Advertisment

அஷ்டமாதிபதி தரும் அதிர்ஷடம்! -லலிதா சரஸ்வதி சென்ற இதழ் தொடர்ச்சி...

astamathi

தனுசு லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி சந்திரன். இவர் தனுசு லக்னத்துக்கு 6-ஆம் வீடான ரிஷபத்தில் உச்சமடைவார்.

Advertisment

சந்திரன், கிருத்திகை நட்சத்திரத்தில் நின்றால், இந்த அமைப்பு ஜாதகர்கள், மக்களுக்கு சேவைசெய்து, சேவைசெய்து, அதிர்ஷ்டத்தை அழைத்து வந்துவிடுவர். 

Advertisment

சரி என்னமாதிரி சேவை செய்வர் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். ஒன்று தெய்வங்களை மானாவாரியாக திட்டுவர். தெய்வமே கிடையாது. சாமியை நம்புகிறவன் முட்டாள் என மிக சத்தமாக பரப்புரை ஆற்றுவர். மேலும், அரசு அரசியல் சார்ந்த மனிதர்களை வண்டை, வண்டையாக திட்டி, அதன்மூலம் சிறைவாசமும், அதிர்ஷ்டமும் பெறுவர். உள்நாட்டு தலைவர்களை  திட்டி அலுத்துப் போய் வெளிநாட்டு தலைவர்களையும் ஏசித் தீர்ப்பார். அடிக்கடி வாண்ட்டடாக, போலீஸ் ஜீப்பில் தொற்றிக்கொள்வர். எல்லாம் ஒரு விளம்பரம்தான் என்று லஜ்ஜையில்லாமல் பேசுவர். அடிக்கடி அடி வாங்குவது, சிறைக்கு போவது என எல்லாவற்றையும் அதிர்ஷ்டமாக மாற்றிவிடுவர்.

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி சந்திரன், ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரம் பெற்றால், இவ்வமைப்பு, பெரிய அதிர்ஷ்டம் தருமா எனில், அதனை நூறு சதவிகிதம் உறுதியாக கூற இயலாது. ஆனால் எதிர்பாராத இனங்களில், எதிர்பாராத யோகம் கிடைக்க வாய்ப்புண்டு.

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி, சந்திரன் ரிஷபத்தில், மிருகசீரிட நட்சத்திரம் பெற்றால், இவர்கள் கலையுலகில் புகுந்து, புதுமை செய்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று தடபுடல் பண்ணி பிறரின் மண்டையை குழப்பி, அதிலிருந்து அதிர்ஷ்டத்தை வர வழைத்துக் கொள்வர். பங்குவர்த்தக உலகில் புகுந்து, போணியாகாத பங்குகளையும், விற்று நல்ல லாபம் பார்த்துவிடுவர். மந்திரியாகி மாநிலத்தை கைக்குள் வைத்துக்கொள்வர். வெளிநாட்டில் வாழும் வாரிசுகளைக் கொண்டு ஜாதகர் இங்கு வளமாக வாழ்வர். புத்தி கொள்முதல், அது எதிர்மறையாகத் தான் இரு

தனுசு லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி சந்திரன். இவர் தனுசு லக்னத்துக்கு 6-ஆம் வீடான ரிஷபத்தில் உச்சமடைவார்.

Advertisment

சந்திரன், கிருத்திகை நட்சத்திரத்தில் நின்றால், இந்த அமைப்பு ஜாதகர்கள், மக்களுக்கு சேவைசெய்து, சேவைசெய்து, அதிர்ஷ்டத்தை அழைத்து வந்துவிடுவர். 

Advertisment

சரி என்னமாதிரி சேவை செய்வர் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். ஒன்று தெய்வங்களை மானாவாரியாக திட்டுவர். தெய்வமே கிடையாது. சாமியை நம்புகிறவன் முட்டாள் என மிக சத்தமாக பரப்புரை ஆற்றுவர். மேலும், அரசு அரசியல் சார்ந்த மனிதர்களை வண்டை, வண்டையாக திட்டி, அதன்மூலம் சிறைவாசமும், அதிர்ஷ்டமும் பெறுவர். உள்நாட்டு தலைவர்களை  திட்டி அலுத்துப் போய் வெளிநாட்டு தலைவர்களையும் ஏசித் தீர்ப்பார். அடிக்கடி வாண்ட்டடாக, போலீஸ் ஜீப்பில் தொற்றிக்கொள்வர். எல்லாம் ஒரு விளம்பரம்தான் என்று லஜ்ஜையில்லாமல் பேசுவர். அடிக்கடி அடி வாங்குவது, சிறைக்கு போவது என எல்லாவற்றையும் அதிர்ஷ்டமாக மாற்றிவிடுவர்.

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி சந்திரன், ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரம் பெற்றால், இவ்வமைப்பு, பெரிய அதிர்ஷ்டம் தருமா எனில், அதனை நூறு சதவிகிதம் உறுதியாக கூற இயலாது. ஆனால் எதிர்பாராத இனங்களில், எதிர்பாராத யோகம் கிடைக்க வாய்ப்புண்டு.

தனுசு லக்ன 8-ஆம் அதிபதி, சந்திரன் ரிஷபத்தில், மிருகசீரிட நட்சத்திரம் பெற்றால், இவர்கள் கலையுலகில் புகுந்து, புதுமை செய்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று தடபுடல் பண்ணி பிறரின் மண்டையை குழப்பி, அதிலிருந்து அதிர்ஷ்டத்தை வர வழைத்துக் கொள்வர். பங்குவர்த்தக உலகில் புகுந்து, போணியாகாத பங்குகளையும், விற்று நல்ல லாபம் பார்த்துவிடுவர். மந்திரியாகி மாநிலத்தை கைக்குள் வைத்துக்கொள்வர். வெளிநாட்டில் வாழும் வாரிசுகளைக் கொண்டு ஜாதகர் இங்கு வளமாக வாழ்வர். புத்தி கொள்முதல், அது எதிர்மறையாகத் தான் இருக்கும். அதைக்கொண்டு பெரும் யோகம் பெற்றுவிடுவார். ஊரிலுள்ள பாதி மனையை தன் பெயருக்கும், தன் வாரிசு பெயருக்கும் மாற்றிவிடுவார்.

மகர லக்னத்தின் 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

மகர லக்ன 8-ஆம் அதிபதி சூரியன் ஆவார். இவர் மகர லக்னத்துக்கு, 4-ஆம் வீட்டில் உச்சமடைவார்.

மகர லக்ன 8-ஆம் அதிபதி சூரியன், மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால், இவர்கள் தாயார் பெயரிலுள்ள பூர்வீக சொத்தை எந்த விதத்திலாவது தன் பெயருக்கு மாற்றி அதிர்ஷ்டம் காண்பர். இதைவிட பெரிய அதிர்ஷ்டமாக தன் பெற்றோர் பூஜை  செய்த விக்ரங்கள், பழங்கால மதிப்புமிக்க பொருட்கள் என இவை போன்றவற்றையும் தன் வசமாக்கிகொள்வர். 

அரசு வசமுள்ள நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியசாலிகள். 

அரசு அனுமதியில்லாமல் பள்ளி, கல்லூரி, சான்றிதழ் படிப்பு என அவர்கள் பாட்டுக்கு தொடங்கிவிடுவர். பின் அரசு தாமதமாக இதையறிந்து நிறுத்திவிட்டாலும், மாணவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், அடுத்து எதை, எங்கு ஆரம்பிக்கலாம் என யோசிப்பர்.

மகர லக்ன 8-ஆம் அதிபதி சூரியன், மேஷத்தில், பரணி நட்சத்திரத்தில் நின்றால், சினிமா உலகில், அதகளம் பண்ணும் ஆளாக இருப்பர். நிறைய இடங்களை, பினாமி பெயரில் வைத்து, அதனைகொண்டு, மிரட்டி தொழில் செய்வர். பெரிய பெரிய எஸ்டேட், தோட்டம் இவற்றை வாங்கி, அதனை சம்பவம் செய்ய  பயன்படுத்துவர். இன்னும் சிலர், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தேவையான வீடுகள், வாகனங்கள் இவற்றை, பினாமி பெயரில் வாங்குவதற்கான அமைப்பை நடத்திவிடுவர். மேலும் குழந்தை கள் உணவு, விளையாட்டு, பங்கு வர்த்தகம், சினிமா, டி.வி, பொழுதுபோக்கு விஷயம் என இத்தனை விஷயங்களிலும் எதிர்மறையான அதிர்ஷ்டத்தை அழைத்துவருவர். முக்கியமாக அரசியல்வாதிகளின் காதல் மேட்டர்களுக்கு உதவி, அளவிடமுடியாத அதிர்ஷ்டம் பெறுவர்.

மகர லக்ன 8-ஆம் அதிபதி, மேஷத்தில் கார்த்திகை நட்சத்திரம் பெற்றிருப்பின் ரொம்ப நல்ல பலன் தராது. இன்னும் சொல்லப் போனால், நன்றாக இருக்கும் வீட்டிற்கு, இவர்கள் காலடி எடுத்து வைத்தவுடன் அந்த வீடு இடிந்து விழுந்துவிடும். படிப்பும் உன்னைப்புடி, என்னப்புடி கதைத்தான். தாயார் அனுசரணை சுத்தமாக இருக்காது. இவர்கள் பெயரில் கிணறு தோண்டினால், அது உடனே காணாமல் போய்விடும். இவர்களின் வாகனம், பழுதாகும் அல்லது அடிக்கடி காவல் துறையின் கையில் சிக்கிக்கொள்ளும். 

கும்ப லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம் 

கும்ப லக்ன 8-ஆம் அதிபதி கன்னி புதன் ஆவார். இவர் இந்த கன்னி ராசியிலேயே உச்சமடைவார்.

கும்ப லக்ன 8-ஆம் அதிபதி புதன். உத்திர நட்சத்திரத்தில் நின்றால் இவர்கள் நிறைய காதல், நிறைய கல்யாணம் செய்து, அவர்களிடமிருந்த சொத்து, காசு, நகை இவற்றை அபகரித்து, அதனை அதிர்ஷ்டக் கணக்கில் சேர்த்துவிடுவர். இதுபோல் சினிமாவில் நிறைய ஆட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, நிறைய மனிதர்களின் பணத்தை பிடுங்கிவிடுவர். அரசாங்கத்தில் பெரிய பெரிய மந்திரிகளை நன்கு தெரியும் என்று கூறி, அதிக வில்லங்கம் செய்து விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றி விடுவர். இவர்களின் உச்சமான 8-ஆம் அதிபதி சம்பவம் செய்யவிட மாட்டார். ஆனால் அதீத புத்திசாலித்தனத்தால், பிறரை ஈரத்துணி போட்டு கழுத்தறுப்பதுபோல் செயலாற்றி, அதனை இவர்களின் யோக நிகழ்வாக மாற்றிவிடுவர். 

கும்ப லக்ன 8-ஆம் அதிபதி, புதன் கன்னியில் அஸ்தம் நட்சத்திரத்தில் நின்றால், இந்த ஜாதகர்கள், கஷ்டப்படும் நோயுற்ற, ஆதரவில்லாத முதிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுகிறேன் என இல்லம், சத்திரம், அமைப்புகளை ஆரம்பித்துவிடுவர். ஒன்று அவர்களை கவனிக்காமல், வரும் பணத்தை கையாடல் செய்வர். அல்லது அவர்களிடமுள்ள கிட்னி போன்ற உறுப்புகளை, அறுவை சிகிச்சைமூலம் விற்று, நல்ல அதிர்ஷ்டத்தை அறுவடை செய்துவிடுவர். இவர்கள் எதைச் செய்தாலும், சர்க்கரை தடவிய வார்த்தைகளால், அதனை யாரும் அறியாமல் செயலாற்றுவதில் வல்லவர்கள். அதிர்ஷ்ட வரவு கனமான தொகையாக இருக்கவேண்டும் என்பதில் கணக்காக இருப்பர்.

கும்ப லக்ன 8-ஆம் அதிபதி புதன் கன்னியில் சித்திரை நட்சத்திரம் பெற்றால், இவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் துறை, ரௌடிகள், பவுன்சர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் என இந்த மாதிரி இருப்பர். தொழில் செய்யும், முதலாளிகளை மிரட்டுவது, தொழிற்சாலையில் பணியாளர்கள், தொழிலாளர்களை வேலை நிறுத்த ஸ்ட்ரைக்கில் ஈடுபட தூண்டுவது, வேலை நிறுத்த போராட்டம் ஓய்ந்துவிடாமல், ஊதி, ஊதி பெரிதாக்குவது என இந்தமாதிரி செயல்களை செய்வதால், அதிர்ஷ்டம் அளவோடு அமையும். ரொம்ப கோபம் வந்தால் யோசிக்காமல் சம்பவம் செய்து சிறைக்கு போய்விடுவர். இந்த அமைப்பு அதிர்ஷ்டம் தரும் அமைப்பு ஆகாது.

மீன லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

 மீன லக்ன 8-ஆம் அதிபதி துலா சுக்கிரன் ஆவார். இவர் உச்சமானால், மீன லக்னத்திலேயே உச்சமாவார். இந்த மீன லக்ன 8-ஆம் அதிபதி சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால் இவர்களுக்கு யாரும் சொல்லித்தராமல்,  பிறப்பிலேயே சம்பவம் செய்யும் புத்தி இருக்கும். இந்த சம்பவம் பெரும்பாலும், கௌரவக் கொலைகளாகத்தான் இருக்கும் என்பது நூறு சதவிகித உண்மை. சொத்துகாக சம்பவம் செய்து, சொத்தை அடைந்துவிடுவர். இளைய சகோதரியை காயப்படுத்தி, சொத்தை அபகரித்து, அதிர்ஷ்டத்தை பெருக்குவர். மேலும் இளம் பெண்களை, திருமணம் செய்தோ, செய்யாமலோ, பணம் பறிக்கும் மனநிலை கொண்டவர்கள். சிலசமயம் பணியாளர்கள்மூலம் யோகத்தடை ஏற்படும் எனத் தெரிந்தால், அவர்களை பூமியில் இருந்து அப்புறபடுத்த தயங்க மாட்டார்கள்.

மீன லக்ன 8-ஆம் அதிபதி, சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால் முழுக்க, முழுக்க அரசியல் சார்ந்த முறையற்ற அதிர்ஷ்டமாக அமையும். வெளிநாட்டுக்கு அழைத்து போகிறேன் என பக்கத்து மாநிலம் அல்லது நடுக்கடலில் விட்டு, அதற் குரிய பணத்தை நிறைய வாங்கி, அதிர்ஷ்ட அளவை அதிகமாக்குவர். மூத்த சகோதரனின் சொத்தை, தன் பெயருக்கு எழுதிவாங்கி, சொத்தின் அளவு விஸ்திரணத்தை பெருக்குவர். 100 ரூபாய் கொடுத்தால் 1,000 ரூபாய் தருகிறேன் என முதலீட்டு சந்தை ஆரம்பித்து, பிறருக்கு பட்டை நாமம் சார்த்திவிட்டு, இவர் பெரிய முதலாளி ஆகிவிடுவார். அரசியலில் எத்தனை முறையற்ற வழிகள் உண்டோ, அத்தனையையும் கரைத்துக் குடித்து தனது அதிர்ஷ்டத்தை வானளவு பெருக்கிக் கொள்வர்.

மீன லக்ன 8-ஆம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் நின்றால், இவர்கள் முதலில் தனது யோக சாம்ராஜ்ஜியத்தை வீட்டில் இருந்தே ஆரம்பித்துவிடுவர். மனைவி, தாயாரின் நகை, சொத்து, வங்கிக் கணக்கு என இவற்றை தன்புறம் இழுத்து வைத்துக்கொள்வர். வாழ்க்கைத்துணையின் பெயரில், தொழில் ஆரம்பிக்கிறேன் என்று கூறிவிட்டு, தன் பெயரில் ஆரம்பித்துவிடுவர். தொழில் பங்குதாரரை, நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுவர். அதுமட்டுமல்ல, பல சமயங்களில் மனைவி, தாய், குழந்தை, குடும்பத்தையும் ஏமாற்றிவிட்டு, இவர் கண் காணாமல் சென்று, ஜாலியாக இருப்பர். இந்த அமைப்பினர் புத்திபூர்வமாக பிறரை ஏமாற்றி, தனது அதிர்ஷ்ட சாம்ராஜ்ஜியத்தை பெருக்கி, உல்லல்லா என உல்லாசமாக இருப்பர்.

ஆக, 8-ஆம் அதிபதி, ஜாதகக் கட்டத் திலேயே பயங்கரமான கிரகம் ஆகும். 

அவர்மூலம் வரும் அதிர்ஷ்டமும், பிறரை அஞ்சச் செய்யும் அதிர்ஷ்டமாகவே அமையும். சில ஜோதிட பலன்களுக்கு, அந்த தசை, புக்தி வர வேண்டும் என்பர்.

ஆனால் இந்த 8-ஆமிட உச்ச கிரக பலன்கள், பிறப்பிலிருந்தே ஆரம்பித்துவிடும். எனவேதான், சில மனிதர்களை கண்டாலே பிறர் பயந்து விலகிவிடுவர்.

ப்ரத்யங்கார வராஹி, காளி, மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் போன்ற மிக உக்கிர தெய்வங்களை, இந்தமாதிரி 8-ஆம் அதிபதி உச்சமானவர்களை, சுற்றி உள்ளவர்களும், சொந்தங்களும் வணங்கினால், சுற்றி உள்ளவர்கள் பிழைத்தீர்கள்.

நிறைவு பெற்றது!

செல்: 94449 61845

bala270925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe