ஷ்டவர்க்கம் என்பது ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் எந்தக் கால கட்டத்தில் என்ன பலன் நடக்கும் என்பதை தெளிவாக உணர்த்தும் அமைப்பாகும். அஷ்டவர்க்கத்தில் அதிக பரல்கொண்ட கிரகம் ஜாதகருக்கு நன்மையைத் தரும்.

Advertisment

அதே நேரத்தில் ஆதிபத்தியரீதியாக மறைவு ஸ்தானங்கள் 6, 8, 12 அதிக பரல்களை கொண்டிருந்தால் அது ஜாதகருக்கு தீமையையும் ஏற்படுத்தும். இனி 12 பாவகங்களுக்கும் அஷ்ட வர்க்க பலன்களைப் பார்க்கலாம்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் விதியைப் பற்றிக் கூறும் லக்னம் அதிக பரல் பெற்றிருப்பது ஜாதகருக்கு விசேஷமான நல்ல பலன்களை வழங்கக்கூடிய அமைப்பாகும். லக்ன பாவகம் பலம் பெற்று மற்ற பாவங்கள் பலம் குறைந்து இருந்தாலும் ஜாதகரால் இந்த உலகத்தில் தனித்து இயங்க முடியும். சுய முயற்சியில் முன்னேற கூடியவராக இருப்பார். சகல யோகங்களை அனுபவிக்க கூடியவராக இருப்பார். அதே சமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார். எந்த தோஷமும் இவரை தாக்காது.

ஜாதகர் எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர்கள். எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார்.

Advertisment

பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.

கோட்சாரத்தில் வருட கிரகங்கள் கடக்கும்போது அபரிமிதமான சுப பலன்களைத் தந்துவிட்டு செல்லும் லக்னம் மிக குறைவாக பரல் பெற்றிருந்தால் ஜாதகருக்கு சுய முடிவு எடுக்கத் தெரியாது. பிறரின் ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். வாழ்க்கை பயணம் கரடு முரடாக இருக்கும். இலக்கை அடைவதில் தடை, தாமதம் நிலவும். சுருக்கமாக பன்னிரு பாவகங்களின் மொத்த பலனை லக்னம் தெரிவிக்கும் என்பதால் லக்னம் அதிக பரல் பெறுவது மிக அவசியம். 

 ஒரு ஜாதகத்தில் இரண்டாமிடம் அதிக பரல் பெற்று நின்றால் ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கும். கல்லைக்கூட காசாக்கும் வித்தை தெரிந்தவர். வாழ்நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். தனது சுய முயற்சியால் குடும்பத்தை காப்பாற்றக்கூடிய வல்லமை நிரம்பியவர். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஜாதகருக்கு மரியாதை கொடுப்பார்கள். ஜாதகரால் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் ஜாதகரை வெற்றிபெற யாராலும் முடியாது. வாய் ஜாலம் நிறைந்தவர். வாய் ஜாலத்தால் குடும்ப உறவுகளிடம் நற்பெயர் சம்பாதிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார். 

கோட்சார கிரகங்கள் இரண்டாம் இடத்திற்கு வரும்போது அதிகப்படியான பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.

இரண்டாமிடம் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் உரிய வயதில் திருமணம் நடந்து குடும்பம் அமையாது. குடும்பத்தை நடத்த போதிய பொருளாதாரம் இருக்காது. இவரின் வார்த்தையை குடும்ப உறவுகள் மதிக்க மாட்டார்கள். வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது போன்ற அசவுகரியங்கள் இருக்கும். கோட்சார கிரகங்கள் இரண்டாம் இடத்திற்கு வரும்போது தேவையான  வருமானம் கிடைக்காது. 

மூன்றாமிடம் அதிக பரல்கள் பெற்றிருந்தால் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட முடியும். வாழ்நாள் முழுவதும் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயல்படுவார்கள். முயற்சியை மூலதனமாகக் கொண்டு முன்னேறுபவர். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள்.  ஆன்மிக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். இளைய சகோதரத்தால் ஆதாயம் உள்ளவர் கள். இயல், இசை நாடகப் பிரியர்கள். வேலை ஆட்கள் யோகம் உண்டு. பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர். 

மூன்றாமிடம் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். தெளிவான திட்டமிடுதல் இருக்காது. சகோதரர் கலகம் நிறைந்தவராக இருப்பார். பயணங்களால் ஆதாயமின்மையும் அசௌகரியமும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். ஊசப பாதிப்பு இருக்கும். டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஜாதகரை வழிநடத்தும். ஆபரணங்கள், சொத்துகள் அடமானத்தில் இருக்கும். பாகப் பிரிவினை சுமூகமாக இருக்காது. வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது. 

நான்காமிடம் அதிக பரல்கள் பெற்றிருந்தால் கோட்சாரத்தில் சுப கிரகங்கள் அந்த இடத்திற்கு வரும்போது சொத்து, சுகம், வண்டி, வாகனம் கிடைக்கும். சொத்துகளின் மதிப்பு உயரும். தாய், தாய்வழி உறவினர்களின் அன்பும் அனுசரனையும் பெற்றவர்கள். தாய்வழிச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். வீட்டில் நல்ல அதிர்வலைகள் நிரம்பி இருக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பதன் மூலம் வருமானம் அதிகமாக கிடைக்கும். அழகு ஆடம்பரப் பொருட்களை அதிகம் விரும்புவார்கள். படித்த படிப்பிற்கு ஏற்ற தொழில், உத்தியோகம் அமையும். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந் திருக்கும். 

நான்காமிடம் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் நல்ல வீடு, வாகன யோகம் எளிதில் அமையாது. தாயின் ஆரோக்கியம் கெடும். வறுமை, வாஸ்து குறைவான வீட்டில் வாழுதல் போன்ற நிலை நீடிக்கும். 

ஐந்தாமிடம் அதிகப்பரல்கள் பெற்றிருந்தால் ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குலதெய்வமே குழந்தையாக பிறக்கும்.

பிள்ளைகள் குலகௌரவத்தை காப்பாற்றுவார்கள். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். தாத்தாவின் தொழிலை செய்து சுய உழைப்பில் சொத்து யோகம் உண்டு. அடுக்கு மாடி குடியிருப்பு, மாடி வீடுகட்டி வாழ்வார்கள். முன்னோர்களின் பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். 

அறிவாளியாக புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள். சிலர் அதிர்ஷ்டவசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சிறிய உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். குலதெய்வ அருள் உண்டு.குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள்.  

ஐந்தாமிடம் குறைந்த பரல்கள் பெற்றிருந்தால் ஜாதகர் பூர்வீகத்தில் வாழ முடியாது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.  புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தலைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து கௌரவம் மட்டுப்படும். அதிர்ஷ்டம் குறைவுபடும். புத்திக்கூர்மை இருக்காது. குலதெய்வ வழிபாட்டில்  குற்றம் குறை இருக்கும். 


ஒரு ஜாதகத்தில் ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிக பரல் பெறக் கூடாது. அதே நேரத்தில் மிகக் குறைவான பரல்களும் இருக்கக்கூடாது. மிகக் குறைவான பரல்கள் இருப்பவருக்கு கடன் வந்தால் எளிதில் தீர்க்க முடியாது. அல்லது முக்கிய தேவைக்கு கடன் கிடைக்காது. எதிரியை வெல்லக்கூடிய வலிமை இருக்காது. நோய் தாக்கம் குறையக்கூடிய மருந்துகள் கிடைக்காது. நிலையான தொழில், உத்தியோகம் அமையாது.

மேலதிகாரியால் சக ஊழியர்களால் பிரச்சினை, வம்பு, வழக்கு இருக்கும். 

-பரல்கüன் துல்லியம் தொடரும்

செல்: 98652 20406