ஜோதிடம் என்பது பல்வேறு புதிர்களை தமிழில் அடக்கியது. "நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்.' ஒரு ஜோதிடரை சந்திக்கும் வாடிக்கையாளர்கள் ஜோதிடரை சோதிக்கும் விதமான கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். தீர்க்கமான- தெளிவான ஒரு முடிவை கொடுக்க அஷ்டவர்க்க பரல்கள் ஜோதிடருக்கு அதிகப்படியாக கை கொடுக்கும் அமைப்பாகும். அஷ்டவர்க்கம் எனும் சூட்சும கணித முறை பல நேரங்களில் ஜோதிடருக்கு உதவியாக இருக்கும். என் அனுபவத்தில் நான் பலருக்கு இந்த அஷ்டவர்க்க முறையை பயன்படுத்தி பலன் கூறி வெற்றி பெற்று இருக்கிறேன். ஒருவருடைய ஜாதகத் திலுள்ள கிரகங்கள் நின்ற பார்த்த சேர்ந்த கிரகங்களின் அடிப்படையில் கிரகங்களால் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமையே கிரக பலமாகும்.
கிரகங்களை சுப கிரகங்கள்- அசுப கிரகங்கள்

கிரகங்களை சுப கிரகங்கள்- அசுப கிரகங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம்.
அதன்படி குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை சுப கிரகங்களாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது தீய கிரகங் களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை அசுப கிரகங்களாகும்.
சுப கிரகங்கள் சுப பலனும் அசுப கிரகங்கள் அசுப பலனுமே தரும் என்ற தவறான கருத்து பலரிடம் நிலவிவருகிறது, அது தவறு.
ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத் திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடும். உதாரணத்திற்கு இயற்கை சுபரான குரு, மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி. இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு ஏக யோகாதிபதியாகி சுபத் தன்மையைத் தருவார். லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள் லக்னரீதியாக தீமையை செய்பவர்கள். அவர்களே ஜாதகரின் மரணத்தை ஜாதக அடிப்படையில், சனிபகவானுடன் இணைந்து தீர்மானிப்பவர்கள். சில மாரகர்கள் ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மரணத்தை தராமல், மரணத்திற்கு இணையான கண்டத்தைக் கொடுப்பவர்கள்.
கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று, பலம் பெற்று இருந்தாலும், பகை கிரகங்களுடன் இணைந்து நின்றாலும் லக்னரீதியான அசுப கிரகங்களின் சாரம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டுக்கு முன், பின் பகைக் கிரகங்கள் நின்றாலும் அந்தக் கிரகம் தனது பலத்தை இழந்துவிடும். இது பொதுவான அடிப்படை விதிகள். ஆனால் கிரகங்களின் பலம், பலவீனத்தை ஆட்சி, உச்சம், நட்பு, பாதகம், மாரகம் என்றரீதியில் கணக்கிடாமல் அஷ்ட
வர்க்கம்மூலம் கணக்கிட கிரகங்களின் பலத்தை மிக துல்லியாக அறியமுடியும்.
ஒரு ஜாதகத்தில் ராகு- கேது நீங்கலாக பிற ஏழு கிரகங்களும் பெறும் வலிமையை தெளிவுபடுத்துவது அஷ்டவர்க்கமாகும். அஷ்டம் என்றால் எட்டு அங்கம் என்று பொருள். அஷ்டவர்க்க சக்கரத்தில் லக்னம், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 8 அங்கங்கள் இடம் பெறுகின்றன. ராகு- கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் வர்க்கச் சக்கரம் உண்டு. லக்னத்திற்கு என்று தனியே அஷ்டவர்க்க சக்கரம் கிடையாது. சூரியனின் பலத்தை அறிய சூரியன் அஷ்டவர்க்கமும் சந்திரனுடைய பலத்தை அறிய சந்திரனின் அஷ்டவர்க்கமும் பயன்படுகிறது. அதேபோல் கோட்சார கிரகங்கள் பலன் தருவதையும் அஷ்டவர்க்க பரல்களே முடிவு செய்கிறது.
ஒரு ராசியில் 25-க்குமேல் பரல்கள் இருந்தால் சுப பலன்களையும் அதற்கு குறைவாக இருந்தால் அசுப அல்லது சுமாரான பலன்களையும் தரும்.
12 ராசிகளிலும் 8 கிரகங்கள் தரும் மொத்த பரல்களின் எண்ணிக்கை 337 ஆகும். இது 12 ராசிகளிலும் பிரபஞ்சத்திலிருந்து கிரகிக்கும் ஒளிப் புள்ளிகளாகும். 337ஐ 12-ஆல் வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் கிடைக்கும். ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகங்களின் நிலை மற்றும் தற்போதைய கோட்சார நிலையை ஒப்பிட்டு துல்லியமான பலன்களை அறிய இது உதவுகிறது.
ஒரு ராசியில் 25-க்குமேல் 30-க்குள் பரல்கள் இருந்தால் அந்த ராசியில் கிரகம் சென்றால், அந்த காலம் மிகவும் யோகமான காலமாக பலன் தரும். அந்த ராசியில் கோட்சார கிரகங்களான குரு, சனி வரும்போது நல்ல பலன்கள் வெளிப்படும்.
25-க்கும் குறைவான பரல்கள் உள்ள ராசிகளில் கோட்சார கிரகங்கள் சஞ்சரிக்கும் போது, சுபகாரியங்களில் தடை, ஏமாற்றம், மன உளைச்சல், பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்படலாம்.
-பரல்கüன் துல்லியம் தொடரும்
செல்: 98652 20406
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us