"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.'
-திருவள்ளுவர்
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப- துன்பங்கள் இரண்டையும் எளியவையாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப்போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல் துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
காவிரி ஆற்றில் நீராடி ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தார் துறவி ஒருவர்.
அதை மாடு மேய்க்கும் சிறுவன் மருது என்பவன் பார்த்தான். தியானம் கலைந்து எழுந்த துறவியிடம் "நீங்கள் இதுவரையில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டான் அந்த சிறுவன் மருது.
அதற்கு "இறைவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தியானம் செய்தேன்'' என்று கூறிச் சென்றார் துறவி. அவர் கூறியது மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனவே அவனும் ஆற்றில் நீராடி மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, இறைவா! எனக்கு தரிசனம் தரவேண்டும்...'' என்று ஆத்மார்த்தமாக வேண்டினான்.
அப்பழுக்கற்ற மனம் படைத்தோர்க்கு இறைவனின் காட்சியும் எளிதில் கிடைக்கும் அல்லவா? சிறுவன்முன் தோன்றினார் இறைவன். அதற்குமுன்வரை இறைவனைப் பார்த்ததில்லை அந்த சிறுவன் மருது. எனவே அவன் அவரிடம் "தாங்கள் யார்?' என்று கேட்டான்.
அதற்கு, "அப்பனே! நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால் உனக்கு காட்சி கொடுக்க வந்திருக்கிறேன்' என்றார்.
நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? சற்றுமுன் தியானம் செய்த துறவிக்கு இறைவனைத் தெரியும்.
அவர் வெகுதூரம் சென்றிருக்க மாட்டார். நான் அவரைத் தேடி அழைத்துவருகிறேன். அவர்வந்து உங்களை இறைவன் என்று சொன்னால்தான் நான் நம்புவேன்' என்றான் சிறுவன் மருது இறைவனும் அதற்குச் சம்மதித்தார். ஆனால் அந்த சிறுவன் மருது இறைவனிடம், "நான் இங்கிருந்து சென்றதும் நீ தப்பிவிடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது; தப்பமுடியாதபடி நான் உன்னை கயிற்றால் கட்டிவிட்டுச் செல்கிறேன்...' என்றான். மாடுகளைக் கட்டும் கயிறால் இறைவனை மரத்தில் கட்டினான் சிறுவன் மருது. பிறகு அவன் துறவியை தேடிச்சென்று நடந்தவற்றைக் கூறி அழைத்துவந்தான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/saturn1-2026-01-30-12-44-01.jpg)
மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனைக் சுட்டிக்காட்டி துறவியிடம் "இவர்தான் இறைவனா?' என்று கேட்டான் சிறுவன் மருது. ஆனால் மரம் மட்டுமே துறவியின் கண்களுக்குத் தெரிந்தது; இறைவன் தெரியவில்லை. அப்போது, "சிறுவனே! நீ எளிய உள்ளத்துடன் நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். எனவே நான் உனக்கு தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தான் தெரிகிறேன். துறவியின் கண்களுக்கு தெரியவில்லை...' என்றார் இறைவன்.
அதைக்கேட்ட சிறுவன் மருது, "இறைவனே!
இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான் எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே நீங்கள் தரிசனம் கொடுக்கவேண்டும்...' என்று கேட்டுக்கொண்டான். சிறுவன் மருதுவின் பிரார்த்தனையை ஏற்று துறவிக்கும் தரிசனம் கொடுத்தார் இறைவன்.
தான் கேட்பதை தன் தாய் நிச்சயமாகக் கொடுப்பாள் என்ற நம்பிக்கை யுடன்தான் தாயிடம் கேட்கிறது குழந்தை. அதுபோன்ற நம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும்.
நீண்டகாலமாக குழந்தை இல்லாத மன்னன் வீர பிரதாபனுக்கு ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் சரஸ்வதி அருளால் கல்வியிலும் இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்து, அரண்மனை ஜோசியரை அழைத்தான் மன்னன்.
ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், "மன்னா!.... மன்னிக்க வேண்டும். தங்கள் மகன் வித்யாபதிக்கு பட்டம் சூட்டிப் பயனில்லை. ஏனெனில் அவர் அற்ப ஆயுளே வாழ்வார்' என தெரிவித்தார். அதிர்ச்சியில் ஆழ்ந்தான் வீரபிரதாபன்.
ஆனால் சிறிதும் கலங்காமல், "தந்தையே... இதற்குப் போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத்தானே போகிறோம். எனக்கு முடிவுநாள் முந்திவருகிறது. இதைப் பெரிதுபடுத்தாதீர்கள்...' என்றான் வித்யாபதி. வீரபிரதாபனால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/saturn2-2026-01-30-12-44-18.jpg)
"தந்தையே

"தந்தையே... உங்கள் கண்ணெதிரில் இருப்பதால்தானே கவலைப்படுகிறீர்கள். நான் இப்போதே எங்காவது போய் விடுகிறேன்.
உயிரோடு எங்காவது திரிந்து கொண்டிருப் பேனா என்ற சந்தேகத்தில் நான் என்றாவது வருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பீர்கள். நான் கிளம்புகிறேன்' என்றான்.
தன் கண்முன்னால் மகன் சாவதைவிட, இந்த யோசனை சரியாகப் படவே, அரை மனதுடன் சம்மதித்தான் மன்னன் வீரபிரதாபன். சில பணியாளர்கள் மற்றும் செலவுக்கு பெரும் பணத்துடன் நாட்டை விட்டுப் புறப்பட்டான் வித்யாபதி. ஒரு ஊரைச் சென்றடைந்தவன் அங்குள்ள குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராக கல்வி மற்றும் கலைகளை போதித்து வந்தான். ஏழைகளுக்கு தானம் அளித்து மகிழ்ந்தான்.
வித்யாதியின் ஆயுள் முடியும் நாள் வந்தது.
அன்று சரஸ்வதி பூஜை என்பதால் வீணை இசைத்து, மனம் உருகி தேவியைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது வித்யாபதியின் உயிரைப் பறிக்க பாசக் கயிறுடன் வந்தனர் எம தூதர்கள். வித்யாபதியின் வீணை இசை கேட்டு மெய்மறந்து நின்றதால் அவனது உயிரைப் பறிக்கும் நேரம் கடந்துவிட்டது. செய்வது அறியாது திரும்பினர். அப்போது அங்கு தோன்றிய சரஸ்வதி, "வித்யாபதி... நீ பலருக்கு கல்வி தானம் செய்து புண்ணியத்தை சம்பாதித்துக்கொண்டாய். அதுமட்டுமல்ல. மனம் ஒன்றி இறைவனை நினைத்து வீணை மீட்டினாய்.
தானமே உலகில் சிறந்தது. இந்த குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்ததால், உனக்கு ஜாதகத்தில் ஆயுளுக்கு நேர்ந்த தோஷம் அகன்றுவிட்டது. அது மட்டுமல்லாமல், உன் வீணை இசை எமதூதர்களையும் கட்டிப்போட்டுவிட்டது. இனி நீண்டகாலம் வாழப் பாக்கியம் பெறுவாய்' என்று வாழ்த்தினாள்.
சரஸ்வதியின் அருள்பெற்ற வித்யாபதி நாடு திரும்பினான். அவனைக் கண்ட தந்தை மகிழ்ந்தார். அவனுக்குப் பட்டம் சூட்டப் பட்டது. பிறருக்கு செய்யும் தானத்தால் வரும் புண்ணியத்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா.
நவகிரகங்களிலே ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு காரகத்துவம் உண்டு. அந்தவகையிலே ஆயுள்காரகன் என்பது சனிபகவான்.
சூதுவாது அறியாத சிறுவன் மருதுவைப் போல் தவத்துடன் வழிபாடும், மன்னன் மகன் வித்யாபதியைபோல் பலவகை தானதர்மத்துடன் வழிபாடுகள் மேற்கொண்டால் சனிபகவான் கருணையுடன் ஆயுள் அதிகரிக்கச் செய்து சகல செல்வங்களையும் தருவார் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற உன்னதமான ஒரு திருத்தலம்தான் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ அக்னீஸ்வரர், ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர். கொள்ளிக்காடர், தீவண்ணநாதர்.
இறைவி: அருள்மிகு பஞ்சினும் மெல்லடியம்மை. மிருதுபாத நாயகி.
விசேஷமூர்த்தி: சனிபகவான்.
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்.
புராணப் பெயர்: கீராலத்தூர்.
ஊர்: திருக்கொள்ளிக்காடு.
மாவட்டம்: திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு.
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்.
தலவிருட்சம்: வன்னி மரம், கொன்றை மரம், ஊமத்தை மரம்.
சுமார் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் 115-ஆவது தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களை பெற்றதொரு திருத்தலம்தான் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
"தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக்காடரே.''
பொருள்: பிரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும் தேட அவர்களால் எப்பொழுதும் அணுக முடியாதவராய் விளங்கும் சிவபெருமான் பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள் செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்கின்றார்.
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர், அப்பர், சம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற இத்தலம் சூரியன், அக்னிபகவான், சனி வழிபட்டு பேறுபெற்ற பெருமையுடன் விளங்குகிறது.
தலவரலாறு
ஏழு லோகங்களிலுமுள்ள அனைவரையும் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப- துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறார் சனிபகவான். இந்து மதத்தில் சனியின் 7 1/2 ஆண்டுகள் ஒருவரின் வாழ்க்கையில் நான்கு முறை என்ற கருத்து உள்ளது. சனிபகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதேபோல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் கொடுப்பார்.
அத்தகைய சனிபகவான், சூரியபகவான் மற்றும் அக்னி பகவான் என்ற மூவரும் தத்தம் தோஷங்களையும், குறைகளையும் களைந்து கொண்டு சென்றதாக தலபுராணம் சொல்கி றதே.... அது என்னவென்று பார்ப்போமா?....
சூரியபகவான் உஷாதேவியை மணந்துகொண்டார். ஆனால் அவரது வெப்பத்தைத் தாங்க முடியாமல் போனவள் நிழலாக உள்ள சாயாதேவி என்பவரை அவருக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் சாயாதேவியாலும் அவருடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் விலகி நிற்க அதுவே சூரிய பகவானுக்கு மனைவிகள் பக்கத்தில் இருக்க முடியாத நிலையிலான தோஷம் ஆயிற்று. இதனால் மனம் ஒடிந்துபோன சூரியபகவான் திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்து சிவ பெருமானுக்கு பூஜைகளை செய்து தவமிருந்தார். தனது தோஷத்தை விலக்கி தன்னுடைய மனைவிகள் தனது வெப்பத்தை உணரமுடியாத நிலையைத் தந்து தன்னுடன் அவர்கள் இருக்க வேண்டும் என வேண்டினார்.
அவருடைய பூஜையை ஏற்றுக்கொண்ட சிவபெருமானும் அவர்முன் காட்சிதந்து அவருக்கு ஏற்பட்டிருந்த தோஷத்தை விலக்கி அருள்புரிந்தார்.
அதன்பின் சூரியபகவானது மனைவியான உஷாதேவிமூலம் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவரே தர்மத்தையும் நீதியையும் நிலை நாட்டும் தர்மராஜா எனும் எமபகவானாக அவதாரம் எடுத்தார். அடுத்து சாயாதேவிமூலம் ஒரு பிள்ளை பிறக்க அவரே சனிபகவானாகி ஒன்பது கிரகங்களில் அனைத்து கிரகங்களைவிட மிக்க வலிமை கொண்டவர். முன் ஜென்மம் மற்றும் வாழும் ஜென்மம் என அனைத்து ஜென்மங்களிலும் பாவங்களை செய்பவர்களுக்கு தண்டனை தரும் தெய்வமாக இருக்கவேண்டி இருந்தது. ஆனாலும் தனக்குத் தரப்பட்ட தொழிலை நடுநிலைமையோடு சிறப்பாக செயல்படுத்தத் துவங்கினார். அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுத்தார். அதில் அதிகபட்ச தண்டனையாக கடுமையான 7 1/2 சனி தோஷத்தை தந்தார். அந்த 7 1/2 வருட தோஷத்தைக் கொண்டவர்கள் கடுமையான மனஉளைச்சல் மற்றும் கஷ்டங்களை அடைந்தார்கள். இதனால் சனிபகவான்மீது மக்கள் மனதில் வெறுப்பு ஏற்பட்டு அவரிடம் ஒரு பயமும் தோன்ற அவரைவிட்டு விலகி தமக்கு ஏற்பட்ட துன்பங்களைக் குறைக்குமாறு பிற தெய்வங்களை வேண்டத் துவங்கினார்கள்.
இப்படியாக மக்கள் மனதில் சனிபகவான் மீதான நல்ல எண்ணம் அழியத்துவங்க, அதனை உணர்ந்துகொண்ட சனிபகவான் மனம் வருந்தி திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்து தன்னை தண்டனை தரும் தொழிலில் இருந்து விலக்கிவிடுமாறு சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு பூஜைகளை செய்து தவமிருந்தார். அவருடைய பூஜையினால் மனம் மகிழ்ந்துபோன சிவபெருமானும் அவருக்கு நெருப்பு ஜுவாலையாக காட்சிதந்து அவர் நடுநிலைமையோடு செய்து வரும் தொழிலை வெகுவாக புகழ்ந்து அவரை தேற்றினார். அது மட்டுமல்லாமல் அங்குவந்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தையும், வளத்தையும் தரும் அனுகிரக மூர்த்தியாக பொங்கு சனியாக 2-ஆவது அவதாரம் எடுத்து அந்த தலத்திலேயே அமர்ந்துகொண்டு அருள்புரியுமாறும் கூறினார். இதனால் தேவ லோகத்தில் செல்வத்தைத் தரும் வகையில் தேவி மகாலட்சுமி எத்தனை உயர்வான இடத்தில் அமர்ந்துள்ளாரே அதற்கு இணையாக பூமியில் செல்வத்தைத் தரும் வகையில் ஏர்க்கலப்பை மற்றும் காகத்தின் சின்னம் பொறித்த கொடியை கையில் ஏற்று திருக்கொள்ளிக்காடு பொங்கு சனிபகவானாக இரண்டாவது அவதாரமெடுத்து அமர்ந்தார்.
சனி பகவானின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டார். சனிபகவானுக்கு சிவபெருமான் நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்ததினால் இந்த ஆலயத்திலுள்ள சிவ லிங்கம் இளம் சிவப்பு நிறத்தில் காட்சி தருகின்றது. பொங்கு சனிபகவானது செயல்களுக்கு துணைபுரிய அவருடைய குருவான பைரவப் பெருமானும் பொங்குசனி சன்னதியின் எதிர் சன்னதியில் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் என்பது இந்த ஆலயத்தின் விசேஷமான காட்சி ஆகும்.
முதல் அவதார சனிபகவான் தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரும் அதிபதியாக இருந்தாலும், அதே நேரத்தில் அவரவர் செய்த தவறை உணர்ந்து, அதற்கான தக்க பரிகாரம் செய்து கறையூர் சங்கர நாராயணர் ஆலயத்தில் வந்து தன்னை வணங்கி துதிப்பவர்களது தண்டனையின் தாக்கத்தை குறைக்கின்றார். அங்கிருந்து திருநள்ளாறுக்கு வந்து தம்மை வணங்கி துதிப்பவர்களது துன்பங்களை தக்க நேரத்தில் முழுமையாக விலக்குகின்றார் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் தேவி மகாலட்சுமியின் செல்வத்தைப் பாதுகாத்து அதே தேவி தரும் செல்வங்களை தேவியின் கட்டளைக் கேற்ப அளிக்கும் அதிபதியான குபேர பகவானைப்போலவே சக்திகொண்டு, தன்னுடைய இரண்டாவது அவதாரத்தில் பொங்கு சனிபகவானாக அமர்ந்துகொண்டு திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் பக்தர்களது இழந்த செல்வங்களை மீட்டுத் தந்து வளமிக்க வாழ்க்கையைத் தருகின்றார் என்று வசிஷ்ட நாடி ஜோதிடம் சொல்கிறது.
ஒருமுறை பாண்டவ சகோதரர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்கள் தங்கி யிருந்த அரக்கு மாளிகையை, கௌரவர்களது வேண்டுகோளுக்கு ஏற்ப தீயிட்டு அழித்ததி னால் அக்னிபகவான் 7 1/2 சனி தோஷத்தைப் பெற்றார். அந்த தோஷத்தின் காரணமாக தனது பல சக்திகளையும் அக்னி பகவான் இழக்க நேரிட்டது. தாம் இழந்துவிட்ட சக்திகளை மீண்டும் பெறவேண்டும் என அக்னி பகவானும் திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து தவமிருந்தார். அவரது தவத்தினால் மனம் மகிழ்ந்துபோன சிவபெருமானும் அவருக்கு காட்சிதந்து அவர் இழந்த சக்திகளை திரும்பக் கொடுத்தார். அக்னி பகவானது வேண்டு கோளை ஏற்று பிற தெய்வங்களும் அங்கு வந்து தம்மை ஆராதிக்கும் வகையில் அந்த இடத்திúயே ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்து கொள்வதாகவும் வாக்குறுதி தந்தார். அக்னி என்பது நெருப்பை குறிக்க- புரீஸ்வரர் என்பது அந்த இடத்தில் (திருக் கொள்ளிக்காடு) வசிப்பவர் என்பதாகும். அதனால் மூலவருக்கு அக்னிபுரீஸ்வரர் என பெயர் வந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/saturn3-2026-01-30-12-44-33.jpg)
சிறப்பம்சங்கள்
ப் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீ அக்னி புரீஸ்வரர்! கொள்ளிக்காடர், அக்னீஸ்வரர், தீவண்ணநாதர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
ப் இறைவியின் திருநாமம் அருள்மிகு பஞ்சினும் மெல்லடியாள். பஞ்சைப் போல் மிருதுவான பாதத் தைக்கொண்டவள் என்ற அர்த்தத்தில் அருள்மிகு மிருது பாதநாயகி.
ப் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கையில் கலப்பை ஏந்திய நிலையில்; காகச்சின்னம் கொண்ட கொடி, கைகளில் ஹஸ்தம் மற்றும் அபயமுத்திரையுடன் பொங்கு சனீஸ்வரராக காட்சி அளிக்கிறார்.
ப் நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத் தையும் இத்தல இறைவன் அழித்துவிடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் "ப' எனும் எழுத்து வடிவில் அமைந்துள்ளது கூடுதல் விசேஷம்.
ப் இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என மூன்று தல விருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர சம்பத்தையும், ஊமத்தை மனக்கவலை நீங்கவும் கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது.
ப் தீர்த்தக்குளத்தில் எள்ளையும், தண்ணீரையும் விட்டு இறந்துபோன மூதாதையர்களது ஆத்மாக்கள் பசியின்றி, தண்ணீர் தாகமின்றி இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் அது நிறைவேறும்.
ப் நீதி, நேர்மை, சத்தியம் என அனைத் தையும் மாசு இன்றி கடைப்பிடித்து தமது ஜனங்கள் வளத்தோடு வாழவேண்டும் என்ற முறையில் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து வந்த ராஜா ஹரிச்சந்திரனும் ஒருமுறை விஸ்வாமித்திரரின் சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது திருக்கொள்ளிக்காடு வந்து பொங்கு சனீஸ்வரர் மற்றும் அம்மையப் பனை வேண்டி துதித்து இழந்ததை பெற்று மகிழ்ந்தார் என்பது சிறப்பான ஒன்று.
ப் சோழ மன்னன் திரிபுவனச்சக்கரவர்த் திக்கு மிகக்கடுமையான சனி தோஷம் ஏற்பட்டு அமைதி கிடைக்காமல் திருக் கொள்ளிக்காட்டுக்கு வந்து பொங்கு சனீஸ்வரர் அம்மையப்பனை தரிசித்தபோது சனி தோஷம் நீங்கி மனம் மகிழ்ந்ததாக தலபுராணம் சொல்கிறது.
ப் முருகப்பெருமாள் வில்லேந்தியவராக தனுசு சுப்ரமணியராக அருட்காட்சி தருகிறார்.
ப் மகா சிவராத்திரி, ஆரூத்ரா தரிசனம், சனிப்பெயர்ச்சி ஆலய விழாக்களாகக் கருதப்படுகிறது.
ப் பேய் பிசாசுகளுக்கு உகந்த பூ ஊமத்தம்பூ என்பதினால் எந்த ஒரு ஆலயத் திலும் ஊமத்தம் பூவை பூஜைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்த ஆலயத்தில் மட்டும் ஊமத்தம் பூவைக் கொண்டு வழிபட் டால், வழிபடும் பக்தர்களது இல்லங்களில் பேய், பிசாசு வகையிலான எந்த தொல்லையும் இருக்காது. மகிழ்ச்சி தங்கும் என்கிறார் கோவில் கணக்கர் சசிக்குமார்.
ப் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற் கோவிலாக இருந்த இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் புதுப்பித்தான். ராஜராஜசோழன் கல் வெட்டுக்கள் 3, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை எடுப்பித்த முதலாம் ராஜேந்திரசோழனின் கல்வெட்டுகள் 2, முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்கள் 5, பிற சோழ சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் 5 உள்ளன. சோழர்களின் காலத்தில் இக்கோவிலுக்கு நிலம், பொற்காசுகள் அளித்தோர் விவரங்கள் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது.
ப் எள் சாதம், உளுந்துவடை, நாவல்பழம், திராட்சை, தேங்காய், எள்தீபம், கருப்பு பட்டு, கருநீலப்பட்டு, கருநீல புஷ்பங்கள், நீலகற்கள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் சனி பகவானுக்கு பிரியமானவை. இவற்றைக் கொண்டு சனிபகவானை வழிபட்டால் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க புத்திர, தனம், தானியம், ராஜிய வெள்ளி, ஆயுள் சம்பத்துக்களை பொங்கு சனீஸ்வரர் அளிப்பார் என்றும்; (திருவாதிரை ஆரூத்ரா நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கு வதோடு அவர்களுக்கு கூடுதல் பலன் கிட்டும் என்றும்; கொன்றை மலரைக் கொண்டு அக்னீஸ்வரரையும் பஞ்சினும் மெல்லடி யாளையும் ஏழு வாரங்கள் அர்ச்சித்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேர்வர் என்றும்; புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் தல தீர்த்தத்தில் நீராடி ஆடைகளை விடுத்து, புத்தாடை உடுத்தி ஊமத்தம் பூமாலை அணிந்து அர்ச்சனை செய்து ஏழு முறை ஐந்துவாரம் வலம் வந்து சனிபகவானை தரிசித்தால் நல்ல மனநிலை பெறுவர் என்றும்; நளமகாராஜன் நாடு, நகரம் இழந்து சனி தோஷம் பிடித்து வாழ்க்கையே வெறுக்கும் நிலைக்கு வந்த பின் தர்ப்பைக் காடான திருநள்ளாறில் வழிபட்டு சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெற்றார் என்றும்;
அதேசமயம் இழந்த செல்வங்கள், சகலவிதமான அனைத்து செல்வங்களுடன் புகழும் பெற்றது திருக்கொள்ளிக்காட்டில்தான் என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகர் சிவகுமார சிவாச்சாரியார்.
திருக்கோவில் அமைப்பு
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் நீர்வளம், நிலவளம்மிக்க கீராலத்தூரிலே மேற்கு நோக்கிய அழகிய முகப்பு நுழைவாயிலின் முன்புறம் அக்னி தீர்த்தக் குளம் உள்ளது. நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி மட்டுமே உள்ளது. ஒரே ஒரு பிராகாரத்தைக்கொண்ட அமைப்பில் உள் நுழைவாயிலில் நுழைந்தால் குட்டையான சிறிய பாணத்துடன் மேற்கு நோக்கி மூலவர் அக்னீஸ்வரர் சற்று சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறார். அம்பாள் தெற்கு பார்த்தபடி நின்ற நிலையில் மிருதுபாத நாயகி சன்னதி உள்ளது. கோஷ்ட தெய்வங்கள், சிவாகம முறைப்படி உள்ளன.
ஷேத்ர விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி அருகில் குபேர சம்பத்துக்களை வழங்கும் நிலையில் பொங்கு சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. நேர் எதிரே ஈசான்ய திக்கில் பைரவர் சன்னதி உள்ளது. காசி விஸ்வநாதர், நால்வர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிராகாரத்தில் "ப' வடிவில் நவகிரக சன்னதி உள்ளது. ஆலயத்தின் நந்தவனத்தில் வன்னி மரம், வில்வமரம், ஊமத்தை, கொன்றை மற்றும் நீலமலர்கள் கொண்ட பூச்செடிகளும் உள்ளன.
ஓங்கு புகழ் கொள்ளிக்காடரே என்ற திருஞானசம்பந்தர் பாடலுக்கேற்ப, நாடினார்க்கு கோடி செல்வம் தரும் கொள்ளிக்காடராம், மங்கு சனியை பொங்கு சனியாக்கி அருள்புரியும் திருக் கொள்ளிக்காடு அருள்மிகு மிருதுபாதநாயகி சமேத ஸ்ரீ அக்னிபுரீஸ்வரரை வருகிற சனிப்பெயர்ச்சி காலத்தில் ஸ்ரீ பொங்கு சனீஸ்வரரை வழிபடுவோம்; பொலிவுடன் மட்டற்ற மகிழ்வுடன் வாழ்வோம் என்று தலைமை அர்ச்சகர் சிவகுமார சிவாச்சாரியார் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில்;
விசுவாவசு வருஷம் மாசி மாதம் 22-ஆம் நாள் (6-3-2026) வெள்ளிக்கிழமையன்று அருள்மிகு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
பன்னிரு ராசி நேயர்களும் வந்து வழிபடுங் கள்; வளம் பெறுங்கள் என்கிறார்.
நடைதிறப்பு: காலை 8.00 மணிமுதல் 12.00, மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை; சனிக்கிழமைகளில் காலை 7.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை.
ஆலயத்தொடர்புக்கு
திரு. செயல் அலுவலர், ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில், கீராலத்தூர் (அஞ்சல்), திருநெல்லிக்காவல் (வழி), திருக்கொள்ளிக் காடு, திருத்துறைப்பூண்டி (வட்டம்), திருவாரூர் மாவட்டம் 610 205.
கோவில் கணக்கர்: சசிக்குமார், செல்: 97913 66216, 95853 82152.
பூஜை விவரங்களுக்கு: சிவக்குமார் குருக்கள், செல்: 94423 46042.
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில், திருவாரூரி லிருந்து திருக்காரவாசல், திருநெல்லிக்காவல் வழியாக 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு, பஸ்வசதி உண்டு.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us