Advertisment

குலதெய்வ சாபமும், நீங்க வைக்கும் பரிகாரமும்! -பண்டிட் எம்.ஜி.பி

kuladeivam


சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூறவேண்டும். 

Advertisment

நமது முன்னோர்கள் வழிவழியாக வணங்கும் தெய்வமே குலதெய்வமாகும். 

மற்ற அனைத்து தெய்வங்களை காட்டிலும் குல தெய்வத்திற்கு சக்தி அதிகம். எமன்கூட ஒருவரின் உயிரை பறிக்க வேண்டுமானால் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே பறிப்பார். 

Advertisment

இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? நமது ஜாதகத்த


சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூறவேண்டும். 

Advertisment

நமது முன்னோர்கள் வழிவழியாக வணங்கும் தெய்வமே குலதெய்வமாகும். 

மற்ற அனைத்து தெய்வங்களை காட்டிலும் குல தெய்வத்திற்கு சக்தி அதிகம். எமன்கூட ஒருவரின் உயிரை பறிக்க வேண்டுமானால் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே பறிப்பார். 

Advertisment

இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? நமது ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா? அதற்கு பரிகாரம் உண்டா?

ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா- பாட்டி, தாய்- தந்தையர் போன்றோர் குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வக் கோவி-ற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.

ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகமாக விளங்குகிறார் சனிபகவான். 

குலதெய்வ சாபத்தால் ஏற்படும் விளைவுகள்

குலதெய்வ சாபமுள்ள ஒருவருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சிலருக்கு குழந்தைப் பேறு இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் ஒரு இழுபறி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்காது. இப்படி குலதெய்வ சாபத்தால் பல துன்பங்கள் வரும். 

இந்த துன்பமானது நமக்கு மட்டுமில்லாமல் நமது சந்ததியினருக்கும் தொடரும். நம்மோடு இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாபநிவர்த்தி செய்வது அவசியம்.

குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம்!

நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந் தால் குலதெய்வ சாப பரிகாரம் என்பது மிக எளிதாக இருக்கும். 

குலதெய்வம் பற்றி அறியாதவர்கள் முத-ல் குலதெய்வத்தை அறிவது அவசியம். பின் நம் முன்னோர்கள் எப்படி குலதெய்வத்தை வழிபட்டார்களோ அதேபோல நாமும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

ஒரு சிலருக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்கும். சிலர் வெறும் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வர்.

 இப்படி நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைபடி நாம் வணங்கவேண்டும். 

நாம் இத்தனை நாள் செய்த தவறுக்காக குல தெய்வத்திடம் மன்றாடி வேண்டி நாம் கொடுக்கும் பூசையை ஏற்கும்படி கேட்கவேண்டும். 

இதனால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நிச்சயம் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்.

செல்: 89035 51587

bala251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe