Advertisment

தேவ குருவின் சதிராட்டம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

guru


தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரதிபலிக்கின்றார்.

Advertisment

முழுமையாக 16 வருடங்களை தன்னகத்தே கொண்ட இவரை புத்திர காரகன் என்று போற்றி புகழ்கின்றோம். 

Advertisment

சூரிய குடும்பத்தில் ஒன்றான வியாழன், ஒரு ராட்சத வாயு கோளாகும். மற்ற கிரகங்களில் இருப்பதைப்போல் வியாழனில் திடமான மேற்பரப்புகள் அற்று காணப்படுகின்றது. 

இந்த கிரகத்திற்கு 67 நிலவுகள் இதுவரை அறியப்பட்டுள்ளது. இதில் கலிலியோ அவர்களின் கண்டுபிடிப்பான நான்கு நிலவுகளும் உள்ளடக்கம். 

அவற்றுள் பெரிய நிலவான கனிமீடு நிலவின் விட்டமானது புதன் கோளைவிடவும் பெரிய தாகும். 

இந்த மாபெரும் வாய்வு கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள வெறும் 9 மணி 50 நிமிடம் எடுத்துக்கொள்கின்றது. அதாவது நொடிக்கு 8 மைல் வேகம் சுற்றி 12 வருடத்திற்கு ஒருமுறை 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனை சுற்றுகின்றது.

சூரிய மண்ட லத்தின் பாதி பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொள்வதோடு, சூரியனின் உள் இருப்பான அதே ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை தன்னுள்ளேவும் பரப்பித் திரண்டு சுற்றிக் கொண்டு இருப்பதோடு, விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் போன்றவற்றை ஈர்த்து, தன்னை சுற்றி சுழல வைத்து பூமியை பாதுகாக்கும் ஒரு பெருங்கருணையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. 

இது மட்டுமா மனித உடலில் பிரதானமான மூளையின் செயல்பாடும், உடலின் மொத்த கொழுப்பின் காரகமும், குருதான். அதனால்தான் தட்சிணாமூர்த்தி அமர்ந்த கல்லாள மரத்தின் வடிவம் மனித மூளையை ஒத்து இருப்பதற்கான காரணமாக திகழ் கின்றது. 

மூளையில் இடம்பெற்றுள்ள இரண்டு சுரபிகளின் வசம்தான் பெரும்பான்மையான மனித செயல்பாடுகள் உள்ளது.

அவை பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பினியல் சுரப்பி ஆகும்.

பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் இயக்கு நீர்களின் வளர்ச்சி ரத்த அழுத்தம், ஆற்றல் மேலாண்மை, பாலியல் உறுப்புகளின் அனைத்து செயல்பாடுகள், தை


தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரதிபலிக்கின்றார்.

Advertisment

முழுமையாக 16 வருடங்களை தன்னகத்தே கொண்ட இவரை புத்திர காரகன் என்று போற்றி புகழ்கின்றோம். 

Advertisment

சூரிய குடும்பத்தில் ஒன்றான வியாழன், ஒரு ராட்சத வாயு கோளாகும். மற்ற கிரகங்களில் இருப்பதைப்போல் வியாழனில் திடமான மேற்பரப்புகள் அற்று காணப்படுகின்றது. 

இந்த கிரகத்திற்கு 67 நிலவுகள் இதுவரை அறியப்பட்டுள்ளது. இதில் கலிலியோ அவர்களின் கண்டுபிடிப்பான நான்கு நிலவுகளும் உள்ளடக்கம். 

அவற்றுள் பெரிய நிலவான கனிமீடு நிலவின் விட்டமானது புதன் கோளைவிடவும் பெரிய தாகும். 

இந்த மாபெரும் வாய்வு கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள வெறும் 9 மணி 50 நிமிடம் எடுத்துக்கொள்கின்றது. அதாவது நொடிக்கு 8 மைல் வேகம் சுற்றி 12 வருடத்திற்கு ஒருமுறை 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனை சுற்றுகின்றது.

சூரிய மண்ட லத்தின் பாதி பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொள்வதோடு, சூரியனின் உள் இருப்பான அதே ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை தன்னுள்ளேவும் பரப்பித் திரண்டு சுற்றிக் கொண்டு இருப்பதோடு, விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் போன்றவற்றை ஈர்த்து, தன்னை சுற்றி சுழல வைத்து பூமியை பாதுகாக்கும் ஒரு பெருங்கருணையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. 

இது மட்டுமா மனித உடலில் பிரதானமான மூளையின் செயல்பாடும், உடலின் மொத்த கொழுப்பின் காரகமும், குருதான். அதனால்தான் தட்சிணாமூர்த்தி அமர்ந்த கல்லாள மரத்தின் வடிவம் மனித மூளையை ஒத்து இருப்பதற்கான காரணமாக திகழ் கின்றது. 

மூளையில் இடம்பெற்றுள்ள இரண்டு சுரபிகளின் வசம்தான் பெரும்பான்மையான மனித செயல்பாடுகள் உள்ளது.

அவை பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பினியல் சுரப்பி ஆகும்.

பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் இயக்கு நீர்களின் வளர்ச்சி ரத்த அழுத்தம், ஆற்றல் மேலாண்மை, பாலியல் உறுப்புகளின் அனைத்து செயல்பாடுகள், தைராய்டு சுரப்பி வளர்ச்சிதை மாற்றம், கர்ப்பத்தின் சில அம்சங்கள், பிரசவம், தாய்ப்பால் போன்றவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்பொழுது புரிந்திருக்கும் குருவிற்கும், புத்திரத்திற்கும், புத்திர காரகன் என்ற பெயருக்குமான தொடர்பு. 

அதோடு மட்டுமல்லாமல் பெரிய மனிதர்கள், ஆசிர்வாதம், வழிகாட்டி போன்றோர்களுக்கு எதற்காக குருவை காரகமாக்கி இருக்கின்றது இந்த ஜோதிடவியல் என்று. இதனை தெளிவுபடுத்தும் பொருட்டுதான் வானவியல் முதல் உடலியல் கூறுவரை தொட்டு செல்கின்றேன். 

சரி; ஜாதகத்தில் குரு பார்க்கலாமா குருவுடன் இணையும் கிரகங்களின் நிலை. 

குரு+சூரியன் 

இந்த கிரக இணைவானது ஒரு ஜாதகத்தில் இருக்கும்பட்சத்தில், அந்த வம்சாவழியில் பரிவட்டம் கட்டிக்கொண்ட ஒரு நபர் நிச்சயமாக இருப்பார்.

அதேபோன்று ஊர்மக்களுக்கு வழிகாட்டி, முதல் மரியாதை பெற்றுக்கொள்ளும் ஒரு நபரும் அந்த வம்சத்தில் இருப்பார்கள். இவர்களின் சிந்தனை மிகவும் சிறப்பாகவும், ஆன்மிகத் தன்மை சார்ந்ததாகவும், பெரும்பாலும் இருக்கும். 

குரு+சந்திரன் 

இந்த கிரக நிலை யோகமாகக் கருதப்படுகின்றது. இவர்களின் சிந்தனை சற்றுத் தாய்மை குணம் சார்ந்தே இருக்கும். தயாள குணம் படைத்தவர்களாக இருப் பார்கள். இவர்களின் எண்ணம் மற்றவர்களை புண்படுத்தாத வண்ணம் அமைந்திருக்கும். இவர்களுக்கு தோள்பட்டைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பாகங்கள் சற்று கனத்து காணப்படும். 

குரு+செவ்வாய் 

இந்த இணைவானது குரு மங்கல யோகத்தை வழங்கி செல்வ செழிப்பு போன்றவற்றை அருளும். அதோடு சற்று கோபத்தின் தன்மை மேலோங்கி காணப்படும். 

குரு+சுக்கிரன் 

இந்த இணைவானது பகை கிரகங்களின் கூட்டு என்றாலும் இரண்டு சுப கிரகங்களின் இணைவு என்பதை எடுத்துக்கொள்ள வேண்டும். மனம் சொல்லும் விஷயத்தை உடலும், உடல் கூறும் தன்மையை மனமும், ஏற்கும் தன்மையில் இருக்காது. 

குரு+சனி 

தோஷமாக கருதும் இந்த இணைவானது தொழில் சார்ந்த விஷயத்திலும், குழந்தைகள் சார்ந்த விஷயத்திலும், சில கசப்பான நிகழ்வுகளை விதைத்து செல்லும். 

குரு+ராகு 

குரு சண்டாள யோகம் என்று போற்றப் படும். இந்த இணைவு பெயருக்குதான் யோகம். மற்றபடி அதிதீவிரமான எண்ணங்களை மற்றவர்களின்மீது திணிக்கும் தன்மையை இவர்களுக்கு வழங்கும். 

குரு+கேது 

ஆன்மிகம் குருவருள் போன்றவற்றை ஈர்த்தாலும் சிந்தனையில் எப்பொழுதும் ஒரு தடையை வழங்கிக்கொண்டே இருக்கும். மேலும் சித்தர்களின் வழிபாடு இந்த குடும்பத்தில் நிச்சயமாக இருக்கும்.

குரு+மாந்தி 

ஒரு சரியான வழிகாட்டியோ அல்லது ஆசிரியரோ, குருவோ இவர்களுக்கு பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றது.

மேலும் வாழ்வில் வழங்கும் இன்பங் களிலும் சில நெருடல்களை உட்புகுத்தி நம் கரங்களில் சேர்த்துவிடும்.

குரு தசையில் குரு புக்தி 2 வருடம், 1 மாதம், 18 நாட்கள் கொண்ட இந்த காலகட்டம் குருவின் நிலை சிறப்பாக இருக்கும்பட்சத்தில், ஒரு அற்புதமான காலம் என்று ஏற்றுக்கொள்ளலாம். இது தன தானியம், வெகுஜன செல்வாக்கு, எல்லா காரியங்களிலும் வெற்றி, பொன், பொருள் சேர்க்கை, குழந்தைகளின் வழியில் வளர்ச்சி போன்றவற்றை அளிக்கும். மறைந்திருந்த குலதெய்வத்தை அறியும் தன்மையையும், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தையும், சாஸ்திர ஞானத்தையும், வழங்கும் காலமாக இருக்கும். குருவின் நிலையில் மாறுபாடு இருப்பின் தலை சார்ந்த வலி, உடலில் கொழுப்பு கட்டிகள் போன்றவற்றை அளித்து சில சிறு இடர்பாடுகளை வழங்கும். 

குரு தசையில் சனி புக்தி 2 வருடம், 1 மாதம், 12 நாட்கள் கொண்ட இந்த காலகட்டமானதுமேல் கூறியதுபோல் சிந்தனையில் சில மாராட்டங்களை அளித்து தனக்கு அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணத்தை தன்வசம் விதைத்து நண்பர்களுடனான மனக்கசப்பு, வீண் பழி, ஜீவன பயம் மற்றும் உடல் உறுப்பில் தொடை சார்ந்த பகுதியில் பிரச்சினை போன்றவற்றை வழங்கும். இந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள வயதானவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை.

குரு தசையில் புதன் புக்தி 2 வருடம், 3 மாதம், 6 நாட்கள் கொண்ட இந்த காலகட்டமானது வாழ்வில் வசந்தத்தை சேர்க்கும் காலமாக ஏற்றுக்கொள்ளலாம். பத்திரப்பதிவு, ஒப்பந்தங்கள், சொந்தங்களின் திருமணங்கள், புத்திரப்பேறு, கடல் கடந்த பயணத்தினால் ஏற்படும் நன்மை போன்றவற்றை வழங்கும்.

குரு அல்லது புதனின் தன்மை மாறுபட்டு இருப்பின் பொய் கையெழுத்து, பத்திரங்களில் எழுத்து பிழையாவது, பெயர் மாற்றம் அடைவது போன்றவற்றை அனுபவிக்கும் காலமாக இது அமையும். 

குரு தசையில் கேது புக்தி

11 மாதங்கள், 6 நாட்கள் கொண்ட இந்த காலகட்டம் மனதில் ஒருவித கலக்கமும், மற்றவர்களின்மீது சந்தேகமும், தான் நினைக்கும் எண்ணத்தை தானே செயல்படுத்த முடியாதபடியான சூழலையும், அளிக்கும்.

மேலும் ஆன்மிகம், ஜீவசமாதி வழிபாடு, போன்றவற்றில் மனம் ஈர்க்கப்படும். எல்லாவற்றிலும் ஒரு விரக்தியான சூழலே இவர்களுக்கு பதிலாக அமையும். 

குரு தசையில் சுக்கிர புக்தி 2 வருடம், 8 மாதங்கள் கொண்ட இந்த காலகட்டத்தில் இரண்டு சுப கிரகங்களின் இணைவு சில சிறப்பான விஷயங்களை அளித்தாலும், பகை கிரகங்கள் என்கின்ற எண்ணம் மனதில் சற்று ஓரமாக இருப்பது சிறப்பு. இந்த காலகட்டத்தில் கணவன்- மனைவியிடையிலான அன்யோன்யம் எந்த அளவு கூடுகின்றதோ, அதே அளவு பிரச்சினையின் வசமும் செல்லும். 

மனம் பொருட்களை வாங்கி குவிக்கும் அதிர்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். 

குரு தசையில் சூரிய புக்தி 9 மாதம் 18 நாட்கள் 

இந்த காலகட்டமானது சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தின் வசம் செல்வதற்கு வாய்ப்புகளை வழங்கும். பட்டங்கள், பரிசுகள், சமுதாய ரீதியான அங்கீகாரங்கள் போன்றவற்றை வழங்கி கௌரவத்தை கைசேர்க்கும். 

குரு தசையில் சந்திர புக்தி 1 வருடம் 4 மாதங்கள் 
இந்த காலகட்டமானது வீடு, நிலம், ஆபரணம் போன்ற அசையா சொத்துகளின் சேர்க்கை மேலோங்கும். உற்சாகமும், தைரியமும் அதிகரிக்கும்அரசுவழியில் சில தொந்தரவுகள் ஏற்படும். வருமானத்தின் தன்மை குடும்பத்தில் சிறப் பாக இருக்கும். 

குரு தசையில் செவ்வாய் புக்தி 11 மாதம், 6 நாட்கள் கொண்ட இந்த காலங்கள் அவ்வளவு சிறப்பான காலமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எல்லா காரியங்களிலும் சில இடர்பாடுகளை அளித்து பின்பு வெற்றியை அளிக்கும். குறிப்பாக மண், மனை, சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படும்பொழுது சிறப்பானதொரு சொத்து அமையும். பெரும்பாலும் சேமித்த பணம் செலவை நோக்கி பயணப்படும். 

குரு தசையில் ராகு புக்தி 2 வருடம், 4 மாதம், 24 நாட்கள் கொண்ட குரு தசையின் இறுதி புக்தியான இந்த காலகட்டம் எதிரிகளின் தொந்தரவு சற்று மேலோங்கி காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும் சூழலை வழங்கும். சேமிப்பில் இருந்து ஒரு பெரிய தொகையை செலவின் வசம் திருப்பிவிடும் சூழல் ஏற்படும்.

முக்கிய குறிப்பு 

இந்த தசைக்கு முன்பான ராகு தசையில் வருமானமும், வாழ்க்கை சூழலும் சிறப் பாக இருப்பவர்களுக்கு இந்த குரு தசை ஒரு சுங்க சாவடியாக இருந்து வசூலை மேற்கொள்ளும்.

ராகுவில் சம்பாதித்தவர்கள் குருவில் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்பது விதி. எனவே பண பரிவர்த்தனைகளை சிறப்பாக கையாள வேண்டிய காலமாக இந்த குரு தசை இருக்கும். ராகுவில் பல இடர்பாடுகளை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு தசை கொடுத்துவைத்த தசைதான் என்பதில் சந்தேகம் இல்லை. 

பரிகாரம் 

குரு+கேது, குரு+சனி, குரு+ராகு, குரு+மாந்தி இந்த இணைவு இருக்கும் ஜாதகங்கள் இதற்கு உண்டான ஆலயங் களுக்கு சென்று பரிகாரங்களை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குரு ராகு, குரு கேது இருப்பவர்கள் திருப்பாம்புரம் சென்றுவருவது வெகு சிறப்பு. 

குரு தசையின் ஆரம்பத்தில் 16 மஞ்சள் கிழங்குகளை மாலையாக கட்டி குருபகவானுக்கு அணிவித்து வழிபடுவது சிறப்பு. 

சித்தர் வழிபாடு, ஜீவசமாதி வழிபாடு போன்றவை பெரும் சிறப்பை வழங்கும். 

தெற்கு நோக்கி அமர்ந்து குருவாக பிரதிபலித்துக் கொண்டிருக்கும் முன்ணூர் ஆலயத்திற்கு சென்றுவருவது சிறப்பு. 

குழந்தைகள் விளையாடும் பூங்காவிற்கு சென்று மஞ்சள் நிற லட்டு குழந்தைகளுக்கு வழங்குவது புத்திரம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். 

செல்: 80563 79988

bala011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe