மெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

Advertisment

இது, எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தரமான முறையில் வழங்குவதற்கானது.

Advertisment

இந்த செயற்கைக்கோள், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 62 வினாடிகளில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோ இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது.

புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மிகப் பெரிய வணிகத் தொடர்பு செயற்கைக்கோள் இது.

இரண்டாவதாக, இந்திய மண்ணில் இருந்து  LVM3  ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோட் இதுவாகும்.

இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

statelite

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது.

எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver)  இல்லாமல், சாதாரண  4G & 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது.

புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக் கோளைச் சுமந்து செல்லும் LVM3-M6  ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM  வகை ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி- என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன.

சந்திரயான்-1, சந்திரயான்-2 போன்ற விண்கலன்கள் இதே LVM3 ராக்கெட் மூலம் தான் ஏவப்பட்டிருந்தது.

இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது.

செயற்கைக்கோள் ஏவுத-லில் சிறிது தாமதம் ஏன்?

இந்த ஏவுதல் திட்டமிட்ட நேரத்தை விட 90 விநாடிகள் தாமதமாகியிருக்கிறது. இதற்கு விண்வெளி குப்பைகள்தான் காரணம்.

அதாவது, ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்களின் உதிரிகள் விண்வெளியில் குப்பைகளாக இருக்கும். இந்த குப்பைகள் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.

அதாவது, துப்பாக்கி தோட்டாவை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இது பயணிக்கிறது.

வெறும் 1 செ.மீ அளவு கொண்ட சிறியதுகள், இவ்வளவு வேகத்தில் பயணிப்பது LVM3  ராக்கெட்டின் மொத்த மிஷனையும் தோல்வியடைய செய்துவிடும்.

எனவேதான் இந்த குப்பைகள் கடந்த பின்னர் ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.