20 வருட தசை புக்திகளை, தன்னகத்தே கொண்ட சுக்கிரன், ஒரு மனிதனின் வாழ்நாளில் பெற ஆவல் கொள்ளும் அத்தனை சுக போகங்களையும், வாரி வாரி வழங்கும் தன்மை பெற்ற தன்னிகரற்ற ஒரு கோளாகும். 

Advertisment

சுப கிரகங்களில் குருவிற்கு அடுத்தார்போல் அமைந்த கிரகம் சுக்கிரனாகும். 

பராமரிப்பை பெற்றுக் கொண்டு பலனளிக்கும் தென்னை மரம் குருவானால், பராமரிப்பு இல்லாமல் பலனை அளிக்கும் பனைமரம் சுக்கிரன் ஆகும். 

Advertisment

தூய்மை, அழகு, ஆபரணம், இன்பம், காமம், காதல், ரசிப்புத்தன்மை, மோகம், இணைவு, அமைதி, வளமை, செல்வ செழிப்பு போன்ற அனைத்தையும் அருளும் ஆற்றலை சுக்கிரனே பெற்றுள்ளார். 

நவரத்தினங்களில் வைரம் சுக்கிரனின் காரகமாகும். இதிலிருந்து இவரின் செல்வ பாக்கிய யோகிதைகளை நம்மால் கணக்கிட முடியும். சுக்ரா என்றால் தெளிவான அல்லது பிரகாசமான என்ற பொருள் படும். 

Advertisment

இந்த தசையில் சுக்கிரன் பலம் அற்புதமாக அமைந்தவர்களுக்கு, செல்வ செழிப்பு, திருமணம், வீடு மனை, பதவி உயர்வு போன்றவை வீடு தேடிவரும். 

எப்பொழுதும் பாவ கிரகங்கள் முதல் பாதியில் சுபிக்சத்தையும், இரண்டாம் பாதியில் கஷ்டங்களையும் அளிக்கும்.

சுப கிரகங்கள் முதல் பாதியில் சில இடர்பாடுகளையும், இரண்டாம் பாதியில் நிம்மதியை நோக்கிய பயணத்தையும் அளிக்கவல்லது. யாருக்கெல்லாம் சுக்கிரன் சுகம் அளிப்பவர். 

சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், இவர்களுக்கு சுக்கிர தசை வருவதில்லை வெறும் புக்திகளை மட்டுமே அனுபவிக்கும் யோகிதை இவர்களுக்கு அமைய பெற்று விடுகின்றது. 

சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு குரு, சனி, புதன், கேது, இவற்றை கடக்கவே நூறு வருடத்தை தாண்டிவிடுவதால் இவர்களுக்கு சுக்கிரனின் தசை வருவதில்லை. 

அடுத்ததாக செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்றவையும் மிக முதிர்ந்த பருவத்தில் வருவதனால் இவற்றின் தன்மையை ஏற்புடையதாக இவர்களாலும் ஏற்க முடியாது. 

அதேபோல் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரக் காரர்களுக்கு முதல் ஏழு வருடங்களின் தசை முடிவிற்கு பிறகு சுக்கிரனின் தசை வருவதனால் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குடும்ப சூழல் செல்வ செழிப்புடன் அமையும். சிறுவயதில் சுக்கிரனின் முழு ஆளுமையையும் இவர்களால் அனுபவிக்க இயலாது. 

சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கூறியதுபோல் குடும்பம் செல்வ செழிப்பாகவே அமையும். 

இவர்களுக்கும் சுக்கிரனின் அதீத காரகமான காமம், காதல், இதைச் சார்ந்த பயணம் வெகுவாக இன்பத்தை அளிப்பதே இல்லை.

மேலும் பரணி நான்காம் பாதத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு நவாம்சத்தில் சந்திரன் விருச்சிகத்தில் அமையும்.

இந்த சூழல் தாயாதிவழி சொத்துகளோ- உறவுகளோ இணக்கமாக அமைவது பெரும்பான்மையாக இல்லாமலேயே இருக்கின்றது.

மேலும், இந்த சுக்கிரனின் தசை முடிவிற்குள் தாயாருக்கு உடல் ரீதியாக மற்றும் மனரீதியான பெரும் பாதிப்புகளை அளித்து விடுகின்றது.

எப்பொழுதும் சுக்கிரன் தனித்திருப்பது சிறப்பு என்கின்றது ஜோதிட நிகண்டுகள். 

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதனின் இணைவானது மதனகோபால ராஜ யோகத்தை அளிக்கவல்லது. 

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனத்திற்கு பெரும் யோகத்தை அளிக்காமல் நகர்கின்ற தன்மையை இந்த சுக்கிரன் பெற்றுவிடுகின்றது. 

கடக லக்னத்திற்கு 11-ஆமிடம் பாதகம் என்கின்ற விதியின் பிரகாரம் சுக்கிரனின் தசை பெரும் பாதகத்தை அளிப்பதை கண்கூடாக காணமுடிகின்றது. இதனால்தான் சுக்கிரனுக்குமுன்பு நிகழக்கூடிய கேதுவின் தசை கடக லக்னத்திற்கு சிறப்பை அளித்து சுக்கிரனின் தசையில் சில இடர்பாடுகளை வழங்கிவிடுகின்றது. 

உடல் கூறில் சுவாதிஷ்டான சக்கரம் இடம்பெற்றுள்ள தொப்புள் பகுதியைச் சார்ந்த உள்ளுறுப்புகள் அனைத்தும் சுக்கிரனின் ஆளுமைக்கு உட்படும் உறுப்புகள் ஆகும். 

இதனால்தான் சூரியன், சுக்கிரனின் இணைவு ஆண்களுக்கு உயிரணு சார்ந்த பிரச்சினையும், பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பிரச்சினைகளையும் வழங்கிவிடுகின்றது. 

சுக்கிரன், கேதுவின் இணைவும் மன வாழ்வில் சில இடர்பாடான தன்மையை அளித்துவிடுகின்றது. 

20 வருட தசாபுக்தியில் வழங்கப்போகும் ஆற்றல்மிகுந்த அம்சங்கள் என்னவென்று ஆராயலாம். 

சுக்கிர தசையில் சுக்கிர புக்தி  மூன்று வருடங்களும், நான்கு மாதங்களும்.

இந்த காலகட்டங்கள் சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடப்பில் இருக்கும் பொழுது, எல்லாவிதமான இனிமைமிகுந்த உணவு, உடை, ஆபரணங்கள் போன்றவற்றின்மீது ஈர்ப்புகளை வாரிவழங்கும்.

அதேபோன்று எதிர்பாலினம் மற்றும் சமூகத்தின் மீதான ஈர்ப்பும், அதிகரிக்கும்.

வாழ்க்கை வளமாக்கும் சூத்திரங்கள் எவை எவை என்று ஆராயும் எண்ணத் தையும், அதை சார்ந்த பயணத்தையும் அளிக்கும். 

இது வெறும் சுக்கிரனை மட்டுமே வைத்து கணக்கிடும் பதிவாகும். சுக்கிரன் ஏரி நிற்கும் பாதம் அதாவது சாரத்தை வைத்தும் சில பலன் கள் மாறுபடும். 

ஆக, இந்த சுக்கிர தசையில் சுக்கிர புக்தியில் தனக்குத் தேவையான பொருட் களின்மீதான ஈர்ப்பும் அவற்றை பெறும் வழியையும், கணக்கிடும் ஒரு திட்டத்தை மட்டுமே வகுக்கும். அதை அடையும் தன்மையை அடுத்தடுத்த வரும் புக்திகளில் நிறைவேற்றும். 

சுக்கிர தசையில் சூரிய புக்தி முழுமையாக ஒரு வருட காலமாகும். 

இந்த காலகட்டத்தில் உயர் பதவி, சமூகத்தில் ஒரு நல்ல தோரணை வழங்குகின்ற சூழல் போன்றவற்றை அருளும்.

அதோடு காதல் சார்ந்த பயணத்திலும், கல்வி சார்ந்த பயணத்திலும், ஈர்ப்பை அளிக்கும். குலதெய்வம், குழந்தைகள் போன்றவற்றின் மீதும் கவனம் திருப்பப்படும். 

சுக்கிர தசையில் சந்திரனின் புக்தி ஒரு வருடம் எட்டு மாதங்கள். 

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பயணம், வெளியூர் பயணங்கள், பணியிடை மாற்றம், தன்னை அலங்கரித்துக்கொள்ளும் தன்மை, ருசிகரமான உணவின் வசம் மனது 

ஈர்க்கப்படுவது, பெண்களாக இருக்கும்பட்சத் தில் கருவுறும் தன்மை போன்றவற்றை இந்த தசாபுக்தி வாரி வழங்கும். 

சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி ஒரு வருடம் இரண்டு மாத காலங்கள். 

சுக்கிரன் நல்ல ஆளுமையில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு பிடி மண்ணாவது இவர்களின் பெயர்களில் கிரயமாகும்.

பூமி சார்ந்த வளம், விவசாயம் சார்ந்த வளர்ச்சி போன்றவற்றை அருளும்.

சுக்கிரனோ அல்லது செவ்வாயோ 10-ஆம் இடம் சார்ந்து பயணிக்கும் சூழலில் இருப்பவர்களுக்கு சீருடை பணி அமைவதற் கான வாய்ப்புகளை அளிக்கும்.

காமத்தின்மீதான ஈர்ப்பு இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக அமையும். 

சுக்கிர தசையில் ராகு புக்தி மூன்று வருடங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும். 

இந்த காலகட்டங்கள் போககாரர்களின் இணைவுடன் சுக்கிரன் இணையும்பொழுது, மகத்தான வெற்றியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.

சினிமா சார்ந்து பயணிக்கும் நபர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு அற்புதமான காலமாக அமையும்.

லாட்டரி, திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை வழங்கும் யோகியதை இந்த சுக்கிரன் ராகுவிற்கு மட்டுமே உள்ளது. 

சுக்கிர தசையில் குரு புக்தி இரண்டு வருடங்களும் எட்டு மாதங்களையும் ஏற்றுள்ளது. 

மேலோட்டமாக குரு சுக்கிரன் பகையாக கருதப்பட்டாலும், இரண்டும் சுப கிரகங்கள் என்கின்ற விதியின் பிரகாரம் இந்த காலகட்டம் குழந்தை வரம், திருமணம் போன்றவற்றை மிக எளிதாக அருளும் நேரமாக கருதப்படுகின்றது.

கல்வியில் இருந்த இடர்பாடுகளும், சமூகம் சார்ந்த மரியாதைகளும், இந்த காலகட்டத்தில் ஜாதகரை வந்தடையும். 

சுக்கிர தசையில் சனி புக்தி இரண்டு வருடம் பத்து மாதங்கள். 

சுக்கிரனும், சனியும், இயல்பிலேயே நட்பு கிரகங்களாக அமைந்து விடுவதனால், இந்த காலகட்டம் சுக்கிரனின் அனைத்து வகையான செல்வ செழிப்பு மற்றும் தொழில், திருமணம், குழந்தை பேரு, சமூக ரீதியான மரியாதை, கௌரவம் போன்றவற்றை மிக எளிமையாக பெற்று விடமுடியும். அதேபோன்று இதுவரை கடந்துவந்த புக்திகளிலேயே கிடைப்பதற்கு அரிதான சில விஷயங்கள் இந்த தசா புக்தியில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. 

சுக்கிர தசையில் புதன் புக்தி இரண்டு வருடம் 10 மாதங்கள். 

இந்த காலகட்டத்தில் கல்வி, சாஸ்திரம் போன்றவற்றில் பெரும் வளர்ச்சியை அடையமுடியும், அதோடு யாரிடம் எப்படி நடந்தால் தனக்குத் தேவையானவை கிடைக்கும் என்கின்ற மனோநிலையை வளர்த்து அதன்மூலம் தனக்குத் தேவையானவற்றை அடையும் சூழல் இவர்களுக்கு கிடைக்கும். சுக்கிரன், புதன் இவர்கள் இருவரும் அஸ்தங்கம் ஆகாதபட்சத்தில் மேற்கூறிய அத்தனை பலனும் இவர்களுக்கு கிடைக்கும். 

சுக்கிர தசையில் கேது புக்தி ஒரு வருடம் இரண்டு மாதங்கள். 

மேற்கூறிய காலகட்டம் சற்று கடினமான காலகட்டம் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். கணவன்- மனைவி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பெண்களாக இருக்கும்பட்சத்தில் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை, இவர்கள் கையாள வேண்டிய சூழல் இந்த காலகட்டத்தில் அமையும். உயர்ரக குழந்தையின்மை சிகிச்சைக்கு செல்பவர்கள் இந்த காலகட்டத் தைத் தவிர்ப்பது மிகச் சிறப்பு.

 இந்த காலத்தில் செய்யப்படும் ஐவிஎஃப் (ஒயஎ). ஐயூஐ (ஒமஒ) போன்ற சிகிச்சைகள் பெரும்பாலும் தேர்ச்சி பெறாமல் செல்வதை காண முடிகின்றது. 

இந்த பலன்களின்ரீதியில் சுக்கிரன் வாழ்க்கையின் வளத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு கிரகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றாலும், இந்த சுக்கிரன் பாதகாதிபதியாகவோ அல்லது அஷ்டமாதிபதியாகவோ வரும்பட்சத்தில் இதற்கான பலனை சற்று கவனத்தில் முழுமையாக ஆராய்ந்து எடுத்துக்கொள்வது மிக சிறப் பாகும். 

பரிகாரம் 

சுக்கிரனின் விருட்சம் நெல்லி மரமாகும். இந்த நெல்லிக்காய் சாறு தினம்தோறும் அருந்திவர சனியின் தொந்தரவு குறைந்து, சுக்கிரனின் சுபிட்சத்தையும், ஒருசேர அடையமுடியும். மேலும் சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூர் சென்று வழிபடுவதும், வீட்டில் பூவாடை காரிக்கு மருதாணி வைத்து வழிபடும் வழிபாட்டை மேற்கொள்வதும் மிகச்சிறந்த பலனை வாரி வழங்கும். 

செல்: 80563 79988