரிமையையும் தமிழ்க் குடிகளுக் குப் பெற்றுக்கொடுத்தவளும் அவளே. இங்கிருந்து சென்ற பாண்டியக் குடிகள் உழவுத் தொழிலும், வணிகத் தொழிலும் திறம்படச் செய்து செல்வம் ஈட்டுவதற்குத் தங்களால் இயன்ற அளவு பெரும் உதவிகளை நல்லனும் அவரது இல்லாளும் செய்து கொடுத்தனர்.

இவ்வளவு பணிகளையும் அந்த யவனமகள் செய்ததற்குக் காரணம் நல்லன்மீது அவள் கொண்டிருந்த அளவுகடந்த பாசமும் அன்பும் தான். இதற்குக் காரணம் ஒருமுறை கடலன் வழுதியுடன் சேர்ந்து குரு ஆதனார் ரோமாபுரி மன்னனைச் சந்திக்கச் சென்றபோது, சேந்தன் நல்லனையும் தன்னோடு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது ரோமப் பேரரசனுக்கு சில அரிய பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்தார் கடலன் வழுதி. அவற்றில் ஒன்று, நீலநிறப் பட்டாடையில் சோனை முத்துகள் பதித்த இடைக்கச்சையாலான பரிசுப் பொருளாகும். இவ்வகை ஆடை எகிப்துப் பேரரசி கிளியோபாட்ராவிற்குப் பிடித்த ஒன்று. இப்பரிசுப் பொருளை சேந்தன் நல்லனிடம் கொடுத்து எடுத்துவரச் செய்திருந்தார் கடலன் வழுதி.

ரோம மன்னரின் அரண்மனையில் அச்சமயம் தன் தந்தையோடு வந்திருந்த யவனப் பெண் ஒருத்தி, இவ்வாடையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக்கண்ட சேந்தன், அவள் ஒரு ஏழைப் பெண் எனக் கருதி, அந்த நீல இடைக்கச்சையை அவளிடம் கொடுத்தான். 

அவள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து அவன் ரசித்தான். அவள் ஒரு அரசமகள் என்பது அவனுக்குத் தெரியாது.

ஒரு பேரரசனுக்கு அளிக்க இருந்த பரிசை, ஒரு ஏழைப் பெண்ணெனக் கருதி வழங்கிய தால் அரசகுற்றம் உருவாகிவிடும் என்ற அச்சத்தையும் மீறிய கருணையுள்ளம் சேந்தன் நல்லனிடம் இருந்ததைக் கண்ட அவள், "சேந்தனுக்கே என் வாழ்க்கை' என உறுதி பூண்டாள். தமிழரின் நற்குணத்தை நேரில் கண்டு வியந்தாள். இவன் யார் என அவள் சேந்தன் நல்லனோடு வந்தவர்களிடம் விசாரித்தபோது, அவன் பாண்டியப் பேரரசின் குரு ஏகன் ஆதனாரால் வளர்க்கப் பட்ட அனாதைக் குழந்தை என்ற செய்தியை அறிந்தவுடன், அவன்மீது அளவுகடந்த காதல் உருவானது. பாண்டியப் பேரரசின் உயர்தூதுக் குழுவினருடன் அவன் சென்றிருந்த தால் அவனது குற்றம் மன்னிக்கப் பட்டது. அப் பொருளுக்கு ஈடாக, கடலன் வழுதி பல அரிய பரிசுப் பொருட் களை ரோமப் பேரரசனுக்குக் கொடுக்க நேர்ந் தது.

அன்றிரவு ரோமாபுரி விருந்தினர் மாளிகைக்குச் சென்ற அந்த யவனப் பெண், குரு ஏகன் ஆதனாரைச் சந்தித்தாள். தான் யார் என்பதையும் கூறிவிட்டு, குரு ஏகன் ஆதனார் இங்குவந்த பயணத்தின் நோக்கத் தைத் தான் நிறைவேற்றித் தருவதாகவும், அதற்குப் பரிசாக சேந்தன் நல்லனைத் தனக்குத் தாருங்கள் என்றும் கெஞ்சினாள். 

யவன மங்கையின் இச்செயல்கண்டு, ஏகன் ஆதனார், சேந்தனின் நற்குணத்திற்குக் கிடைத்த பரிசே இவள் என நினைத்து வியந்தார். "மகளே, எனது செல்லமகன் சம்மதித் தால் அவன் உனக்கே' என உறுதியளித்தார்.

அத்தருணத்திலிருந்தே சேந்தனின் விருப்பங்கள் எதுவாக இருப்பினும் அவற்றை நிறைவேற்ற, அவள் எந்தத் தியாகத்தையும் செய்ய எத்தணித்தவளாகவே இன்றுவரை உள்ளாள். ஏகன் ஆதனாரின் விருப்பத்தின் படி ரோமாபுரியில் இவர்களது இல்லறம் தொடங்கப்பட்டது. அவர்கள் இருவருக் கிடையேயான கற்புநிலை மிகவும் உயர்வடைந்தது. பாண்டியத் திருநாட்டை வளமிக்க, மக்கள் நலன் கொண்ட நாடாகக் கட்டமைக்க குரு ஆதனார் எடுத்த திட்டங்கள் யாவும் முழுமையடைய, தங்கள் வாழ்வை ஆதனார் கோட்டத்திற்கே இருவரும் உரித்தாக்கிக் கொண்டனர்.

அச்சமயம் அங்கிருந்தவர்களிடம் இதனை எடுத்துரைத்துக் கொண்டிருந்த இளந்திரையன் "சீராளரே, கடலுக்குள் நாம் அனைவரும் செல்வோம்' எனக் கூறிக் கொண்டே தன் குதிரையிலிருந்து கடற்கரை மணலில் குதித்தார். சலனமுற்ற முகத்தோடு கருங்கடலையே பார்த்துக் கொண்டிருந்த மெய்மொழி அரையனார் தன் குதிரையிலிருந்து இறங்கினார். இருவரும் தங்கள் குதிரைகளை வீரர்களிடம் கொடுத்து விட்டு படகுத் துறை நோக்கி நடந்தனர்.

அப்போது இளந்திரையன், "சீராளரே, அதோ பாருங்கள். கருமையான இருண்ட கடலில் தூரத்தில் தீவெட்டி வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவை நம்மை நோக்கி வருவதைப்போலத் தோன்றுகின்றன. அவர்கள் நம்மவர்களா? அல்லது பகைவர் களா எனத் தெரியவில்லை!' என்றார்.

அதைக் கண்ணுற்ற மெய்மொழி அரையனார், "எதுவாக இருப்பினும் நாம் முன்னெச்சரிக்கையோடு இருப்போம். வீரர்களே! கடலுக்குள் இருந்துவருபவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆகையால் நீங்கள் அவர்களை எதிர்கொள்ளப் போர் நிலையில் தயாராக இருங்கள்' என உத்தரவிட்டார்.

அதைக்கேட்டு குதிரை வீரர்கள் கடலை நோக்கி வரிசையாகத் தங்கள் கூரிய அம்புகளை வில் நாணில் பூட்டி முதல் வரிசையில் நின்றனர். அதற்கடுத்த வரிசையில் யானைகளும், அதற்கடுத்த மூன்றாம் வரிசையில் காலாட்படை வீரர்கள் ஈட்டிகளோடு நின்றனர். தீவெட்டிகள் அருகே வரவர, அவற்றின் வெளிச்சத்தில் ஓடங்களில் கட்டியிருந்த வெண்ணிறப் பட்டுக் கொடிகளில் நீலநிறக் கயல்கள் அசைந்தாட, ஓடங்கள் விரைவாகப் படகுத் துறைகள் நோக்கிப் பாய்ந்து வந்தன. அதைக்கண்ட அரையனார், "வீரர்களே, அம்புகளை இறக்குங்கள். நமதுவீரர்கள்தான் வருகின்றனர்!' என்றார். ஓடங்கள் அனைத்தும் படகுத் துறைகளுக்கு வந்து சேர்ந்தன. விடியலை ஆரம்பித்துவைக்கும் விடிவெள்ளி கீழ்வானில் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

வந்துசேர்ந்த ஓடங்களில், சீராளர் மற்றும் இளந்திரையனின் கண்கள் சேந்தன் நல்லனைக் தேடின. ஆனால், சேந்தன் நல்லனைக் காணவில்லை. அவ்வோடங்களின் நடுவே வந்த ஓடத்தில், இரு வீரர்களின் மார்பில் தாங்கப்பட்ட நிலையில், கல்லாடனார் இரத்தம் சோர்ந்த உடையோடு மயங்கிய நிலையில் கிடப்பதை இளந்திரையன் கண்ணுற்றார். "என்ன ஆயிற்று கல்லாடனாருக்கு? எங்கே என் சேந்தன்?' என மனம் பதறிய நிலையில் கேட்டார்.

அவ்வோடத்தில் கல்லாடனாரைத் தாங்கிய நிலையில் இருந்த வீரர்கள், "கல்லாடனாரைத் தூக்க வாருங்கள்' எனக் கூறிக்கொண்டே, கல்லாடனாரின் மடி யிலிருந்து இரத்தத்தால் செந்நிறமாக மாறியிருந்த, மீன்சின்னம் வரையப்பட்ட வெண்பட்டுக் கொடியால் சுற்றப்பட்ட ஒரு துணிச்சுருட்டை எடுத்தனர். இரண்டு வீரர்கள் கல்லாடனாரை ஓடத்திலிருந்து இறக்கினர். அப்போது அந்த வெண்கொடி சுருட்டை எடுத்த வீரன், தன் கைகள் நடுங்கியபடியே, அதைச் சீராளரிடம் நீட்டினான்.

சீராளர், "என்ன அது?' என்றார். அதற்கு அவ்வீரன், "ஐயனே, இது சேந்தன் நல்லனாரின் வலக்கரம்' என நடுங்கிய குரலில் கூறினான். "என்ன கூறுகிறீர்கள்? சேந்தன் எங்கே?' எனச் சீராளர் உரத்த குரலில் சத்தமிட்டார். அதற்கு அந்த வீரன், "ஐயனே, அவர் உயிர்த்தியாகம் செய்துவிட்டார். தன்நிலையாக எதிரிகள் கப்பலில் ஏறி, தன்னை எரியூட்டி, கப்பலுடன் கடலில் குதித்து, அதனை முழுவதும் வெடிக்கச் செய்து, நம் அனைவரையும் காப்பாற்றி விட்டார்' என நடுங்கிய குரலில் கூறினான்.

அதைக்கேட்ட சீராளர், "எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்துவிட்டது. நான் ஏகன் ஆதனாருக்கு என்ன பதில் சொல்வேன்?' என வேதனைமிகு குரலில் கூறிக்கொண்டே, இரத்தம் படிந்த அந்தத் துணிச்சுருட்டை வாங்கினார். தொட்டவுடன், அது இரத்தம் பிசுபிசுத்த நிலையில் இருப்பதை அவரது கைகள் உணர்ந்தன. அவர் நிலைதடுமாறத் தொடங்கினார். அதைக்கண்ட இளந்திரை யன், அவரைத் தன் மார்பில் வலது கரத்தால் அணைத்தபடி, இடக்கரத்தால் அந்தத் துணிச்சுருட்டைப் பிடித்துக்கொண்டு, மெல்ல படகுத் துறையில் அமரச் செய்தார். வீரர்கள் அனைவரும் தீவெட்டிகளோடு புடைசூழ ஓடிவந்து குவிந்தனர்.

தீவெட்டிகளின் வெளிச்சத்தில், மெல்ல மெல்ல இளந்திரையன் அந்த வெண்பட்டுச் சுருட்டை பிரித்தார். அதில் கருகிய நிலையில், இரத்தம் வடிந்து சூம்பிய நிலையில்,  சேந்தனின் வலதுகரம் பச்சை ஒளிவீசும் மரகத மோதிரம் அணிந்திருந்ததைப் பார்த்தவுடன், அவரது நெஞ்சம் செந்நீர் நிரம்பி வீங்கியதுபோல் பதறி, அந்த வேதனை உடல் முழுவதும் விரைவாகப் பாய்ந்தது. நெஞ்சுவலியோடு அவர் சட்டென தரையில் அமர்ந்தார். 

தியாகம் முடிவல்ல; வரலாறு தொடரும்'

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe