Advertisment

பேரைச் சொன்னாலே அதிரும் சனியின் தசாபுக்தி பலன்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

ss

கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார்.

Advertisment

19 வருடங்கள் தனது சதுர ஆட்டத்தை பாவ, புண்ணியங்களுக்கு, ஏற்ப நம் வசம் சேர்க்கும் ஆயுள்காரனாக ஜோதிடத்தில் வலம் வருகின்றார்.

Advertisment

பெயரை சொன்னாலே அதிரும்படியான தோரணையில் காகத்தின் மீது அமர்ந்து கணக்கை கையில் எடுக்கின்றார்.

 இவர் அமரும் இடமும், ஆளும் திறனும், கொண்டுதான் நிழல் கிரகங்களும் பலனளிக்க பணிக்கப்படுகின்றது.

 நம் வாழ்வின் வரைபடத்தை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் சாட்சாத் சனி பகவான். 

கோட்சார ரீதியாக ஏழரை சனியாகவும், அஷ்டம சனியாகவும், கண்டக சனியாகவும், அர்த்தாஷ்டம சனியாகவும், இணைந்து தனது பணியை செவ்வனே செய்து முடிக்கின்றார்.

உட-ல் பாதம், நடு முதுகு, தண்டுவடம், மூட்டு, ஆகியவற்றுக்கு காரகமாகி தண்டுவடத்தின் உள் பயணிக்கும் சி எஸ் எப் (ஈநஎ) என்கின்ற திரவத்தின் செயல்பாட்டையும் தனதாக்கி, உடல் இயக்கத்தின் முழு தன்மையையும் தன் வசப்படுத்திக் கொள்கின்றார். 

இதனால்தான் இவருக்கு கர்மகாரகன் என்கின்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

அதோடு முடியவில்லை மனித உட-ன் குரோமோசோம்களை ஒரு நூல்கண்டு போல் இணைத்தால் 2:1 மில்-யன் மயில் தொலைவு என்கின்றது அறிவியல், பூமிக்கும் சனி கிரகத்துக்கும் உள்ள

கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார்.

Advertisment

19 வருடங்கள் தனது சதுர ஆட்டத்தை பாவ, புண்ணியங்களுக்கு, ஏற்ப நம் வசம் சேர்க்கும் ஆயுள்காரனாக ஜோதிடத்தில் வலம் வருகின்றார்.

Advertisment

பெயரை சொன்னாலே அதிரும்படியான தோரணையில் காகத்தின் மீது அமர்ந்து கணக்கை கையில் எடுக்கின்றார்.

 இவர் அமரும் இடமும், ஆளும் திறனும், கொண்டுதான் நிழல் கிரகங்களும் பலனளிக்க பணிக்கப்படுகின்றது.

 நம் வாழ்வின் வரைபடத்தை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் சாட்சாத் சனி பகவான். 

கோட்சார ரீதியாக ஏழரை சனியாகவும், அஷ்டம சனியாகவும், கண்டக சனியாகவும், அர்த்தாஷ்டம சனியாகவும், இணைந்து தனது பணியை செவ்வனே செய்து முடிக்கின்றார்.

உட-ல் பாதம், நடு முதுகு, தண்டுவடம், மூட்டு, ஆகியவற்றுக்கு காரகமாகி தண்டுவடத்தின் உள் பயணிக்கும் சி எஸ் எப் (ஈநஎ) என்கின்ற திரவத்தின் செயல்பாட்டையும் தனதாக்கி, உடல் இயக்கத்தின் முழு தன்மையையும் தன் வசப்படுத்திக் கொள்கின்றார். 

இதனால்தான் இவருக்கு கர்மகாரகன் என்கின்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

அதோடு முடியவில்லை மனித உட-ன் குரோமோசோம்களை ஒரு நூல்கண்டு போல் இணைத்தால் 2:1 மில்-யன் மயில் தொலைவு என்கின்றது அறிவியல், பூமிக்கும் சனி கிரகத்துக்கும் உள்ள தூரமும் 2.1 என்கின்றது வானியல் இதன் அடிப்படையில் தான் நம்மவர்கள் சனியோடு தனது ஊடுருவலை நிறுத்திக் கொண்டனர்.

முழுக்க, முழுக்க, குளிர் வாயு கோளாக வளம் வரும் இந்த கிரகத்திற்கு  நிலவுகள் மொத்தம் 61 உள்ளது.

இதை தவிர்த்து சுமார் 200 குட்டி நிலவுகள் சனிக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன் என்கின்ற மாந்தி புதன் கோளை விடவும் மிகப் பெரியதாக காணப்படுகின்றது. இவ்வளவு வல்லமை வாய்ந்து ஒரு வளையத்திற்குள் சுழலும் சனி கிரகம் ஒரு முறை சூரியனின் குடும்பத்தை  வலம்  வருவதற்கு 29.6 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. சூரியன் இருந்து ஆறாவதாக மிகத் தொலைவில் தன் இருப்பை நிலவிக் கொண்ட சனிக்கு, 3, 7, 10-ஆம் பார்வைகளை ஜோதிடவியல் வழங்கி உள்ளது.

 சனி பார்க்கும் இடம் பாழாகும் என்கிற பொழுதிலும் 10-ஆம்  பார்வை சிறப்பை அளிக்க வல்லது.

 சரி ஜாதகத்தில் கர்ம காரர்களின் நிலையும், ஆளுமையும், என்ன? என்பதை காணலாம். 

சனி+சூரியன் 

இந்த இணைவு தந்தை, மகன் ஆகியவர்களுக்கிடையே ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்தி விடும். இணக்கமான உறவு இருவருக்கும் அமையாது. அதோடு மட்டுமல்லாமல் சூரியனோடு இருள் கிரகமான சனி இணையும் பொழுது அதீத உஷ்ணமும் அதீத குளிரும் இணையும் பொழுது உருவாகும் தன்மையை வாழ்க்கையில் வழங்கிவிடும். இவர்களுக்கு நடு முதுகு மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இவர்களின் வம்சத்தில் அருவாள் மற்றும் வேல் கம்பு தாங்கிய குல தெய்வங்கள் இருக்கும். 

சனி+சந்திரன் 

புனர்பு தோஷம் என்று விளக்கப்படும் சனிச்சந்திரனின் தொடர்பு, மன நிலையிலும், திருமண வாழ்விலும், ஒரு இடர்பாட்டை தந்துசெல்கின்றது. சனி இரும்பு, சந்திரன் நீர், இரண்டும் இணையும் பொழுது ஏற்படும் துருப்பிடிக்கும் தன்மைதான் இவர்களின் வாழ்வில் நிலவும். அவ்வளவு எளிதில் யாரையும் நம்பிவிட மாட்டார்கள் ஏன்? இவர்களே இவர்களை நம்ப மாட்டார்கள். 

சனி+ செவ்வாய் 

இந்த இரண்டு கிரகங்களின் இணைவு அவ்வளவு சிறப்பானதாக கூறப்படவில்லை. இருந்த பொழுதிலும் விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் போது சனி செவ்வாயின் இணைவு மிக பலமாக அமைந்துள்ளது கவனிக்க முடிகின்றது. இந்த இணைவு இதன் தசா புத்தி காலங்களில் விபத்தை வழங்க பணிக்கப்படுகின்றது. மேலும் அதி வேகமாக சுழலும் செவ்வாயும்,மிக தாமதமாக சுழண்டு கொண்டிருக்கும் சனியும், இணையும் பொழுது இழுபறியான மனநிலையை வாழ்வில் வழங்கிவிடும். 

சனி+ராகு 

அதி தீவிரமான என்ன சிந்தனையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்த சனி ராகுவின் இணைவு, ஒரு பிடிவாதமும், விடாப்பிடியான குணத்தையும், இந்த ஜாதகத்திடம் வழங்கும். தொழில் முறையில் மிகப்பெரிய பிரமாண்டத்தையும், தொழி-ன் மூலம் பெரும் சிறப்பையும், இந்த தொடர்பு வழங்கும். 

சனி+குரு 

பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும் இதனை, தர்ம  கருமாதிபதி யோகமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கின்றது ஜோதிடவியல்.இந்த தோஷமானது பிராமண சாபத்தினால் விளையக்கூடியது என்கின்றது புராணங்கள். மனிதனின் மூளைக்கு காரகம் இருக்கும் குரு, சனியோடு இணையும் பொழுது முடிவெடுக்கும் தன்மையும் மற்றவர்களின் நிலையி-ருந்து யோசிக்கும் சூழலையும் தடைப்படுத்தும். குருவிற்கு தீங்கு விளைவித்ததினால் இந்த கிரக இணைவு வருவதாக சில நிகண்டுகள் கூறுகின்றது. 

சனி+புதன் 

இந்த கிரக இணைவானது ஒரு ஜாதகத்தில் அமையும் பொழுது ஆழ்ந்த யோசனை, திட்டமிடல்,கணக்கு, தந்திரம், வணிகம், நயமுடன் பேசுதல், பொறுமையுடன் பேசும் திறன், போன்றவற்றை வழங்கும். சனி புதன் பிராக்டிகல் என்பார்கள். எதையும் செயல்படுத்தி தீர்மானிக்கும் தன்மையை ஒரு ஜாதகருக்கு வழங்கும் தன்மை கொண்டது. மன உறுதி, அறிவு, இவை இரண்டும் சேர்ந்த இணைவாகும். 

சனி+கேது 

சன்னியாச யோகம் என்று நினைவு கூறும் இந்த இணைவானது, மனிதனின் வாழ்வில் அனைத்தையும் ஒரு விரத்தியுடனேயே அணுகும் சூழலை அமைத்து விடும். கர்மக்காரனோடு மோட்ச காரகனோடு இணையும் பொழுது மாயைகளில் இருந்து விடுதலையாகி துறவு, கடந்த பிறவி கர்ம விளைவு, ஆகியவற்றின் வசம் மனதையும், மனிதனையும், எடுத்துச் செல்லும் தன்மையை வழங்கும். தொழி-ல் சில தடைகளை அளிக்க வல்ல இணைவாக இது கருதப்படுகின்றது. 

சனி+ சுக்கிரன் 

அழகியலையும், சீரிய வாழ்க்கை முறையும், உழைப்பின் மூலம் பெறுவார்கள். கலை, கட்டிடம், வடிவமைப்பு, இசை, வணிகம், போன்றவற்றில் சிறப்பு கூறும் வாய்ப்பு அமையும். நிலையான செல்வம் உறுதியாகக் கொண்டவர்கள். குறைந்த பேச்சும், ஆழமான அன்பும், கொண்ட இணைவாக இந்த இணைவு கருதப்படுகின்றது. இது திருமணத்தில் சில தாமதங்களையும், கணவன் மனைவியிடையே சில விருப்பத்தகாத சூழலையும், அமைத்துக் கொடுத்து விடுகிறது. 

சனி+மாந்தி 

ஜாதகத்தில் சனி மாந்தியின் இணைவு சனியின் பலனை இரட்டிப்பாக்கி தரும். இது கர்ம பலன் தாமதம், துன்ப அனுபவம், போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும். 

மாந்தி சனியின் நிழல் என்பதால் இது பழைய கர்மாவின் பலனை வேகமாக வெளிப்படுத்தும். மனநிலையில் சோர்வு, சுயபரிசோதனை, தனிமை உணர்வு, போன்றவற்றை ஏற்படுத்தும்.உடல் சோர்வு மன அழுத்தம் குடும்பத்திலும், பேச்சிலும், சிக்கல் போன்றவற்றை வழங்கவள்ள இணைவாக இது கருதப்படுகின்றது.

 சனி தசாபுக்தி பலன்கள் வரும் இதழிலும் தொடர்கிறது...

செல்: 80563 79988

bala081125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe