Advertisment

பரம்பரை சொத்தை அழித்த பாமர சாபம்! - தீர்வு தந்த அகத்தியர்!  -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

agathiyar

 

மிழகத்தின் நெற்களஞ்சியமான மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். 

அவரை அமர வைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.

Advertisment

"என் வம்ச முன்னோர்கள், ஏராளமான சொத்துகளுடன், செல்வம், செல்வாக்குடன், புகழோடு வாழ்ந்தார்கள். முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகள் அழிந்து, இப்போது நான் எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். என் பிழைப்பிற்காக பல தொழில் செய்தேன். எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்ய முடியவில்லை. ஏதாவது தடைகள் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றது. பிறரிடம் வேலைக்குச் சென்றாலும் தொடர்ந்து, நிலையாக வேலை செய்ய முடியவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்துவருகின்றேன். என் எதிர் கால வாழ்க்கை இருளாகத் தெரிகின்றது.

வாழ்வின் வறுமைநிலை மாற, கஷ்டங்கள் நீங்க, கிரக தோஷம், குல தெய்வ குற்றம் என்று ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்களையும், எனக்கு யாரோ செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் வைத்துள்ளார்கள் என்று குறிசொல்பவர் கள் கூறியதைக்கேட்டு அதனை சரிசெய்ய வழிபாடுகளையும் செய்தேன். ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. வறுமை நீங்கவில்லை. நல்ல வாழ்வும் அமையவில்லை

 

மிழகத்தின் நெற்களஞ்சியமான மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். 

அவரை அமர வைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.

Advertisment

"என் வம்ச முன்னோர்கள், ஏராளமான சொத்துகளுடன், செல்வம், செல்வாக்குடன், புகழோடு வாழ்ந்தார்கள். முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகள் அழிந்து, இப்போது நான் எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். என் பிழைப்பிற்காக பல தொழில் செய்தேன். எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்ய முடியவில்லை. ஏதாவது தடைகள் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றது. பிறரிடம் வேலைக்குச் சென்றாலும் தொடர்ந்து, நிலையாக வேலை செய்ய முடியவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்துவருகின்றேன். என் எதிர் கால வாழ்க்கை இருளாகத் தெரிகின்றது.

வாழ்வின் வறுமைநிலை மாற, கஷ்டங்கள் நீங்க, கிரக தோஷம், குல தெய்வ குற்றம் என்று ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்களையும், எனக்கு யாரோ செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் வைத்துள்ளார்கள் என்று குறிசொல்பவர் கள் கூறியதைக்கேட்டு அதனை சரிசெய்ய வழிபாடுகளையும் செய்தேன். ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. வறுமை நீங்கவில்லை. நல்ல வாழ்வும் அமையவில்லை. நான் தினந்தோறும் எங்கள் ஊரிலுள்ள கோவிலுக்குச் சென்று வழிபடுவேன். அந்த கோவில் குருக்கள், தங்களைப் பற்றி கூறி, நீ சென்று ஜீவநாடியில் பலன் கேட்டால் உன் கஷ்டத்திற்கு காரணமும், நல்ல வாழ்க்கையும் அமையும் என்று கூறி உங்கள் செல்போன் நம்பரையும் கூறினார். அதனால்தான் தங்களை நாடி வந்தேன். அகத்தியர்தான் எனக்கு வழி காட்டவேண்டும்'' என்றார். 

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

Advertisment

இவன் கூறுவது உண்மைதான். இவன் முன்னோர்கள் சொத்து, நிலம் என பிரசித்தமாக வாழ்ந்தார்கள்.  இவர்கள் பண்ணையில் கூலித் தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை செய்துவந்தார்கள்.  அவர்களுக்கு கூலிப் பணத்தைக் கொடுக்கும்போது, பேசிய கூலிப் பணத்தைக் கொடுக்காமல் குறைத்துத்தான் கொடுத்தார்கள் ஆள்பலம், பணபலம், அதிகார பலம் உள்ளவர்களாதலால், அந்த ஏழை மக்கள், பேசிய கூலி பணத்தை குறைக்காமல் கொடுங்கள் என்று கேட்டால், அவர்களை அடித்து மிரட்டுவார்கள்.  அதன்பிறகு அவர்களுக்கு அடுத்து வேலை தரமாட்டார்கள். மனிதர்கள் என்று கூறிக்கொண்ட இவன் முன்னோர்கள் நியாய, தர்மம், நேர்மையின்றியே வாழ்ந்தார்கள்.

இவன் பண்ணையில் வேலை செய்து, உழைத்த கூலிப் பணத்தை இழந்த பாமர கூலியாட்கள், மனம் வெதும்பி, இவன் குடும்பத்தினருக்குச் சாபமிட்டார்கள்.  எங்கள் உழைப்பிற்கு முறையாகத் தரவேண்டிய கூலியைத் தராமல் அபகரித்து, அந்தப் பணத்தில் நீங்கள் வயல், தோப்பு, வீடு என சொத்துசேர்த்து அனுபவித்து வாழ்கின்றீர்கள்.  இந்த சொத்துகளை உங்கள் வம்ச வாரிசுகள், சந்ததியினர் அனுபவிக்க மாட்டார்கள்.  இந்த சொத்துகள் பாமரர்களாகிய நாங்கள் விட்ட சாப சொத்துகள் இவை அழியும்.

உங்கள் வம்ச வாரிசுகள், சுயமாகத் தொழில் செய்தாலும், அந்தத் தொழில் மேன்மை, விருத்தி அடையாது.  நல்ல வேலைக்காரர்கள் அமைய மாட்டார்கள்.  சரியான தொழில் கிடைக்காது.  எங்களைப் போல் பிறரிடம் வேலைக்காரர்களாக, அடிமைபோல் வேலை செய்து, கூலியாளாக வாழ்வார்கள்.  சம்பாதிக்கும் பணம் அனுபவிக்க முடியாமல் விரையமாகும் என்று வாக்கு சாபமிட்டார்கள்.

இவன் வம்ச முன்னோர்கள், வேலை யாட்களுக்குச் செய்த பாவங்களால், கூலியாட்கள் விட்ட சாபம் படிப்படியாக வளர்ந்து மூன்று தலைமுறைக்கு முன்னால் இருந்த சொத்துகள், கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, இவன் தந்தை காலத்திலேயே முற்றிலும் அழிந்து போய்விட்டது. இவன் குடும்பத்தினர் சொந்த ஊரில் பிழைக்க, வசிக்க முடியாமல், பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்து வாழ்கின்றார்கள்.  

இவன் பண்ணையில் கூலியாளாக வேலை செய்தவர்களின் வம்ச வாரிசுகள், இன்று பணம், பதவி, தொழில், சொத்துகள் என அமைந்து வசதியாக வாழ்கின்றார்கள்.

இவன் இதுநாள் வரை, தன் வாழ்வில் உண்டாகும் கஷ்டம் தீர கிரகம், தெய்வம் என்று ஜோதிடர்கள் கூறும் பரிகாரங் களைச் செய்து அலைந்துகொண்டு இருக்கின்றேன். கஷ்டம் தீரவில்லை என்று கூறி புலம்புகின்றான். பரிகாரங்களைச் செய்து, பாவ-  சாபத்தை தீர்க்க முடியாது என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும்.  கடவுளை வணங்கி, வாழ்வில் கஷ்டம், குறைகள், தடைகளை தடுத்துக் கொள்ளமுடியாது என்பதை இவன் அறிந்துகொள்ளட்டும்.

இவன் இனிவரும் வருங்கால வாழ்வில் நான் கூறுவதை நடைமுறை வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தால், பாமர சாபத்தை தடுத்துக்கொண்டு வாழ்வில் உயர்வடைய முடியும் என்று கூறி அந்த இளைஞன் செய்யவேண்டிய சரியான தொழில், தொழிலைச் செய்யவேண்டிய முறை அதில் சம்பாதித்த பணத்தை சேமித்து காப்பாற்றும் வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர், கடவுள் வழிபாடு, பரிகாரங்களை செய்ய வேண்டாம் என்று கூறுகின்றார். இனி நான் அகத்தியரையும், சித்தர்களையும் வணங்கினால் அவர்களின் அருளாசி கிடைக்குமா என்றார்.

சித்தர் பெருமக்கள் படையல் சோற்றுக்கும், பக்தி, சூடம் வழிபாட்டிற்கும், காடு, மலைகளில் சென்று வழிபடுவதாலும், அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கெல்லாம், மயங்கி அருள் செய்ய மாட்டார்கள். அவர்கள் கூறும் வழிமுறைகளை, நடைமுறை வாழ்வில் முறையாகக் கடைபிடித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே, உடனிருந்து காப்பாற்றுவார்கள். வாழ்வில் உயர்த்தி வைப்பார்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.

"செய்யும் தொழிலே தெய்வம்'', "ஏழைகளின் வாக்கு, சாபம், கூறிய வாளைபோல் தாக்கும்'' என்பதை நானும் அறிந்துகொண்டேன்.  தன்னிடம் வேலை செய்யும், வேலைக்காரர்களுக்கு தரவேண்டிய கூலியை, சம்பளத்தை, முறையாகத் தராமல், குறைவாகத் தந்து பணம், சொத்து சேர்த்து வைத்தாலும், அவற்றை அவர்கள் வம்ச வாரிசுகள் அனுபவிக்க முடியாமல் அழியும் அல்லது வம்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லாமல் போகும்.

ஏமாற்றி சேர்த்த சொத்துகளை, எவரோ அனுபவிப்பார்கள் என்பதே நடைமுறையில் உண்மை என்பதை நானும் புரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267

bala130925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe